Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"உயர்ந்த மனிதர்கள்"
[உண்மைக்கதை]

ஒரு உயர்ந்த மனிதன் என்பவன், உண்மையை விரும்பி, சரியானதை செய்து, எதிரியையும் நேர்மையாக  கையாண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயநலத்துக்காக, கௌரவமான பண்புகளை விட்டு கொடுக்காமல், கைவிடாமல் வாழ்பவன். அப்படியான என் நண்பர்கள் தான் பொறியாளர்கள் தவராஜாவும் ராஜரத்னாவும். இதில் தவராஜா என்னை விட கொஞ்சம் வயது கூட. அவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஆனால் ராஜரத்னா தெற்கை சேர்ந்த, ஒரு சிங்கள பாடசாலை அதிபரின் மகன். என்னைவிட கொஞ்சம் வயது குறைவு.  நாம் மூவரும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணிபுரிந்த காலம் அது.

நாம் எல்லோரும் சிங்களம் தமிழ் என்ற பாகுபாடு இன்றி நிர்வாக ஊழியர் விடுதிகளில் தங்கி இருந்து அங்கு வேலை செய்து வந்தோம். எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும்
துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம்.  துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு  என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா. அது மட்டும் அல்ல, ஒருவருக்கு எந்த உதவி தேவை என்றாலும், வேலையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆயினும்  யாரும் அவரை  இலகுவாக அணுகலாம். கட்டாயம் தன்னலம் பார்க்காமல், நேரகாலம் பார்க்காமல் உடனடியாக உதவ கூடியவர். இன்றும் இன்னும் என்னுடன் நண்பராக இருக்கிறார். ஆனால், எனது மற்ற  நண்பரான ராஜரத்னா, இன்று எம்மிடம் இல்லை. அவர் சாக்கடிக்கப் பட்டுவிட்டார். அவர் ஒருமுறை உதவி தொகைப்பெற்று ஜப்பான் சென்று, திரும்பி வரும் பொழுது எனக்கு கொண்டுவந்து  தந்த பரிசு மட்டும் இன்னும் என்னிடம் உள்ளது,
வடக்கிலும் தெற்கிலும் அரசுக்கு எதிராக, ஆனால் வேறு வேறு இரு குழுக்களால் போராட்டம் நடந்து கொண்டு இருந்த ஒரு காலத்தில்,  நாம் இருவரும் தனிப்பட்ட முறையில் கதைக்கும்  பொழுது என்னிடம் கூறினார், தெற்கில் போராடும் சிங்கள இளைஞர்களுக்கு ஆதரவாக, எமது தொழிற்சாலையிலும் சிலர் இருப்பதாகவும், அது தனக்கு தெரியும் என்றும், எம் நாட்டிற்கு அமைதி வேண்டும். அது தொழிற்சாலையில் வளரவிடக் கூடாது என்றும் கூறினார். அவரும் ஒரு சிங்கள சமூகம் என்பதால், நான் கூறினேன், இதில் நீ  தலையிடாமல்  நடுநிலையாக நிற்பதே நல்லது என்று. அதன் பின் நான் அந்த விடயங்களைப்பற்றி கதைக்காமல் அமைதி காத்தேன். வீண் பிரச்சனைக்குள் ஏன் போவான் என்று, ஏன் என்றால், வடக்கில் நாம் பெற்ற, கண்ட, கடைபிடித்த அனுபவம் தான்! 

இருள தொடங்கிய ஒரு மாலை பொழுது, நாம் துடுப்பாட்டம் வழமை போல் விளையாடிவிட்டு, இரவு சாப்பாட்டிற்கு முன், நானும் ராஜரத்னாவும், விடுதியில் கரம் பலகை விளையாடிக் கொண்டு இருக்கும் பொழுது, திடீரென ஒரு பதினைந்து இருப்பது சிங்கள இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் எமது உத்தியோகத்தர் விடுதிகளுக்கு புகுந்து, எம்மை  எல்லோரையும் துப்பாக்கி முனையில் ஒரு வரிசையில் நிற்பாட்டினார்கள். அவர்களில் ஒருவர் சிங்களத்தில், நீங்கள் பயப்படவேண்டாம். நாம் சில விசாரணை செய்யவேண்டி உள்ளது. அதற்கு உங்களில் சிலரை கூட்டிக்கொண்டு போகிறோம். விசாரணையின் பின் அவர்களை விடுவோம் என்றனர். சிலரின் பெயர்களை வாசித்து, மூவரை கூட்டி சென்றனர். அதில் ஒருவராக என் நண்பன் ராஜரத்னாவும் இருந்தார். அன்று நாம் விளையாடிய துடுப்பாட்டத்தில், ராஜரத்னா என் குழுவில் இருந்ததுடன், அன்று திறமையாக பந்து வீசி, தவராஜாவை தவிர மற்ற எல்லோரையும் ஆட்டம் இழக்கச் செய்தார். 

