Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமேசான் நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாண்டியாகோ வனேகாஸ் மால்டோனாடோ
  • பதவி, பிபிசி உலக சேவை
  • 7 பிப்ரவரி 2024
    புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024

அமேசான் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதை நாம் அறிவோம். இந்த டிஜிட்டல் தளங்கள் நவீன முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன.

ஆனால், அவர்கள் எப்படி இவ்வளவு பணக்கார நிறுவனங்களாக மாறுகிறார்கள்? மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.

டிம் ஓ'ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ் மற்றும் மரியானா மஸ்ஸுகாடோ ஆகிய மூன்று கல்வியாளர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயன்றனர்.

இன்றைய டிஜிட்டல் சந்தை யுகத்தில் இந்தத் தளங்களின் சக்தியை விளக்கும் ஒரு கோட்பாட்டை அவர்கள் உருவாக்கினர்.

இந்த தளங்கள் இன்று மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இந்த நிறுவனங்கள் நம் கவனத்தை ஈர்த்து, அதன் மூலம் விளம்பரதாரர்களிடம் இருந்து கட்டணத்தைப் பெற்று அதிக பணம் சம்பாதிக்கின்றன என இந்த மூன்று கல்வியாளர்களும் கூறினார்கள்.

கூகுள் மற்றும் அமேசான் போன்ற தளங்களில் உள்ள தேடுபொறிகள்(search engine) முதலில் பயனரின் 'ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கத்தை' அதாவது வணிக விளம்பரங்களைக் காட்டுகின்றன.

அவை ஆர்கானிக் முடிவுகள் எனப்படும் உண்மையான தேடல் முடிவுகள் அல்ல என்பதை அடிப்படையாகக் கொண்டது அவர்களின் கோட்பாடு.

ஆர்கானிக் தேடல் முடிவுகள் பணம் செலுத்தப்படாத பட்டியல்களாகும். அவை தேடுபொறி முடிவுகள் பக்கங்களில் (SERPs) தோன்றும். இவை பயனர்கள் தேடும் சொல்லுடன் தொடர்புடையவை.

 

இந்த வழியில், இந்தக் கோட்பாட்டை உருவாக்கியுள்ள கூகுள் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் தளங்களில் தோன்றுவதற்கு பணம் செலுத்துமாறு விளம்பரதாரர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன, பின்னர் பயனர்களுக்கு(Users) 'மோசமான தேடல் முடிவுகளை' வழங்குகின்றன.

கூகுள் மற்றும் அமேசான் செய்தித் தொடர்பாளர்கள் பிபிசி முண்டோவிடம், பயனர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதற்குப் பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட, 'அதிநவீன அல்காரிதம்'களைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்.

எடுத்துக்காட்டாக, கூகுள் செய்தித் தொடர்பாளர், அவர்களின் தேடுபொறி 80 சதவீத தேடல்களில் வணிக விளம்பரங்களைக் காட்டாது என்று கூறினார்.

"நாய் உணவு" மற்றும் "பிரைடல் ஷூக்கள்"(Bridal Shoe) போன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே இதைச் செய்யும் என்று அது கூறியது.

இருப்பினும், இந்த தளங்கள் சந்தையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை தவறாகப் பயன்படுத்துவதாக கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

டிம் ஓ'ரெய்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டிம் ஓ'ரெய்லி

அல்காரிதம் வருமானம் என்றால் என்ன?

டிம் ஓ'ரெய்லி பிபிசி முண்டோவிடம் பேசினார். அவர், அல்காரிதத்தின் மூலமாகப் பெறப்படும் வருமானம் என்றால் என்ன? அது எப்படி நுகர்வோரின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் பெறப்படுகிறது என்பது குறித்து விளக்கினார். இவர் கணினி துறையில் வல்லுநர்.

“அல்காரிதம் பற்றப் பேச வேண்டும் என்றால், அவைதான் இந்தச் சந்தையைக் கட்டுப்படுத்தும் கருவிகள்,” என்றார் அவர்.

கூகுள் மற்றும் அமேசானில் தேடல் முடிவுகளைக் காட்ட, அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பிபிசி பேசிய மூன்று கல்வியாளர்களின் கூற்றுப்படி, டிஜிட்டல் சந்தையில் பணியாற்றுவதற்கான முக்கிய விஷயம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்.

