Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அண்மையில்  Plam Spring California என்ற இடத்தில் போய் 4 நாட்கள் தங்கியிருந்தோம்.

இந்த தேசம் முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது.

ஒரு இடத்தில் நன்றாக காற்று வீசக் கூடிய இடத்தில்  Windmills Farm என்று சிறிய காற்றாலைகளில் இருந்து பெரிய பெரிய காற்றாலைகள் வரை பூட்டி மின்னுற்பத்தி பண்ணுகிறார்கள்.

ஒருநாள் இதைப் பார்க்க போயிருந்தோம்.

அவர்களின் உத்தரவுடன் வாகனத்திலேயே பயணித்தபடி பார்வையிடலாம்.

அவர்களின் அலுவலகத்துக்குள் போனால் காற்றாலை எப்படி இயங்குகிறது.எவ்வளவு மின்சாரத்தை பெற முடியும்.காற்றே இல்லை என்றால் எப்படி மின்சாரம் வழங்குவது.

மிக முக்கியமாக இதில் பிரச்சனை வரும்போது எப்படியெல்லாம் திருத்த வேலைகள் செய்யலாம்.உள்ளே போவதற்கு எப்படி போவது.

இதுவரை ஏதோ சும்மா சுற்றுது மின்சாரம் வருகுது என்று தான் நினைத்தேன்.அலுவலகத்தில் இருந்த காணொளியைப் பார்த்தால் தலை சுற்றியது.இதுவரை எண்ணியதெல்லாம் தவிடுபொடியானது.

பெரிய காற்றாலையின் அடிப்பகுதியைப் பார்க்கவே எமது ஊர் கிணறுகள் மாதிரி பெரிதாக இருந்தது.பெரிய காற்றாலைகளின் சிறகுகள் தனித்தனியே ஒரு ரெயிலரில் கொண்டு போக முடியாது.இதற்கென்று தனி ரெயிலர்கள் தேவை.அவ்வளவு பெரிதாக இருந்தது.

அடிப்பாகத்திலிருந்து ஏதாவது திருத்த வேலைகளுக்கு கீழே இருந்து மேல்தட்டுவரை நிரந்தரமாக ஏணியிருக்கிறது.நமது ஊர் பனை மரங்கள் போல உயரமாக இருந்தது.

ஏணியில் ஏறி உள்ளே போனால் பெரிய பெரிய இயந்திரங்கள்.சிறகுகள் பூட்டியிருக்கும் பகுதி கீழே நின்று பார்க்க சிறியதாக இருக்கும்.ஆனால் உண்மையிலேயே இது ஒரு பேரூந்து அளவு இருந்தது.அதற்குள் எப்படியெல்லாம் இயந்திரங்களைப் பூட்டி மின்சாரம் பெறுகிறார்கள்.

யாருக்காவது இவைகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் தவறவிடாமல் போய் பாருங்கள்.

IMG-2268.png

சிறிய காற்றாலையின் சிறகு.

IMG-2266.png

காற்றாலைத் தோட்டத்தின் ஒரு பகுதி.

IMG-2264.png

ஓரளவான காற்றாலையின் முழுத் தோற்றம்.

IMG-2269.png

திருத்த வேலைக்காக உள்நுழையும் பாதை.

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, ஈழப்பிரியன் said:

👍👍.....
 
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து லாஸ் வேகாஸ் போகும் பாதை நெடுக, நகர எல்லைகளை தாண்டிய பின், இப்படியானவற்றை பார்த்திருக்கின்றேன். மணலும், சிறு கள்ளிச் செடிகளும் நிறைந்த, பகலில் கொதித்து இரவில் உறையும், வெறும் பாலை நிலம். அடுத்த தடவை போகும் பொழுது இறங்கி உள்ளே போய் பார்க்க வேண்டும்.
   
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.IMG_2272.png.45a0d5e6af5ce0c1c9534a0d3f049e29.png

நாங்கள் போனது அரிசோனா போகும்பாதை.

ஒரு தடவை போய் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஈழப்பிரியன் said:

large.IMG_2272.png.45a0d5e6af5ce0c1c9534a0d3f049e29.png

நாங்கள் போனது அரிசோனா போகும்பாதை.

ஒரு தடவை போய் பாருங்கள்.

கண்டிப்பாக அடுத்த தடவை போகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

கண்டிப்பாக அடுத்த தடவை போகின்றேன்.

போங்க போங்க.

ஆனால் கோடை காலத்தில் போயிடாதீங்க.

பொரிந்து விடுவீர்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

போங்க போங்க.

ஆனால் கோடை காலத்தில் போயிடாதீங்க.

பொரிந்து விடுவீர்கள்.

மன்னாரும் இப்படி பாலவனமாகிவிடுமா..

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, alvayan said:

மன்னாரும் இப்படி பாலவனமாகிவிடுமா..

இது ஏற்கனவே பாலைவனமாகி இருந்த இடம்.

இந்த இடத்துக்கு பெயரே Palm Desert.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.