Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 MAR, 2024 | 03:19 PM
image

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பதில் அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அலுலகத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரட்நாயக்க கலந்துகொண்டு காணி உரிமையாளர்களுக்கான காணிப் பத்திரங்களை வழங்கிவைத்தார்.

இதில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரம ரட்ன, ஜனாதிபதி செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள், ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

VideoCapture_20240310-120828.jpg

VideoCapture_20240310-120743.jpg

VideoCapture_20240310-120754.jpg

VideoCapture_20240310-120759.jpg

VideoCapture_20240310-125642.jpg

VideoCapture_20240310-125638.jpg

https://www.virakesari.lk/article/178361

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள 68.57 ஏக்கர் நிலங்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது படையினர் வசமுள்ள 3,412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளன.

இதற்கான நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் காணிகளில் காங்கேசன்துறையில் 20.03 ஏக்கரும், தென்மயிலையில் 24.9 ஏக்கரும், அரியாலையில் 0.45 ஏக்கரும், வறுத்தளைவிளானில் 23.27 ஏக்கரும் அடங்குகின்றன. அந்த நிலங்களுக்கான உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/295135

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

படையினர் வசமுள்ள 3,412 ஏக்கரில் இருந்து 68.57 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளன.

68  ஏக்கர் விடுவிப்புக்கு இந்த அலப்பறை தேவையா? ...
தேர்தலில் சொல்ல வேணுமல்ல... .

...மக்கள் போராடுவினம் இவையள்   படத்துக்கு பொஸ் கொடுப்பினம்... 

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் சேர்ந்து இப்படி பிச்சை எடுக்கலாம் என்கிறார் எங்கட ....பிச்சைக்காரன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(22) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன.

ஜே/244 வயாவிளான் கிழக்கு , ஜே/245 வயாவிளான் மேற்கு, ஜே/252 பலாலி தெற்கு , ஜே/254 பலாலி வடக்கு, ஜே/253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

423005277_828888409273480_81405571550860 432122115_828888225940165_49062319466728 433436278_828888509273470_64933744245014 433438869_828888152606839_26232482030839 433439611_828888332606821_83141540754624 433442508_828888275940160_52975300956110 433449145_828888555940132_40874194675299 433500729_828888452606809_17306479143848 433504627_828888102606844_56086355773142 433576080_828888072606847_60549847341915

https://thinakkural.lk/article/296730

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுக்கு யாழில் காணி உறுதிகள் ஜனாதிபதி ரணில் கொடுத்தார்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.