Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   08 FEB, 2024 | 11:44 AM

image

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள அதேவேளை பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவைகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

சட்டஒழுங்கை பேணுவதற்காக இந்த நடவடிக்கை என பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மொபைல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு சட்டமொழுங்கு நிலவரத்தை பேணுவதற்கும் உருவாகக்கூடிய ஆபத்துக்களை கையாள்வதற்கும் இது அவசியம் என  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தங்களால் மொபைல் இணையசேவைகளை பயன்படுத்தமுடியவில்லை என இஸ்லாமபாத்தில் உள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/175872

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: வாக்கை பதிவுசெய்த நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடி 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என தெரிகிறது. இவர்கள் வாக்களிக்க நாடுமுழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பல்வேறு கட்சிகள் களம் இறங்கி இருந்தாலும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான்கா னின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

1-6.jpg

இதில் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது கட்சி 115 முதல் 132 இடங்களை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லாகூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால் நாடு முழுவதும் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலையொட்டி பொலிஸார் , விசேட ஆயுதப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் என சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/291067

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தேர்தல்: செல்போன், இணைய சேவை துண்டிப்புக்கு நடுவில் வாக்குப்பதிவு நடந்தது எப்படி?

பாகிஸ்தான்: செல்போன், இணைய சேவைகள் முடக்கத்துடன் நடந்து முடிந்த தேர்தல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், யவெட் டான், கரோலின் டேவிஸ் மற்றும் சைமன் ஃப்ரேசர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 21 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய தேர்தலில் புதிய அரசைத் தேர்ந்தெடுக்க கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது.

பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை “கோழைத்தனமான செயல்” என்று விமர்சித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் எவ்வளவு விரைவில் அறிவிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவை தேர்தல் நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.

முன்னதாக வாக்குப்பதிவு வல்லுநர்கள் வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் எனக் கணித்திருந்தனர். இது பிடிஐ கட்சியின் வாய்ப்புகளைக் குறைக்கும் எனக் கருதப்படுகிறது. மொபைல் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

 
பாகிஸ்தான்: செல்போன், இணைய சேவைகள் முடக்கத்துடன் நடந்து முடிந்த தேர்தல்

பிபிசியிடம் பேசிய ஒரு வாக்காளர், இந்த முடிவால் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார். “வாக்காளர்களுக்கு இதுபோன்ற இடையூறுகளுக்குப் பதிலாக வாக்களிக்கத் தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

லாகூர் நகரிலுள்ள பல வாக்காளர்கள் பிபிசியிடம், இணைய முடக்கம் காரணமாக டாக்சிகளை முன்பதிவு செய்து வாக்களிக்கச் செல்ல முடியவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்லும்போது அவர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும் கூறினார்கள்.

இந்த நடவடிக்கையை நியாயப்படுத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், “நாட்டில் சமீபத்திய பயங்கரவாத சம்பவங்களின் விளைவாக, விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன. சட்டம் ஒழுங்கு நிலைமையைப் பராமரிக்கவும், அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்,” என்று கூறினார். இந்த அளவுக்கான செல்போன், இணைய சேவை முடக்கம், குறிப்பாக தேர்தல் நேரத்தில் என்பது பாகிஸ்தானில் இதுவரை நடக்காத ஒன்று.

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்ததுள்ளன என்றாலும் வாக்குப்பதிவு நாளில் தனிமைப்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. வடக்கில் உள்ள இஸ்மாயில் கானில், நான்கு போலீஸ் அதிகாரிகள் அவர்களது வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் பல காயங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

பலுசிஸ்தானில் உள்ள வேட்பாளர்களின் அலுவலகங்கள் மீது புதனன்று நடத்தப்பட்ட இருவேறு வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த செல்போன், இணைய முடக்கத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி விமர்சித்துள்ளார். கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான அவர், “உடனடியாக” அந்தச் சேவைகளை மீட்டெடுக்க அழைப்பு விடுத்தார்.

நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் பிபிசி பார்வையிட்ட ஒரு வாக்குச்சாவடி நிலையத்தின் நுழைவாயிலில் ஆயுதமேந்திய காவல்ர்கள் இருந்தனர். மேலும் ராணுவ அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்தனர்.

 

முற்றிலும் நியாயமான தேர்தல்: நவாஸ் ஷெரிஃப்

பாகிஸ்தான்: செல்போன், இணைய சேவைகள் முடக்கத்துடன் நடந்து முடிந்த தேர்தல்

நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரது மகள் மர்யம் லாகூரில் உள்ள இக்ராவில் இன்று மதியம் வாக்களித்தனர். கடும் பாதுகாப்பு இருந்தது. அதிகாரிகள் அவர்களைச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கியிருந்தனர்.

தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா எனக் கேட்டதற்கு, நவாஸ் ஷெரிஃப் “முற்றிலும் நியாயமாக நடந்துள்ளது” என்று பதிலளித்தார்.

வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிக்கு வெளியே பிபிசியிடம் பேசிய அவர், “ராணுவத்துடன் தனக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை” என்று கூறினார். ஒருவேளை அவர் ஜெனரல்களுடன் பகைமையில் தனது நீண்டகால வாழ்க்கையைக் கழித்ததை மறந்திருக்கலாம்.

“நாகரீகம் இல்லாமை, ஆணவ, நாட்டைச் சீர்குலைக்கும், அழிக்கும் கலாசாரம்” என்று இம்ரான் கானின் தலைமையிலான பாகிஸ்தான் பற்றிக் குறிப்பிட்டார். மேலும், அவரது கட்சி வெற்றி பெற்றால், “மக்களின் வாழ்க்கை எளிதாகும், பணவீக்கம் குறையும். மக்கள் விரும்புவது இதுதான். அவர்களின் விருப்பம் நிறைவேற வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

லாகூரில் டஜன்கணக்கான வாக்காளர்கள் நசீராபாத்தில் உள்ள ஒரு பள்ளியின் சிறிய தாழ்வாரத்தில் திரண்டிருந்தனர். அவர்களில் சிலர் வாக்களிக்க இரண்டு மணிநேரத்திற்கும் மேலாகக் காத்திருப்பதாகக் கூறினார்கள்.

 

அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பொருளாதார போராட்டங்கள்

பாகிஸ்தான்: செல்போன், இணைய சேவைகள் முடக்கத்துடன் நடந்து முடிந்த தேர்தல்

பாகிஸ்தானின் இந்தத் தேர்தலில் 12.8 கோடி மக்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பாதிப் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். 5,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 313 பேர் மட்டுமே பெண்கள். அவர்கள் 336 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 266 இடங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரிஃப்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் இதில் பங்கெடுத்துள்ளன.

இருப்பினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிடும் கிரிக்கெட் பேட் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களை மக்கள் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.

இந்த நடவடிக்கையால், சுயேட்சைகளாகப் போட்டியிடும் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள், கால்குலேட்டர், எலெக்ட்ரிக் ஹீட்டர், பகடை உள்ளிட்ட பிற சின்னங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் படிப்பறிவில்லாத நாட்டில் தேர்தல் சின்னங்களே வாக்கெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பிடிஐ உறுப்பினர்கள், ஆதரவாளர்களை அடைத்து வைத்து, பேரணிகள் நடத்துவதைத் தடை செய்வது ஆகியவற்றின் மூலம் அவர்களைத் திறம்பட முடக்கியது உள்ளிட்ட பிற தந்திரங்களும் பிடிஐ வேட்பாளர்கள் வெற்றி பெறுவதைத் தடுக்க பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த வாரம் ஐந்து நாட்களில் மூன்று தனித்தனி வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான் குறைந்தது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

