Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
துபாய்:  வெள்ள நீரில் மிதந்த விமான நிலையம்; வைரலான வீடியோ

துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.

கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது. எண்ணற்ற விமானங்கள் காலதாமதத்துடனும், ரத்து செய்யப்பட்டும் இருந்தன. இது விமான பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி இருந்தன.

இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. துபாயின் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது.

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அமீரகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. இன்றும் புயல் வீசக்கூடும் என முன்னறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

துபாய் மட்டுமின்றி பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 18 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/299335

  • கருத்துக்கள உறவுகள்

சோதனைகளும் துன்பங்களும் எங்குதான் இல்லை.......இவர்களது துன்பங்களை பார்க்கும்போது என்னுடைய கஷ்டமெல்லாம் வெறும் தூசு போலத் தெரியுது.........!  😴

வன்னியன் சார் கவனம்...........!

  • கருத்துக்கள உறவுகள்

@ராசவன்னியன் 

எப்படி சார் இருக்கிறீர்கள்? வெள்ளத்தால் உங்கள் பகுதியில் ஏதாவது பாதிப்புகள்?

கவனமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

@ராசவன்னியன் 

எப்படி சார் இருக்கிறீர்கள்? வெள்ளத்தால் உங்கள் பகுதியில் ஏதாவது பாதிப்புகள்?

கவனமாக இருங்கள்.

துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 

ஓஓ அது மேடான பகுதி தானே.

டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால்.

கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம்.

ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர். 

பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர்.

இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு.

Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன?

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன.

துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது.

புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும்.

மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம்,ANNE WING

படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின

வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா?

ஆம் என்கிறார்கள் நிபுணர்கள்.

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது.

துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது.

"வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம்.

துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH

படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம்

துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா?

இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம்.

ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது.

எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும்.

"இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார்.

உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

"நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.

 
துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை

செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா?

செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும்.

விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும்.

இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது.

வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர்.

‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை.

செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.

துபாய் மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,துபாய் மழை

"மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார்.

மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.

"இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ்.

பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார்.

"மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார்.

அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.

 
துபாய், ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகள், காலநிலை மாற்றம், மழை, வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன'

தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா?

கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது.

துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை.

"அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார்.

"உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார்.

இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது.

https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.