Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் புத்தாண்டு எது ???

Featured Replies

**********

Edited by harikalan

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். எல்லோரும் சொல்லி முடிச்சாச்சு நீங்களுமோ?

தமிழகத்து மக்களுக்கும் சிங்களவர் தான் சொல்லிக் கொடுத்தார்கள் என்ற உங்களின் கண்டுபிடிப்பு அபரீதமானது.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா? நக்கீரன் http://www.tamilnation.org/culture/newyear.htm"இப்பொழுதெல்லாம் புத்தாண்டென்றால் ஆங்கிலப் புத்தாண்டு என்றாகிவிட்டது....” என சுப்பு சொல்கிறார். அது புத்தாண்டு பற்றிய அவரது மனத்தடங்கலைக் காட்டுவதாக உள்ளது.என்ன செய்வது? எப்படி செய்திப் பரிமாற்றத் துறையில் ஆங்கில மொழி உலகளாவிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதே போல் ஆங்கிலப் புத்தாண்டும் இனம், பண்பாடு ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து எல்லோருக்கும் உரித்தான ஒரு புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறித்தவத் தமிழர்களுக்கு சனவரி முதல் நாளே புத்தாண்டு என்பது மனங்கொள்ளத்தக்கது.ஆங்கில மொழி ஆதிக்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டு முடியுமுன்னர் தமிழ் உட்பட 100 மொழிகள் அழிந்தொழிந்து விடும் என அய்க்கிய நாடுகள் கல்வி, பண்பாடு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.ஆங்கில மொழி ஆதிகத்துக்கான காரணங்கள் பலவுண்டு. அவற்றை வரிசைப்படுத்தலாம் என நினைக்கிறேன்.1) ஆங்கிலேயர்கள் 18 – 20 ஆம் நூற்றாண்டு வரை பலநாடுகளைப் பிடித்து ஆண்டார்கள்.2) ஆங்கிலேயர் நாடுகளைப் பிடித்து அங்கெல்லாம் புலம்பெயர்ந்த போது தங்களது மொழியை அந்தந்த நாடுகளில் ஆட்சிமொழியாக வைத்துக்கொண்டார்கள். 3) ஆங்கிலேயர் அறிவியல், மருத்துவம், வரலாறு, வானியல் போன்ற துறைகளில் ஈட்டிய அளப்பரிய சாதனை. ஆங்கில புத்தாண்டு புகழடைவதற்கு முக்கிய காரணம் உரோமர்கள் கண்டு பிடித்த நாள்காட்டியே ஆகும். முதலில் உரோம பேரரசர் யூலியஸ் சீசர் (கிமு 100 – கிமு 44) அவர்களே ஒரு புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தினார். கிமு 46 ஆண்டின் நாள்களை 445 நாள்களாக அதிகரித்தார். இது சமய விழாக்களை உரிய காலத்தில் கொண்டாடும் முகமாகச் செய்யப்பட்டதாகும். சீசர் ளுழளபைநநௌ என்ற வானியலாளரின் அறிவுரைப்படி ஒரு ஆண்டின் நாள்களை 365 எனவும் நான்காண்டுக்கு ஒருமுறை பெப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு 1,000 ஆண்டு காலத்தில் 8 நாள்களை அதிகரிகச் செய்துவிட்டது.கிபி 1563 யூலியன் நாள்காட்டி அடிப்படையில் வேனில் சமயிரவு (எநசயெட நஙரiழெஒ) மார்ச்சு 100 இல் இடம்பெற்றது. ஆனால் வேனில் சமயிரவு 21 க்கு முந்தி வரக்கூடாது என போப்பாண்டவர் கிறெகோறி முடிவு செய்தார். எனவே போப்பாண்டவர் 1582 ஆம் ஆண்டு ஒக்தோபர் மாதத்தில் பத்து நாள்களைக் குறுக்குமாறு ஆணை பிறப்பித்தார். அதனால் ஒக்தோபர் 4, 1582 (யூலியன்) அடுத்து ஒக்தோபர் 15 (வெள்ளிக்கிழமை) தொடர்ந்தது. மேலும் ஒரு ஆண்டு 00 முடிந்து அதனை 400 ஆல் பிரிக்க முடிந்தால் பெப்ரவரி மாதத்தில் மேலும் ஒரு நாளைக் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இன்று உலகம் முழுதும் கிறெகோறி செம்மைப்படுத்திய நாள்காட்டியே பின்பற்றப்படுகிறது. அந்த நாள்காட்டியின் படி சனவரி முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகும்.ஆங்கில புத்தாண்டுபற்றி மனத்தடங்கலை வெளியிட்ட சுப்பு “சனவரி ஒன்றுக்கு முன் சித்திரை ஒன்று என்னவாயிற்று?” எனக் கேட்கிறார்.சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையா தலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் “மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்பத்தன்று நூறன்று பன்னூ றன்றுபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)தூயவனுக்கு "கோலியாத்தின் " கதை ஞாபகமிருக்குமென நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

********

Edited by harikalan

சிங்களவர்களுடய வரலாற்றில் நான் கூறியது தவறு என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

ஆரியர்கள் தான் சிங்களவர்கள் அதில் எந்த மாற்றமும் இல்லை

சிங்களவர்களுடய மொழி தமிழ் , உருது , இந்தி , பாழி ,சமஸ்கிரதம் ஆகிய 5 மொழிகளிலும் இருந்து உருவாக்கப்பட்டது

சிங்களம் தமிழ் மொழியை போல் தொன்று தொட்டு பேசப் பட்ட மொழி அல்ல

அப்படி இருந்தால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?????????

தமிழர் பண்பாடுகள் எல்லாமே ஆரியருடைய திணிப்புள்ளது

இதுவும் அவ்வாறு ஒன்றே !!!!!!!!!!!!

கரிகாலன்

புத்தாண்டு பற்றி பலரும் பல முறை விவாத்தித்து களைத்து விட்டார்கள். இப்போது உங்கள் முறை தொடருங்கள். :unsure: அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை.

இந்த தலைப்பிற்கு சம்பந்த படாவிட்டாலும் நீங்கள் சிங்களவர் ஆரியர் என்று இப்பகுதியில் சொன்னதால் இப்பதிலை எழுதுகிறேன்.

ஆனால் சிங்களவர் ஆரியரே என்று நீங்கள் கூற ஆதாரம் எங்கிருந்து கிடைத்தது. சிங்களவரது மகா வம்சமா :lol:

கீழே இணைப்பில் உள்ள வலைப்பதிவுக்கு போய் அதை வாசியுங்கள், அத்துடன் முடியும் என்றால் அதில் குறிப்பிடப்பட்ட பேராசிரியர் இந்திரபாலா அவர்களது புத்தகத்தையும் முழுமையாக படியுங்கள்.

http://aatputhan.blogspot.com/2007/02/blog-post_17.html

அதற்குமப்பால் தமிழ்சமூகம் எனும் ஒரு இணைய தளம் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. அந்த இணையப்பக்கத்தையும் முடியும் என்றால் தேடி அதில் சிங்களவர் ஆரியரா இல்லையா என எழுத பட்ட கட்டுரைகளையும் படியுங்கள்.

எந்த ஆய்வும் முடிந்த முடிவு அல்ல என்பதையும் உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்.

தமிழ்புத்தாண்டு தை மாதம், திருவள்ளுவர் ஆண்டு என்பவை பற்றி எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய ஒரு தலைப்பு கீழே

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22253

சித்திரை புத்தாண்டு சிங்களவரது இல்லை என சிங்களவர் ஒருவர் எழுதிய கட்டுரை; தமிழ்கனேடியனில் இருந்து

http://www.tamilcanadian.com/page.php?cat=189&id=4861

முன்னர் நடைபெற்ற ஒரு விவாதம்

http://www.yarl.com/forum3/index.php?showt...22028&st=20

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

*******

Edited by harikalan

இந்த தலைப்பிற்கு சம்பந்த படாவிட்டாலும் நீங்கள் சிங்களவர் ஆரியர் என்று இப்பகுதியில் சொன்னதால் இப்பதிலை எழுதுகிறேன்.

ஆனால் சிங்களவர் ஆரியரே என்று நீங்கள் கூற ஆதாரம் எங்கிருந்து கிடைத்தது. சிங்களவரது மகா வம்சமா :rolleyes:

வணக்கம்

மகாவம்சம் ஒர் புணை கதை அதில் பல பொய் புரட்டு பித்தலாட்டம்

அதை நீங்கள் மேற்கோள் காட்டியது வருத்தமானது நீங்கள் முதலில் மகாவம்சத்தின் பிண்ணனி பற்றி ஆராய்ந்து

எழுதுங்கள்

நீங்கள் தலைவரின் போன வருட மாவீரர் உரை கேடகவில்லை போலும்

கேளுங்கள் தெளிவாகும்

இது ஆய்வல்ல மறைக்கப்பட்ட திணிக்கப்பட்ட எமது வரலாற்றுண்மைகள்

நுனாவிலானின் நக்கீரனின் கட்டுரையும் வாசியுங்கள்

கரிகாலன்

கரிகாலன் உணர்ச்சி வசப்பட்டு கருத்து எழுதுவதிலும், நின்று நிதானித்து நான் என்ன எழுதியுள்ளேன் என கிரகித்து, பதில் கருத்தை நீங்கள் எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன். :wub:

அந்த கேள்வி உங்களுக்கு வைக்கப்பட்டது. சிங்களவர் ஆரியரே என நீங்கள் முடிந்த முடிவாக எழுதிய பதிலுக்கான கேள்வியாக வைக்கப்பட்டது.

கீழே மேற்கோள் காட்டிய விஜயன் வருகை , சிங்களவர் ஆரியர் என்ற கருத்து நீங்கள் எழுதியது.

சிங்களவர்கள் என்ற இனம், மொழி எப்போது உருவானது என்று உங்களால் சொல்லமுடியுமா???

விஜயனும் அவனது தோழர்களும் உருவாக்கியதே சிங்களவர்களும் அதன் மொழியும்

ஆரியர்கள் தான் சிங்களவர்கள் அதில் எந்த மாற்றமும் இல்லை

அதாவது நீங்கள் மேலே சொன்ன விஜயன் கதை, சிங்களவர் ஆரியரே என்று சொன்னதற்கான ஆதாரம் என்ன என்று உங்களை கேட்டேன், அந்த ஆதாரம் மகா வம்சமா என கேட்டேன். :rolleyes:

மற்றும்படி மகாவம்சம் புரட்டு என்பதை நான் அறிந்து தான் உள்ளேன். தலைவரின் உரையை வருடந்தம் கேட்டுதான் வருகிறேன்.

