Jump to content

தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

03-8-593x375.jpg

தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன்

அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது.

இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380126

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே ........!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன்

28 APR, 2024 | 11:22 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான  தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, ஜேர்மனி ஆய்வு கப்பல்கள் தடை ஏன்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

April 29, 2024
 
 

அமெரிக்காவின் ஆய்வுக் கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

எனினும், எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த மேற்படி கப்பல் 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனாவின் எதிர்ப்பை மீறி ஜெர்மனி ஆய்வுக் கப்பல் இரண்டாவது தடவையாகக் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக வார இறுதிப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கப்பலுக்கு கடந்த மார்ச் மாதத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி மீண்டும் அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கப்பல் பணியாளர்களை மாற்றம் செய்யவும் எரிபொருள் உள்ளிட்ட சேவை வசதிகளைப் பெறவும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தமது நாட்டிற்கு சொந்தமான கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதி வழங்கப்படாத நிலையில் சீனா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணமாகும்.

2023 ஆம் ஆண்டு முதல் 14 மாதங்களுக்குள் 2 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தமையினாலேயே இரு நாடுகளும் இது தொடர்பிலான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது.


 

https://www.ilakku.org/அமெரிக்க-ஜேர்மனி-ஆய்வு-க/

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.