 
பாகிஸ்தான்: செல்போன், இணைய சேவைகள் முடக்கத்துடன் நடந்து முடிந்த தேர்தல்

பட மூலாதாரம்,EPA

கடந்த தேர்தலின்போது ஊழலுக்கான தண்டனையைப் பெற்றிருந்த நவாஸ் ஷெரிஃப் கட்சிக்கு இம்முறை மக்கள் வாக்களிக்க முடிந்தது. அவர் 1999 ராணுவ சதித்திட்டத்தில் வெளியேற்றப்பட்டார். மேலும் 2017இல் அவரது மூன்றாவது பதவிக்காலம் குறைக்கப்பட்டது. ஆனால், அவர் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினார். அவர் பதவியில் இருப்பதற்கான வாழ்நாள் தடை ரத்து செய்யப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் அவர் மீதான வழக்குகள் நீக்கப்பட்டு, நான்காவது முறையாகத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் 169 இடங்கள் தேவைப்படும். எந்தக் கட்சியேனும் பெரும்பான்மையை வெல்ல முடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த 2022இல் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத் துயரங்களால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பணவீக்கம் அதிகரித்து வருகிறது, வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.

இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின்படி, 2023ஆம் ஆண்டு பாகிதானில் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2017 முதல் பாதுகாப்புப் படைகள், போராளிக் குழுக்கள், பொதுமக்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.

பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் 90,675 வாக்குச் சாவடிகளில் பாதியை “உணர்திறன்” மிக்கப் பகுதி என வகைப்படுத்தியுள்ளது. அதாவது வன்முறை அபாயம் உள்ள பகுதி என எச்சரித்துள்ளது. இந்த வகைப்பாடுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் தேர்தல் வன்முறை வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

வாக்குப்பதிவு முடிவடைந்தாலும், வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 23:59 (19:00 GMT) வரை வேட்பாளர்கள், பிரசாரம் மற்றும் கருத்துக் கணிப்புகள் பற்றி என்ன கூறலாம் என்பது உட்பட, தேர்தல் கவரேஜ் தொடர்பான கடுமையான விதிகள் நடைமுறையில் இருக்கும்.

கூடுதல் செய்தி: பிபிசி உருது மற்றும் ஃப்ளோரா ட்ரூரி

https://www.bbc.com/tamil/articles/cz5jpxmkm8jo

  • கருத்துக்கள உறவுகள்
09 FEB, 2024 | 03:48 PM
image
 

பாக்கிஸ்தானில் தேர்தல்வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னாள்பிரதமர் இம்;ரான்கானின்கட்சி முன்னிலையில் உள்ளது

124 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பிடிஐ கட்சியினால் களமிறக்கப்பட்ட சுயாதீன வேட்பாளர்கள் 49 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் 38 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை பாக்கிஸ்தான் மக்கள் கட்சி 31 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் பிடிஜ கட்சியினர்  சுயாதீனவேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 266 ஆசனங்களிற்கான போட்டியில் அவர்கள் முன்னிலையில் காணப்படுகின்றனர்.

பாக்கிஸ்தான் தேர்தல் - இம்ரானின் கட்சி தொடர்ந்தும்முன்னிலையில் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை - நவாஸ் ஷெரிஃப் நிலை என்ன?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 பிப்ரவரி 2024, 07:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்

நேற்று (வியாழன், பிப்ரவரி 😎 நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரிஃப் மற்றும் இம்ரான் கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின்படி, இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

ஆனால், பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான நவாஸ் ஷெரிஃப், தனது தலைமையிலான முஸ்லீம் லீக்(பிஎம்எல்-என்) கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

 

தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியுள்ள அவர், “இதற்கு முன்னாலும் பாகிஸ்தானை கடினமான நேரங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறோம். அதை மீண்டும் செய்வோம்,” என்று கூறியுள்ளார்.

மேலும், இம்ரான் கான் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் சுயேட்சை வேட்பாளர்களும் தன்னுடன் இணைந்து ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.

ஆனால், நவாஸ் ஷெரிஃப்பின் இந்தக் கருத்துக்கு பிடிஐ கட்சி எதிர்வினை ஆற்றியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அந்தக் கட்சி, “நவாஸ் ஷெரிஃப் வெட்கமின்றிப் பேசி வருவதாக” தெரிவித்துள்ளது.