மகாவம்சம் சொன்னதை/ அல்லது இன்றும் அவர்கள் தங்களை ஆரியர் என்று சொல்வதை , இல்லை அது புரட்டு என்பதற்காக தான் பேரசிரியர் இந்திரபாலாவின் புத்தகத்தை பற்றிய அற்புதனின் கட்டுரையையும், அவரது புத்தகத்தை படிக்குமாறும் சொல்லியிருந்தேன்.

அதே போன்றே தமிழ்சமுகம் என்ற இணைய தளமும் சிங்களவர் ஆரியர் என்று சொல்வதை புரட்டு என்பதை பல வேறு வழிகளில் நிறுவ முற்பட்டிருந்தார்கள்.

ஆனால் ஆய்வுகள் முடிந்த முடிவல்ல என்று சொன்னதற்கான காரணம் விஞ்ஞானம் என்பது பழைய ஆய்வு முடிவுகள் தவறு என்று சொல்லி புதிய முடிவுகள் வரும் காலம் இது. அதனால் தான் ஆய்வுகள் என்பவை முடிந்த முடிவல்ல என்று சொன்னேன்.

முதலில் நான் தந்த இணைப்புக்களை நீங்கள் வாசியுங்கள். :rolleyes:

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

**********

Edited by harikalan

வயல் விதைத்து கதிர் அறுத்து,, அறுத்த கதிரின் முதல் தொகுதியை புதிராக எடுத்து, அதை அரிசியாக்கி, அதை ஆக்குவதுக்கு காரணியாக இருந்த சூரியனுக்கு படைத்து வணங்குவது தைப்பொங்கல்... உழவுக்கு ஏர்பூட்ட உதவிய காளைக்கு செலுத்துவது மாட்டுபொங்கள்...

மாரிகாலம், இலயுதிர் காலம் முடிந்து இலை துளிர் காலம் ஆரம்பம், தை மாதம் ஆரம்பித்த பின்னர் இலை துளிர்கள் விட்டு பூத்து குலுங்கி, காய் பிஞ்சுகள் விட்டு கனியாகும் காலம் சித்திரை ஆகும்... அதை இளவேனில் காலம் என்பர்... அப்போதான் உழவர்கள் கிடைத்த நெல் கதிர்களை எல்லாம் சூடூவைத்து, சூடு அடித்து ( போர் அடித்து) நெல் மணிகளாக்கி , அதை அரிசியாக்கி விற்று பொருள் சேர்த்தும் இருப்பர்... அந்த காலம் உழவர்களுக்கும், உழவரை சார்ந்து இருக்கும் மக்கள் வியாபாரிகள் எல்லோருக்கும் இளவேணில் காலம்தான்...

அப்போதான் பட்ட கடினமான உழைப்புக்கு பலனை பெற்ற மனிதனும்... பழங்களை எல்லாம் விதைகள் ஆக்கி கொண்டு இருக்கும் மரங்கள் கூட ஒரு புதிய வாழ்வுக்கான அத்தியாயதை தொடங்குகிறார்கள்... அதுதான் புது வருடம்... அது சித்திரை இளவேனில் காலத்தில் வரும் "வருடப்பிறப்பு"

இங்கே மகாவம்சதை பற்றி பேசுவதால் எனக்கும் கருத்து கூற விருப்பம்தான்... ஆனால் அது தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத்து எண்டும் வலிந்த கருத்து திணிப்பு எண்று வெட்டி விடுவார்கள் என்பதாலும் ( எனது கருத்துக்களை மட்டும்) ஏன் வீண் சக்தி விரயம் என்பதாலும் விட்டு விடுகிறேன்...

Edited by தயா

தமிழர் புத்தாண்டு பற்றி ஏற்கனவே நாம் இங்கே விவாதித்திருக்கிறோம்.

யாராவது அதனுடைய இணைப்பைத் தந்தால் நன்றாக இருக்கும்.

தமிழர்களின் புத்தாண்டு எது என்பது பற்றி உறுதியாக யாராலும் சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

ஆனால் நாம் தைப் புத்தாண்டையே முன்மொழிகின்றோம்.

சித்திரைப் புத்தாண்டு ஆரிய மயப்படுத்தப்பட்டு விட்டது. தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டு, வடமொழிப் பெயர்களோடு புத்தாண்டு பிறப்பது தமிழர்களை இழிவுபடுத்துவதாகும்.

அத்துடன் சித்திரைப் புத்தாண்டை இந்துத் தமிழர்கள் மட்டும்தான் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் தைப் பொங்கல் அப்படி அல்ல. அதில் தமிழர்களின் அடையாளம் நிறைய மிச்சம் இருக்கிறது. அத்துடன் அதிகவு இல்லையென்றாலும், குறிப்பிட்ட அளவிலான கிறிஸ்தவ, இஸ்லாமிய தமிழர்களும் தைத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

ஆகவே மதம் சாராது தமிழர்களுக்கு என்று பொதுவாக இருக்கின்ற தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவதே சிறந்தது.

தமிழர் புத்தாண்டு பற்றி ஏற்கனவே நாம் இங்கே விவாதித்திருக்கிறோம்.

யாராவது அதனுடைய இணைப்பைத் தந்தால் நன்றாக இருக்கும்.

தமிழர்களின் புத்தாண்டு எது என்பது பற்றி உறுதியாக யாராலும் சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

ஆனால் நாம் தைப் புத்தாண்டையே முன்மொழிகின்றோம்.

தமிழ் புத்தாண்டு( புதிதாக ஆரம்பிக்கும் வருடம்) என்பது வேற, பொங்கல் என்பது வேற....! உழவர் பண்டிகையையும் புத்தாண்டையும் ஒண்றாக கொண்டாடுவான் ஏன்...??

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கள் கொண்டாடுவினமே அதை புத்தாண்டாக கொண்டாடலாம்... தமிழனுக்கு அதுதான் சரியான நாள்...!

சித்திரைப் புத்தாண்டு ஆரிய மயப்படுத்தப்பட்டு விட்டது. தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக் கொண்டு, வடமொழிப் பெயர்களோடு புத்தாண்டு பிறப்பது தமிழர்களை இழிவுபடுத்துவதாகும். .

நீங்கள் சொல்வது போல பார்த்தாலும் சூரியனை வளிபடும் ( அவர் தேவர் எண்டு இந்துகள் சொல்லுகினம் இல்லையா) நிகள்வுதான்...! ஒரு தேவனை வளிபடும் நிகழ்வை நீங்கள் எப்படி ஒத்து கொள்கிறீர்கள்...??

அதோட இல்லாமல் தமிழர் நாட்காட்டியின் தை மாதம் முதல்நாள் தான் தைப்பிறப்பு எனப்படும் பொங்கல் கொண்டாடுகிறார்கள்... ( ஜனவரி 15.?) ஆகவே ஆரியர்' தமிழருக்கு எண்டு மட்டும் குடுத்த அந்த நாள் காட்டியை பயன்படுத்துவது எப்பிடி..??

அதனாலாக பட்டது ஆங்கிலேயர் கொண்டாடும் யேசுவின் பிறந்த நாளை உலகமே( இந்து சகோதரர்களும்தான்) கொண்டாடி 5வது நாளை புது வசந்தம் தரும் வருடமாக தொடர்ந்து கொண்டாடுவார்கள்... ஆகவே அதை தமிழனும் கொண்டாடுவதுதான் சிறந்தது... பகுத்தறிவுக்கும் பங்கம் வராது...!

அத்துடன் சித்திரைப் புத்தாண்டை இந்துத் தமிழர்கள் மட்டும்தான் கொண்டாடுகிறார்கள்

ஆனால் தைப் பொங்கல் அப்படி அல்ல. அதில் தமிழர்களின் அடையாளம் நிறைய மிச்சம் இருக்கிறது. அத்துடன் அதிகவு இல்லையென்றாலும், குறிப்பிட்ட அளவிலான கிறிஸ்தவ, இஸ்லாமிய தமிழர்களும் தைத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும்.

ஆகவே மதம் சாராது தமிழர்களுக்கு என்று பொதுவாக இருக்கின்ற தைத்திருநாளை தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவதே சிறந்தது.

உங்களுக்கு யார் சொன்னது தைப்பொங்கல் தமிழர் பண்டிகை எண்டு..??? சித்திரை புது வருடம், தைப்பொங்கல் எல்லாமே ஆரியர் வந்து அருளியது....! ஆனால் அதை அவர்கள் கொண்டாடுவது இல்லை...!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் திருநாள்....!

- ஆல்பர்ட்

சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு, இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக் கிராமங்கள் அன்றாடம் பொங்க வழியின்றி விழிகள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்ணீர் துடைக்க நாம் ஏதேனும் ஒரு வகையில் நம் கரம் நீள வேண்டும் என்ற முன்வைப்போடு தமிழிய விழாவான பொங்கல் விழாக் கட்டுரையை இங்கே முன்னிடுகிறேன்.

இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும். யார் இவர்கள்? "செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே"என்றுரைத்த கம்பர், "உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி" என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள்தான் இவர்கள்!

உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான்... பொங்கல் திருநாள். பொங்கல் விழா என்று பெயர் வந்தது ஏன்? இது ஒரு சமுதாயத்தினர் கொண்டாடும் விழாவா? அல்லது மதம் சார்ந்த பண்டிகையா?

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா? என்றெல்லாம் வினாக்கள் கண் முன் விரிகிறது.

மனித இயந்திரங்கள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எத்தனைப் பொங்கல் காலத்தை இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும்?

எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. "மேழிச் செல்வம் கோழைபடாது" என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது. இல்லங்கள் இணைந்து, உள்ளங்கள் இணைந்து, ஊர்கள் இணைந்து, ஒரு சமுதாயமாக ஆகும்போது சமுதாய விழாக்கள் உருவாகின்றன. இந்த விழாக்கள் சமுதாயத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அனைவரும் ஒன்றென்று அடையாளம் காட்டுகிற, அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நியாயமான காரணங்களுக்காக, சரியான நேரத்தில் அமையும் போது காலத்தால் அழியாமல், அழிக்கமுடியாமல் என்றும் அந்த சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் அரணாக ஆகிவிடுகிறது.

இந்தத் தமிழ்ச்சமுதாயத்திற்கு இன்றுமிருக்கிற அந்த அரண்தான் பொங்கல் பெருநாள் விழா!

ஒளவைப்பிராட்டியார் "இளவரசே வாழ்க பல்லாண்டு!"என்று வாழ்த்தவில்லை! அரசே உன் "வரப்பு உயர்க"! என்று வாழ்த்தினார். ஏன்?

வரப்புயர நீருயரும்!

நீருயர நெல்லுயரும்!

நெல்லுயுர குடியுயரும்!

குடியுயர கோனுயர்வான்!.