அடிப்படையில், இந்தப் பெரிய இணையதளங்கள் அனைத்துமே மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அல்காரிதம்களை நன்கு பயன்படுத்தப் பழகியவை.

“மிகப் பெரிய அளவிலான உள்ளடக்கத்தில் இருந்து நாம் விரும்புவதையும், நமக்குத் தேவையானதையும் பிரித்தெடுக்க அவை உதவுகின்றன,” என்றார் ஓ'ரெய்லி.

 

நீங்கள் தேடும் சிறந்ததை கூகுள், அமேசான் தருகிறதா?

கல்வியாளர்கள் இந்த கோட்பாட்டை "அல்காரிதமிக் ரெண்ட்ஸ் ஆஃப் அட்டென்ஷன்" (Algorithmic Rents of Attention) எனக் குறிப்பிடுகின்றனர்.

ஏனென்றால், இதுவரை கட்டுப்பாட்டு அமைப்புகள் பயனர்களின் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

இந்த தளங்கள் பயனர்களின் தரவை அவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொண்டு அவர்களின் தரவை தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு வாதம் உள்ளது. பயனர்களில் செயல்பாட்டை கண்காணிக்க அவர்களின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கவலையும் உள்ளது.

ஓ'ரெய்லி, ஸ்ட்ராஸ் மற்றும் மஸ்ஸுகாடோவும் இந்த விஷயத்தைத் மறுக்கவில்லை. ஆனால், இந்த முறைகேடுகள், அந்த அல்காரிதம் எவ்வாறு நம் கவனத்தைக் கட்டுப்படுத்தி பணமாக்குகின்றன என்பதைப் பொறுத்தது என்கிறார்கள்.

"தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மையான பிரச்னை" என்றார் ஓ'ரெய்லி.

நாம் அமேசானில் எதையாவது தேடும்போது, லட்சக்கணக்கான பொருட்களில், நாம் எதைத் தேடினோம் என்பதைக் காட்ட அல்காரிதம் அமைப்புகள் நிறைய தரவுகளைப் பயன்படுத்துகின்றன. அப்போது மக்களுக்குப் பயன்படும் சிறந்த மற்றும் மலிவான பொருட்களை அவை காண்பிக்க வேண்டும். அப்படி செய்தால், நம் தரவுகள் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பொருள்.

"ஆனால் சில நேரங்களில் அந்நிறுவனங்கள் உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் காட்டாது. அதற்குப் பதிலாக, நிறுவனங்களுக்கு எது நல்லது? எது லாபம் தரக் கூடியது? என்பதை மட்டும் காட்டுகிறார்கள். அங்குதான் முறைகேடு நடக்கிறது,'' என விளக்கினார் ஓ'ரெய்லி.

 

இலவச சேவை மூலம் பல ஆயிரம் கோடி கிடைப்பது எப்படி?

அமேசான் இணையதளம்

பட மூலாதாரம்,X @ILANSTRAUSS

"அல்காரிதமிக் ரெண்ட்ஸ் ஆஃப் அட்டென்ஷன்"(Algorithmic Rents of Attention) கோட்பாட்டின் படைப்பாளிகள், பயனர்களுக்குச் சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக தேடுபொறிகளை மேம்படுத்த பல ஆண்டுகளாக முயன்ற இந்தத் தளங்கள், இப்போது பயனர்களுக்கு "மோசமான முடிவுகளை" காட்டுகின்றன. அதன் மூலம் இந்தத் தளங்கள் தற்போது அதிக லாபம் தருகின்றன.

அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன.

"எங்கள் விளம்பர தர அமைப்புகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்கிறோம். எங்கள் அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், மக்களுக்குப் பயனுள்ள, பொருத்தமான விளம்பரங்களை மட்டுமே அவர்கள் தேடுகிறார்கள்," என கூகுள் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொருட்களை வழங்குவதற்காக மேம்பட்ட வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல்(Machine Learning) ஆகியவற்றில் இருந்து பயனடைவதற்காக ஸ்பான்சர் செய்யப்பட்ட முடிவுகளைக் காட்டுகிறோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான விளம்பரங்களைக் காட்டுகிறார்கள். இதனால், பிராண்டுகள்(தனியார் நிறுவனங்கள்) லாபம் ஈட்டுகின்றன,'' என கூகுளை போலவே அமேசான் நிறுவனமும் பதிலளித்தது.

