Jump to content

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் : பொதுத்தேர்தலுக்கான நிதி 2025 வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Published By: DIGITAL DESK 3    13 FEB, 2024 | 01:01 PM

image
 

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து  செயற்படும் என ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/176273

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச தலைவர் தேர்தல் 2024இல் நடந்தே தீரும்

1335284643.jpg

ஆதவன் 

பொதுத்தேர்தல் அடுத்த வருடமே அரச தலைவரின் ஊடகப்பிரிவு உறுதி

 இந்த வருடத்தில் உரிய காலப்பகுதியில்  அரச தலைவர் தேர்தல் இடம்பெறும். அடுத்தவருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் என்று  அரச தலைவர்  ஊடகப்பிரிவு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
.
அரச தலைவர்  தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஏற்று அங்கம் இகழ்பெறுவதாகவும், இதன் ஓர் அங்கமாகவே நிறைவேற்று அதிகார  அரச தலைவர் முறைமையை நீக்குவது பற்றி தற்போது பேசப்படுகின்றது எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வந்த நிலையிலேயே  அரச தலைவர் ஊடகப்பிரிவு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

அத்துடன், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான நிதி, 2025 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும். தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசு இணைந்து செயற்படும் எனவும் அரச தலைவர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையின் அரசமைப்பின் பிரகாரம் அரச தலைவருக்குரிய பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். எனவே, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 18ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள்  அரச தலைவர்  தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (எ )

https://newuthayan.com/article/அரச_தலைவர்__தேர்தல்_2024இல்_நடந்தே_தீரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய தேவை கிடையாது - டலஸ்

15 FEB, 2024 | 05:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை கிடையாது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அமைதியாக இருப்பது அதிருப்திக்குரியது என சுதந்திர மக்கள் சபையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவடையும். ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய ஜனாதிபதி ஒக்டோபர் மாதம் பதவி பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டின் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியமைப்பின் ஊடாக நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் திறமையானவர். மாகாண சபைகள் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பனவற்றை இல்லாதொழித்ததை போன்று ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்க முடியாது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் மாதங்களில் பொறுப்பாக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஜனாதிபதி தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் விடயம் தற்போது பேசுபொருளாக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வது தொடர்பில் 1994ஆம் ஆண்டு முதல் பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ,மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை. இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தி, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார். ஆகவே நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக தற்போது குறிப்பிடப்படுவதில் எவ்வித உண்மை தன்மையும் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/176439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பழைய படி.. ஆளாளுக்கு பதவிக்கு வந்ததும் சனாதிபதி பதவியை ஒழிப்பென்று என்று கிழப்பிட்டாங்கள்.

சந்திரிக்கா இதனை ஆரம்பிச்சா.. கடைசியில் ரணிலாரும் கூவினார். ஆனால் எல்லாரும் பதவிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை ஒழிக்க மனசு வைக்கினமே இல்லை.

இப்ப சஜித்தும் தொடங்கிட்டார். வேடிக்கை என்னவென்றால்.. பதவிக்கு வந்து.. 100 நாளைக்குள் சனாதிபதி பதவியை ஒழிப்பன் என்ற மைத்திரி.. மீண்டும்.. சனாதிபதியானால்.. ஒழிப்பாராம். 

சனத்தை முழு மடையர் என்று நினைக்கிறாங்கள்.. சொறீலங்கா அரசியல் வியாதிகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

ஆனால் எல்லாரும் பதவிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை ஒழிக்க மனசு வைக்கினமே இல்லை.

இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிற மாதிரி தான் ...வரும் ஆனால் வராது
....ஜனாதிபதி பதவியை ஒழிப்போம் ஆனால் ஒழிக்க மாட்டோம்...

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.