இந்தப் பொங்கல் விழாக்காலம் தமிழ்ச்சமுதாயத்தால் உருவாக்கப்பட்டு தமிழ்ச்சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நல்விழாவாக, வேளாண்திருக்காலமாக இருப்பது எவ்வளவு பொருத்தமான ஒன்று; எவ்வளவு அறிவார்ந்த செயல் அது! அறுவடை முடிந்து, செல்வம் ஏறிய, உள்ளமும் உடலும் குளிர்ந்திருக்கிற முன்பனிப் பெரும்பொழுதாகிய, மற்றும் தமிழ்ப் புத்தாண்டாக முற்காலத்தில் இருந்த தைமாதத் துவக்கம், விழாக்காலமாக விதிக்கப்பட்டது எத்தனை அறிவார்ந்த பொருத்தமான செயல்!.

சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.

தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்

புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி,

மண்ணகம் மருள வானகம் வியப்ப

விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி:"

காவிரியின் பூந்தாது பொலிந்து கிடக்கும் சங்கமத்துறையிலிருந்து, பொற்குடங்களிலே குளிர்ந்த நீரை நிறைத்து வந்து நிலவுலகோர் மருளவும், விண்ணுலகோர் வியக்கவும் இந்திரனைத் திருமுழுக்காட்ட மகளிர், ஊன் தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து, குரவைக் கூத்து போன்றவற்றை ஆடி வழிபடுகின்றனர்! என்று சிலம்பு சிலாகித்துச் சொல்கிறது.

சற்றொப்ப 2000ம் ஆண்டுகளுக்கு முந்தையது சிலம்பின் காலம்! அதற்கும் முந்தியது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம். அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமுமாகும். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன்! இந்தச் செய்தியைச் சற்று உள்வாங்கிப் பார்க்கும்போது, காலமாற்றத்தில் இந்திரவிழா பொங்கல் விழாவாக உருமாற்றம் பெற்றிருக்கக்கூடும் என்ற மிகைப்படுத்தப்படா உண்மை புலர்கிறது!

இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போமேயானால்,

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் எனவியப்பாம்

வையகம் போர்த்த வயங்கொலிநீர் -கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

வாளொடு முன்தோன்றி மூத்தகுடி.

என்பது தமிழரின் வீரத்தை வலியுறுத்தும் புறப்பொருள் வெண்பாமாலை என்ற அரிய நூலில் இடம்பெற்றுள்ள பாடலிது. இத்தகைய தொன்மைக்கால வரலாற்று நாகரிகத் தோற்றக் காலத்திலேயே சூரிய வழிபாடும் அதையொட்டிய பொங்கல் திருநாளும் மறத்தமிழரால் கொண்டாடப்பட்டு வந்த ஆதாரச் சான்றுகளைப் பல பாடல்கள் மூலம் நாமறியலாம். பொங்கல் தமிழரால், வானியல் அறிவை வெளிப்படுத்தும் ஓர் அறிவியல் நுட்பத்தோடு கொண்டாடப்பட ஒரு பெருவிழாவாக நாம் பார்க்கலாம்.

ஆதிமனிதன் உருவானான் அகிலத்திலே. அவனுக்கு உணவேது? காய்கனிகளைத் தின்றான்; போதவில்லை; பச்சப்பசேலென்ற பூமியைப் பார்த்தான். வேளாண்தொழிலில் வேகம் காட்டினான்; விவேகமாய் சாகுபடி செய்தான்; நெல் விளைந்தது; சோறாயிற்று. சுழன்றும் ஏர்பின்னது உலகம்! இதுதான் வேளாண்மையின் துவக்கம். வேளாண்மை மனித குமுகாயத்தின் உயிர்நாடி. எல்லா இனமும் பயன்பெற்றாலும் தமிழன் ஒருவனே பொங்கலை தனிச் சிறப்புடன் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டாட வேண்டுமென எண்ணினான்.

இயற்கைக்கும், இறைமைக்கும் நன்றி நவில்கின்ற பொன்னாளாக பொங்கல் நாளைத் தமிழர்கள் கொண்டாடத் தலைப்பட்டனர். பொங்கல் மத விழாவன்று. நிலம் பொது. நிலா பொது. கதிர் பொது. கதிரவன் பொது. நீரும் பொது. நெருப்பும் பொது. இவற்றை உள்ளடக்கிக் கொண்டாடப்படும் பொங்கலும் பொது. எவ்வகையான புராணச் சார்புமில்லாத மூடத்தனமற்ற விழா பொங்கல் விழா. தமிழர் கொண்டாடும் ஒப்பற்ற விழா பொங்கல் விழா மட்டுமே என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

("ஒரு காலத்தில் இந்திரன் முதலான தேவர்களுக்கு மக்கள் விசேச பூசைகளைச் செய்தனர். அதனால் அவர்கள் கர்வம் கொண்டனர். அதனால் தேவதைகள் மூலம் வரவேண்டிய உதவிகள் குறைந்து விட்டன. மக்கள் கண்ணனிடம் வேண்டினர். இந்திரன் கோபமுற்றான். மிகுதியான மழை பொழியச் செய்து மக்களை துன்பத்துக்குள்ளாக்க, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கி குடையாய் பிடித்து மழையிலிருந்து மக்களைக் காத்தான். இந்திரன் மன்னிப்பு கேட்டான். கண்ணன் மக்களைப் பார்த்து கோ-பூசை செய்யுங்கள் என்று சொன்னதில் தொடங்கியது பொங்கல் பண்டிகை.." என்று பொங்கல் வரலாறு துவங்கியதாக காஞ்சி செயேந்திரர் கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார். )

தமிழர் திருநாள் எனும் சொல்லாட்சியினை முதன்முதலில் பொங்கலுக்குச் சூட்டியவர் பேரறிஞர் கா.நமச்சிவாயர்! மலையகத்தில் கோ.சாரங்கபாணியார் இதனைப் பரவலாக்கினார். பொங்கல் என்பது விழாவுக்குரிய மரபுப் பெயராகும். இவ்விழா தமிழரால் தமிழிய நெறியோடு கொண்டாடப்படுவதால் தமிழர் திருநாள் என்றே அழைக்கலாம்.

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல், வீரவிளையாட்டு என்று ஒரு தொடர் விழாவே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது.

இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தைப் போல மூன்று, நான்கு நாட்கள் என பொங்கல் திருவிழாவைக் கொண்டாடவில்லை என்றாலும் பிறந்த மண்ணின் பெருமையை நினைவில் கொள்கிறார் போல உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர். தாய்த் தமிழ் நாட்டையே பார்த்திராத உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இந்தப் பொங்கல் கட்டுரை சமர்ப்பணம்.

தை பிறந்தால்...

நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் "தை"யில்தான்! உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா!

தைமாதம் கொண்டாடப்படுவதால் " தைத் திருநாள் " என்றும் அழைக்கிறோம். உழுது, நாற்று நட்டு, களைஎடுத்து, உரமிட்டு, நீர்பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக்கொள்வது வழக்கம். எல்லாத்துக்கும் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!

போகிப் பொங்கல்...

போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப் படுகிறது போகிப் பொங்கல். "பழையனக் கழித்து, புதியன புகவிடும்" நாளாகக் கருதப் படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டில் வேண்டாத பொருட்களை குப்பை கூளங்களோடு தீயிட்டுப் பொசுக்குவார்கள். சுண்ணாம்பு தீற்றப்பட்ட (வெள்ளையடிக்கப்பட்ட) வீடுகள் புத்தாடை அணிந்தது போல "ஜம்"மென்றிருக்கும்.

போகி என்றால் இந்திரன்' என்று ஒரு பொருள் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை. தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. கையின் அவனை வணங்கும் நாளாகப் போகிப் பொங்கல் கருதப்படுகிறது.

வாயிற்படிகளின் நுழைவு நெற்றியில் மாவிலை, மஞ்சள், மரிகொளுந்து, பூளையிலை கோர்த்துக் கட்டுவார்கள்; தனைக் " காப்புக் கட்டுதல் " என்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை தத்தம் அலுவல்களில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருப்பார்கள். மார்கழி மாதக் குளிரில் சிறுவர் முதல் பெரியோர் வரைசூரிய உதயத்திற்கு முன் நீராடி இறைவனை வழிபடுவார்கள். பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நன்நாள்தான் போகித் திருநாள். மொத்தத்தில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும்.

போகித் திருநாள், மாரியம்மன் விழாவாகக் கொண்டாடப்படுவதும் உண்டு பல ஊர்களில். மாரியைப் பொழிபவள் மாரியம்மன், என்ற வகையில் கொண்டாடுகிறார்கள். மேலும் ஐந்தினையில் ஒன்றான மருதநிலத்திற்கு (வயலும் வயல்சார்ந்த இடமும்) உரிய கருப்பொருள்களில் இந்திரன் என்ற தெய்வமும் ஒன்று. ஆகவே போகி என்பது இந்திரன் விழா என்று கொண்டாடுவோரும் உண்டு!

மறுநாள் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? ராகு, சனி பார்த்து நல்ல நேரம் பஞ்சாங்கப்பஐ குறிப்பது பெரியவர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம். போகியன்று, பாயாசம், பச்சடி, மரக்கறி, கூட்டு,பொரியல், கோசுமல்லி, மோர்குழம்பு, ரசம், பருப்பு வடை, அப்பளம், போளி எனப்படும் இனிப்பு அல்லது ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் போன்றவற்றைச் சமைத்து உண்டு மகிழ்வது வழக்கம். கொண்டாடப்படும் நாள் அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறி, வரும் ஆண்டிற்கும், பொங்கல் விழாவிற்கும் ஆயத்தம் செய்யவே போகிக் கொண்டாடப்படுகிறது எனலாம்.

தமிழரிடம் என்ன வாழ்க்கைத்தரம் மற்றும் பாங்கு நிலவியிருக்கிறது. பொங்கல் விழாக் கொண்டாட ஆயத்தம் செய்யவே ஒருநாளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், நம் மறத்தமிழர்கள்! சரி, பொங்கல் கொண்டாடும் விதம்தனைப் பார்ப்போம்.

சூரியப் பொங்கல்...

தை மாதத்தின் முதல் நாளை சூரியக் கடவுளை அதாவது சூரியபகவானைப் போற்றி வணங்கி வழிபடும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகின்றனர். அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புது மிடுக்கோடு அவரவர் வேலைகளில் மூழ்கிவிடுவார்கள். பெண்கள்தான் அந்த விடியலின் விளிம்பில் என்ன சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்று தோன்றும். வீட்டு வாசற்படிகளில், முற்றத்தில் கோலமிட்டு ( "நான் 126 புள்ளி வச்சுல்ல கோலம் போட்டேன் போன்ற பறை சாற்றல்களும் கூட இருக்கும்...") தேடிப்பிடித்து பசுஞ்சாணம் கொண்டு வந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கோலங்களின் மேனியில் படாது சமர்த்தாக வைப்பார்கள். பின்னே, இதெல்லாம் ஏனோதானோவென்று செய்ய முடியாதில்லையா?

வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் படர்ந்திருக்கிற பூசணிக்கொடியில் கதிரவனை வரவேற்க இதழ் விரிக்கலாமா வேண்டாமா எனத் தயக்கத்திலிருக்கும் பூசணிப் பூக்களை, அதன் பட்டுப் பூவுடலில் முத்துமுத்தாக நிற்கும் பளிங்குப் பனித்துளிகள் சிதறிவிடாமல், அவைகளுக்கு வலி தெரியாமல் மென்மையாகப் பறித்துக்கொண்டு வந்து சாண உருண்டகளில் செருகி, சற்று எட்ட நின்று பெண்கள் அழகு பார்ப்பதும் கூட அந்தப் பொழுதுபுலராத வேளையில்தான்!

பச்சரிசி மாவைக் கரைத்து, காவிக் கட்டியைக் கரைத்து வண்ணப் பொடிகளை சிறுசிறு வட்டில்களில் எடுத்துக்கொண்டு, முழங்கால் வரை பாவாடையை தூக்கிச் செருகிக் கொண்டு முன் அறை, சமையல் அறை, நடுக்கூடம், உள் அறை, மாடிப்படி, மொட்டைமாடி, முற்றம் என வீட்டில் ஒரு டம் கூட பாக்கியில்லாமல் உட்கார்ந்து, எழுந்து தன் கைத் திறமைகளைக் காட்டும் விடலைப் பெண்களுக்குத் தான் என்ன குதூகலம்!

மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப் பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டுவரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.

"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே " என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.

கதிரவன் கணக்கு...

இன்றைக்கு அறிவியல் உலகம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் அன்றைய தமிழன் சந்திர, சூரியப் போக்கை வைத்து காலத்தையே கணித்தவர்கள்; கதிரவன் உத்ராயணப் பயணம் மேற்கொண்டு தனுசிலிருந்து மகரராசியில் நுழையும் இயற்கை நிகழ்வினைத்தான் "தை"த் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

பொங்கலோ பொங்கல்...

சூரிய உதயத்திற்கு முன்பாகக் குளித்து புத்தாடை அணிந்து முதல் நாளே குறித்து வைத்தபடி நல்ல நேரத்தில்பொங்கல் வைக்க முனைவார்கள். வீட்டு முற்றத்தில் கல் அடுப்பு கூட்டி (கிராமங்களில்தான் பெரும்பாலும் இப்படி... நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் ஸ்டவ் அடுப்பு பெயருக்கு ஒரு பொங்கல், சாமிபடங்களுக்கு முன் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு பொங்கல் சாப்பிட்டுவிட்டு ரெண்டு துண்டுக் கரும்பை கடிப்பதோடு பொங்கல் முடிந்து விடுகிறது...!? " )

மாக்கோலமிட்ட புதுப்பானைக் கழுத்தில் இஞ்சி, மஞ்சள் செடி மாலையாக வளையமிட்டிருக்கும். பொங்கல் பானையை மையமாக வைத்து பெருக்கல் குறிபோல தோகையுடன் கூடிய கரும்புகளை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

அறுவடையில் வந்த புதுநெல் அரிசியிட்டு கரும்புச் சாறில் செய்த வெல்லமிட்டு, பாலூற்றி, பசுநெய்விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க...ஆயிற்று பொங்கல் பொங்கி வழிய " பொங்கலோபொங்கல் " என்ற உற்சாகக் குரலகள் பீறிட பொங்கல் தயார்!

குடும்பமே கூடி நிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல் செய்து வணங்குவார்கள். எண்சாண் உடம்பும் பூமித் தரையில் பட விழுந்து பரிதியின் சீர் பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு இவர்களும், இவர்களுக்கு அவர்களும் பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்!

கிராமங்களில்...

கிராமங்கள் வாசல், திண்ணை என்று செம்மண் பட்டை, சுண்ணாம்புப் பட்டை போட்டிருக்கும். வாசல் நிலைப்படிகளில் மாவிலைத் தோரணம் கட்டி, வேப்பிலை, பூளைப்பூ என்று கலந்த இந்தத் தோரணம் வீட்டுக்குள் நுழையும் போதே ஒருவித நறுமணம் நாசியைத் தடவிச் செல்வதை உணரமுடியும். சூரியன் தெரியும்படியான வீட்டுத் திறந்த முற்றத்தில் பூஜை செய்வார்கள். முற்றம் இல்லாதவர்கள் வீட்டில் பூஜையறையில் பூஜை செய்வது வழக்கம். நன்கு மெழுகப்பட்ட தரையில், நான்கு மூலைச் சதுரமாகப் பெரிய கோலம் போட்டு, நடுவில் காவி இட்டு, அதில் அரிசி மாவினால் வடக்குப் பக்கம் சூரியன் உருவத்தையும், தெற்குப் பக்கம் சந்திரன் உருவத்தையும் வரைந்து அந்த இடத்தில் பூஜை செய்வார்கள். பூஜை செய்யுமிடத்தை பூசணி, பரங்கிப் பூக்கள்அலங்கரித்திருக்கும்.

பூஜைப் பொருட்களாக, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூக்கள், பசுமஞ்சள், இஞ்சிக் கொத்து, கரும்பு, சாம்பிராணி, கற்பூரம், அட்சதைப் பொருள், காய்ச்சாத பசுவின் பால், குங்குமம், சந்தனம், திருநீறு, கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் இவை அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.

பொங்கல் வைக்கும் வெண்கலப் பானையில் அல்லது மண் பானையில் சுண்ணாம்பைச் சுற்றி ஒரு விரலால் தடவிக் குங்குமப் பொட்டிட்டு ராகு காலம் இல்லாத வேளையில் பாலும் புதுத் தண்ணீரும் விட்டு கிழக்குப் பார்த்த அதாவது சூரியன் உதிக்கிற திசையில் அடுப்பு மூட்டி பொங்கல் பானையை வைப்பார்கள். ஒரு கொதி வந்ததும் தயாராக வைத்துள்ள பொங்கலரிசி மற்றும் பாசிப் பருப்பை போடுவார்கள். நன்கு வெந்தபின் வெல்லம் இட்டு ஏலம் உட்பட மற்ற பொருட்களையும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். சிலர் வெண்பொங்கலும் உளுந்துவடையும் செய்வது உண்டு.

ஐந்தாறு மரக்கறி ஒன்றிரண்டு கூட்டு வகைகள் நவதானியங்கள் கலந்த குழம்பு வைத்து "அப்பளம் பொரிப்பவர்களும் உண்டு. சிலர் பொங்கலன்று வெறும் வெண்பொங்கல் மட்டும் செய்பவர்களும் உண்டு. நான்கு வித காய்கறிகளைத் தனித்தனியாக வேக வைத்து, நான்குவித வெல்லக் கூட்டுகளைச் செய்து, சர்க்கரை வள்ளிக் கிழங்கு கறி, பரங்கிக் காய் குழம்பு, அப்பளம் பொறித்து பொங்கல் படைப்போரும் உண்டு. சங்கராந்திக்கு முக்கியமாக இடம்பெறும் காய்கறியில் பச்சை மொச்சை, பரங்கிக் காய், சர்க்கரை வள்ளிகிழங்கு, வாழைக்காய் முதலியனவாகும்.

பூஜை முடிந்தபின், நைவேத்தியம் செய்த சாதத்தில் கொஞ்சம் எடுத்து உப்பு தயிர் சேர்த்து சிறிது சுக்கைத் தட்டிப் போட்டுப் பிசைந்து பூஜை செய்த இடத்தில் வைப்பது வழக்கம். பூஜை முடிந்தபின் சைவச் சாப்பாடு விருந்துபோல நடக்கும். அன்று மிகுந்த கறி கூட்டு மற்றும் குழம்பினை அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி எரித்த கறி செய்து வைத்துக் கொள்வார்கள். எரித்த கறி மிகுதியாக இருந்தால் அது தீரும் வரை தினமும் கொதிக்க வைத்து பல நாட்கள் வரை கெட்டுப் போகாமல்

உபயோகிப்பவர்கள் உண்டு. தந்தை இல்லாதவர்கள் வீட்டில் மட்டும் மாதப் பிறப்பு தர்ப்பணம் செய்வார்கள். சூரிய நாராயணனைக் குறித்து பூஜை செய்வது வழக்கம்.

கனுப் பொங்கல்...

பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், " கனுப் பீடை" நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப் பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கனுப் பொங்கல் நாளன்று வீட்டில் அனைவரும் குஹித்துவிட்டுத்தான் காரியம் தொடங்குவார்கள். முதல் நாள் பொங்கல் பானையில் கட்டிய பசு மஞ்சளை எடுத்துக் கழுவி வீட்டிலுள்ள பெண்கள் குழந்தைகள் அந்த மஞ்சளைப் பூசிக்கொண்டு ஆறு, குளம், ஊரணிக்குப் போய் "கனுப்பிடி" வைத்துவிட்டு வந்து குளித்து புத்தாடை அணிந்து முதல் நாள் பிசைந்து வைத்துள்ள தயிர் சாதமும் எரித்த கறி சேர்த்துச் சாப்பிடுவார்கள். குளம், று இல்லாத ஊர்களில் தங்கள் வீட்டில் முற்றத்தில் அல்லது மொட்டை மாடியில் கனுப்பிடி வைத்துவிட்டு பின் குளித்து புதுசு உடுத்திய பின் தான் சாப்பிடுவது வழக்கம்.

கனுப் பிடி....

கனுப்பிடி வைப்பது பெண்களுடன் பிறந்த சகோதரர்களின் ஷேமத்தைக் குறிக்கவே செய்யப்படுகிறது. கனுப்பிடி வைப்பது என்றால் அந்த வீட்டில் எத்தனை சகோதரர்கள் இருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு மஞ்சள் இலையை வைத்து, அதில் முதல் நாள் பிசைந்த தயிர் சாதத்தில் கொஞ்சம் எடுத்து அதில் மஞ்சள் பொடியைச் சேர்த்து கலந்து கொள்வார்கள். கொஞ்சம் வெள்ளைச் சாதமும் எடுத்து வைத்திருப்பார்கள்.

சிலர் சர்க்கரைப் பொங்கலும் வைப்பார்கள். கொஞ்சம் சாதத்தில் குங்குமத்தைப் போட்டு கலந்து கொள்வார்கள். சிவப்பு, மஞ்சள்,வெள்ளை என்று சாதங்களோடு சர்க்கரைப் பொங்கல் என நான்கு வகை சாதங்கள் இருக்கும். பெரும்பாலோர் வெண்பொங்கலையும், மஞ்சள் சாதத்தையும் மட்டும் படைப்பார்கள்.

