Jump to content

கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !


Recommended Posts

பதியப்பட்டது

கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் !

 
 
1640094128364436-0.jpg


பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும் பௌத்மதகுரு தெரிவித்துள்ளார்.

கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்போ  தமிழ் பகுதிகளில் குண்டு போட்டதும் நிர்வாகத் திறமை அற்ற செயல்கள் தானே?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த தேரரையே ஒரு பல்கலைக்கழக வேந்தர் ஆக்கியதும் கோதா என்று தான் ஒரு ஞாபகம். கோதாவின் நிர்வாகத் திறமை அங்கேயே சறுக்கி விட்டுது போல....😀

யாராவது பயத்தில் ஓட ஆரம்பித்தால் எல்லோரும் துரத்துவார்கள், எல்லாம் துரத்தும். ஓடின கோதா அப்படியே எங்காவது போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அடையாளம் காணப்படாத நபரால் தேரர்  சுட்டுகொள்ளபட்டார் .

இதுதான் சொறி லங்காவின் நீதி .

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பெருமாள் said:

அடையாளம் காணப்படாத நபரால் தேரர்  சுட்டுகொள்ளபட்டார் .

இதுதான் சொறி லங்காவின் நீதி .

உண்மையா ?? செய்தி உண்மையா.?? பெருமாள், ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kandiah57 said:

உண்மையா ?? செய்தி உண்மையா.?? பெருமாள், ..

ஈஸ்டர் நெருங்குது செத்தவன் யாரோ மறுபடியும் நாட்டில் மறுபடியும் தீவிரவாதம் அதவேர் அறுக்கணும் ரிக்கட் போட்டு கொத்தாவுக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கு இன்னமும் தெரியாது குண்டு வைத்தது கோத்தா என்று?????????



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.