"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 74
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 74 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
மகாவம்சம் / அத்தியாயம் XI / தேவநம்பிய தீசன் அல்லது தீசனின் [Devanampiya Tissa or Tissa] பட்டாபிஷேகம்: அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் - சுவண்ணபாலியின் மகன் ஆட்சிக்கு வந்தான். நாடு அப்போது அமைதியாக இருந்தது. அரசன் அழகுள்ள மகா மேகவனம் பூங்காவை [Mahameghavana-garden] அமைத்தான். அதன் பெயருக்கேற்ப அந்த வனம் எல்லா வகையான நல்ல வளங்களையும் உடையதாக இருந்தது. பழ மரங்களும், மலர் மரங்களும் அங்கு இருந்தன. பூங்காவை அமைப்பதற்காக அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த போது ஒரு பெரிய மேகம் காலமில்லாத அந்தக் காலத்திலும் திரண்டு மழையைப் பொழிந்தது. அதனாலேயே அந்தப் பூங்காவை மகா மேகவனம் என்றழைத்தனர். இலங்கையின் திருமுகம் போல் நிகழ்ந்த புகழ் மிக்க அனுராதபுரத்திலிருந்து மூத்த சிவன் அறுபது வருட காலம் ஆண்டான். அவனுக்குப் பத்து குமாரர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர் நலனில் அக்கறை கொண்டவர்கள். இரண்டு பெண்கள்; அவர்கள் இருவரும் அழகாகவும் பிறந்த குடிக்குப் பெருமை தரும் விதத்திலும் இருந்தார்கள். இரண்டாவது குமாரன் பெயர் தேவநம்பிய தீசன் என்பது. சகோதரர்கள் எல்லோரிலும் குண நலனிலும் அறிவுத் திறமையிலும் மிகச் சிறந்தவனாக அவன் விளங்கினன்.
பண்டுகாபயனுக்கு முப்பது வயதில் மகன் பிறந்தான் என்று கருதினால், மூத்த சிவன் அரியணை ஏறும்போது, மூத்தசிவனுக்கு எழுபத்தேழு வயதுடையவனாக இருந்திருப்பான். அவன் மேலும் அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, மூத்த சிவனுக்கு குறைந்தபட்சம் நூற்று முப்பத்தேழு வயது வரை வாழ்ந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அளவுக்கு மிக நீண்ட வயது. மூத்த சிவனுக்கு பத்து மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர்; மகன்கள் அபயன், தேவநம்பிய தீசன், மகாநாகன், உத்திய, மத்தபய, மித்த, மகாசிவன், அசேலன், சூரதிச்சன், கிர என்ற ஆண் மகன்களும், அனுலா மற்றும் சிவாலி என்ற மகள்களும் இருந்தனர். [Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa, Kira, and the daughters are Anula and Sivali.] பெயர்கள் தீபவம்சத்திலிருந்து வந்தவை. மகாவம்சம் பெயர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. அபயா மூத்த மகனாக இருந்தும், வரிசையில் இரண்டாவது மகனான தீசன் அரசனானான். மூத்த மகன் அபயாவுக்கு என்ன நடந்தது என்பது தீபவம்சத்திலோ அல்லது மகாவம்சத்திலோ கொடுக்கப்படவில்லை. பண்டுகாபயா மற்றும் மூத்தசிவாவின் ஆட்சிக்காலம் தீபவம்சத்தில் ஐந்து வசனங்களைக் கொண்ட ஒரு பத்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 106 வசனங்களைக் கொண்ட நீண்ட அத்தியாயமாக 10 ம் அத்தியாயம், முற்றும் முழுவதுமாக பண்டுகாபயனின் ஆட்சியை மகாவம்சத்தில் பேசுகிறது. [மகாவம்சம் / அத்தியாயம் X / பண்டுகாபயனின் பட்டாபிஷேகம்] இது மகாவம்சத்தின் ஆசிரியரின் தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவாக்கத்தாலும் மற்றும் அலங்காரத்தாலும் நீண்டுள்ளது புரிகிறது.