 
பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும், நவாஸ் இந்தத் தேர்தலைக் கைப்பற்ற முயலும் செயலைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

இதுவரையிலும் பிஎம்எல்-என் கட்சி 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் சுயேட்சை வேட்பாளர்கள் 86 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

பிபிசி உருது சேவை அளித்துள்ள தகவலின்படி, சுயேட்சை வேட்பாளர்கள் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது பிடிஐ கட்சியுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தனக்கு தனிப் பெரும்பான்மை இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள நவாஸ் ஷெரிஃப், கூட்டணி அமைத்து அரசு அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் கட்சிகள் முன்வைத்தாலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேவேளையில், இம்ரான் கானின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியமளிப்பதாக அந்நாட்டு பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன

சர்ச்சைகளுக்கு இடையே நடந்து முடிந்த தேர்தல்

பல சர்ச்சைகளுக்கிடையே பாகிஸ்தனின் தேர்தல் நேற்று (வியாழன், பிப்ரவரி 8)நடந்து முடிந்தது. இதில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.

தேர்தலின்போது செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டன. பயங்கரவாத சம்பவங்கள் நிகழாமல் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது.

பல ஆய்வாளர்கள் இந்தத் தேர்தலை பாகிஸ்தானின் நம்பகத்தன்மை இல்லாத தேர்தல் என்று கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சி இணைய வசதி இடைநிறுத்தப்பட்டதை ‘கோழைத்தனமான செயல்’ என்று விமர்சித்தது.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

நவாஸ் ஷெரீப்

யார் இந்த நவாஸ் ஷெரீப்?

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானை விட்டு வெளியேறி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர் தொகுதியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ஆம் ஆண்டில், உடல்நிலை காரணமாக அவர் ஜாமீனுக்கு மனு செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் பொது பதவியில் இருக்க தடை விதிக்கப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் லண்டனில் இருந்து தாயகம் திரும்பி, சிறைபடுத்தப்பட்டுள்ள தனது பரம எதிரியான இம்ரான் கானின் கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்.

ஷரீப்புக்கு அரசியல் மறுபிரவேசம் ஒன்றும் புதிதல்ல. 1999-இல் நடந்த இராணுவம் அவரது இரண்டாவது பதவிக்காலத்தை கவிழ்த்த பிறகு, 2013-ஆம் ஆண்டில் சாதனையாக மூன்றாவது முறையாக பிரதமரானார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல், நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

இம்ரான் கான்

சிறைபிடிக்கப்பட்டும் ஆதிக்கம் செலுத்தும் இம்ரான் கான்

இம்ரான் கான் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டாலும், தேர்தலில் தவிர்க்கமுடியாத சக்தியாகத் தொடர்கிறார். கணிப்புகளின்படி, 101 நாடாளுமன்றத் தொகுதிகளில் 47 இடங்களில் அவரது பிடிஐ ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

சிலருக்கு, கான் ஒரு புரட்சிகரமான ஹீரோ. அவரது எதிரிகளுக்கு, அவர் அதிகார வெறிபிடித்தவர் மற்றும் ஊழல்வாதி.

தேர்தலில் வென்று நான்கே ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல் அவர் எதிரிகளால் பாராளுமன்ற பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இப்போது ஊழல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உட்பட 170-க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இது அவரை தேர்தலில் இருந்து வெளியேற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி என்று அவர் கூறுகிறார்.

ஆனால் அவர் இன்னும் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இரவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

https://www.bbc.com/tamil/articles/c3g0jx2zy9ro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் தேர்தல்: அதிக இடங்களில் வென்ற இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் உள்ள வாய்ப்புகள்

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம்,REUTERS

5 மணி நேரங்களுக்கு முன்னர்

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வியாழக்கிழமையன்று நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறி, தனது ஆதரவாளர்களைக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவருக்கு ஆதரவளித்து தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் இதுவரை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருபுறம், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்களைத் தனது கூட்டணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுவரையிலான தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒட்டுமொத்த பெரும்பான்மையைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முதல் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளர்களின் மகத்தான வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் செயற்கை நுண்ணறிவு மூலம் பேசியுள்ளார்.

