Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு: பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி! - சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் லக்க்ஷிகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 APR, 2024 | 05:26 PM
image

பல்வேறு காரணங்களால் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் விவாகரத்து (பிரிந்து செல்லும்) போக்கு அதிகரித்து வருவதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்க்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் வருடாந்த இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.

இறப்பு எண்ணிக்கை 2000 ஆம் ஆண்டில் 140,000 ஆக இருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பிறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக பிரதிப் பதிவாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சராசரியாக, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 280,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182161

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் சனத்தொகை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம்

03-12.jpg

பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது.

அந்த எண்ணிக்கை தற்போது, 180,000ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது. இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக இளைஞர் யுவதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/300497

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

நாட்டில் சனத்தொகை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம்

IMG-6445.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kavi arunasalam said:

IMG-6445.jpg

பொறுங்கோ அடுத்த மாதம் நிலாந்தன் ஏதாவது  எழுதுவார்.🖐️

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, யாயினி said:

பொறுங்கோ அடுத்த மாதம் நிலாந்தன் ஏதாவது  எழுதுவார்.🖐️

அமசடக்கியின் அதிரடி கருத்து... 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக, பொறுப்புள்ள நபராக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங்கிற்கு 17 வயதில் முதல் திருமணம் ஆன நிலையில், 3 முறை மறுமணம் செய்த அவர், தற்போது 5 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதில், முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகனுக்கு தான், கடந்தாண்டு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இளம் வயதில் பாட்டி ஆன இன்ஸ்டா பிரபலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/301763
    • Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 03:46 PM   யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை  கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெண்ணின் கணவரை நேற்று புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, தர்க்கம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் ,அடிப்படையில்  பெண்ணின் கணவரை பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/183669
    • இலங்கையில் அதிகரிக்கும் 'பிரஷர்' இலங்கையில் பதிவாகும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம்திகதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மே மூன்றாவது வாரத்தில், உப்பு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உயர் இரத்த அழுத்த அபாயத்தைத் தடுப்பது குறித்து சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் மேலும் கருத்து தெரிவிகையில் “முக்கியமாக, ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம், குறிப்பாக உப்பின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது மிகவும் முக்கியம். மேலும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் ள் மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதாலும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும் என்றார் . https://thinakkural.lk/article/301769
    • நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை நடைபெறாது : கட்டணத்தை மீளப்பெறமுடியும் ! Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 03:56 PM   நாகப்பட்டினம் -  காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 19ஆம் திகதிக்கு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் சேவையை ஆரம்பிக்க சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பிற்போடப்பட்டது. அதனால்,  மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183699
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.