நான் அப்பொழுது தான் யோசித்தேன், அவருக்கு  நான் கூறிய அறிவுரைகளை அவர் ஒரு வேளை, செவிசாய்க்கவில்லை என்று.  அவருக்கு எப்பவும் ஒரு அமைதியான ஒழுங்கு முறை  வேண்டும். அது குழம்பிடுமோ என்ற கவலை கொண்டவர், நாட்டின் மேல் உள்ள பற்றாலும், தனது தன்னலம் அற்ற கொள்கையாலும், எதாவது அரசுக்கு சொல்லி இருக்கலாம் என்று  எண்ணினேன். அப்படி இருக்காது, விசாரணையின் பின் அவர் வருவார் என்று என்னையே நான் தேற்றினேன். எமக்கு வடக்கில் இருந்த அனுபவம் அவருக்கு இல்லை. ஏன் என்றால், தெற்கில் ஒரு முறை 1971 இல் ஒரு எழுச்சி வந்து, அந்த ஆண்டே அரசு அதை அடக்கி விட்டது. அதன் பின் அது வெளிப்படையாக இயங்கவில்லை. அது மீண்டும் 1988 /1989 இப்ப தான் வந்துள்ளது.

ஒரு பத்து இருப்பது நிமிடத்தின் பின் துப்பாக்கி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்டன, அவரின் மனைவி, அவரின் சில மாதமே கொண்ட குழந்தையுடன் ஓடிவந்து , எம்மில் சிலராவது சத்தம்  வந்த திசை பக்கம் போய் பார்க்கும்படி, ஒரே அழுதபடி கேட்டார். எதுக்கும் முன்னுக்கு நிற்பவர் தவராஜா தானே. எனவே நானும் தவராஜாவும் முன்னுக்கு செல்ல மற்றும் சில சிங்கள நண்பர்களும் எம்மை தொடர,  இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு புறப்பட்டு சென்றோம். எம் தொழிற்சாலை ஒரு சிறு காட்டு பிரதேசத்தில் இருந்ததால், சுற்றிவர பத்தை  பத்தையாகக் இருந்தன. அப்படி ஒரு பத்தைக்கு அருகில் அவரின் உடல் துப்பாக்கி சூடுகளுடன் விழுந்து இருந்தது. அந்த உயர்ந்த மனிதன் தன் கொள்கைக்காக அங்கு இறந்து கிடந்தான்.
அவருக்கு அண்மையாக ஒரு எச்சரிக்கை தூண்டும் இருந்தது. அது சிங்களத்தால் , 'இவன் ஒரு காட்டி கொடுத்த துரோகி, இவனின் இறுதி சடங்கிலோ மரண ஊர்வலத்திலோ கலந்து கொள்பவர்களும் துரோகிகளே!' என்ற வாசகம் இருந்தது. ஆகவே நாம் எல்லோரும் அதில் தொடர்ந்து நிற்பதோ அல்லது அவரின் உடலை எடுப்பதோ பிரச்னையை ஏற்படுத்தும் என்று, உடனடியாக திரும்ப முற்பட்டோம். ஏன் என்றால், அந்த இளைஞர்கள் அங்கு எங்கேயாவது ஒளிந்து இருந்து எம்மை நோட்டமிடலாம் என்பதால். ஆனால், அங்கு நிலவும் சூழலையும் பொருட் படுத்தாமல், தவராஜா அவரை தொட்டு வணங்கினார் !