"டிம் ஓ’ரெய்லி, இலன் ஸ்ட்ராஸ், மரியானா மஸ்ஸூகாடோ ஆகியோரின் ஆராய்ச்சியானது கூகுள் தேடலில் விளம்பரம் செய்வதால் மக்கள் மற்றும் விளம்பரதாரர்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை," என கூகுள் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.

நிறுவனங்களின் இந்த விளக்கத்தை கோட்பாட்டாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

அமேசானை எடுத்துக்கொண்டால், "நீங்கள் எந்தப் பொருளையும் தேடும்போது, இந்த தளம் சிறந்த மதிப்புரைகள் மற்றும் விலைகளுடன் உள்ள பொருட்களை முதலில் காட்டாது. முதலில் பணம் செலுத்திய உற்பத்தியாளரின் பொருட்களையே காட்டுகிறது” என்று உதாரணத்துடன் விளக்கினார்கள்.

இதன் விளைவாக, அமேசான் இன்று விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு 38 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3.15 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது.

முதலில் அவர்கள் வணிக விளம்பரதாரர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

"விளம்பரதாரர்கள் புதிய வாடிக்கையாளர்களை அடைய உதவுவதில் அமேசான் மிகவும் ஆர்வமாக உள்ளது" என ஓ'ரெய்லி கூறினார்.

 

விளம்பரங்களின் விலை எப்படி உயர்ந்தது?

"இப்போது அவர்கள் இந்த பெரிய வணிகத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களின் தளத்தில் விளம்பரங்களைக் காட்ட, முதலில் பணம் செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களுக்கான இந்த விலைகளை அமேசான் படிப்படியாக அதிகரித்து வருகிறது," என ஓ'ரெய்லி விளக்கினார்.

ஒரு கிளிக்கிற்கான விளம்பரதாரர்களின் விலை 2018 இல் சராசரியாக $0.56 ஆக இருந்தது, 2021 இல் $1.2 ஆக உயர்ந்துள்ளது.

அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பல தசாப்தங்களாக சில்லறை வணிகங்களில் விளம்பரம் ஒரு பகுதியாக உள்ளது.

இந்த விளம்பரங்கள் நிகழ்நேர செயல்பாட்டின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக கூகுள் கூறுகிறது.

கூகுள் இந்த விலையை முன்கூட்டியே முடிவு செய்யவில்லை. ஆனால் இது விளம்பரதாரர்களின் சலுகைகளைப் பொறுத்தது என்று நிறுவனம் கூறுகிறது.

பயனர்களுக்கு என்ன பாதிப்பு?

அமேசான் நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது?

"அமேசானில் அடிக்கடி பார்க்கும் பொருட்களைத் தேடும்போது, பயனர்கள் எதை அதிகம் கிளிக் செய்கிறார்கள் என்ற பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். இது எங்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,'' என இக்கோட்பாட்டை உருவாக்கியவர்கள் தெரிவித்தனர்.

"அமேசானின் ஆர்கானிக் தேடுபொறி, தேடல் வார்த்தையின் அடிப்படையில் 5 முதல் 50 இடங்களில் அதிக பணம் செலுத்தியுள்ள நிறுவனங்களின் விளம்பர பொருட்கள் தோன்றுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார் டிம் ஓ'ரெய்லி.

விளம்பரத்திற்கு பணம் செலுத்தும் பொருட்களின் விலைகள் சராசரியாக 17 சதவீதம் அதிகமாக இருந்ததாக அவர் கூறினார்.

"குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கும், சிறந்த விலையில் பொருட்களைப் வாங்குவதற்கும் நீங்கள் தேடுபொறிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அமேசான் கூறுகிறது. ஆனால், இது உங்களை அதிக விலையுள்ள பொருட்களை வாங்க வைக்கும் என்று ஓ'ரெய்லி விமர்சித்துள்ளார்.

ஓ'ரெய்லி கூறுகையில், பல ஆண்டுகளாக, குறிப்பாக கூகுள், நமக்கு முன்னால் இருப்பது சிறந்தது என்று நம்ப வைத்துவிட்டது. இது அந்தத் தளங்களுக்குத் தெரியும். அதனால்தான் பயனர்களை கிளிக் செய்ய சில பொருட்களை எங்கு காட்டுவது என்பது அவர்களுக்குத் தெரியும்" என்று இந்த வடிவமைப்பாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறுகின்றனர்.

"வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் தேவைகளுக்கு பொருத்தமான விளம்பரங்களை மட்டுமே கிளிக் செய்கிறார்கள்" என்று அமேசான் கூறுகிறது.

 

வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அமேசான் நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஓ'ரெய்லி, ஸ்ட்ராஸ் மற்றும் மஸ்ஸுகடோ ஆகியோர் குறுகிய காலத்தில் இந்த உத்தி மிகவும் லாபகரமானது, ஆனால் நிலையற்றது என்று எச்சரிக்கின்றனர்.

"நிறுவனங்கள் மக்களின் தேவையை புறக்கணித்து தங்களுக்கு ஏற்றாற்போல் சேவை செய்யத் தொடங்கும் போது பணத்தை இழக்க நேரிடும்," என்றார் ஓ'ரெய்லி.

இந்த கோட்பாட்டின் ஆசிரியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் இது நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்.

மைக்ரோசாப்ட் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய போது இதுபோன்ற முயற்சிகள் பின்வாங்கின என்கிறார் ஓ'ரெய்லி.

"அமேசானுக்கும் கூட, அது அதன் பயனர்களை ஏமாற்றுகிறது எனத் தெரியும்," என்றார் அவர்.

"வாடிக்கையாளர் அனுபவத்தைப் பற்றிய பெரும்பாலான கருத்துகள் நேர்மறையானவை. வாடிக்கையாளர்களும் எங்கள் பொருட்களை கிளிக் செய்து, அவர்கள் வணிகம் செய்தும் தளத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அந்தப் பொருட்களை பின்னாளில் வாங்குகிறார்கள்" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

பயனர்கள் இதைப் பற்றி என்ன செய்ய முடியும் என்று வரும்போது, முதலில் சந்தேகத்தை வெளிப்படுத்துவது மிக முக்கியமான விஷயம் என்று ஓ'ரெய்லி கூறுகிறார்.

இந்த தளங்களில் நீங்கள் பார்க்கும் முதல் பொருள் அல்லது இணைப்பு சிறந்தது என்று நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cz7krw53y8go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் ஆள் குறைப்பு செய்வது ஏன்?

ஆட்குறைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கிறிஸ்டினா ஜெ.ஆர்காஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 42 நிமிடங்களுக்கு முன்னர்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவிலான லாபங்களை ஈட்டிய போதிலும் ஆள் குறைப்பு ஏன் தொடர்கதையாக உள்ளது?

அமெரிக்க பங்குச் சந்தைகளை தீர்மானிக்கக் கூடியவை அந்த பெரு நிறுவனங்கள். வால் ஸ்ட்ரீட்டின் செல்ல நண்பர்கள். "மேக்னிஃபிசென்ட் 7" என்று அழைக்கப்படும் குழுவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவர்களின் மதிப்பும் கூட அதிகரிக்கின்றன.

பிற துறையில் உள்ள நிறுவனங்களை விட, இந்த ஆண்டு 12% அதிகமாகவும், 2025 -ல் மற்றொரு 12% அதிகமாகவும் அவர்களின் விற்பனை இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், ஆப்பிள், அமேசான், மெடா மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை கூட்டாக சுமார் 327 பில்லியன் டாலர் சம்பாதித்தன. இது கடந்த ஆண்டை விட 25.6% அதிகமாகும். இது, கொலம்பியா அல்லது சிலி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒத்ததாகும்.

எனினும்கூட, டெஸ்லா மற்றும் என்விடியா ஆகியவற்றை உள்ளடக்கிய "மேக்னிஃபிசென்ட் 7" என்ற பிரத்யேக குழு, அதிக அளவிலான ஆட்குறைப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டும் இதே போன்ற ஆட்குறைப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2023 மைக்ரோசாஃப்ட் தனது பணியாளர்களைக் குறைத்தது. Activision Blizzard ஐ $69 பில்லியனுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்த பிறகு, 2024 -ல் மேலும் 1,900 பேர் பணிநீக்கம் செய்யவுள்ளது.

அமேசான் நிறுவனத்திலும் இதேநிலை தான். கடந்த ஆண்டில் 9,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் ட்விச் இயங்குதளத்தின் 35% பணியாளர்களையும், அமேசான் பிரைம்-ல் பணிபுரியும் 100 பேரையும் பணி நீக்கம் செய்யவுள்ளது.

