Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 MAR, 2024 | 09:57 AM
image
 

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (24) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஐந்து நாட்களுக்கு சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் சீனா இலங்கைக்கு அளித்த கடனை  மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.

அவர் நேற்று (24) இரவு 08.20 மணியளவில் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

அவருடன் இணைந்து மேலும் 10 தூதுக்குழுவினர் சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/179615

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கும்  இலங்கைக்குமிடையில்    ஒன்பது ஒப்பந்தங்கள் கைச்சாத்து

de.jpgசீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறித்த ஒப்பந்தங்கள் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் இராணுவ மரியாதையை பெற்றுக்கொண்டதன் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பெய்ஜிங்கில் நடைபெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது, பொருளாதார ஒத்துழைப்புடன் சமூக, கலாசாரம், கல்வி மற்றும் விவசாயத்துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தூய்மையான எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு திறனை ஆராய்வதற்கு இரு தரப்பும் பரஸ்பர அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கைச்சாத்திடப்பட்ட ஒன்பது புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்படும் என இரு நாட்டு பிரதமர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, இலங்கையில் முதலீடு செய்வதற்கு அதிகமான நிறுவனங்களை சீனா ஊக்குவிப்பதுடன், இலங்கையின் தரமான பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும், சீன நிறுவனங்களுக்கு நல்ல வர்த்தக சூழலை இலங்கை வழங்க முடியும் என நம்புவதாக சீன பிரதமர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/297211

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா ஆதரவு - இலங்கை பிரதமரிடம் சீன பிரதமர்

Published By: RAJEEBAN    27 MAR, 2024 | 11:37 AM

image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா  வலுவான ஆதரவை வெளியிட்டுள்ளது.

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போது சீன பிரதமர் லிகியாங் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு சீனா தொடர்ந்தும் உதவும்  இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவும் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ்குணவர்த்தனவும் அவரது குடும்பத்தினரும் சீனா இலங்கைஉறவுகளை வலுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பாடுபட்டுள்ளதாக சீன பிரதமர் பாராட்டியுள்ளார்.

இலங்கை தொடர்ச்சியாக ஒருசீன கொள்கையை பின்பற்றிவருகின்றது சர்வதேச அரங்கில்  ஆதரவளித்துவருகின்றது என சீன பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விமானநிலையம் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்புதுறைமுகம் ஆகியவற்றை அபிவிருத்திசெய்வதற்கு சீனா தொடர்ந்தும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179808

  • கருத்துக்கள உறவுகள்

வேறை வழியே கிடையாது போய் காலில் விழுந்து  பிச்சை எடுப்பதை நாகரிகமாக ஒப்பந்தங்கள் கைசாத்திடபட்டன என்று வழமை போல் அடித்து விடுவார்கள் .

3 hours ago, ஏராளன் said:

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான சீனாவின் ஒத்துழைப்பு தொடரும் - பிரதமர் தினேஷிடம் சீன ஜனாதிபதி தெரிவிப்பு!

Published By: DIGITAL DESK 3.  28 MAR, 2024 | 09:38 AM

image
 

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன ஜனாதிபதி சீ ஜிங்பிங்கிற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவின் எக்ஸிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து இலங்கைக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என சீன ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் சீ சின்பிங் மற்றும் சீன பிரதமர் லீ கியாங் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

432928948_3624799857834991_6871817731677

433001390_1563745077756516_5869900560876

https://www.virakesari.lk/article/179866

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை!

ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார்.

சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/297561

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.