Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

DSC_2222-750x375.jpg

ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்!

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது.

117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Edited by தமிழ் சிறி
  • தமிழ் சிறி changed the title to யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று ஆரம்பம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

DSC_2150-750x430.jpg

வடக்கின் பெரும் போர்-யாழ் நகர் எங்கும் பெரு விழா..!

 

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது.

117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன.

இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

IMG_20240307_134555-scaled.jpg

https://thinakaran.com/வடக்கின்-பெரும்-போர்-யாழ/

  • தமிழ் சிறி changed the title to யாழ். மத்திய கல்லூரிக்கும் - யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி ஆரம்பம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 யாழ் மத்திய கல்லூரி vs புனித ஜோன்ஸ் கல்லூரி | 117வது வடக்கின் போர் - நாள் - 1.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

யாழ். மத்திய கல்லூரி – பரியோவான் கல்லூரிகளுக்கு இடையேயான மாபெரும் கிரிக்கெட் சமர்.

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

117வது முறையாக நடைபெறும் இப்போட்டி, நாளை சனிக்கிழமை வரை மூன்று தினங்கள் நடைபெறும். கிரிக்கெட் போட்டியில் நேற்று (07) முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி அணி வலுவான நிலையை பெற்றுள்ளது.  முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி 157 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய பரியோவான் கல்லூரி முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உதயனன் அபிஜோய்ஷான்த் அதிரடியாக 39 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றதோடு அன்டர்சன் சச்சின் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். இதன்படி பரியோவான் கல்லூரி அணி இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க யாழ். மத்திய கல்லூரியை விடவும் 48 ஓட்டங்களால் மாத்திரமே பின்தங்கியுள்ளது.  முன்னதாக யாழ். மத்திய கல்லூரி சார்பாக முதல் இன்னிங்ஸில் மத்திய பின் வரிசையில் வந்த ஷகாதேவன் சயன்தன் 55 ஓட்டங்களை பெற்றார். இதன்போது பரியோவான் கல்லூரி சார்பில் அருள்சீலன் கவீஷன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு குகதாஸ் மதுலன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://www.thinakaran.lk/2024/03/08/sports/47495/யாழ்-மத்திய-கல்லூரி-பரிய/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் மத்திய கல்லூரி vs புனித ஜோன்ஸ் கல்லூரி | 117வது போட்டி - 2´ம் நாள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

117ஆவது வடக்கின் சமர்: பலம்வாய்ந்த நிலையில் சென். ஜோன்ஸ்

Published By: VISHNU    08 MAR, 2024 | 10:14 PM

image

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117ஆவது வடக்கின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் சென் ஜொன்ஸ் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் யாழ். மத்திய கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மீதம் இருக்க 69 ஓட்டங்களால் மாத்திரம் யாழ். மத்திய கல்லூரி அணி முன்னிலையில் இருக்கிறது.

இதற்கு அமைய போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமையன்று யாழ். மத்திய கல்லூரி அணி அதிசியம் நிகழ்த்தினாலன்றி சென். ஜோன்ஸின் வெற்றி தவிர்க்க முடியாததாகிவிடும்.

எனவே, யாழ். மத்திய கல்லூரியின் கடைசி ஜோடியினர் அழுத்தங்களை புறந்தள்ளி வைத்துவிட்டு எதிர்த்தாடும் யுக்தியைக் கையாண்டு மேலும் 50 அல்லது 60 ஓட்டங்களைப் பெற்றால் சென் ஜோன்ஸ் அணி நெருக்கடியை எதிர்கொள்ளும்.

ஆனால், யாழ். மத்திய கல்லூரியின் கடைசி ஜோடி தாக்குப்பிடித்து துடுப்பெடுத்தாடும் என்பது சந்தேகம் என்றே கூறத்தோன்றுகிறது.

போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (08) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த சென். ஜோன்ஸ், மதிய போசன இடைவேளைக்குப் பின்னர் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

அதுவரை அணித் தலைவர் நேசகுமார் ஜேஸியல், முர்ஃபின் ரெண்டியோ ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுசேர்த்துக்கொடுத்தனர்.

ஆனால், அதன் பின்னர் தகுதாஸ் அபிலாஸ், முரளி திசோன் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி கடைசி 7 விக்கெட்களை தம்மிடையே பகிர்ந்து சென் ஜோன்ஸ் அணியை 228 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

ஜேஸியல் 99 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 52 ஓட்டங்களையும் ரெண்டியோ 5 பவுண்டறிகளுடன் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

மத்திய வரிசையில் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 11 ஓட்டங்களைப் பெற்றார்.

யாழ். மத்திய கல்லூரி பந்துவீச்சில் தகுதாஸ் அபிலாஷ் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 8 ஓவரகளில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முரளி திசோன் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சுதர்ஷன் அனுஷாந்த் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 71 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த யாழ். மத்திய கல்லூரி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

முதலாவது இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும் இணைப்பாட்டங்கள் கட்டி எழுப்பப்படாதது யாழ். மத்திய கல்லூரி அணிக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தியது.

