Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"என்னைப் பற்றி மனதில் பட்டவை" 


 
"என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது
அவளை நினைத்தேன் அழுகை வருகுது
வாழ்வை  நினைத்தேன் ஆத்திரம் வருகுது   
மரணத்தை  நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!"

 

"குழந்தை பருவம் சுமாராய் போச்சு    
வாலிப பருவம் முரடாய் போச்சு 
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு 
பழக்க வழக்கம் கரடாய் போச்சு!"


"உண்மை தேடி உலகம் சுற்றினேன் 
வேஷம் போட்ட மனிதர் கண்டேன்
மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் 
காசுக்கு மாறும் காதல் கண்டேன்!"


"ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன்
மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன்
பதவி ஆசை பிரித்து விளையாடுது 
பணம் தேடி வியாபாரம் செய்யுது!" 


"ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்
பிரிந்து கிடப்பவன் மரித்து போவான் 
மதம் கடந்து பிரதேசம் கடந்து 
ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!"  


"ஆலம் விழுதின் அற்புதம் பார் 
தாங்கி நிற்கும் உறுதியைப் பார்
இடர் பல எமக்கு வந்தாலும்  
இணை பிரியா ஒற்றுமை காண்!"


"நானாய் வாழ முடிவு எடுத்தேன்
சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன்
அண்ணாவும் தம்பியும் கனவில் வந்தினம்
பெற்ற அனுபவத்தை எனக்கு தந்தினம்!"


"ராமனை வெறுத்து பூமியுள் குதித்தாள் 
யுத்தத்தை வெறுத்து புத்தன் ஆனான் 
அன்பை போதித்து சமயம் பிறந்தது
வெறுப்பை வளர்த்து கொலை செய்யுது!"


"ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை
இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை   
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!"


"கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம்
நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் 
நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள்
நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!"


"விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் 
தட்டிக் கேட்டும் பெற வேண்டும் 
நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!"  


"ஒன்றாய் கூடு உண்மையை உரை
நியாயம் நிறுத்து விசாரணை எடு
கவலை மறக்க தீர்வைத் தா
கேள்வி கேட்டு நடுகல் முழங்குது!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

"என்னைப் பற்றி மனதில் பட்டவை" 


 
"என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது
அவளை நினைத்தேன் அழுகை வருகுது
வாழ்வை  நினைத்தேன் ஆத்திரம் வருகுது   
மரணத்தை  நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!"

 

"குழந்தை பருவம் சுமாராய் போச்சு    
வாலிப பருவம் முரடாய் போச்சு 
படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு 
பழக்க வழக்கம் கரடாய் போச்சு!"


"உண்மை தேடி உலகம் சுற்றினேன் 
வேஷம் போட்ட மனிதர் கண்டேன்
மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் 
காசுக்கு மாறும் காதல் கண்டேன்!"


"ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன்
மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன்
பதவி ஆசை பிரித்து விளையாடுது 
பணம் தேடி வியாபாரம் செய்யுது!" 


"ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்
பிரிந்து கிடப்பவன் மரித்து போவான் 
மதம் கடந்து பிரதேசம் கடந்து 
ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!"  


"ஆலம் விழுதின் அற்புதம் பார் 
தாங்கி நிற்கும் உறுதியைப் பார்
இடர் பல எமக்கு வந்தாலும்  
இணை பிரியா ஒற்றுமை காண்!"


"நானாய் வாழ முடிவு எடுத்தேன்
சாதி சமயம் இரண்டும் தவிர்த்தேன்
அண்ணாவும் தம்பியும் கனவில் வந்தினம்
பெற்ற அனுபவத்தை எனக்கு தந்தினம்!"


"ராமனை வெறுத்து பூமியுள் குதித்தாள் 
யுத்தத்தை வெறுத்து புத்தன் ஆனான் 
அன்பை போதித்து சமயம் பிறந்தது
வெறுப்பை வளர்த்து கொலை செய்யுது!"


"ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை
இருந்ததும் இல்லை நிலமும் இல்லை
சிதைந்து போராடி வெற்றியும் இல்லை   
புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!"


"கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம்
நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் 
நீதி வேண்டி சிலம்பை உடைத்தாள்
நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்!"


"விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் 
தட்டிக் கேட்டும் பெற வேண்டும் 
நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!"  


"ஒன்றாய் கூடு உண்மையை உரை
நியாயம் நிறுத்து விசாரணை எடு
கவலை மறக்க தீர்வைத் தா
கேள்வி கேட்டு நடுகல் முழங்குது!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

கவிதை நல்லா இருக்கு.

உங்கட வலைப்பூவை கொஞ்சம் சொல்லுங்கோவன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

வாலிப பருவம் முரடாய் போச்சு 

கூடவே கம்யூனிசமும் வந்திருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கேள்வி: உங்கட வலைப்பூவை கொஞ்சம் சொல்லுங்கோவன்.

பதில்: [1] முகநூல் : Kandiah  Thillaivinayagalingam 
             [2] https://www.facebook.com/groups/978753388866632/?ref=group_header


கேள்வி: கூடவே கம்யூனிசமும் வந்திருக்குமே?

பதில்: இல்லை, ஆனால் சாதி, சமயம், மூட நம்பிக்கைகள் தவிர்த்த எளிய வாழ்வும், தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டில் ஒரு நாட்டமும், அதே நேரம் மாற்றான் வீட்டு மல்லிகையும் மணக்கும் என்பதிலும் நம்பிக்கை வந்தது.  

நன்றி

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

Edited by kandiah Thillaivinayagalingam


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.