Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 01
 
 
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழம் வழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழி வழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.
 
அதே வேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற் கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். அதாவது, பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி.
 
எனவே, வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது ஒரு நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. மரபு, பாரம்பரியம் இரண்டும் ஒத்த கருத்துள்ள சொல்லாக பல சந்தர்ப்பங்களில் பாவிக்கப் பட்டாலும், அவை இரண்டும் ஒன்றல்ல, இன்றைய வழக்காறு அல்லது மரபு [custom] நாளைய பாரம்பரியம் [tradition] ஆகும்.
 
ஒரு மரபு அல்லது பாரம்பரியம் என்பது ஒரு சட்டம் அல்லது உரிமை அல்லது வழக்கமான வழி என்றும் கூறலாம் [a law or right or usual way], இது எழுதப் படாத ஆனால் நீண்ட காலமாக பலரிடம், பொதுவாக ஒரே நாட்டில், ஒரே பண்பாட்டில் அல்லது ஒரே மதத்தில் [the same country, culture, or religion] இருப்பவர்களிடம் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். உதாரணமாக ஏதாவது ஒன்று பொதுவாக, வழக்கமாக ஒரே வழியில் அல்லது அதே வழியில் கடைபிடித்தால் அதை நாம் "வழக்கமான வழி" ["customary way"] என்று பொதுவாக கூறுவது உண்டு.
 
மேலும் நாம் விபரமாக மரபு அல்லது பாரம்பரியம் பற்றி அலச முன்பு, இன்னும் ஒரு விடயத்தையும் கூற வேண்டிய அவசியம் உண்டு. அதாவது பண்பாடு என்றால் என்ன என்பதேயாகும். இதன் பொருள் மரபின் பொருளுடன் ஒத்து காணப்பட்டாலும், மரபு என்பது பொதுவாக ஒரு நடைமுறையை அல்லது செயல்பாட்டை குறிக்கிறது, ஆனால் பண்பாடு என்பது, வாழ்க்கை முறை (way of life) என்பதாகும். ஒவ்வொரு மனித சமுதாயத்திற்கும் ஒரு பண்பாடு உண்டு. ஒரு சமுதாயத்தில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் அது வெளிப் படுத்தும். ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், மொழி, இலக்கியம், விழுமியங்கள் (Values) முதலியன அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஆகும் .
 
பொதுவாக நாம் பின்பற்றும் நடைமுறைகள், மரபுகள், பாரம் பரியங்கள் அல்லது சடங்குகள் [practices, customs and traditions or rituals], ஏதாவது அடிப்படையை [basis] அல்லது காரணத்தை கொண்டுள்ளதுடன், அவற்றில் சில உண்மையான அறிவியலாகவும், விஞ்ஞான பூர்வமானவையாகவும் [truly scientific] உள்ளன. எனினும் ஆரம்பத்தில் ஒரு காரணத்தால் ஏற்பட்ட வழக்கம், பின் நாளடைவில், அந்த அடிப்படை காரணம் மறக்கப் பட்டு, அவை ஒரு குழுவின் பொதுவான நடை முறைகளாக இணைக்கப்பட்டதும் அல்லது மாறிவிட்டதும் அல்லாமல், அவை சூழ்நிலை வசதிகளுக்கு ஏற்ப தொடர்ந்து மாற்றமும் அடைந்து வளர்கின்றன.
 
உதாரணமாக, ஒரு முறை ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு உண்மையான கட்டுரை ஒன்று வெளியானது, அதில் நாலாவது தலைமுறையில் வாழும் குடும்பப் பெண், தாம் ஏன் வான்கோழியை ஈஸ்டர் [Easter] அன்று மூன்று துண்டுகளாக அறுத்து சமைக்கிறோம், ஆனால் மற்ற எல்லா வீடுகளிலும் பொதுவாக வான்கோழியை [turkey] முழுமையாக சமைக்கிறார்கள் என அறிய முற்பட்டார் எனவும். அதனால் தன் தாயிடம் அதை பற்றி கேட்டார் என்றும் அதற்கு தாய் இப்படித்தான் எம் குடும்பத்தில் எப்பொழுதும் சமைப்பதாகவும், அதை தன் தாயிடம் இருந்து கற்றதாகவும் கூறினார் என்றும், அதனால் அந்த பெண் தனது பாட்டியிடம் சென்றார் என்றும், அவரும் அப்படியே விடை கூறியதால், அந்த ஆர்வமிக்க பெண் தனது பூட்டியிடம் சென்றாராம். அங்கு அந்த காலத்தில், தனது வீட்டில் நிலவிய சூழ்நிலையில் அல்லது வசதியில், தம்மிடம் இருந்த சமையல் பாத்திரத்தில் வான்கோழியை முழுமையாக சமைக்க முடியவில்லை என்றும், அதனால் அதை மூன்றாக அறுத்து சமைத்ததாகவும் கூறினார். என்றாலும் அந்த நடைமுறையை பார்த்த அவர்களின் குடும்பம் அதன் பின் அப்படியே மூன்றாக அறுத்து சமைக்க தொடங்கியதாம், அது பின்நாளில் அவர்களின் குடும்ப நடைமுறை ஆகிவிட்டது என்று அந்த கட்டுரை முடிக்கிறது. இப்படித்தான், பெரும்பாலான நடைமுறைகள், மரபுகள், பாரம்பரியங்கள் அல்லது சடங்குகள் சில அடிப்படைகளை கொண்டு உள்ளன எனலாம்.
 
