Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர்

12 FEB, 2024 | 05:55 PM
image

(எம்.நியூட்டன்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.  

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மேற்படி விடயம் சார்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் 6 முக்கிய விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1. 2024.02.23ம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.

2. கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 2024.02.23 ம் திகதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

3. குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் 1500 ரூபா ஆகும்.

4. வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 23 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும்.

5. கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடுகளுடன் வருகை தருதல் வேண்டும்.

6. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/176197

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா; 10 இலட்சம் ரூபாய் திணைக்களங்கள் வழங்கியதாக யாழ். மாவட்ட செயலர் தெரிவிப்பு

18 FEB, 2024 | 02:03 PM
image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு உத்தேச செலவீனமாக 90 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

இம்முறை பயணிகளிடம் ஒருவழி படகுப் பயண கட்டணமாக 1,500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளதாகவும் யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டுவர வேண்டும் என்பதாகவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் யாழ். மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மேலும், இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில், அதைப் பற்றி இம்முறை தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். 

கச்சதீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176675

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரம் மீனவர்கள் பகிஷ்கரிப்பதில் பிரச்சினை இல்லை. அவர்கள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை, மீன்வளத்தை நாசமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை கடட்படை அதிதீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புதினம் தெரியுமோ........
(பட்சி)

முந்தி ஆரும் ஒப்பீஸ் வழியில பிழை விட்டாலோ, வேலையை ஒழுங்காச் செய்யாட்டிக்கோ ' உன்னைத் தண்ணியில்லாக் காட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிப்போடுவன்' எண்டு மேலதிகாரிமார் வெருட்டுறவை. ஆனால் உண்மையிலேயே தண்ணியில்லாத இடமெண்டால் இலங்கையில அது கச்சதீவாத்தான் இருக்க முடியும். அங்க அந்தோனியார் கோயிலும், நேவிக்காம்பும், மரஞ்செடி கொடியளும் தான் இருக்கு. நேவிக்காரருக்கு கூட அங்க வேற இடத்தில இருந்து தான் தண்ணி போறது. இப்பிடி தண்ணியோ, குடிமனையோ இல்லாத ஒரு தீவுக்கு சனங்கள் அந்தோனியாரைக் கும்பிடப் போகேக்க அவைக்கு அதுக்குரிய ஒழுங்குகளைச் செய்து குடுக்க வேண்டியது அரசாங்கத்தின்ர கடமை.

வழக்கமா அந்தோனியாருக்குப் போற இலங்கை ஆக்களுக்கும், இந்தியாவில இருந்து வாறவைக்கும் நேவிக்காரர் தான் சாப்பாடு, தண்ணி குடுக்கிறவை. அதுக்கெண்டு அவைக்குத் தனியா ஒதுக்கீடெல்லாம் இருக்கு. ஆனால் போனமுறை தங்களுக்கு அந்தோனியார் திருவிழாவுக்காக நேவிக்காரருக்கு அரசாங்கத்தால காசு ஒதுக்குப்படேலை. அதால அவை போன வருசம் நடந்த திருவிழாவில ஏனோ தானோ எண்டு தான் சாப்பாடும். தண்ணியும் குடுத்தவை. அதுவும் ஒழுங்கான சாப்பாடில்லை எண்டும், எல்லாருக்கும் கிடைக்கேலை எண்டும் எக்கச்சக்கம் முறைப்பாடு வேற.

அதால இந்தமுறை தாங்கள் தண்ணியோ, சாப்பாடோ தரமாட்டம் எண்டு நேவிக்காரர் கைவிரிச்சுப் போட்டினம். அந்தோனியார் திருவிழா ஒண்டும் நேவிக்காரரின் உபயம் இல்லை தானே. அவை சாப்பாடு, தண்ணி தரமாட்டம் எண்டால், கச்சேரிக்காரரோ. இல்லாட்டி நெடுந்தீவுப் பிரதேச செயலகமோ அதுக்கான ஏற்பாட்டைச் செய்திருக்க வேணுமெல்லோ.