ஒவ்வொரு சாத உருண்டையிலும் ஏழு அல்லது ஒன்பது சிறு உருண்டைகளாகப் பிடித்த சாதங்களை கனுப்பிடியாக மஞ்சள் இலையில் (அதாவது மஞ்சள் கிழங்குச் செடி சிறு வாழை இலை போன்று இருக்கும்) வைப்பார்கள்.

இலை நுனியில் நான்கு வெற்றிலை, ரெண்டு பாக்கு, ஒரு பழம், ரெண்டு கரும்புத் துண்டு என்று வைத்து நைவேத்தியம் செய்வார்கள். று குளங்களில் வைக்கப்படும் கனுப்பிடி சாதத்தை காக்கை குருவி சாப்பிட்டு விடும். அதிலுள்ள பழம் பாக்கு வெற்றிலையை ஏழைகள் எடுத்துக் கொள்வார்கள். பெண்கள் தங்கள் சகோதரர்கள் சேம நலனுக்காகச் செய்யப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் பொங்கல் பண்டிகைக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் செனத்தி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

சுமங்கலிகள்அல்லாதவர்களும் சகோதரர்கள் இருந்தால் அவர்களும் கனுப்பிடி வைக்க வேண்டும். அன்று பகலில் சர்க்கரை பொங்கல் மற்றும் தயிர் சாதம் வற்றோடு மற்றும் இரண்டு பிசைந்த சாதங்களோடு வற்றல், வடாம், வறுவல் போன்றவற்றோடு அப்பளம் பொரித்து பகல் சாப்பாடு நடக்கும்.

மாட்டுப்பொங்கல்...

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு" என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். மாடுகள், வயல்கள்/பண்ணைகள் உள்ளவர்கள் இந்நாளைக் கொண்டாடுகிறார்கள். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்கு வெளிச்சம்தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

வண்டியிழுக்க, செய்வது மாடு; காளைமாடு. காலைமாலை சுவைதரும் பால்தருவன பசுமாடு; அவை அனைத்தும் அன்று குளித்து, கொம்புகளை சீவிக்கொள்ளும். கொம்புகளில் வண்ணங்களைப் பூசிக்கொள்ளும்; (அன்று மட்டும் மாடுகளுக்கு அடி விழாது) எருமைமாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கூட கொம்புகளில் வண்ணம் பூசுவர். கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள்.

கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறுபூசி குங்குமத் திலகமிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை அது டிராக்டராக ருந்தாலும் கொழு கொம்பு கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் இதே போலச் செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது " பொங்கலோபொங்கல் மாட்டுப் பொங்கல் " என்ற எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும். அதன் பின் பசு, காளை, எருமை எனஅனைத்து கால்நடை களுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றிகூறும் நாளைத்தான் "மாட்டுப் பொங்கலாக" கொண்டடுகின்றனர்.

சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள். வீட்டுக்கு திரும்ப கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்து அதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம். சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிச் சுவைக்கும் விதவிதமான கரும்புகள் தெருத் தெருவாக

விற்பனையாகும். கரும்பு திண்ணக் கூலியா என்ன? பல்லில்லாத வயதான மழலைகளுக்குக் கூட நாவினில் எச்சில் ஊற வைக்கும் சமாச்சாரமாயிற்றே!

காணும் பொங்கல்...

நான்காவது நாளைக் காணும் பொங்கலாக அனுசரிப்பார்கள். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந் நாளில்தான். தெருக்களில் ஒலி பெருக்கிகள் காதைத் துளைக்கும். அந்த நற்பணி மன்றம், இந்த நலச் சங்கம், ரசிகர்மன்றங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இரவில் இசை கச்சேரிகள், நாடகம் என்று இன்றைக்கு ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடை பெறுவதும் உண்டு.

ஜல்லிக் கட்டு...

கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ாஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். லட்சக்கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள்.

இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படுமோசமாக காயப்படுத்திவிடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகைசூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், இராமாநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டுவருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்றவேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள்.

தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, அந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கிவிடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப்போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம்)

"ரேக்ளா ரேஸ்" எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் பலஇடங்களில் நடைபெறும். அதற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.

சாவக்கட்டு ...

இது தவிர "சாவக் கட்டு" என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடைபெறும். கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போடவிடுவார்கள். சேவல்களை கோழி சண்டைக்காகவே வளர்ப்பார்கள். சேவல் கால் நகங்களை வெட்டி வெட்டி கூராக்கி வருவார்கள். முதிர்ச்சியடைந்ததும் அதை சண்டைக்கு பழக்குவார்கள். சேவலின் கால்களில் ஒரு சாண் நீளமுள்ள கூரான கத்தியை கட்டிவிடுவார்கள். அவரவர் சேவல்களை களத்தில் எதிரும் புதிருமாக இறக்கிவிடுவார்கள்.

சேவல்கள் எகிறிஎகிறி சண்டைபோட்டுக் கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால் இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆனால் க்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்றசேவலை எடுத்துக் கொள்வார். ஆனால் எந்தச் சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம் தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். இது சில இடங்களில் அடிதடி, கத்திகுத்து வரை போய் விடுவதும் உண்டு. இப்படி நடக்கும் இடங்களில் அடுத்ததடவை சாவக்கட்டு கிடையாது என போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு.

அவர்களுக்கு 'கடுக்காய்' கொடுத்துவிட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள். இது ஒரு சூதாட்டம் போல் நடப்பதால் பெரும்பாலும் கோழிச் சண்டைநடத்த போலீஸ் தடை இருக்கும். அதை எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக்குழம்பு மணக்கிறது என்றால் அது பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சேவல் குழம்பு மணமாகத்தானிருக்கும் என்றால் அது மிகை இல்லை.

பொங்கல் என்பதும் நான்கு எழுத்து! பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு!! தமிழகத்தின் பாரம்பரியமான கலை, கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுகளை பொங்கல் நாளில் புதுப்பித்து மகிழ்கின்றனர். பழமையான கிராமிய கலைகள் அழியாமல் பாதுகாக்கும் விழாக்களில் "பொங்கலுக்கும்" பங்கு இருக்கிறது என்பது பெருமையான விசயம் தானே!

சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு " தமிழர்திருவிழா" வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது அதனினும் மகிழ்தன்றோ!!

-ஆல்பர்ட்(albertgi2004@yahoo.com)

http://thatstamil.oneindia.in/art-culture/...ys/albert2.html

  • கருத்துக்கள உறவுகள்

புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா

விரைவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புது வருடம் பிறக்கப் போகிறது. தமிழ் புத்தாண்டு என்பது காலம் காலமாகத் தமிழர்களால் சித்திரை மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பண்பாடுகளில் புது வருடம் கொண்டாடப்படும் முறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நோக்குவதன் மூலம் நாம் கொண்டாடும் புது வருடம் பற்றி இன்று சிறிது விளங்கிக் கொள்ளலாம்.

வருடப் பிறப்பென்றதும் இலங்கையில் போருக்கு முன்னர் வாழ்ந்தவர்களுக்கு பல இனிய நினைவுகள் வரலாம். புதுவருடத்துக்குரிய சாதாரண அம்சங்களுடன் சில வேடிக்கை விளையாட்டுகளும் அந்தக் காலத்தில் இடம்பெற்றிருந்தன. போர்த் தேங்காய் உடைத்தல், வண்டிற் சவாரி போன்ற போட்டிகள் மிக அமர்க்களமாக நடைபெற்றன. அவற்றுடன் இணைந்த ஆராவாரமும் மகிழ்ச்சியும் கொஞ்சமல்ல. ஆனால் தமிழரது பிரச்சினைகள் ஆரம்பித்த பின்னர் இந்த போட்டிகள் ஒன்றொன்றாக நலிந்து மறைந்ததுடன் ஒவ்வொரு புதுவருடமும் தமிழருக்கு நீதி, உரிமையுடன் கூடிய சமாதானத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஆரம்பமாகி பின் அவை கிடைக்காமலேயே மடிந்து போனது. இப்படிப் பல வருடங்கள் பிறந்து பிறந்து விடிவின்றி முடிந்து போயின. ஆனால் முன்னரைப் போலன்றி இந்த வருடம் தமிழரது அபிலாஷைகள் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்ற மனப்பூர்வமான பிரார்த்தனையுடன் எமது கட்டுரையை ஆரம்பிப்போம்

தமிழ் புது வருடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பிறக்கவுள்ள வருடத்தின் பெயர் தாரண என்பதாகும். இது 60 வருடங்களில் 18ஆவது என்கிறது பஞ்சாங்கம். வருடங்களின் அறுபது பெயர்களும் மாறி மாறி சுழற்சியில் வருவன. அதாவது அறுபது வருடங்களின் பின் இந்த அறுபது பெயர்களும் அதே ஒழுங்கில் மீண்டும் வருவன. துரதிஷ்டவசமாக இவை தமிழ் பெயர்களல்ல. அனைத்தும் வடமொழிப் பெயர்களே. வழமை போல இப் பெயர்களுக்கும் ஒரு புராணக் கதையுண்டு. நாரதருக்கும் பெண் வடிவெடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த 60 பிள்ளைகளின் பெயர்களே இந்த வருடங்களின் பெயர்கள் என்று கூறப்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையில் இந்த வருடப் பெயர்களுக்கு எதுவித அர்த்தமும் கிடையாது.

பொதுவாக உலகத்திலுள்ள அனைவருக்கும் ஜனவரி முதலாம் தேதியே லெளகிக காரியங்களுக்கான புதுவருடம் ஆரம்பமாகிறது. அதனால் பொதுவாக பலரும் அந்த நாளைக் கொண்டாடும் முறை இருந்த போதும் ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனத் தனியாகப் புதுவருடக் கணிப்பு முறையையும் கொண்டாட்டங்களையும் கொண்டுள்ளது. ஜனவரி முதலாம் தேதி கொண்டாடப்படும் புதுவருடத்திற்கு சோதிட அல்லது விவசாய முக்கியத்துவம் கிடையாது. பல்வேறு இனங்கள் தத்தமக்குரிய முறைகளில் கொண்டாடும் புதுவருட கொண்டாட்டத்திற்கு ஏதோ ஒரு கருத்துண்டு.