உதாரணமாக, கிருமிநாசினி [disinfectant] என்று ஒன்று இல்லாத அந்த காலத்தில், பசுவின் சிறுநீர் பாவித்து உள்ளார்கள், அதே போல மாட்டுச் சாணத்தை வீடு மெழுகுவதற்கு பாவித்து உள்ளார்கள், வெள்ளி குவளையில் நீர், சூடான பானங்கள் கொடுத்து விருந்தினர் கௌரவிக்கப் பட்டார்கள். வெள்ளி ஒரு தொற்றுயிர்க் கொல்லி [germicidal], எனவே அது விருந்தினர் சில வேளை சுமந்து வரும் எந்த தொற்று நோயையும் தடுக்க உதவியது.
 
இப்படியே பல மதங்கள் அல்லது குழுக்கள் மாதவிடாய் தொடர்பான மரபுகளை கொண்டுள்ளன. மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று, எனவே அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று, மேலும் அந்த கால சூழ்நிலை வசதிக்கு ஏற்ப, பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டும் சில மாதவிடாய் மரபுகள் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது.
 
இவைகளுக்கு பின்னால் சில அடிப்படைகள் இருப்பதை காண்கிறோம், எனினும் அவை இன்றும் பொருந்துமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகளாக இருப்பினும், வழக்காறுகள் அல்லது மரபுகள் பொதுவாக மாற்றம் பெறுகின்றன. புதிய அல்லது வேறு மரபுகள் வந்து சேருகின்றன.
 
அதாவது, நடை முறையில் இருந்து வந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் கால மாற்றத்திற்கு ஏற்ப விலகிப்போவதனை காணலாம். அப்படியானவற்றை நாம் கட்டி இழுத்து பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை ஆகும். எனவே, பண்டைய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப் பிடித்துக் கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எனவே சமூக வளர்ச்சியின் காரணமாக சில தேவைகள் கருதி சில இல்லாதொழிந்து போவதும் உண்டு.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி: 02 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
Link to comment
Share on other sites

  • நியானி changed the title to "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02
 
 
தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -
 
"யாரும் இல்லை, தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"
 
என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.
 
இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.
 
தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.
 
எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.
 
இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என
 
"..... எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப்
பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"
 
என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.
 
இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.
 
மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .
 
இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 03 தொடரும்
No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 03
 
 
மனிதனுக்கும் மட்டும் அல்ல, சராசரி அறிவு கொண்ட மிருகங்களுக்கும் [Average intellect animals] பாரம்பரியம் அல்லது மரபு உண்டு என இன்று விஞ்ஞானிகள் நிறுவி உள்ளனர். உதாரணமாக கீரி [mongooses] ஒரு தலை முறையில் இருந்து அடுத்த தலை முறைக்கு பாரம்பரியத்தை கடத்துகிறது என கண்டு பிடித்து உள்ளனர். எனவே இது மனிதனதோ அல்லது உயர் அறிவு கொண்ட மிருகங்களான மனித-குரங்கு உள்ளிட்ட உச்ச உயர்பாலூட்டி உயிரினத் தொகுதி மற்றும் டால்பின்கள் [Is not the sole purview of humans and intellectually advanced animals such as primates and dolphins] ஆகியவற்றின் முழு ஆதிக்கத்தில் அல்லது வரம்பிற்கு உட்பட்டவை அல்ல என்கிறது.
 
இது இன்னும் ஒன்றையும் வலியுறுத்துகிறது, அதாவது எம்மிலும் அறிவு குறைந்த மிருகங்கள் கூட தமது அடையாளத்தை, தமக்கான சிறப்பு இயல்புகளை தக்க வைக்க, தமது பண்பாடடை அடுத்த தலை முறைக்கு கடத்துகிறது என்பது தான்!, அப்படி என்றால் நாம் எம்மட்டு? நாமும், அது எமது ஒரு கட்டாய கடமையாக இல்ல விட்டாலும், அது எமக்கு குழந்தை பருவத்தில் இருந்து பழக்கப் பட்டதால், அது ஒரு வாழ்க்கை முறையாக பெற்றோரால் அறிமுகம் செய்யப் பட்டதால், அதை இன்னும் எதோ ஒரு வழியில் பின்பற்றுகிறோம்.
 