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Comments from S Thavaraja, Former Electrical Engineer, Puttalam cement works:

Dear Thillai: You have expressed the memorable heartfelt painful events at PCW. Let' Rajaratna's Soul is BLESSED. I Think we played the CRICKET match just before this event on this match Late Rajaratna got all the wickets except mine. Dear Thillai i am humbled by your Expressions about me I feel your kindness and compassion about merit forced you to over expressing my simple human dealings. Thank you dear. I am very proud to have a friend in you which started very late in our life. Manitham Enpatu Itukkinratu. Om Shanthy Shanthy OM.  Rajaratna,  Jayaweera etc. we remember and Respect you all dear Late PCW friends who were lost on both side then. Regards

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

நெஞ்சைத் தொடும் நினைவுகள்..........🙏

நானும் அங்கே படித்தேன். ஆனால் உங்களுக்கு பல வருடங்கள் பிறகு என்று நினைக்கின்றேன். எங்களின் காலத்தில், பல வருடங்களாக  ஜேவிபி இயக்கத்தில் இருந்து அரசால் சிறை வைக்கப்பட்ட சில பொறியியல் பீட மாணவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எங்களை விட பல வயதுகள் அதிகம், ஆனால் எங்களுடன் வந்து மீண்டும் படித்தனர். சிலர் மிகவும் கெட்டிக்காரர்கள். அவர்களின் நியாயமும், போராட்டமும், தியாகமும்.......  கடவுளே, இங்கு எத்தனை பரிமாணங்கள் எல்லாவற்றிலும்.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலாவது மக்கள் விடுதலை முன்னணி போராட்டட்டின் போது நான் இரண்டாம் ஆண்டு, ரஜவத்தையில் இருந்தேன், அப்பொழுதும் கண்ணீர் தந்த சம்பவம் நடந்தது. அதை விட , பல்கலைக்கழ வளாகம் மூடியதால், யாழ்ப்பாணம் திரும்பும் பொழுது, இரவு ஆறு மணியுடன் போட்ட  ஊரடங்கில் , கிளிநொச்சியில் அகப்பட்டு சில இன்னல்களும் அனுபவித்தேன். அப்பொழுது நான் மீசை தாடியுடன் இருந்ததும் அதற்கு  ஒரு காரணம். என்றாலும் சிங்களம் தெரியாதது, என்னை தமிழன் என்று காட்டியதால், ஒரு பெரும் பிரச்சனை வரவில்லை. 

என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இருந்தார். அவர் மலை நாட்டில் பிறந்து வளர்ந்ததால், சிங்களம் தாராளமாக தெரியும். நான் யாழ்ப்பாணம் என்பதால் சிங்களம் அறவே தெரியாது. அவர் ஓய்வு நேரத்தில், எங்களுடன் வந்து  கேரம் பலகை அல்லது சீட்டு விளையாடுவார்.

ஜே.வி.பி அரசுக்கு எதிராக ஆயுத புரட்சி செய்து கொண்டு இருந்த ஒரு கட்டத்தில், ஒரு நாள், அவர் எம்முடன் வந்து ஓய்வை பொழுதுபோக்காக கழித்துவிட்டு, இருள தொடங்க தன் விடுதிக்கு சென்றார். நாம் இருட்டுக்குள் போகவேண்டாம். இது பல்கலைக்கழக வளாகம் என்பதால், ஜே.வி.பி க்கு கூடுதலான ஆதரவு இங்கு இருப்பதால், ஒரு வேளை ராணுவம் பதுங்கி இருக்கலாம், விடிய போவது நல்லது என்று கூறினேன். ஆனால் அவர் இது சிங்களவரும் சிங்களவரும் அடிபடும் போராட்டம், ஆகவே பயம் இல்லை என்று கூறிவிட்டு போனார்.
நான் அப்பொழுது  ரஜாவத்த என்ற வளாகத்துடன் அண்டிய பகுதியில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் விடுதியின் மேல் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். என்னுடன் அங்கு சக பொறியியல் பீட மாணவன் விக்னேஸ்வரன் & ஜெயசீலனும் மற்றும் மருத்துவ பீட நான்காம் ஆண்டு மாணவன் குழந்தைவேல் இருந்தனர். குழந்தைவேல் என்னை மிஸ்டர் நோ [Mr No] என்று பகிடியாக கூப்பிடுவது வழமை. [தில்லை - இல்லை]. ஆறுமுகமும் என்னை அப்படியே கூப்பிடுவார். அவர் ஒரு படி மேலே போய் தில்லை - தொல்லை என்றும் பகிடியாக கூப்பிடுவார். 'தில்லை - தொல்லை' இன்றுவரை நிலைத்து நிற்கிறது. குறிப்பாக எமது சக மாணவன் தணிகாசலத்தை குறிப்பிடலாம்.       