அணித் தலைவர் நிஷாந்தன் அஜய் (23), சதாகரன் சிமில்டன் (21) சுதர்ஷன் அனுஷாந்த் (20), ரஞ்சித்குமார் நியூட்டன் (17) சகாதேவன் சயந்தன் (16) ஆகியோர் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

கடைசி விக்கெட்டில் ஜோடி செர்ந்துள்ள விக்னேஸ்வரன் பாருதி 15 ஓட்டங்களுடனும் முரளி திசோன் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் ஸ்டன்லி செம்சன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிருபானந்தன் கஜகமன் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெயச்சந்திரன் அஷ்னாத் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 157 ஓட்டங்களைப் பெற்றது.

https://www.virakesari.lk/article/178291

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வடக்கின் சமர் : சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு 39ஆவது வெற்றி

09 MAR, 2024 | 02:58 PM
image

(நெவில் அன்தனி)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (09) மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் நிறைவுக்கு வந்த சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 117ஆவது வடக்கின் சமரில் 10 விக்கெட்களால் சென். ஜோன்ஸ் இலகுவாக வெற்றிபெற்றது.

DSC_2569.jpg

இதன் மூலம் வடக்கின் சமரில் 39ஆவது வெற்றியைப் பதிவு செய்த சென். ஜோன்ஸ் கல்லூரி, வடக்கின் சமர் தொடரில் 39 - 28 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.

79 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. 

இதன் மூலம் கடந்த வருட தோல்வியை சென். ஜோன்ஸ் நிவர்த்தி செய்துகொண்டது.

DSC_2437.jpg

துடுப்பாட்டத்தில் அபிஜோய்ஷாந்த் 10 பவுண்டறிகள் உட்பட 50 ஓட்டங்களுடனும் அண்டசன் சச்சின் 3 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக தனது இரண்டாவது இன்னிங்ஸை போட்டியின் மூன்றாம் நாளான இன்று (09) காலை 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த யாழ். மத்திய கல்லூரி மொத்த எண்ணிக்கை 149 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழக்க இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

விசேட விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்: சகாதேவன் சயந்தன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த பந்துவீச்சாளர்: அருள்சீலன் கவிஷன் (சென். ஜோன்ஸ்)

சிறந்த சகலதுறை வீரர்: நேசகுமார் எபநேசர் ஜெஸியால் (சென். ஜோன்ஸ்)

சிறந்த விக்கெட் காப்பாளர்: சங்கீத் க்ரேம்ஸ்மித் (சென் ஜோன்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர்: ஜெயச்சந்திரன் அஷ்னாத் (சென். ஜோன்ஸ்)

ஆட்டநாயகன்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென் ஜோன்ஸ்)

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 157 (சகாதேவன் சயந்தன் 55, ரஞ்சிதகுமார் நியூட்டன் 24, சதாகரன் ஸ்மில்டன் 22, அருள்சீலன் கவிஷன் 34 - 5 விக்., குகதாஸ் மாதுளன் 52 - 3 விக்.)

சென். ஜோன்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 228 (நேசகுமார் ஜெய்ஸால் 53, அண்டசன் சச்சின் 40, உதயனன் அபிஜோய்ஷாந்த் 39, மகேந்திரன் கிந்துஷன் 22, முர்ஃபின் ரெண்டியோ 22, தகுதாஸ் அபிலாஷ் 24 - 5 விக்., முரளி திசோன் 64 - 4 விக்.),

யாழ். மத்திய கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 149 (நிஷாந்தன் அஜய் 23, சதாகரன் சிமில்டன் 21, சுதர்ஷன் அனுஷாந்த் 20, விக்னேஸ்வரன் பாருதி 20, ஸடான்லி சம்சன் 19 - 2 விக்., கிருபானந்தன் கஜகமன் 28 - 2 விக்., ஜெயச்சந்திரன் அஷ்னாத் 30 - 2 விக்.)

சென். ஜோன்ஸ் (வெற்றி இலக்கு 79) 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 81 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 50 ஆ.இ., அண்டசன் ஸ்மித் 30 ஆ.இ.)

DSC_2420.jpg

DSC_2553.jpg

DSC_2542.jpg

DSC_2520.jpg

DSC_2512.jpg

DSC_2499.jpg

DSC_2508.jpg

DSC_2484.jpg

DSC_2490.jpg

DSC_2534.jpg

DSC_2574.jpg

DSC_2464.jpg

https://www.virakesari.lk/article/178315

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 யாழ் மத்திய கல்லூரி vs புனித ஜோன்ஸ் கல்லூரி | 117வது போட்டி - 3´ம் நாள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்துக்கள்.. SJC



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.