புதுவருடம் கொண்டாடப்படுவதென்பது மிகப் மிகப் பழமையானது. சுமார் நாலாயிரம் வருடங்களின் முன்னர் அதாவது கிமு இரண்டாயிரம் ஆண்டளவில் பபிலோனியாவில் புதுவருடம் வசந்த கால முதல் அமாவாசையில் கொண்டாடப்பட்டது. வசந்த காலம் என்பது மறுமலர்ச்சிக்குரிய பருவம். புதிய பயிர்களை நடுதல், மரங்கள் மலர்தல் ஆகியன இப்பருவ காலத்திற்குரியன. பபிலோனிய புதுவருட கொண்டாட்டங்கள் 11 தினங்கள் நீடித்தன. ஒவ்வொரு நாள் கொண்டாட்டமும் தனக்கெனத் தனியான சிறப்புக் கொண்டமைந்தது.

ரோமர்கள் தொடர்ந்தும் மார்ச் மாத பிற்பகுதியில் புது வருடத்தைக் கொண்டாடி வந்தனர். ஆனால் அவர்களது நாட்காட்டிகள் தொடர்ந்து பல்வேறு உரோம சக்கரவர்த்திகளால் மாற்றப்பட்டு வந்ததால் அது சூரியனது போக்கை அடிப்படையாகக் கொண்டமையும் நிலை மாறியது. நாட்காட்டியை முறைப்படுத்தும் நோக்கத்துடன் கிமு 153ல் ரோம செனட் ஜனவரி முதலாம் தேதியை வருடப்பிறப்பாக பிரகடனப்படுத்தியது. ஆனாலும் கிமு 46ம் ஆண்டு ஜூலியன் கலெண்டர் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட நாட்காட்டியை ஜூலிய சீஸர் (Julius Caesar) உருவாக்கி நிலைநிறுத்தும் வரை மாற்றங்கள் தொடர்ந்தன. அது மீண்டும் ஜனவரி முதலாம் தேதியை வருடப் பிறப்பாகக் கொண்டது. ஆனால் அந்த நாளை சூரியனின் போக்குடன் தொடர்புபடுத்துவதற்காக அதற்கு முந்திய வருடத்தை அந்த அரசன் 445 நாட்கள் வரை நீடிக்கவேண்டி நேர்ந்தது. கிபி முதல் நூற்றாண்டு வரை ரோமர்கள் தொடர்ந்து புதுவருடத்தைக் கொண்டாடி வந்த போதும் ஆரம்ப கத்தோலிக்க பிரிவினர் அந்த கொண்டாட்டங்களை பண்டைய சமயத்திற்குரியன என்று கண்டித்தன. ஆயினும் கிறீத்தவம் நன்கு பரவ ஆரம்பித்ததும் பண்டைய சமயத்துக்குரிய கொண்டாட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் இணைத்து தனக்கென சமயக் கொண்டாட்டங்களை ஏற்படுத்திக் கொண்டது. மத்திய காலம் வரை ஜனவரி முதலாம் தேதி புதுவருடம் கொண்டாடுவதை கிறீஸ்தவம் எதிர்த்தே வந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளாகவே மேற்கத்தைய நாடுகள் இந்த நாளை புதுவருட விடுமுறையாக ஏற்றுள்ளன.

பபிலோனியரும் தற்போதுள்ளது போல புதுவருட தீர்மானங்களை எடுத்தனர். அவர்களது முக்கியமான தீர்மானம் கடன் வாங்கிய விவசாய கருவியைத் திருப்பிக் கொடுப்பதே. ரோமர்கள் புதுவருடக் கொண்டாட்டத்தின் போது நடத்திய தேர்ப் போட்டிகள் போல 1916ல் கால்பந்து விளையாட்டு புதுவருட முக்கிய விளையாட்டாகியது. புதுவருடத்தைக் குறிக்க ஒரு குழந்தையை உபயோகிக்கும் மரபு கிமு 600இல் கிரேக்க நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வதன் மூலம் திராட்சை ரசத்தின் கடவுளான Dionysus ஐக் கொண்டாடும் ஒரு மரபைக் கொண்டிருந்தனர். அது வளத் தெய்வமாக அக் கடவுள் மறுபிறப்பெடுப்பதை உருவகமாகக் குறித்தது. புது வருடத்தின் மறுபிறப்பை உருவகமாக குறிக்க எகிப்தியர்கள் குழந்தையைப் பயன்படுத்தினர். கிறீத்தவர்கள் முதலில் இந்த மரபை எடுக்க விரும்பாத போதும் குழந்தை யேசுவைக் குறிக்கும் வகையில் புதுவருடத்தில் ஒரு குழந்தையைப் பயன்படுத்த பின்னர் ஒப்புக்கொண்டனர். 14ம் நூற்றாண்டு தொடக்கம் புதுவருடத்தை குழந்தை உருவகமாகக் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றி வந்த ஜேர்மானியர் அதைப் பின்னர் அமெரிக்காவில் பரப்பினர்.

வருடம் பிறந்ததும் உண்ணும் முதல் உணவு முழுவருடமும் அதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற மரபு பல்வேறு பண்பாடுகளில் காணப்படுகிறது. சில பண்பாடுகளில் மோதிர வடிவில் அதாவது வட்ட வடிவில் அமைந்த உணவு அதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. வட்டம் என்பது வருடத்தின் முழு வட்டத்தை குறிக்கிறது. இதனாலேயே புது வருடத்தில் வட்ட வடிவில் அமைந்த donuts ஐ உண்பதால் வருடம் முழுவதும் தமக்கு அதிஷ்டம் வரும் என்று டச்சுக்காரர் நம்புகின்றனர்.

பண்டைய நாட்களில் மக்கள் அறுவடையுடன் தமது புதுவருடத்தைக் கொண்டாடினர். பழையதை மறந்து புதுவருடத்திற்கு தம்மை தூய்மையாக்கும் வகையில் கிரியைகளைச் செய்தனர். உதாரணமாகத் தாம் உபயோகித்து வந்த பழைய நெருப்பை அணைத்துவிட்டு புதுவருடத்தில் புதிதாகத் தீ வளர்த்தனர். பண்டைய ரோமர்கள் வசந்த காலத்தில் புதிதாகத் துளிர்க்கப் பெற்ற புனித மரங்களின் கிளைகளை ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கினர். பின் இது பொன் முலாம் பூசப்பட்ட கொட்டைகள் அல்லது ஜானுஸின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கொடுத்து வாங்குவதாக மாறியது. ஜானுஸ் என்பது வாசல், கதவுகள், ஆரம்பம் ஆகியவற்றின் தெய்வமாகும். அதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று முற்பக்கத்தை பார்ப்பது மற்றது பிற்பக்கத்தை நோக்குவது. ஜனவரி மாதம் இத் தெய்வத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டே உருவாகியது. ரோமர்கள் தமது சக்கரவர்த்திகளுக்கு புதுவருட பரிசுகள் வழங்கினர். பின்னர் அவர்கள் மக்கள் தமக்கு கட்டாயம் பரிசுகள் தரவேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பிக்கவே கிபி 567ல் கிறீத்தவ தேவாலயம் இந்த முறையையும் ஏனைய பண்டைய முறைகளையும் ஒழித்தது. ஆயினும் 1200 அளவில் இங்கிலாந்தில் ஆங்கில அரசர்கள் மக்களிடம் புதுவருட பரிசுகளை வற்புறுத்திக் கேட்டனர். சாதாரணமாக பரிசுகள் பொன் அல்லது நகையாக அமைந்தன. முதலாம் எலிஸபெத் அரசி அழகான பூவேலைப்பாடு செய்யப்பட்ட அல்லது பொன்னால் அலங்கரிக்கப்பட்ட கையுறைகளைப் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் மத்தியிலும் புதுவருட பரிசுகள் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் காணப்பட்டது. கணவன்மார் தத்தமது மனைவியருக்கு ஊசி போன்ற பொருட்களை வாங்க பணம் கொடுத்தனர். அந்த முறை பின்னர் மறைந்தாலும் pin money என்ற சொல்வழக்கு இன்றும் குறைவாகச் செலவழிப்பதற்கு வழங்கப்படும் அற்ப தொகையைக் குறிக்கிறது. பண்டைய பேர்ஷியர் முட்டைகளை உற்பத்தியின் அடையாளமாக புதுவருடத்தில் பரிசளித்தனர்.

சீனருக்கும் தமிழருக்கு உள்ளது போல 60 வருட சுழற்சி முறை உண்டு. ஆயினும் 12 வருடங்களுக்கு ஒரு தடவை அவை குறிப்பிடும் மிருகங்கள் மீண்டும் வரும். zi (எலி), chou (எருது), yin (புலி), mao (முயல்), chen (dragon), si (பாம்பு), wu (குதிரை), wei (ஆடு), shen (குரங்கு), you (கோழி), xu (நாய்), hai (பன்றி). அந்தந்த வருடத்தில் வரும் மிருகத்திற்கு ஏற்ப வருட பலன் கூறுவார்கள். சீனருக்கு இப்போது குரங்கு வருடம் பிறந்திருக்கின்றதை நீங்கள் செய்திகளில் கேட்டிருப்பீர்கள். தற்போதைய 60 வருட சுழற்சி 1984 February 2ம் தேதி ஆரம்பமாகியது. இதன் ஆரம்பத்திற்கு கிறீஸ்து பிறப்பு போல வரலாற்று நிகழ்வு என்று எதுவும் கிடையாது. ஆயினும் வரலாற்று பதிவுகளில் அரசாண்ட அரச குலங்களின் ஆட்சியின் படி வருடங்களை எண்ணும் முறை ஒன்று காணப்படுகிறது. சீன புதுவருடம் குளிர் பருவம் முடிந்த பின்னர் வரும் இரண்டாவது அமாவாசையில் வருவதாகும். அது பொதுவாக ஜனவரி நடுப் பகுதிக்கும் பெப்பிரவரி நடுப்பகுதிக்கும் இடையில் ஆரம்பித்து 15 நாட்கள் நீடிப்பதாகும். புது வருடம் நெருங்க சீன மக்கள் புது வருடத்தில் தூரதிஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக தமது வீடுகளைத் துப்பரவு செய்ய ஆரம்பிப்பார்கள். புதுவருடத்திற்கு முந்திய நாள் குடும்பங்கள் ஒன்று கூடி விருந்துண்பதுடன் இரவு நீண்ட நேரம் விழித்திருப்பார்கள். இவ்வாறு விழித்திருப்பது தமது முதியவரின் வாழ்நானை நீடிக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. கெட்ட ஆவிகள் புதுவருட காலத்தில் உலவுவதாக நம்புவதால் சீனவெடிகள் கொழுத்தி அவைகளை விரட்டுகிறார்கள். அத்துடன் இந்த தீய ஆவிகள் வராதிருக்க தமது வீட்டுக் கதவுகள் யன்னல்களை நன்கு இடைவெளியின்றி காகிதத்தால் ஒட்டுகிறார்கள். புதுவருடத்தன்று தம்மிடமுள்ள சிறந்த ஆடைகளை அணிந்து தம்முள் ஒருவருக்கொருவர் சிறு பரிசுகளைப் பரிமாறிக் கொள்வார்கள். உலகம் முழுவதிலுமுள்ள சீனர்கள் முதலாவது பூரணைக்கு Festival of Lanterns என்றழைக்கப்படும் ஒளி விழாவன்று வண்ண ஊர்வலங்கள் நடத்துவார்கள். மிக பிரமாண்டமாகச் செய்யப்பட்ட dragon இன் பின்னால் lanterns ஐ ஏந்திய வண்ணம் மக்கள் ஊர்வலமாகச் செல்வார்கள். புது வருடத்திற்கான வழியை இவ்விளக்குகள் ஒளியூட்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

