Jump to content

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
news-03-10.jpg

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார்.

“ஜப்பானிடம் இருந்து இலங்கை கற்க வேண்டிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கல் பாடங்கள்” என்ற தலைப்பில் “Geopolitical Cartographer” சர்வதேச ஆராய்ச்சி அமைப்பினால் ஜனாதிபதி தலைமையில் நேற்று (21) கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜப்பானிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டார்.

“ஜப்பானின் நவீனமயமாக்கல் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிர்வாகத்திற்கு கற்க வேண்டிய பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தூதுவர், ஜப்பானின் வரலாற்றில் கடந்து வந்த சவால்களுக்கு ஈடுகொடுத்து, நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்த அனுபவங்களை இதன்போது விவரித்தார்.

“Geopolitic Cartographer” என்பது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சி அமைப்பாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதன் நிறுவனர் ஆவார்.

உலக அரசியல் ஒழுங்கை மறுவடிவமைக்கும் இந்து சமுத்திரம், பசுபிக் கடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்தியங்களில் புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார மற்றும் கடல்சார் வளர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை ஆய்வு செய்தல், மேம்படுத்துவதே “Geopolitical Cartographer” அமைபின் நோக்கமாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் சர்வதேச அளவில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவாலான சூழ்நிலையை தூதுவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

உலகமே ஜப்பானுக்கு எதிராக நின்றபோது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் கூற்று காரணமாக, போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைவதற்கு வழியமைத்ததையும் தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை ஜப்பான் அந்நாட்டின் முன்னேற்றம் மற்றும் மீள் கட்டமைப்புக்காக பயன்படுத்திக் கொண்டதெனவும் கூறினார்.

அன்று தொடக்கம் இன்று வரையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவு காணப்படுவதோடு, அந்த நட்புறவை இருநாட்டு தலைவர்களும் மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜப்பான் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இலங்கை, ஜப்பானை முன்மாதிரியாக கொண்டு நாட்டில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பானை போன்று போட்டித் தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர், போட்டித் தன்மை நிறைந்த ஏற்றுமதி கைத்தொழில்களை உருவாக்குவதற்காக தொழில் கொள்கைகளை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் கீழ் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த மிசுகோஷி ஹிடேயாகி, அந்த முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் வேலைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முயற்சிகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உள்ளிட்ட நிறுவனங்களின் ஊடாக ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜப்பானின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/296768

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.