ஆனால் அடுத்த நாள் என் நண்பர் ஆறுமுகத்தின் உடல், மகாவலி ஆற்றங் கரையில் துப்பாக்கி சூடுகளுடன் கண்டு எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்தே போய்விட்டேன். அவர் தமிழர். ராணுவத்தாலும் ஜே.வி.பி யாலும் சந்தேகப்பட கூடியவர் அல்ல. அப்படி என்றால் உண்மையில் என்ன நடந்தது. அதன் மர்மம் என்ன ?. என்னையும் என் நண்பர்களையும் வாட்டியது.

ஆகவே மதியப்பொழுது, அவர் உடல் இருந்த மகாவலி ஆற்றங்கரைக்கு போய், அங்கு அருகாமையில் குடி இருக்கும் கிராமத்தவர்களிடம், சிங்கள நண்பர்களின் உதவியுடன் விசாரித்தோம். அப்பொழுது அங்கு வாழும் ஒரு குடும்பம், துப்பாக்கி காயங்களுடன், தங்கள் வீட்டை வந்து தட்டி, தன்னை ராணுவம் சுட்டு, மகாவலியில் எறிந்து விட்டு போனதாகவும், ஆம்புலன்ஸ்க்கு  அறிவிக்கும் படி, நல்ல சிங்களத்தில் கூறியதால், தாம் இவர் புரட்சி செய்யும்  இளைஞர் கூட்டம் என நினைத்து, ஆம்புலன்ஷை  கூப்பிடாமல், ராணுவத்துக்கு செய்தி அனுப்பினார்கள் என்று கூறினர்.

நன்றி 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம் [1969 batch ] 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

😢..........

அந்த முதலாவது புரட்சியிலும் இப்படி நடந்ததா.........80 களில் தான், அவர்களின் இரண்டாவது புரட்சியில் தான், புரட்சியாளர்களைக் கொன்று குவித்தார்கள் என்று நினைத்திருந்தேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200, ஆனால் அதிகாரப்பூர்வமற்ற  நம்பிக்கையான எண்ணிக்கை  4,000-5,000  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, kandiah Thillaivinayagalingam said:

எனவே மாலை பொழுதிலும், வார இறுதியிலும்
துடுப்பாட்டம் [கிரிக்கெட்], பூப்பந்தாட்டம் [பேட்மிண்டன்], மேசைப்பந்தாட்டம் [டேபிள் டென்னிஸ்], சுண்டாட்டப் பலகை [கரம் பலகை] .. இப்படி வசதியை பொறுத்து விளையாடுவோம்.  துடுப்படியில் இரு குழுவாக பிரித்து ஆடுவோம், அதில் ஒரு அணிக்கு தவராஜாவும், மற்ற அணிக்கு நானுமே தலைவர்கள். பல நேரம் அங்கு வாக்குவாதம் வரும். நான் கொஞ்சம் முரடு  என்பதால், விட்டுக்கொடுக்காமல் வாதாடுவேன், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மிக அமைதியாய் இருந்து விட்டுக்கொடுப்புகளுடன் அங்கு ஒழுங்காக விளையாட்டை தொடர்வதில் மிக கைதேர்ந்த, சாமர்த்தியம் நிறைந்தவர் தான் தவராஜா.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டிகளும் அப்பப்ப உலகப் போட்டிகளும் நடக்கும்.

பலரும் கலந்து கொள்ளும் போட்டியில் நீங்களும் கலந்து போட்டியைச் சிறப்பிக்க யாழ்களம் சார்பாக வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1,200, ஆனால் அதிகாரப்பூர்வமற்ற  நம்பிக்கையான எண்ணிக்கை  4,000-5,000  

😢......

இரண்டாவது புரட்சியின் போது, 80 களின் இறுதிப் பகுதிகளில், கலஹா சந்தியில் தலைகளை அடிக்கி வைத்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு இலட்சத்திற்கும் மேலான ஒரு கணக்கு இருந்தது. அதன் பின்னரேயே, மூன்று வருடங்கள் பூட்டியிருந்த பல்கலைக்கழகங்களை மீண்டும் திறந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1988  / 1989 இல் எமது புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் குறைந்தது 22 உத்தியோகத்தர்கள் [இரண்டு பக்கமும் / அரசு அல்லது இயக்கம் சார்பான] சுட்டு கொல்லப்பட்டனர். 