கொறியாவில் சந்திர வருடத்தின் முதல் நாள் சொல்-நல் என்றழைக்கப்படுகிறது. இது குடும்பங்கள் தமது உறவுகளைப் புதுப்பிப்பதற்கும் புதுவருடத்திற்கு ஆயத்தம் செய்வதற்குமுரிய நாளாகும். புதுவருடம் பிறக்கும் வரை கெட்ட சக்திகள் உட்புகாதவாறு மக்கள் தமது வாசல் கதவுகளையும் சுவர்களையும் வைக்கோல் போன்றவற்றால் மூடிப் பாதுகாப்பார்கள். மறுநாள் புதிய ஆரம்பத்தைக் குறிக்கும் முகமாக புத்தாடை அணிந்து குடும்பத்தில் மூத்த ஆணின் வீட்டில் குழுமுவார்கள். இறந்த முன்னோரை நினைவு கூடும் கிரியைகளை நடத்திய பின்னர் குடும்பத்திலுள்ள இளையவர்கள் முதியவர்களை வணங்குவார்கள். முதியவர்கள் பதிலுக்கு புதுவருடத்தில் நல்லாரோக்கியமும் செழிப்பும் அவர்களுக்கு ஏற்படவேண்டும் என்று வாழ்த்தி பணம் அல்லது பரிசு வழங்குவார்கள். பின்னர் அனைவரும் அரிசியால் தயாரிக்கப்பட்ட ஒருவித கூழை அருந்துவார்கள். இக்கூழை அருந்துவதன் மூலம் இன்னொரு வருடம் அதிகம் வாழலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். அனைவரது வயதும் புதுவருடப் பிறப்பிலிருந்தே கணிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொருவரது வயதும் புதுவருடத்திலிருந்து ஒரு வருடம் அதிகரிக்கிறது.

ஜப்பானியரது புதுவருடமாகிய ஒஷொகற்ஸு (Oshogatsu) ஜனவரி மாதம் முதலாம் தேதி கொண்டாடப்படுகிறது. அது மேற்கு நாட்டு புதுவருட நாளில் இடம் பெற்ற போதும் அவர்களது ஷின்ரோ மத நம்பிக்கைகளுக்கு ஏற்பவே கொண்டாடப்படுகின்றது. சில கிராமப்புறங்களில் பண்டைய முறைப்படி ஜனவரி 20ம் தேதி தொடக்கம் மாசி 19ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் வேறுபட்ட நாட்களில் வசந்தத்தை வரவேற்கும் மரபைத் தொடரும் வகையில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சிக்கும் நல்லதிஷ்டத்திற்குமாக தமது வீடுகளின் முன் அவர்கள் வைக்கோலால் செய்யப்பட்ட ஒரு கயிற்றைத் தொங்க விடுகின்றனர். அது தீய சக்திகளையும் அகற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. சடங்கு ரீதியாக வீட்டைத் துப்பரவு செய்தல், விசேட உணவருந்துதல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்பன புதுவருடத்தின் போது அனுஷ்டிக்கப்படுகின்றன. புதுவருடம் பிறந்ததும் ஜப்பானியர் சிரிக்க ஆரம்பிப்பர். அது வருடம் முழுவதும் நல்லதிஷ்டத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.

தாய்லாந்தில் ஏப்பிரல் மாதம் 13ம் தேதி தொடக்கம் 15ம் தேதி வரை சொங்கிறன் (Songkran) என்று அழைக்கப்படும் புத்தாண்டு மூன்று தினங்களுக்கு கொண்டாடப்படுகிறது. அப்போது சகல புத்த சிலைகளும் வடிவங்களும் கழுவித் துப்பரவு செய்யப்படுகின்றன. ஒருவர் மேல் ஒருவர் நீர் தெளிப்பதால் வருடம் முழுவதும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் அவர்களிடையே உண்டு. பர்ணசாலைக்குச் சென்று வணங்குவதுடன் பிக்குகளுக்கு அரிசி, பழம், மற்றும் வேறு இனிப்புகளையும் வழங்குவார்கள். மீன்களை உயிருடன் மீண்டும் கடலில் வீடுவதும் பறவைகளை கூடுகளிலிருந்து சுதந்திரமாகப் பறக்கவிடுவதும் நல்லதிஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.

ஜனவரி 21 ம் தேதி தொடக்கம் பெப்ருவரி 19ம் தேதிக்கிடையில் வருடம்தோறும் மாறி மாறி வரும் வியற்நாமிய புதுவருடம் அவர்களது பல நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது. புது வருடத்தில் வீட்டிற்குள் நுழையும் முதல் மனிதன் அதிஷ்டத்தையோ துரதிஷ்டத்தையோ கொண்டு வரலாம் என்பது வியற்நாமியர்களது பொதுவான நம்பிக்கை. அத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் குடியிருக்கிறார் அவர் புத்தாண்டு தினத்தில் மேலுலகத்திற்கு பயணமாகிறார் என்பதும் அவர்களது நம்பிக்கை. அத்துடன் மேலுலகத்தில் கடவுள் கடந்த வருடத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளவர்களும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்துவார் என்றும் நம்புகிறார்கள். எனவே புதுவருடம் என்பது கடந்த காலத்தின் குறை நிறைகளை ஆராய்ந்து எதிர்காலத்தை நிறைவுடன் அமைப்பதாகும். கடவுள் கயல் மீனின் மேலேறி மேலுலகத்திற்குச் செல்வதாக அவர்கள் நம்புவதால் புத்தாண்டன்று ஒரு உயிருள்ள கயல் மீனை வாங்கி அதனை உயிருடன் கடலில் மீண்டும் விடுவார்கள்.

கம்போடிய மக்கள் தமது புதுவருட ஆரம்பத்தை இந்திய பஞ்சாங்கத்தின் படியே கணித்து ஏப்பிரல் மாதம் 12 தொடக்கம் 14ம் தேதி வரை 3 நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். வீடுகளை நன்கு துப்பரவு செய்து அன்று வீடுகளுக்கு வருவதாக நம்பப்படும் புதுவருட தெய்வத்தை வரவேற்பதற்கேற்ப அவற்றை நன்கு அலங்கரிப்பர். புத்தரின் சிலையொன்றை வைத்து பூ, மெழுகுதிரி, சந்தனக்குச்சி, ஒரு பாத்திரத்தில் வாசனையூட்டப்பட்ட நீர், உணவு, பானம், வாழையிலையில் வெட்டப்பட்ட பல வடிவங்கள் ஆகியவற்றை தமது வீட்டின் வழிபாட்டிடத்தில் வைப்பார்கள். முதல் நாள் பர்ணசாலைக்குச் சென்று பிக்குகளுக்கு உணவளிப்பார்கள். அன்று பர்ணசாலையில் மணல்மேடை அமைக்கப்பட்டு ஐந்துவித கொடிகள் அதில் செருகப்படும். அங்கு மூன்று நாட்களும் கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுகள் இடம்பெறும். இரண்டாம் நாள் உறவினர்கள் ஒன்று கூடி விருந்துண்டு பரிசுகள் பரிமாறிக் கொள்வதுடன் பர்ணசாலைக்குச் சென்று தமது முன்னோருக்காக பிரார்த்தனைகள் நடத்துவார்கள். மூன்றாம் நாள் மழை வளம் வேண்டி வீடுகளிலும் பர்ணசாலைகளிலும் உள்ள புத்த சிலைகளை நீரால் தூய்மைப்படுத்துவார்கள். பிள்ளைகள் பெற்றோருக்கு மரியாதை செலுத்துமுகமாக அவர்களது பாதங்களைக் கழுவுவார்கள்.

ஜூதர்களுடைய ரொஷ் ஹுஷனா (Rosh Hashanah) எனப்படும் புதுவருடம் செப்ரெம்பர் ஒக்ரோபர் மாதங்களில் அதாவது ஜூதர்களின் பஞ்சாங்கத்தின் படி ஏழாவது மாதத்தில் வருகிறது. அவர்களது கொண்டாட்டங்கள் முதல்நாள் மாலை சூரியன் மறைவதுடன் ஆரம்பமாகும். வழிபாட்டிடங்களில் சமய ஆராதனைகள் நடைபெறும். அப்போது ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட வாத்தியமொன்று மரபுரீதியாக இசைக்கப்படும். பிள்ளைகளுக்கு புத்தாடை வழங்குவதும் அப்போது நிகழும். அறுவடையை நினைவு கூரும் முகமாக கோதுமைப் பண்டங்களும் பழங்களும் உண்ணப்படும். அத்துடன் கடந்த வருடத்தில் செய்த தவறுகளை நினைத்து எதிர்காலத்தில் அவற்றைச் செய்யாது வாழ்க்கையை நல்லமுறையில் அமைக்க புதுவருட நாளில் எண்ணுவார்கள்.

ஈரானில் இயற்கையின் மறு மலர்ச்சிக்கு அமைவாக எப்போதும் வசந்த கால தொடக்கமே வருடத் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதனால் மார்ச் மாதத்தில் அவர்கள் Noruz என்ற புதுவருடத்தைக் கொண்டாடுவார்கள். புதுப்பித்தலைக் குறிக்கும் வண்ணம் வீட்டை புது முறையில் ஒழுங்கு செய்து, புத்தாடைகள் தைத்து, புதுவருடம் நெருங்க கோதுமை அல்லது பார்லியை சிறு பாத்திரத்திலிட்டு நீர் தெளித்து வைப்பார்கள். புதுவருடத்தன்று, முளைத்த தானியங்கள் வசந்தத்தின் வரவையும் செழுமை நிறைந்த புதுவருடத்தையும் நினைவு படுத்தும். புதுவருட கொண்டாட்டத்திற்கு The Book of Kings என்ற ஈரானிய இதிகாசத்தில் ஒரு கதை கூறப்படுகிறது. Jamshid என்ற அரசன் அசுரர்களை வென்று அவர்களது பொக்கிஷத்தை கவர்ந்து கொண்டான். மேலுலகையும் வெல்ல எண்ணி தான் வென்ற பொன் வைரம் போன்றவற்றைக் கொண்டு தனது சிம்மாசனத்தை அமைத்து அதில் அமர்ந்து அசுரர்களை அதை விண்ணுக்கு தூக்கி உயர்த்தும்படி கட்டளையிட்டான். அவ்வாறு உயர்த்திய போது சூரிய ஒளி பட்டு வைரங்களும் ரத்தினங்களும் விண் முழுவதையும் வர்ண மயமாக்கின. அந்த நாளே புதுவருடமாகக் கொண்டாடப்படுவதாக ஈரானியர் நம்புகின்றனர்.