ஆனால் அவையும் நெடுந்தீவு ஏற்பாட்டுக் கூட்டம் எண்ட பேரில என்னென்னவோ எல்லாம் கதைச்சுப் போட்டு கடைசியில 'அங்க போற எல்லாரும் தங்களுக்கு சாப்பாடு, தண்ணி கொண்டு வரோணும், அங்க வந்து சமைக்கவும் அனுமதி இல்லை' எண்டு அறிக்கை விட்டிருக்கினம் உதோ பொறுப்பான அதிகாரிமார் செய்யிற வேலை? அங்க நல்லதண்ணிக் கிணறு இருந்தாலாவது பரவாயில்லை. அதில தண்ணியைக் கிள்ளி சனம் குடிக்கும் எண்டு சொல்லலாம். அப்பிடியுமில்லை. கடல் பயணம் செய்து போட்டு. சுத்திவர உப்புக்காத்து அடிக்கிற இடத்தில ஒருநாள் முழுக்க நிண்டால் வழக்கத்தை விட தண்ணி கூடத்தான் இழுக்கும்.

அதைவிட கச்சதீவுக்குப் போற படகுகளும், யாழ்ப்பாணத்து மினிபஸ்ஸுகள் மாதிரி ஆக்களை அடைஞ்சு கொண்டுதான் போறதுகள். அதுக்க உந்தச் சாப்பாட்டுச் சாமான்களையும், தண்ணி பரல்களையும் எப்பிடிக் கொண்டு போக ஏலும்? அதைவிட நெடுந்தீவில ஒரு சாப்பாட்டுக் கடைதான் வழக்கமா போட அனுமதிக்கிறவை. நேவி சாப்பாடு குடுக்கேக்கையே. அங்க நிக்கிற சனம் அந்த ஒற்றைக்கடையில தள்ளுமுள்ளுப்பட்டுத்தான் சாப்பாட்டை வாங்க முடியும்.

இப்ப நேவியின்ர சாப்பாடும் இல்லையெண்டதால எல்லாச் சனமும் அந்தக் கடையைத்தான் மொய்க்கப்போகுதுகள். சிலவேளை சாப்பாடு வாங்கப்போய் அந்த நெரிசலில சிக்கி, ஆக்களுக்கு பாதிப்பும் வரக்கூடும். இப்பிடி அகதி முகாம் மாதிரி அடிபட்டுச் சாப்பாடு வாங்கித்தானோ அந்தோனியாரைக் கும்பிட வேணும்?

கச்சேரிக்காரரிட்டையோ, நெடுந்தீவுப் பிரதேச செயலகத்திட்டையோ அந்தோனியாரிட்ட வாறவைக்கு சாப்பாடு தண்ணி குடுக்கக் காசில்லாட்டி தனியாரிட்ட யாழ்ப்பாணம் கச்சேரிக்காரர் உதவி கேட்டிருந்தால், அள்ளிக்குடுக்க ஆயிரம் பேர் இருப்பினம். இல்லாட்டி ஆயர் இல்லமாவது ஏதும் செய்திருக்கும். அதை விட்டிட்டு இப்பிடி சனத்திட்ட 'தண்ணியைக் கொண்டுவா. சாப்பாட்டைக் கொண்டு வா எண்டு ஆய்க்கினைப்படுத்திறது அந்தோனியாருக்கே பொறுக்காது கண்டியளோ........

(17.02.2024 உதயன் பத்திரிகை)

https://newuthayan.com/article/புதினம்_தெரியுமோ........

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

இதே அந்தோனியார்தான் மன்னார் தள்ளாடியிலும் இருக்கிறார் , இன்னும் கொச்சிக்கடையிலும் இருக்கிறார். இங்கெல்லாம்போய் கும்பிடலாம்தானே? அங்குஏதும் விஸேடம் என்றால் அதை செய்யலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு திருவிழாவை இரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

விசைப்படகு கடற்றொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பயணிகளை அழைத்துச் செல்ல முடியாததால் கச்சத்தீவு திருவிழா இரத்து செய்யப்படுவதாகவும், இந்த விழாவில் இந்திய பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கச்சதீவு திருவிழாவை இரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு | Kachchathivu Festival Cancelled

https://tamilwin.com/article/kachchathivu-festival-cancelled-1708500414?itm_source=parsely-api

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து 40 படகுகளில் பக்தர்கள் பயணம்

23 FEB, 2024 | 06:18 PM
image

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் இவ்வருட திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பயணமாகியுள்ளனர்.

அந்த வகையில், இன்று வெள்ளிக்கிழமை (23) 40 படகுகளில் 400க்கும்  மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.

