Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம்!

மட்டக்களப்பில் தரையில் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவொட் சூரிய மின் சக்தி திட்டம் நேற்று (10) காலை திறந்து வைக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இது இலங்கை மின்சார சபையின் 90 மெகாவொட் ஒப்பந்த நடைமுறையின் கீழ் கட்டப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது X கணக்கில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

BackBay Solar தனியார் நிறுவனத்தினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/295196

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மட்டக்களப்பு ஒருமுழச்சோலையில் சூரிய மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

Published By: DIGITAL DESK 3   11 MAR, 2024 | 04:53 PM

image

(எம்.மனோசித்ரா)

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை வடக்கு ஒருமுழச்சோலை கிராமத்தில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சூரிய மின்சக்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று  திங்கட்கிழமை (11) கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேரதுறை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ள முதலீட்டு திட்டத்தினை முன்னெடுத்து நாட்டின் மின்சார உற்பத்திக்கு பாரிய பங்களிப்புச் செய்து வரும் வெக்வே சோலார் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஊடாக மட்டக்களப்பு ஒருமுழச்சோலை  சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் உட்கட்டுமான பணிகளுக்காக ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவியினையும் அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நாடு எதிர்கொண்டிருந்த எரிபொருள் தட்டுப்பாடு அதனுடன் இணைந்த 15 - 20 மணி நேரம் வரையான மின் துண்டிப்பு, அதன் காரணமாக நாட்டின் உற்பத்தியில் ஏற்பட்ட குறைபாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு பல மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அண்மையில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அனுமதியின் ஊடாக, வருடாந்த மின் உற்பத்தியில் 20 மெகாவோல்ட் மின்சாரத்தைப் பிறப்பிக்கத்தக்க, விவசாய செய்கையுடன் கூடிய சூரிய மின்சக்தி நிலையமானது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாவற்காடு கிராமத்தில் அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தலைமையில் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-03-11_at_11.40.55.jp

https://www.virakesari.lk/article/178452



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.