என்றாலும் சிலவேளை உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளை நாம் தற்போதைய சூழலில் கைவிடுவதும் உண்டு. உதாரணமாக, எண்ணெய் ஆட்டுவதற்கு மரத்திலான செக்கை பயன்படுத்தி, அதன் பெருமையை பாரம்பரியமாக கடைபிடித்த தமிழர், இன்று இயந்திரங்களால் அதிவேகத்தில் பிழிந்தெடுக்கப்படும் நவீன முறைக்கு மாற்றம் அடைந்துள்ளனர். மேலும்,உடற்பயிற்சி அல்லது கடும் உடல் வேலைக்கு பின் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் பழக்கமும் இருந்தது. உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
 
நவீன முறையில் இயந்திரத்தால் எண்ணெய் பிழியும் பொழுது, அது மூலப்பொருளை நன்றாகப் பிழிந்துவிடுவதால், அதில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் சூடாகவும் ஊட்டச்சத்து மதிப்பு குறைவாகவும் உள்ளது. மேலும் வர்த்தக ரீதியாக, நீண்ட பாவனைக்கு உகந்ததாக இருப்பதற்காக தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. [“refining degrades nutritional value, and more significantly, introduces harmful trans fats in an attempt to improve shelf life for commercial reasons”]
 
ஆனால், பாரம்பரிய முறையில் மர செக்கில் மெதுவாக எண்ணெய் பிழிவதால், பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், குளிராகவும் இருக்கும். [“Cold-pressed oils have all their nutrients intact, retaining the natural properties of the oil-seeds, unlike refined oil,”] மேலும், அதில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளும் அதிகமிருக்கும்.[“It’s a bit like atta and maida; the source is the same, but atta is far superior to maida, nutritionally] இதில் கிடைக்கும் புண்ணாக்கிலும் உயிர்ச் சத்துகள் எஞ்சியுள்ளதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
 
இப்படி பெருமை வாய்ந்த பாரம்பரிய முறை இன்று பல காரணங்களால் மறைந்து போய் புது நவீன முறை பழக்கத்திற்கு வந்துள்ளது.
எனவே, நாம் எமது ஒவ்வொரு பாரம்பரியத்தின் மூலத்தையும் அது உரைக்கும் காரணத்தையும், அதன் உண்மைத் தன்மையையும் அறிவியல் விளக்கத்தையும் அறிவது மிகவும் சாலச் சிறந்தது, அப்படியாயின் தேவையற்ற, அறிவியலுக்கு ஒவ்வாததை நாம் தவிர்த்து, எமது பாரம்பரியத்தை பெருமையடைய செய்து, எமது அடையாளத்தையும் பெருமை அடையச் செய்யலாம்.
 
இது சாத்தியமான ஒன்று, ஏனென்றால், பாரம்பரியத்திற்கு ஒரு கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் [Since traditions are not strict rules and regulations ] கிடையாது, எனவே சில அம்சங்கள் அங்கு மாற்றக் கூடியவை, உண்மையில், நாம் இன்று பின் பற்றும் பாரம்பரியம் , அதன் அசல் பாரம்பரியத்தின் மாறுபாடுகளே [variations of an original tradition] ஆகும் . உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டு வரை கிறிஸ்துமஸ் மரங்கள் [Christmas trees] சாப்பிடக் கூடிய ஆப்பிள்கள் மற்றும் கொட்டைகள் மூலம் அலங்கரிக்கப் பட்டன, அதுவே கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக அன்று இருந்தது. அதன் பின் [illuminated by candles] மெழுகுவர்த்தியால் வெளிச்சம் கொடுக்கப்பட்டு, இன்று [electric lights and various ornaments] மின் விளக்குகள் மற்றும் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
பொதுவாக, பாரம்பரியம் நமது கலாச்சாரத்தின் முக்கியமான பகுதி எனலாம். அவை எமது குடும்பம், எமது சமுதாயம் ஆகியவற்றின் அத்திவாரம் மட்டும் இன்றி அதனை கட்டி எழுப்பும் கட்டுமானமாகவும் உள்ளன. அது எமது கடந்த காலத்தை வரையறைக்கும் வரலாற்றின் ஒரு பகுதி நாம் என்பதை, எமக்கு ஞாபகம் ஊட்டுகிறது. அது மட்டும் அல்ல, நாம் இன்று யார் என்பதையும், நாளை எப்படி நாம் இருப்போம் என்பதையும் வடிவமைக்கிறது.
 