அதுபோதாதென்று, இந்த பிரத்யேக குழுவில் மேலும் பல சிறிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. மொத்தத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரே மாதத்தில் 122 தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 32,000 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் ராய்ட்டர்ஸ் பத்திரிகையால் மேற்கோள் காட்டப்பட்ட Layoffs.fyi என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இன்னும் 11 மாதங்கள் மீதம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்குறைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னணி நிறுவனங்களில் எவ்வளவு ஆட்குறைப்பு?

இந்த ஆண்டு PayPal நிறுவனத்தில் 2,500 பணியாளர்களும் , Spotify நிறுவனத்தில் 1,500 பணியாளர்களும், eBay நிறுவனத்தில் 1,000 பணியாளர்களும், Snapchat நிறுவனத்தில் 500 பணியாளர்களும் நீக்கப்படவுள்ளனர். தொழில்நுட்பத் துறையில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்களின் நிலை இதுவே.

2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஓரிரு ஆண்டுகளில், இணையத்தின் எழுச்சி டாட்-காம் பபிளுக்கு வழிவகுத்தது. (இணையவழி நிறுவனங்களில் செய்யப்பட்ட அதிக முதலீடுகள் காரணமாக, பங்குச்சந்தை மதிப்புகள் அபரிமிதமாக உயர்ந்தன. இதுவே டாட்-காம் பபிள் (dotcom bubble) என்றழைக்கப்படுகிறது. )

தற்போது நடைபெறும் ஆட்குறைப்பை டாட்காம் பபிளுடன் பலர் ஒப்பிட்டு வருகின்றனர்.

பிரபல நிதி நிறுவனமான ஜூலியஸ் பேயரின் தலைமை ஆய்வாளரான மாத்தியூ ராச்சேட்டரைப் பொறுத்தவரை, இந்த ஒப்பீடு சரியல்ல. ஏனெனில், ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்களின் (200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள்) பங்குகளின் மதிப்பு இன்னும் 2000 களின் நிலையை அடையவில்லை என்கிறார். "மேக்னிஃபிசென்ட் 7" நிறுவனங்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியவை என்றும், இது சிக்கல்கள் ஏற்பட்டால் உதவும் என்று பேயர் கூறுகிறார்.

எனவே இந்த இரண்டாவது அலை ஆட்குறைப்பின் பின்னணி என்ன? முக்கியமான 3 காரணங்கள் பார்க்கலாம்.

 
ஆட்குறைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

1. செயற்கை நுண்ணறிவு மற்றும் மூலோபாய மாற்றங்கள்

"தொழில்நுட்பத் துறையின் வரலாற்றில் பெரிய நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, அந்த துறையில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் அடுத்த தலைமுறை நிறுவனங்களின் புதுமையான முயற்சிகள் காரணமாக ஏற்படும்”என்று முதலீட்டு ஆலோசனைகள் வழங்கும், ODDO BHF AM நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மேலாளர் பிரைஸ் ப்ருனாஸ் கூறுகிறார்.

டாட்காம் பபிளின் போது இதுதான் நடைபெற்றது. இந்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளின் வளர்ச்சி ஒரு புரட்சியாகும்.

"உதாரணத்திற்கு மொழி சார்ந்த நிறுவனமான டியோலிங்கோவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள். அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள் பயன்படுத்தப்படும்" என்று குவார்க் வலைத்தளம் விளக்குகிறது.

செயற்கை நுண்ணறிவு வேகமாக செயல்படக் கூடியது. ஒருவர் 60 முதல் 90 நிமிடங்களில் எழுதுவதை, செயற்கை நுண்ணறிவு 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் எழுதி முடிக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோல்ட்மேன் சாக்ஸ் அறிக்கை ஒன்று, செயற்கை நுண்ணறிவு 30 கோடி முழுநேர வேலைகளுக்கு சமமான வேலைகளை செய்யக்கூடும் என்று கூறியது .

"நாங்கள் அதை 2000 களின் டாட்காம் பபிளின் போது பார்த்தோம். இடையூறுகள் எப்போதும் நிறுவனங்கள் தங்களை மறுகட்டமைக்க வழிவகுக்கின்றன" என்று eToro -ன் மூத்த சந்தை ஆய்வாளர் ஜேவியர் மோலினா கூறுகிறார்.

