Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   08 FEB, 2024 | 02:02 AM

image
 

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார்.

https://www.virakesari.lk/article/175852

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு அவுஸ்திரேலிய பிரீமியர் ரோஜர் குக்குடன் ஜனாதிபதி ரணில் இருதரப்பு கலந்துரையாடல்

09 FEB, 2024 | 12:06 PM
image
 

இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook)  இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (09) பேர்த் நகரில் நடைபெற்றது.

இலங்கைக்கும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும், இலங்கைக்கும் பேர்த் நகருக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மேம்படுத்துவதற்கும் பிரீமியர் (Premier)  ரோஜர் குக் இணக்கம் தெரிவித்தார். 

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் காணப்படும் சாத்தியக்கூறுகளை விவரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கை புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் துறையில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறும், இலங்கைக்கு விஜயம் செய்து, இந்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கு  அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஷ்வர, பாராளுமன்ற உறுப்பினர்களான சிந்தக மாயதுன்ன, இஷாக் ரஹ்மான், ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே மற்றும் ரிஷான் டி சில்வா ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தில் மேற்கொண்டுள்ளதோடு ஏழாவது இந்து சமுத்திர மாநாடு இன்றும் (09) நாளையும் (10) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.

"நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) பிரதான உரை ஆற்றவுள்ளார். 

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (08) பிற்பகல் பேர்த் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

426122180_1167510990899682_8190739854488

426216439_1415142666094668_4132195795143

426533335_3732578860293388_6457020602953

426433885_768911935102072_38396281684734

423062686_274541708988939_68349711465476

https://www.virakesari.lk/article/175940

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார்

Published By: DIGITAL DESK 3   10 FEB, 2024 | 09:34 AM

image
 

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

https://www.virakesari.lk/article/176016

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

“நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி”

அரே வா....இவரின் ஜனாதிபதி பதவி நிலையானதோ.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அரே வா....இவரின் ஜனாதிபதி பதவி நிலையானதோ.....

நீங்களும் சிட்னி முருகனும் சேர்ந்து ஒரு சந்திப்பை ஜனாதிபதியுடன் போடுவது  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாயுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அதன் செல்வாக்கிற்கு பாதிப்பு – ஜனாதிபதி கருத்து

Published By: RAJEEBAN   10 FEB, 2024 | 11:56 AM

image
 

காசா யுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற அமெரிக்காவின் முடிவினால்  இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக இந்து சமுத்திரத்தில் அந்த நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது பாதிக்கப்படலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சீன, ரஸ்ய, ஈரானிய மூலோபாயங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தினை மிகச்சரியான தாக்குகின்றன அமெரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன எனவும ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றால் காசா யுத்தம் கூடிய விரைவில் முடிவிற்கு வரவேண்டும். அதன் பின்னர் ஐந்து வருடங்களிற்குள் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவேண்டும் இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் இடம்பெறுகின்ற ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் யுத்தமும் அதன் பின்னரான மேற்குலகின் தடைகளும் வளமிக்க செழிப்பான பொருளாதாரம் சீனாவிலும் மேற்கு இந்து சமுத்திரத்திலும் புதிய சந்தைகளை கண்டறிய உதவியுள்ளது. உதாரணமாக ரஸ்யாவின் கச்சா எண்ணெய் வளைகுடாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படுகின்றது.  துபாய் தற்போது உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களின் நிதிசந்தையாக மாறியுள்ளது. லண்டனின் இடத்தை அது கைப்பற்றியுள்ளது. ரஸ்யா ஈரானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளது. ரஸ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கும் முக்கிய நாடாக ஈரான் காணப்படுகின்றது. ரஸ்யா, தென்னாபிரிக்கா, மியன்மார் போன்ற இந்துசமுத்திர நாடுகளுடன் கடல்சார் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையில் பிளவினை உருவாக்குவதில் சீனா முக்கிய பங்களிப்பை செய்தது. ஈரானும் அதன் சகாக்களும் தற்போது மேற்காசியாவில் முக்கியமானவர்களாக மாறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/176029

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்களும் சிட்னி முருகனும் சேர்ந்து ஒரு சந்திப்பை ஜனாதிபதியுடன் போடுவது  

நல்ல ஐடியா...கூப்பிட்டேன் ஆனால் அவருக்கு இந்த தடவை சிட்னிக்கு வருவதற்கு நேரமில்லையாம் ...அத்துடன் காசும் இல்லையாம் ...பெர்த் வரை வந்து திரும்புகிறார்

7 hours ago, ஏராளன் said:

. அதன் பின்னர் ஐந்து வருடங்களிற்குள் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவேண்டும் இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரேவா.....சொந்த நாட்டில் மாகாணசபைக்கு அதிகாரங்களை கொடுத்து ஒர் இனத்தின் கண்ணீரை துடைக்க முடியவில்லை ....பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் கொடுக்க வேணும் ஐந்து வருடத்தில் ...என அறிவுரை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அரேவா.....சொந்த நாட்டில் மாகாணசபைக்கு அதிகாரங்களை கொடுத்து ஒர் இனத்தின் கண்ணீரை துடைக்க முடியவில்லை ....பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் கொடுக்க வேணும் ஐந்து வருடத்தில் ...என அறிவுரை

அவர் அப்படி சொல்வதுடன்  நிற்கவில்லை. அங்கு சகல வசதிகளுடன் கூடிய பாடசாலை அமைப்பதட்கும் பணமும் ஒதுக்கி விடடார். ரணில் ஐயாவின் ஐடியா உலக தலைவர் ஆக வேண்டுமென்பது. என்ன ஸ்ரீ லங்கா மக்கள்தான் அதனை ஏற்றுக்கொள்ளுகிறார்கள் இல்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.