Jump to content

ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது!


Recommended Posts

ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது!

 
 



யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூகமளித்திருந்தார் அவர் ஒரு பக்க சார்பான நிலையினை மேற்கொண்டதை என்னால் காணக் கூடியதாக இருந்தது என வடமாகாண இலங்கை போக்குவரத்து சபை தொழிலாளர் குழுமத்தின் போசகர் நவரத்தினம் கோபி கிருஷ்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களுக்கான பிரதிநிதி பொதுமக்கள் சேவை முடக்கப்பட்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து சேவை என்பது அத்தியாவசியமான ஒரு சேவை. முடக்கம் ஏற்பட்டு கொண்டிருந்த பொழுது பொலிஸார் மூலம் அதனை நிவர்த்தி செய்யாமல், அவர்கள் தங்களுடைய அரசியல் லாபங்களையும் மேற்கொண்டனர்.

பொதுமக்கள் பிரதிநிதி என்பவர், பொது மக்களுக்கு சார்பாக பொதுமக்களுக்கு ஏற்ற முறையில் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும், ஒரு தரப்பினருக்கு பக்க சார்பாக நடந்து கொள்ள முடியாது. இது அங்கஜன் இராமநாதனின் வாக்கு வங்கிக்கான ஒரு வேட்டையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எங்களைப் பொறுத்தவரை இலங்கை போக்குவரத்து சபை என்பது மக்களுக்கு ஒரு சேவை செய்யும் ஒரு சபை. கடந்த காலங்களில் இது அரசியலாக மாறி உள்ளது. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் ஒவ்வொரு கட்சிகளுடன் சேர்ந்து தமது போராட்டங்களை மேற்கொள்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்பாக இல்லை. அவர்கள் தங்களுடைய வாக்குவங்களை எவ்வாறு நிரப்பிக் கொள்ளலாம் என்பதை யோசித்துக் கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து சாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகைப் போராட்டம், பக்கபலமாக நின்றது. அங்கஜன் ராமநாதன் என்று எல்லோரும் கூறிக் கொள்கின்றனர், அங்கு நின்ற ஒரு சில போலீஸ் உத்தியோகத்தர்களும் கடமையிலே சரியாக முறையில் மேற்கொள்ளவில்லை.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் என்பது தனிப்பட்ட சொத்து அல்ல. இது மக்களுடைய சொத்து. மக்கடே சொத்தினை கடந்த 50 வருடங்களாக இலங்கை போக்குவரத்து சபை பாவித்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த பேருந்து நிலையம் ஆனது, இந்த இடத்திலிருந்து எங்கும் நகர்த்துவதற்கு நாங்கள் தயாராக இல்லை. எங்களுடைய சேவைக்குள் எந்த ஒரு தனியாரும் உள் வருவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு திணிப்புகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால், மாவட்டம் தவிர்ந்து அல்லாமல் மாகாணம் தவிர்ந்து அல்லாமல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வோம்.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை மேற்கொள்வது நாங்கள் அல்ல. இலங்கை போக்குவரத்து சபை குழுவினருக்கு எதிராக, இந்த ஒரு அரச அதிகாரியாக இருந்தாலும் சரி அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பொதுமக்களுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகமாக கருதி, நாங்கள் வலுக்கட்டாயமாக போராட்டத்தில் இறங்காமல் இது மக்களுடைய பிரச்சினைகளை யார் ஏற்படுத்தினார்களோ அவர்களை அதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாங்கள் முற்கூட்டியே கூறிக் கொள்ளுகின்றோம், மத்திய பேருந்து நிலையத்தை விட்டு நாங்கள் போகப்போவது இல்லை, அதேபோல் தனியார் துறையினர் எங்களுடன் இணைந்து செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

எங்களுடைய போராட்டம் நியாயமானது, பொது மக்களுக்கு நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். மத்திய பேருந்து நிலைய பிரச்சனையை, அரசியல் ஆக்கவே ஒரு சிலர் எதிர்பார்த்துள்ளனர். அரசியலை தவிர்த்து பொதுமக்களுக்கு சேவை செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, குறித்த அரசியல்வாதிகளிடம் நீங்கள் கூறிக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-
 

https://tamil.adaderana.lk/news.php?nid=184839

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

அங்கஜன் இராமநாதனின் வாக்கு வங்கிக்கான ஒரு வேட்டையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அவரும் பாவம் ..அதிக வாக்குகள போன தடவை பெற்றார் ...அதற்கு ராஜபக்சாக்களின் "கை" கைகொடுத்தது ...இந்த தடவை ராஜபக்சாக்களே ஏனையோரின் கையை நம்பி தான் பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ...
இப்படி பக்க சார்பாக செயல் பட்டு வாக்கு பெற வேண்டிய  நிலை

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.