Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 MAR, 2024 | 10:05 AM
image

வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று சனிக்கிழமை (16) காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது. 

இப் பேரணியானது காலை  10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து  நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர்.

VideoCapture_20240316-081317.jpg

VideoCapture_20240316-081309.jpg

VideoCapture_20240316-081108.jpg

VideoCapture_20240316-080944__1_.jpg

https://www.virakesari.lk/article/178838

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு!

Published By: VISHNU   16 MAR, 2024 | 12:51 AM

image

அநீதிக்கு எதிராக சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்புவிடுத்துள்ளார்.

கடந்த மகாசிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஆலயத்தின் நிர்வாகிகள்மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

சனிக்கிழமை (16) காலை 10.00 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக குறித்த போராட்டம்  ஆரம்பிக்கப்படவுள்ளது.

அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்கள், சமயம்சார்ந்த அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள், சிவில் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், என அனைவரையும், கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3   16 MAR, 2024 | 02:36 PM

image

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (16) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டததுடன், அங்கிருந்து பேரணியாக வவுனியா மணிக்கூட்டு கோபுர வீதியூடாக வவுனியா நகரை அடைந்து அங்கிருந்து இலுப்பையடியினை சென்றடைந்திருந்தது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து பேரணியாக வவுனியா சிறைச்சாலையின் முன்பாக சென்று நிறைவடைந்திருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ' பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை வசிடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே, வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து'' என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது கைது செய்யப்பட்ட உறவினர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

IMG_20240316_105141.jpg

IMG_20240316_105420.jpg

IMG_20240316_115833.jpg

https://www.virakesari.lk/article/178868

  • கருத்துக்கள உறவுகள்

IMG-6028.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகள் தீர்மானம் !

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில், நாளை மறுதினம் கொழும்பில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தவுள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/296040

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறி மலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published By: DIGITAL DESK 3   18 MAR, 2024 | 07:27 PM

image

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு உரிமையை உறுதி செய்யக் கோரியும் இன்று திங்கட்கிழமை (18) மூதூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 மூதூர் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் மூதூர் பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. இப்போராட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்றும் மூதூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டது.

429592905_726163786309749_84796156158343

419308599_364084776598083_23599608249148

431778367_1664553274363391_2393209048438

  431866764_297036103417300_29294933649214

https://www.virakesari.lk/article/179012

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.