"ஒருபுறம், நிறுவனத்தின் உத்தியில் சில மாற்றங்கள் ஏற்படுவதையும், சில துறைகள் மூடப்படுவதையும் காண முடியும். மறுபுறம், செயற்கை நுண்ணறிவை நோக்கிய ஒரு நகர்வையும் காண்கிறோம். இது பல பணியிடங்கள் காணாமல் போவதற்கு காரணமாகிறது"என்கிறார் மோலினா.

 
ஆட்குறைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

2. 2022-ன் நினைவும் பாடங்களும்

2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறை 1,68,032 பேரை பணிநீக்கம் செய்தது. பிற துறைகளை ஒப்பிடும் போது, அதிக எண்ணிக்கையிலான ஆட்குறைப்பு தொழில்நுட்பத் துறையிலேயே நடைபெற்றது என்று சேலஞ்சர், கிரே & கிறிஸ்துமஸ் என்ற நிறுவனம் கூறுகிறது.

கொரோனா பெருந்தொதொற்று காலத்தில், பல சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் ஆள் சேர்ப்பை அதிகரித்து, காற்று தொடர்ந்து தங்களுக்கு சாதகமாக வீசும் என்ற எண்ணத்துடன் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தின. ஆனால் நிலைமைகள் மாறிய போது, 2022-ம் மற்றும் 2023-ம் ஆண்டில் ஆள் குறைப்பு தொடங்கின.

புதிய திட்டங்கள் தொடங்கப்படாமல் போனதற்கு மற்றொரு காரணம், பணவீக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதே.

பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்ப நிலையில், நிறைய மூலதனம் தேவைப்படும். ஆனால், கடன் வாங்குவது இப்போது அதீத செலவினமாக மாறிவிட்டது.

"சமீபத்திய வட்டி விகித உயர்வுகள் பல திட்டங்களை பாதித்துள்ளன. கடந்த காலங்களில் இந்த திட்டங்களில் முதலீடு செய்து, பின்னர் வளரவும் லாபத்தை அடையவும் முடியும்" என்று ஏ & ஜி நிதிகளில் டிஐபி மதிப்பு நிதியின் மேலாளர் ஆண்ட்ரேஸ் அலெண்டே கூறுகிறார்.

"கடன் பெறுவது சிரமமானதால், முதலீடுகள் மிகவும் குறைந்துவிட்டன. இதனால் தொழில்நுட்ப திட்டங்கள் மேலும் முடங்கியுள்ளன "என்று அவர் மேலும் கூறுகிறார்.

 
ஆட்குறைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

3. தொழில்நுட்பத் துறையின் வளார்ச்சி பாதை

200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மதிப்பை கொண்ட ‘மெகா கேப்’ எனப்படும் நிறுவனங்கள் கூட, அதிக லாபம் என்ற முதலீட்டாளர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய செலவுகளை குறைத்துக் கொள்கின்றன.

ஆனால் உண்மை என்னவென்றால், "தொழில்நுட்பத் துறையின் சுழற்சி பொதுவாக அப்படி தான் இருக்கும். திடீரென, ஆனால் வேகமாகவும், இருக்கும். விரைவில், இந்த நிறுவனங்கள் மற்றும் அதன் திட்டங்கள் மாற்றியமைத்து மீண்டும் புதுப்பிக்கப்படும். இதில் தப்பிப் பிழைப்பவை மீண்டும் மிகப்பெரிய வாய்ப்புகளை பெறலாம்." என்று அலண்டே விளக்குகிறார்.

புதிய சுழற்சிக்கான அறிகுறிகள் ஏற்கெனவே காண தொடங்கி விட்டன. இந்த சுழற்சி ஏற்படும் வரை தொழில்நுட்பத் துறையில் உள்ள சிரமங்கள் பிற துறைகளின் நுகர்வு மற்றும் முதலீட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறிய நிறுவனங்களில் உள்ள நிலைமகளையும் பெரிய நிறுவனங்களின் நிலைமைகலையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது என்று நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். சிறிய நிறுவனங்களில் தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக சில முடிவுகள் எடுக்கப்படும். பெரிய அளவிலான மூலதனத்தைக் கொண்டு சிரமங்களை சமாளிக்கக் கூடிய பெரிய நிறுவனங்களின் முடிவுகளை சிறிய நிறுவனங்களுடன் ஒப்பிட முடியாது என்று கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/ckrdjmerl78o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.