சந்திரகுப்த மௌரியரிடமிருந்தும் [Chandragupta Maurya] அவரது பிராமண ஆலோசகர் சாணக்கியரிடமிருந்தும் [Chanakya] ஒரு சிறிய பிரதியை இங்கு காண்கிறோம். அதாவது, பண்டுகாபயன் ஒரு பிராமணரை தனது குருவாகக் கொண்டுள்ளார். எனவே, குருவாக பிராமணர் என்பது பிராமண மதம் நீதிமன்ற மதம் என்பதைக் குறிக்கிறது, ஏனெனில் புத்த மதம் மகிந்த தேரரால் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. பண்டுகாபயனின் மாமனார் கிரிகண்டசிவா [Girikandasiva] ஆவார். இது ஒரு வெளிப்படையான சைவ தமிழ் பெயர் ஆகும். மேலும், பண்டுவாசுதேவா, பண்டுகாபயா, மூத்தசிவா, சுவண்ணபாலி, கிரிகண்டசிவா போன்ற பெயர்களும் மற்றும் பிராமண குரு போன்றவை மிகவும் வலுவான பாண்டியர், சைவ மற்றும் தமிழ் தொடர்பைக் குறிக்கின்றன.
மேலும் அத்தியாயம் X / பாண்டுகாபயனின் பட்டாபிஷேகம், 94 முதல் 102 வரை தெளிவாகக் கூறுகிறது: சண்டாள கிராமத்துக்கு [candala-village, candala: an outcaste or untouchable / the lowest of the men] வட கிழக்கில் சண்டாளர்களுக்காகத் தனியே, தாழ்ந்தவர்களுக்கான ஒரு சுடலையை [cemetery] ஏற்படுத்தினான். இதற்கு வடக்கே, இதற்கும் பாசான மலைக்கும் [Pasana-mountain] இடையே, வேடுவர்களுக்கான குடிசைகள் வரிசையாகக் கட்டப்பட்டன. அதற்கும் வடக்கே காமனி வாபி [Gamani-tank] வரை, பல துறவிகளுக்கான ஒரு மடம் அமைக்கப்பட்டது. அகற்குக் கிழக்கே அரசன் நிகந்த ஜோதியர்களுக்காக [nigantha Jotiya] ஒரு வீட்டைக் கட்டினன். இதில் காமனி வாபி என்பது இன்று கரம்பவக்குளம் எனவும் நிகந்தஜோதியர் என்பவர்கள் சைனத் துறவிகள் என்றும் ஊகிக்கப்படுகிறது அல்லது அடையாளம் காணப்படுகிறது.
அப்பிரதேசத்திலேயே கிரி என்னும் பெயருடைய நிகந்தரும் [சமணர் / Jain], பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்த துறவிகளும் இருந்தனர். அங்கு அரசன் நிகந்த கும்பாண்டருக்காக [Kumbhanda / கும்பாண்டர் என்பது பௌத்த புராணங்களின் சிறிய தெய்வங்களில் உள்ள குள்ளமான, தவறான உருவம் கொண்ட ஆவிகளின் குழுவில் ஒன்றாகும்.] ஒரு பிரார்த்தனை மண்டபத்தைக் கட்டினன். அது அவர் பெயரால் அழைக்கப்பட்டது. அங்கிருந்து மேற்கேயும், வேடுவர்கள் வசித்த பதிக்குக் கிழக்கேயும் மாறுபட்ட கொள்கை யுடைய ஐநூறு குடும்பங்கள் வசித்தன. ஜோதியருடைய வீட்டுக்கு அப்பால், காமனி வாபியின் இக்கரையில் ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுக்கும் துறவிகளுக்காக [wandering mendicant monks] ஒரு மடத்தைக் கட்டுவித்தான். ஆசீவகர்களுக்குத் (Ājīvika, ஆசீவகம் என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும், துறவு வாழ்க்கையும் ஆகும். இது பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர், மகாவீரர் ஆகியோருக்கு சமகாலத்தில் வாழ்ந்த மற்கலி கோசாலர் என்பவர் உருவாக்கிய ஒரு சமய நெறியாகும். ஆசிவகம் ஊழ்வினையை அதிகம் வலியுறுத்துகிறது.) தங்கமிடமும், பிராமணர்களுக்கான ஒரு தங்குமிடத்தையும் அமைத்தான். இந்த இடத்தில் நோயுற்றவர்கள் தங்கி சுகம் பெற ஒரு மனையையும், மண்டபத்தையும் கட்டினன்."