இம்ரான் கான் ஊழல் வழக்கில் சிறையில் இருப்பதால், செயற்கை நுண்ணறிவு மூலம் அவரது உரை வெளியிடப்பட்டுள்ளது. அவரது குரலில் வெளியாகியுள்ள அந்த அறிக்கை பிடிஐ மற்றும் இம்ரான் கானின் எக்ஸ் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

 

இம்ரான் கான் என்ன பேசினார்?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம்,IMRAN KHAN/X

அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் அந்த அறிக்கையில், “வாக்களிப்பதன் மூலம் உண்மையான சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டுள்ளீர்கள். 2024 தேர்தலில் வெற்றி பெற உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் வாக்குகளால் லண்டனின் திட்டம் தோல்வியடைந்துள்ளது,” என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் குறித்து இம்ரான் கான் பேசியபோது, “30 தொகுதிகளில் பின்தங்கியிருந்த போதிலும் வெற்றி உரை நிகழ்த்தப்பட்டதாக” கூறினார்.

இம்ரான் கான், “மோசடி தொடங்குவதற்கு முன்பு, நாம் 150 இடங்களை வென்றிருந்தோம்,” என்று கூறினார். படிவம் 45இன் தரவுகள்படி, நாம் 170 தொகுதிகளை வென்றுள்ளோம் என்றார்.

இருப்பினும் இதுவரையிலான முடிவுகளின்படி, இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். பிடிஐ கட்சி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால், அவர்கள் தரப்பில் அதுகுறித்த எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

இம்ரான் கான் தனது கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் வாக்குகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்ட வீடியோவில் இம்ரான் கானின் சொந்தக் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

 

இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம்,EPA

கடந்த வியாழனன்று பாகிஸ்தானில் 266 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், பிடிஐ கட்சியை ஆதரித்த 84 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வேட்பாளர்கள் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

பிலாவல் பூட்டோவின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 51 இடங்களிலும் மற்ற வேட்பாளர்கள் 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை வெற்றிபெற்றுள்ள இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்களில், பிடிஐ கட்சியின் தலைவர் பாரிஸ்டர் கௌஹர் அலி கான், மூத்த துணைத் தலைவர் லத்தீப் கோசா, நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆசாத் கைசர், கட்சி உறுப்பினர் அலி அமின் கந்தாபூர் ஆகியோரும் அடக்கம்.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை தேர்தல் ஆணையம் ரத்து செய்து, அவரகளது தேர்தல் சின்னத்தைத் திரும்பப் பெற்றதையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். தேர்தல் ஆணையத்தின் முடிவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பிடிஐ வேட்பாளர்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல் வெவ்வேறு சின்னங்களின் கீழ் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டதற்கு இதுவே காரணம். இந்தத் தடைகளை மீறியும் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றன.

 

சுயேட்சை வேட்பாளர்களுக்கு மற்ற கட்சிகள் அழைப்பு

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம்,EPA

தேர்தல் சட்டங்களை மேற்கோள் காட்டி, தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேட்சை வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளில் சேர வேண்டிய தேவை சட்டப்பூர்வமாக இல்லையென்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதாவது, அவர்கள் விரும்பினால் தேசிய அல்லது மாகாண சபையில் சுதந்திரமான நிலையிலேயே இருக்க முடியும்.

இருப்பினும், பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் ஆய்வாளர் ரஃபியுல்லா காக்கரின் கூற்றுப்படி, ஒரு சுயேட்சை வேட்பாளரின் அரசியல் கட்சி இணைவது குறித்த நோக்கம் அவரது அரசியல் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவது, ஓர் அரசியல் சித்தாந்தத்துடன் தன்னை இணைத்துக்கொள்வது, நாடாளுமன்றத்தில் தீவிரமாகப் பங்கு வகிப்பது ஆகியவற்றைப் பொறுத்தது.