பகாய் மக்களது நாட்காட்டி 19 நாட்கள் உள்ள 19 மாதங்களைக் கொண்டது. ஆயினும் அவர்கள் வசந்த காலத்தின் வருகையின் போதே புதுவருடம் கொண்டாடுகிறார்கள். எகிப்தில் புதுவருடம் எப்போது வருகிறது என்று தெரிந்தாலும் பிறையைக் கண்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே அது கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளியின் போது புதுவருடம் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள இந்துக்கள் வசந்த காலத்தின் வருகையுடன் தமது புது வருடத்தை அமைத்துள்ளனர். கேரளத்தில் ஏப்பிரல் 14ம் தேதி சூரியன் மேடத்தில் பிரவேசிக்கும் நாளில் விஷு எனப்படும் புதுவருடம் கொண்டாடப்படுகிறது. விடியலில் கோயிலுக்குச் சென்று விஷுகணி எனப்படும் மங்கள காட்சியை காண்பதுடன் அவர்களது கொண்டாட்டம் ஆரம்பிக்கின்றது. பின்னர் விஷு கைநீதம் எனப்படும் கிரியையில் வறியவர்களுக்கு நாணயங்கள் வழங்குவார்கள். மக்கள் புத்தாடை அணிந்து குடும்ப அங்கத்தவர்களுடனும் நண்பர்களுடனும் விருந்துண்பார்கள்.

ஆந்தரபிரதேசத்தில் உகடி என்றழைக்கப்படும் புதுவருட கொண்டாட்டம் ஏப்பிரல் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகளை துப்பரவு செய்தல், புத்தாடை தரித்தல், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கஸ்ரவணம் எனப்படும் புதுவருட பஞ்சாங்கத்தின் விளக்கங்களைக் கேட்டல் ஆகியன அவர்களது முக்கிய கொண்டாட்டங்களாக அமைகின்றன. அதே நாளில் பெங்காலியர், அஸாமியர், சீக்கியர் ஆகியோரும் தத்தமது புது வருடப்பிறப்பைக் கொண்டாடுகின்றனர். அதே நேரம் கஷ்மீரியர் மார்ச் 10ம் தேதியும் நேபாளியர் மார்ச் 21ம் தேதியும் புது வருடத்தை ஆரம்பிக்கின்றனர்.

பெளத்த கலண்டரும் இந்துக்களுடையதைப் போன்றதே. ஆயினும் பெளத்தம் பல இடங்களில் பரவியுள்ளதால் அந்தந்த இடத்திற்குத் தக அவர்கள் தமது புது வருடத்தைக் கணித்துக் கொண்டாட்டங்களை அமைத்துக் கொள்கின்றனர். இலங்கையில் உள்ள தேரவாத பெளத்தர் ஏப்பிரல் 14ம் தேதி வருடப்பிறப்பைக் கொண்டாடுவதை நாமறிவோம்.

சூரியனின் போக்கை அடிப்படையாகக் கொண்டே எமது புதுவருடம் கணிக்கப்படுகிறது. பூமி சூரியனை வலம் வரும் ஒரு வருடத்தில் சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக இரண்டு தடவைகள் வருகிறது. ஒன்று பங்குனி சித்திரைக் காலத்தில், மற்றது புரட்டாசி ஐப்பசிக் காலத்தில். இரண்டாவது காலகட்டம் மழை காலத்தின் ஆரம்பமாகையால் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள நாடுகள் சித்திரையைத் தமது புத்தாண்டாகக் கொண்டுள்ளனர். இக்காலத்தில் குளிர் நீங்கி சூரியனது கதிர்கள் நேராக பூமியில் படிய ஆரம்பிக்கின்றன. அத்துடன் வஸந்தகாலமும் அதன் காரணமாக தாவர உலகில் புது உயிர்ப்பும் ஏற்படுகின்றத். அதாவது இலைகளை உதிர்த்து நின்ற தாவரங்கள் புது துளிர் வந்து மலர ஆரம்பிக்கின்றன. இது ஒரு புது ஆரம்பமாகக் கொள்ளப்பட்டது. மனிதரும் இக்காலத்தில் புதுக்கால கட்டத்தில் நுழைவதாகக் கருதியதால் புது வருடம் அப்போது ஆரம்பிப்பதாகக் கொண்டனர். அத்துடன் அக்கால கட்டத்தில் பகலும் இரவும் சமமாக வரும் இக்காலமே விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது.

மேற்குலக சோதிடப்படியும், இந்திய சோதிட முறையிலும் இப்பிரபஞ்சம் ஒரு மனிதனாகக் கருதப்படுகிறது. அதன்படி ராசி மண்டலம் புருஷனின் உடல் அம்சங்களாகக் கொள்ளப்படுகிறது. முதலாவது ராசியான மேஷம் அவனது தலையாகவும் கடைசி ராசியான மீனம் அவனது பாதங்களாகவும் சொல்லப்படுகிறது. இடையில் உள்ள ஏனைய ராசிகள் அவனது ஏனைய அங்கங்களாக உள்ளன. இதன்படி தலையான மேட ராசியில் காலத்தைக் கணிக்க ஆதாரமாகவுள்ள சூரியன் வரும் காலத்தில் வருடம் பிறப்பதாக நமது முன்னோர் கணித்திருக்கலாம்.

தமிழ் இந்துப் புதுவருடக் கொண்டாட்டங்களில் வீடுகளைத் தூய்மைப்படுத்துதலும், ஆலய வழிபாடும், விசேட உணவும் முதலில் வீட்டுப் பெரியவரிடமிருந்து நல்ல நேரத்தில் பணம் பெறுதலும் அதாவது கை விசேஷமும், நல்ல நாளில் உறவினர் வீடுகளுக்குச் செல்லுதலும் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இலங்கையில் புதுவருடத்தை ஒட்டி பல விளையாட்டுகள் நடைபெறுவதும் வழக்கம். இலங்கைப் பெளத்தர்கள் மத்தியில் மிக அதிகமான விளையாட்டுகள் காணப்படுவதை நாம் அறிவோம்.

உலகின் ஒவ்வொரு பகுதியும் வேறுபட்ட கணிப்பு முறைகளைப் பயன்படுத்துவதாலேயே புதுவருடம் வேறுபட்ட தினங்களில் கொண்டாடப்படுகிறது. ஒன்றில் சூரியனது அல்லது சந்திரனது அல்லது இரண்டினதும் போக்கைக் கருத்தில் கொண்டு காலம் கணிக்கப்படுகிறது. ஆனாலும் புதுவருட மரபுகள் பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடுகின்றன. பபிலோனியாவில் ஏறக்குறைய நாலாயிரம் வருடங்களின் முன்னர் கொண்டாடப்பட்ட புதுவருடம் வசந்தத்தின் வருகையையும் அப்போது நடப்படும் பயிர்களையும் அதனால் புது நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக நம்பப்பட்டது. அது இன்று வரை மாறவில்லை.

நாம் இதுவரை புதுவருடத்தின் வரவையொட்டி உலகெங்கும் கொண்டாடப்படும் சமய, சமூக விழாக்கள் பற்றிப் பார்த்தோம். அத்துடன் மிகப் பெரும்பான்மையான பண்பாடுகளில் புதுவருடம் வஸந்த காலத்தில் பிறப்பதாகக் கொள்ளப்படும் மரபையும் கவனித்தோம். குளிரில் உறைந்து கிடந்த இயற்கை வஸந்த காலத்தில் புதுமலர்ச்சி பெறுவதைக் கவனித்த மனிதன் தனக்கும் அக் காலத்தில் ஒருவித மீளமைப்பு இடம் பெறுவதாகக் நினைத்து அக்காலத்தில் புதுவருடம் பிறப்பதாகக் கொண்டான். அதாவது ஒரு சுழற்சியின் ஆரம்பமாக அதனைக் கருதினான். பிறப்பு வளர்தல் இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியில் பிறப்பான வஸந்த காலத்தை மனிதன் வருடத்தின் தொடக்கமாகக் கொண்டதில் நியாயமுண்டு.

ஒரு வருடத்தின் ஓட்டத்தில் களைப்படைந்த மனிதர்களுக்கு உள்ளத்தைப் புதுப்பித்தல் அவசியமானது. அதனையே புதுவருடக் கொண்டாட்டங்கள் செய்கின்றன. தன்னடக்கத்தை ஊக்குவித்தல், வினைகளைத் தூய்மைப்படுத்துதல், உயிர்ப்பூட்டுதல், வாழ்வின் புதுப்பித்தலையிட்டு மகிழ்ச்சி கொள்ளுதல், ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிரியைகளையும் சடங்குகளையும் இப்புதுவருட விழாக்கள் உள்ளடக்கியுள்ளன. சமய சமூக கலை ரீதியாகவும் இம்மீளப் புதுப்பித்தல் நடைபெறுகிறது. இவ்வாறு மீளப் புதுப்பித்தலே புதுவருடக் கொண்டாட்டங்களின் சாராம்சமாகும். அத்துடன் இக்கொண்டாட்டங்களின் மூலம் சமூகத்தை ஒன்றுபடுத்தி உறுதிப்படுத்துவதும், தோல்விகளாலும் கஷ்டங்களாலும் நலிந்தவர்களுக்கு வாழ்வில் புது நம்பிக்கை ஏற்படுத்துவதும் புதுவருடத்தின் முக்கியமான குறிக்கோள்களாகும்

புலம் பெயர்ந்த நாடுகளில், சிறப்பாக அவுஸ்திரேலியா நியூசிலாந்தில் உள்ள நாம் இதனை இலங்கையில் கொண்டாடப்படும் அதே தினத்தில் கொண்டாடுவதில் ஏதும் அர்த்தம் இருக்கிறதோ தெரியவில்லை. இலங்கையில் வசந்த கால ஆரம்பத்தில் கொண்டாடப்படும் இதனை இங்கு இலையுதிர் காலத்தில் கொண்டாடுவதில் அர்த்தம் ஏதும் உண்டா ? இந்தக் கேள்வியுடன் உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

***

திண்ணையில் சந்திரலேகா வாமதேவா

Copyright:Thinnai.com 

  • தொடங்கியவர்

*******

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.