எனவே இங்கே, பண்டுகாபயன் மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட மற்றும் நீதி தவறாத அரசனாக சித்தரிக்கப்படுகிறார். பழங்குடி மக்கள் ["பழங்குடி மக்கள்" என்ற சொல் இந்தோ-ஆரிய குடியேறிகள் வருவதற்கு முன்பு இலங்கையில் வசித்து வந்ததாக நம்பப்படும் பூர்வீக இயக்கர்கள் மற்றும் நாகர்களைக் குறிக்கிறது.] அரவணைக்கப்பட்டு, சமூகத்தில் சமமான இடத்தை வழங்கினார். மேலும் பல்வேறு மதக் குழுக்களுக்கு அவர் ஆதரவளித்தார். உதாரணமாக, துறவிகள் (துறவிகள் மற்றும் காடுகளில் வசிக்கும் முனிவர்கள்), சமணர்கள் (பண்டைய இந்தியாவில் ஒரு முக்கிய மதமாக இருந்த சமண மதத்தைப் பின்பற்றுபவர்கள்), அஜீவகர்கள் (இப்போது அழிந்துபோன துறவிப் பிரிவு, இது விதியை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கைகளைப் பின்பற்றியது), பிராமணர்கள் மற்றும் நிறுவப்பட்ட மத நம்பிக்கைகளிலிருந்து விலகிச் செல்லும் மதப் பிரிவுகள் அனைத்தும் தங்க வைக்கப்பட்டன. இது இன்றைய இலங்கையின் தேசியவாத புத்த துறவிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. ஆனால் பண்டுகாபயன் காலத்தில் புத்தமதம் இன்னும் இலங்கைக்கு வரவில்லை, புத்தர் நேரடியாக இலங்கையில் போதித்தது என மகாவம்சத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டது, விழலுக்கு இறைத்த நீர் போலாயிற்று என்பதை மகிந்த தேரரை மீண்டும் அனுப்பியதில் இருந்து அறிகிறோம்.
இன்றைய இலங்கையில், சில துறவிகள் மற்றும் குழுக்கள் (எ.கா., பொது பல சேனை அல்லது "பௌத்தர்களின் அதிகாரப் படை") சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை ஊக்குவிக்கின்றன, இது பண்டுகாபயாவின் பன்முக அணுகுமுறைக்கு முற்றிலும் முரணானது. பௌத்தர்கள் அல்லாதவர்களை உள்ளடக்கிய பண்டுகாபயாவைப் போலல்லாமல், நவீன பௌத்த தேசியவாதிகள் பெரும்பாலும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதுடன், பல மத சகவாழ்வை எதிர்க்கின்றனர். அதுமட்டும் அல்ல, அரசியலில் இருந்து விலகி இருந்த பண்டைய துறவிகளைப் போலல்லாமல், நவீன துறவிகள் அரசியல் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபடுவதுடன், பெரும்பாலும் சிறுபான்மை எதிர்ப்பு கொள்கைகளை ஆதரிக்கின்றனர், விதைக்கின்றனர்!
Part: 74 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
If it is assumed that Pandukabhaya had his son when he was thirty years of age, then the son, Mutasiva, would have been about seventy seven years of age when he ascended the throne. He ruled for another sixty years. Hence, Mutasiva must have lived at least to the age of one hundred and thirty seven, unbelievably very long age. Mutasiva had ten sons and two daughters; the sons are Abhaya, Tissa, Naga, Utti, Mattabhaya, Mitta, Siva, Asela, Tissa, Kira, and the daughters are Anula and Sivali. The names are from the Dipavamsa, and the Mahavamsa is silent on the names. Abhaya is the eldest son, but Tissa, the second in line, became the king. What happened to the eldest son Abhaya is not given in the Dipavamsa or in the Mahavamsa. The reigns of Pandukabhaya and Mutasiva are detailed in one paragraph of five verses in the Dipavamsa. However, the entire long chapter 10 with 106 verses is used to cover the rule of Pandukabhaya in the Mahavamsa. This is a selective elaboration and embellishment by the author of the Mahavamsa. There is a bit of a copy from Chandragupta Maurya and his advisor Chanakya, a Brahman. Similarly, Pandukabhaya has a Brahmin as his Chaplain. Brahmin as chaplain indicates a Brahamnical religion is the court religion, as the Mahinda Thera does not yet introduce the Buddhism. Pandukabhaya’s father in law is Girikandasiva which is a Saiva Tamil name. The names Panduvasudeva, Pandukabhaya, Mutasiva, Suvannapali, Girikandasiva, Brahmin chaplain etc indicate very strong Pandyan, Saiva and Tamil connection. Pandukabhaya is depicted as a very liberal and even handed king. The aboriginal people are accommodated and had they seated on par with him, refer 10-67. Ascetics, Jains, Ajivakas, Brahmins, and other heretical sects are all accommodated. It is a far cry from the present day jingoistic Buddhist monks of Ceylon.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 75 தொடரும் / Will follow
துளி/DROP: 1958 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 74
https://www.facebook.com/groups/978753388866632/posts/33020555820926306/?
By
kandiah Thillaivinayagalingam ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.