புத்தளம் பாலாவி சந்தியில், ஒரு சூட்டுடன், நிலை குலைந்து விழுந்ததும், tyre  / உருளிப்பட்டை அவரில் போட்டு எரித்தது கண்ணால் பார்த்துள்ளேன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் அனுபவங்கள் மனசைக் கலங்கவைக்கின்றது.......ஆனால் எம் விதி எல்லோருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள் வந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றது.......!  

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல விடயம் தான்  ஆனால் மக்களை ஏமாற்றுவதாக அமைந்து விடக்கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு முன் பானையில் என்ன இருக்கு என்று பார்ப்பது நல்லது. 
    • சரியாக தான் சொல்கிறார். இது தமிழர்களின் எதிர்காலம் சார்ந்த பொதுமுடிவாக இருக்கணும்.
    • கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  மாவை மீது குற்றம்    ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்றார்கள். ஆனால், தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் தற்போதைய குழப்பங்களை விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக சீரமைக்கக் கூடிய காலம் கடந்துவிட்டது.   ஏனெனில் கட்சிக் குழப்பங்கள் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. தலைவர் தெரிவு இடம்பெற்றபோது, நீங்கள் கட்சியின் யாப்பை மீறி செயற்படுகின்றீர்கள்.  எதிர்வரும் காலத்தில் இதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியேற்படும் என நான் மாவை சேனாதிராஜாவிடம் பகிரங்கமாக கூறினேன். அதனைத் தொடர்ந்து செயலாளர் தெரிவு விடயத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டன. முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா அவராகவே மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தார். ஆனால்  திட்டமிட்டது போன்று மாநாடு நடைபெற்றிருந்தால் இந்தக் குழப்பங்கள் எவையும் நேர்ந்திருக்காது. இப்போது மாவை சேனாதிராஜா தான் பதவி விலகவில்லை என மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலின் போது மாவை சேனாதிராஜா காலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தான் தயாரித்த அறிக்கையை வாசித்தார். பின்னர் மாலையில் கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக மேடை ஏறினார். இரவு ரணில் விக்ரமசிங்க மாவையின் இல்லத்திற்கு வருகின்றார். தேர்தலின் பின்னர் தான் சஜித், ரணில் மற்றும் பொது வேட்பாளருக்கு வாக்களித்ததாக ஊடகங்களிடம் கூறுகின்றார். மாவை சேனாதிராஜாவின் மகனின் மனைவியின் தாய் சசிகலா ரவிராஜ் பொதுத் தேர்தலில் சங்கு சினத்தில் போட்டியிடுகின்றார். பொதுத் தேர்தலுக்கு முன்பாக மாவை சேனாதிராஜா கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கின்றார். ஆக இங்கே விட்டுக்கொடுப்பு என்பதைத் தாண்டி சகல குழுப்பங்களுககும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான். சிலர் மாவை சேனாதிராஜா கடந்த பாதையும், அவரது அர்ப்பணிப்பும் சாணக்கியனுக்குத் தெரியாது என்று கூறுகின்றார்கள். ஆனால், அதுபற்றி எமக்கு நன்றாகத் தெரியும் என்பதுடன் அதனை நாம் குறைத்து மதிப்பிடவும் இல்லை. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் அவர் கட்சியை முறையாக வழிநடத்த முடியாத நிலைக்கு வந்திருக்கின்றார். எனவே இங்கு விட்டுக் கொடுப்புக்களுக்கு அப்பால் கட்சி என்ற ரீதியில் சரியானதொரு தீரு்மானத்தை எடுக்க வேண்டும். மாவை சேனாதிராஜா பதவி விலகியிருக்கின்றார். அந்த பதவி விலகல் கடிதத்தை செயலாளர் ஏற்றிருக்கின்றார் எனில், அடுத்தக்கட்ட வேலைகளைப் பார்க்க வேண்டும். அதனைவிடுத்து மீண்டும் நான் பதவி விலகவில்லை. கடிதத்தை திரும்பப் பெறுகின்றேன் என்றால் என்ன செய்ய முடியும்   என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1734860121?itm_source=parsely-detail
    • நோர்வேயும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை இந்த விசர் சுமத்திரனும் ஒன்றும் புடுங்கவில்லை இதை ஒரு செய்தியாய் போடுபவர்களை தான் குற்றம் சொல்லனும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.