Jump to content

முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், TIDக்கு அழைப்பு!

adminMarch 11, 2024
 

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் குறித்த அரசியல் கைதியின் வீட்டிற்கு சென்று நேற்று (10.03.24) வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) 12 ஆம் திகதி காலை 9.00 இற்கு கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு வாக்கு மூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விசாரணை பிரிவு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக முகநூல் கணக்கு சம்மந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக விசாரணையை மேற்கொள்வதற்கு 2024 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 12 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இல149, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்டிய முகவரியில் விசாரணை பிரிவு ஒன்றின் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைக்கின்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://globaltamilnews.net/2024/201076/

 

Link to comment
Share on other sites

பயங்கரவாத சட்டத்தை வைத்து மக்களையும், முன்னாள் போராளிகளையும் வதைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

பயங்கரவாத சட்டத்தை வைத்து மக்களையும், முன்னாள் போராளிகளையும் வதைக்கிறார்கள்.

இதற்கிடையில் ....யாழில் விமானப்படை கண்காட்சியைஉம் நடத்துகின்றார்கள்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்க தலைவருமான செ.அரவிந்தன் என்பவரை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) அழைக்கப்பட்டுள்ளார்.

திறந்தவெளி சிறைச்சாலையில் இருக்கும் தமிழர்களுக்காக வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.