ஆனால் வெற்றி பெற்ற பிறகு, இந்த வேட்பாளர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் இருக்கும். அதன்போது அவர்கள் அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, சுயேட்சை வேட்பாளர்கள், வாக்குச் சீட்டில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள கட்சியில் மட்டுமே சேர முடியும்.

“பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி செயல்படவில்லை. எனவே இந்த சுயேட்சை வேட்பாளர்கள் எந்தக் கட்சியில் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது பெரிய சவாலாக இருக்கும்” என்று ரஃபியுல்லா காக்கர் கூறுகிறார்.

தேர்தலுக்கு முன், தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர்கள், தாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

 

சுயேட்சை வேட்பாளர்களுக்கு நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ அழைப்பு

பாகிஸ்தான் தேர்தல்: அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன் இருக்கும் வாய்ப்புகள்

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பல மணிநேரம் தாமதத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தொடங்கியது. இதுவரை அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிடிஐ கட்சி கைபர் பக்துன்க்வாவிலும், முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி பஞ்சாபிலும் முன்னிலையில் இருக்கின்றன. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி சிந்து மாகாணத்தில் முன்னிலை வகிக்கிறது.

கைபர் பக்துன்க்வாவில் சுயேட்சை வேட்பாளர்களின் வியக்கத்தக்க வெற்றிக்குப் பிறகு, அவர்களுக்கு இரண்டு பெரிய கட்சிகளில் இருந்து தங்களுடன் இணைவதற்கு வாய்ப்புகள் வருகின்றன.

சுயேட்சை வேட்பாளர்களை பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணையுமாறு பிலாவல் பூட்டோ அழைப்பு விடுத்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்களைத் தங்கள் கட்சியில் சேர்ப்பதில் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, “இதில் இரண்டு விஷயங்கள் நடக்கலாம். சுயேட்சை வேட்பாளர்கள் பிடிஐ-இல் சேர அனுமதிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக அவர்கள் விரும்பினால் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஒரு சிறிய கட்சியுடன் கூட்டணியை உருவாக்கலாம்,” என்று கூறினார்.

தற்போது பாகிஸ்தான் ஒரு ‘பிளவுபட்ட ஆணையை’ நோக்கி நகர்வதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

“வடக்கு பஞ்சாபில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றாலும், மத்திய பஞ்சாபில் தோல்வியடைந்து வருகிறது. பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரிஃப் 80 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 50 அல்லது 55 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்தச் சூழ்நிலையில் சுயேட்சை வேட்பாளர்கள் இணைந்தால் அது கட்சியின் பலத்தை அதிகரிக்கும்,” என்று கூறுகிறார்.

இந்தக் குழப்பங்களுக்கு நடுவில், நவாஸ் ஷெரிஃப் என்.ஏ-15 மன்செரா தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான ஷாஜாத் முகமது கஸ்டஸ்ப் கானிடம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். மற்றொருபுறம் அவர் லாகூரில் உள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 

சுயேட்சை வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்ந்தெடுக்க முடியுமா?

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் ஒன்றுகூடி பிரதமரை தேர்வு செய்ய முடியுமா?

பட மூலாதாரம்,EPA

சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியுமா எனக் கேட்டபோது, அவர்களால் அவ்வாறு செய்ய முடியும் என்றார் ரஃபியுல்லா காக்கர்.

பாகிஸ்தானில் 266 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தங்களுக்கு 134 இடங்கள் இருந்தால், அதை முழுகையாகச் செய்ய முடியும் என்கிறார் அவர்.

எப்படியிருப்பினும், சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதமரைத் தேர்வு செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.

https://www.bbc.com/tamil/articles/ck56131e0kyo

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pakistan Election-ல் இம்ரான் ஆதரவாளர்கள் ஆதிக்கம்; Nawaz போடும் கூட்டணி திட்டம் வெற்றிபெறுமா?

Pakistan Election Result: பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மறுபுறம், முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃப் தாங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். தனது கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாகக் கூறி, மற்றவர்களைத் தனது கூட்டணியில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.