இன்று மாலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்குத்தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேலும், இந்த திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து  பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என தேவாலயத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp_Image_2024-02-23_at_9.11.49_AM.

WhatsApp_Image_2024-02-23_at_10.28.30_AM

WhatsApp_Image_2024-02-23_at_10.29.14_AM

WhatsApp_Image_2024-02-23_at_10.29.13_AM

https://www.virakesari.lk/article/177148

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2024 at 12:49, Cruso said:

இதே அந்தோனியார்தான் மன்னார் தள்ளாடியிலும் இருக்கிறார் , இன்னும் கொச்சிக்கடையிலும் இருக்கிறார். இங்கெல்லாம்போய் கும்பிடலாம்தானே? அங்குஏதும் விஸேடம் என்றால் அதை செய்யலாம். 

வன்மையாக  கண்டிக்கிறேன் ....ஹி   ஹி....
மக்கள் விரும்பி செல்கின்றனர்  அதுவும் மத நம்பிக்கையுடன் ...விடுங்கோவன் ...
மக்களின் பணத்தை அரசுக்கு எடுக்க இது போன்ற மத சடங்குகள் தேவை....எரிபொருள் விநியோகம் நன்றாக நடந்திருக்கும்...மக்கள் கஸ்டத்தை இறைவனுக்காக சகித்து கொள்வார்கள் என அரசுகளுக்கு நன்றாகவே தெரியும் ....மக்களிடமிருந்து மொத்தமாக பணத்தை வசூலிக்க வேணும் என்றால் இப்படியான மதம் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் தேவை ....

நம்ம அரசு வளர்ந்தால் 
நாம் வளர்வோம்

 நாம் வளர்ந்தால் 
நம்மட நமோ நம மாதாவும் வளர்ந்திடுவார்

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2024 at 02:49, Cruso said:

இதே அந்தோனியார்தான் மன்னார் தள்ளாடியிலும் இருக்கிறார் , இன்னும் கொச்சிக்கடையிலும் இருக்கிறார். இங்கெல்லாம்போய் கும்பிடலாம்தானே?

சிறப்பான கேள்வி 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

வன்மையாக  கண்டிக்கிறேன் ....ஹி   ஹி....
மக்கள் விரும்பி செல்கின்றனர்  அதுவும் மத நம்பிக்கையுடன் ...விடுங்கோவன் ...
மக்களின் பணத்தை அரசுக்கு எடுக்க இது போன்ற மத சடங்குகள் தேவை....எரிபொருள் விநியோகம் நன்றாக நடந்திருக்கும்...மக்கள் கஸ்டத்தை இறைவனுக்காக சகித்து கொள்வார்கள் என அரசுகளுக்கு நன்றாகவே தெரியும் ....மக்களிடமிருந்து மொத்தமாக பணத்தை வசூலிக்க வேணும் என்றால் இப்படியான மதம் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் தேவை ....

நம்ம அரசு வளர்ந்தால் 
நாம் வளர்வோம்

 நாம் வளர்ந்தால் 
நம்மட நமோ நம மாதாவும் வளர்ந்திடுவார்

நான் அதனை எழுதியது மக்கள் எதிர்நோக்கும் கருதினைக்கொண்டே. முன்னர் போல உணவு, மலசல கூட வசதிகள்போன்ற அத்தியாவசிய சேவைகள் செய்யப்படுவதில்லை என்றும், அரசு அல்லது உள்ளூர் நிர்வாகம் பணம் ஒதுக்குவதில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மடற்ப்படி அவர்கள் பணம் செலவு செய்தோ, நடந்து சென்றோ , உடலை வருத்தி இறைவனை தேடும்போதுதான் அங்கு மகிழ்ச்சி இருக்கின்றது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 4454 இலங்கையர்கள் பங்கேற்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு!

24 FEB, 2024 | 07:36 AM
image

இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில்  சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இன்று  இடம்பெற்றன.

வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) காலை 7 மணிக்கு  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து  4354 பக்தர்கள்  கலந்து கொண்டுள்ளனர் .இந்திய பக்தர்கள் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி எவரும் வருகை தரவில்லை.

