Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

                       பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது.

                        ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது.

 

large.IMG_2274.jpeg.cf8575c506dbfae24918 
                   ஜோசுவா மரம்

                        இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது.

large.IMG_2273.jpeg.b4db3d28609630262a0f

                                                 ஜோசுவா மர பழங்கள்.

                       அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள்.

                         இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும்.

                           மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான்.

                           ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது.

large.IMG_2277.jpeg.5607b4ccf5f2c0aefa07

large.IMG_2276.jpeg.c8b8471cb7cc15e7f90d

                            இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம்.

முற்றும்.

https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park

மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.

  • Like 9

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.