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்றைய திருவிழாவில் கடற்படை உயர் அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

received_1542552376539822.jpeg

received_413750397896146.jpeg

received_933325618177178.jpeg

received_1130204865008573.jpeg

received_3657277871227921.jpeg

received_786690436844494.jpeg

received_370890352500780.jpeg

received_707307324935951.jpeg

received_723609969586162.jpeg

received_768045028164891.jpeg

received_900858278436428.jpeg

received_1077745083277131.jpeg

received_776799987809849.jpeg

received_1052891999342035.jpeg

received_1142766483837434.jpeg

received_380911304689786.jpeg

received_1116166929558011.jpeg

received_1640658046764805.jpeg

received_7231863873593469.jpeg

received_1060962055128336.jpeg

received_1108904716925064.jpeg

received_2807400222732414.jpeg

received_220248114444309.jpeg

received_1382799859018883.jpeg

https://www.virakesari.lk/article/177165

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 இது பற்றிய வீடியோ பார்த்த ஒரு  அண்ணாவும் சொன்னார் நன்றாக சென்னார்கள் என்று.

----------------------

5 hours ago, Cruso said:

அவர்கள் பணம் செலவு செய்தோ, நடந்து சென்றோ , உடலை வருத்தி இறைவனை தேடும்போதுதான் அங்கு மகிழ்ச்சி இருக்கின்றது. 

அங்கே மக்கள் பணம் செலவு செய்யும் நிலையில் உள்ளதும் நடந்து செல்வதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாளை ஞாயிறு நான் குறைந்தது 30 கீலே மீட்டர் சைக்கிள் ஓட வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விளங்க நினைப்பவன் said:

 இது பற்றிய வீடியோ பார்த்த ஒரு  அண்ணாவும் சொன்னார் நன்றாக சென்னார்கள் என்று.

----------------------

அங்கே மக்கள் பணம் செலவு செய்யும் நிலையில் உள்ளதும் நடந்து செல்வதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நாளை ஞாயிறு நான் குறைந்தது 30 கீலே மீட்டர் சைக்கிள் ஓட வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறேன்.

ஓடுங்கள், ஓடுங்கள் நன்றாக ஓடுங்கள். அப்பத்தான் உங்கள் உடம்பு சுகப்படும். உங்கள் வயதை கருத்தில் கொண்டு ஓடுங்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கஸ்டப்பட்டு வழிபாடு  செய்ய செல்கின்றனர்...கடற்படை அதிகாரிகள்  ஹெலிக்கப்டரில் வந்து இறைவனை காவி செல்கின்றனர்....
 
மக்கள் கஸ்டப்பட்டு வழிபாடு  செய்ய செல்கின்றனர்...கடற்படை அதிகாரிகள்  ஹெலிக்கப்டரில் வந்து இறைவனை காவி செல்கின்றனர்....

கச்ச தீவு அந்தோனியார் எப்ப  கிளர்ந்தெழும்பி கிளர்ச்சி செய்ய போகிறரோ தெரியவில்லை ...
ஒரு புறம் இந்துக்கள் இந்தியா
மறு புறம் பெளத்தர்கள் 

நான் எப்படி காலை நீட்டி உறங்குவது  என்று...

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

மக்கள் கஸ்டப்பட்டு வழிபாடு  செய்ய செல்கின்றனர்...கடற்படை அதிகாரிகள்  ஹெலிக்கப்டரில் வந்து இறைவனை காவி செல்கின்றனர்....

ஓ இப்படியும் நடைபெறுகின்றதா
கச்ச தீவு இறைவன் அந்தோனியார்  கஸ்டப்பட்டு உடலைவருத்தி நடந்து தன்னிடம்  வரும் மக்களுக்கு தான் அருள் கொடுக்க வேண்டும். ஹெலிக்கப்டரில் வந்து இறங்கும் கடற்படை அதிகாரிகளுக்கு அருள் கொடுக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஓ இப்படியும் நடைபெறுகின்றதா
கச்ச தீவு இறைவன் அந்தோனியார்  கஸ்டப்பட்டு உடலைவருத்தி நடந்து தன்னிடம்  வரும் மக்களுக்கு தான் அருள் கொடுக்க வேண்டும். ஹெலிக்கப்டரில் வந்து இறங்கும் கடற்படை அதிகாரிகளுக்கு அருள் கொடுக்க கூடாது.

எந்த நாட்டு கடற்படை அதிகாரிகள் என்று தெரியவில்லை...சில யூ டியுப் விண்னர்கள் இந்தியா ஹெலிகப்பட்டர் என சொன்னார்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.