நாம் பாரம்பரியத்தின் உண்மையான செயலை, கருத்தை புறக்கணித்தால், நாம் எமது அடையாளத்தை தொலைத்து விடுவோம் அல்லது எமது அடையாளத்திற்கு ஆபத்து ஏற்படும்.
 
உதாரணமாக, இல‌ங்கையின் க‌ரையோர‌ங்க‌ளில், குறிப்பாக புத்த‌ள‌ம், சிலாப‌ம், நீர்கொழும்பு, மாத்த‌றை வ‌ரை வாழ்ந்த‌ த‌மிழ்ப்பர‌த‌வ‌ர்க‌ள் போத்துக்கேய‌ரின் வ‌ருகையுடன் க‌த்தோலிக்க‌ ம‌த‌த்திற்கு மாறி, மெல்ல, மெல்ல தமது பாரம்பரியத்தை இழந்து, அடையாளம் தொலைத்து, நாள‌டைவில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளாயின‌ர் என்பதே வரலாறு உரைக்கும் கசப்பான உண்மையாகும்.
 
பாரம்பரியம் எமக்கு ஒரு ஆறுதலையும் சமுதாயத்தில் ஒரு பங்கையும் பங்களிக்கிறது. இது குடும்பத்தை இணைக்கிறது, நண்பர்களுடன் மீண்டும் இணைக்க துணை புரிகிறது. மேலும் சுதந்திரம், நம்பிக்கை, ஒற்றுமை, நேர்மை, நல்ல கல்வி, தனிப்பட்ட பொறுப்பு, ஒரு வலுவான பணி நெறிமுறை, மற்றும் தன்னலமற்ற இருப்பு [freedom, faith, integrity, a good education, personal responsibility, a strong work ethic, and the value of being selfless] போன்றவற்றை வலிவூட்டுகிறது. ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான முக்கிய விடயங்களை கொண்டாட இது இடமளிக்கிறது.
 
உதாரணமாக, இது ஒருவர் பங்களித்த நற்செயலுக்கு நன்றி செலுத்த சந்தர்ப்பம் கொடுக்கிறது, எங்கள் சமுதாயத்தின், குடும்பத்தின் உயர்ந்த கொள்கைகளை வெளிப்படுத்தவும், எங்கள் பன்முகத்தன்மையை [diversity] காட்டவும், ஒரு நாடாக, ஒரு இனமாக ஐக்கியப்படவும் வழிவகுக்கிறது. அது மட்டும் அல்ல பாரம்பரியம் எங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஒரு நீடித்த நினைவுகளை உருவாக்குவதுடன், எம்மை மற்றவர்களுக்கு அர்த்தமுடன் பிரதிபலிக்க ஒரு சிறந்த சூழலையையும் வழங்குகிறது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 04 தொடரும்
40778331_10212567716810669_8553040470740041728_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vDHsG7_fSSAQ7kNvgEPjzS0&_nc_oc=AdhVE2d2nF_w7xDyM-m-5mYdlIC4JNPCUY8wwAkl5K3OSi9zbUgSo0KgbN0IXLUPCrc83NwVlsmy4Fatn1DYXI9t&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBamUwWjgUkXP6d60OjJiBVDqyUrk9Op5i2ZgQl8mz4AQ&oe=6657169B 40918794_10212567719530737_8249004078068137984_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GYDi5JY-T0cQ7kNvgGy7_-A&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAZhkU0bWe_EV50IKs3V1UxbXgVevQi_DNM3JTs_TI98w&oe=66571037
40803362_10212567720530762_5979134035593527296_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=EGXO0gxL9qoQ7kNvgETCCef&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB-qThtdmoty8qt6A-3WrUk799db711wQ5cbp8QVqDSRg&oe=665719B2 40678000_10212567722330807_5191043331034972160_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ULkbGlrEg8AQ7kNvgH5Tjb_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAXCnzwpoHq-0TzYbC52BEdQAMXJNHBkE8Zz3y_KIowlQ&oe=66572D2A 40862245_10212567723810844_6710097590601383936_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ueTU2z08y5EQ7kNvgH7WJK5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfC1YKV6pWHmkqmj087C44VFN1BGPa2-yuTIcZeUXmbYwg&oe=6657063F 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 04
 
 
நாம் எம் வரலாற்றை புரட்டி பார்க்கும் பொழுது, சாட்சியங்களுடன் காட்சி அளிக்கும் மிகப் பண்டைய பாரம்பரியத்தில் ஒன்றாக யோகா [Yoga] இருப்பதை காண்கிறோம். இது இந்தியாவிற்கு ஆரியர் வருகைக்கு முன் இருந்துள்ளது. இதை அத்தாட்சி படுத்துவதாக மொஹெஞ்சதாரோ தொல்லியல் தளம் அமைகிறது. அங்கு சித்தசானா காட்சியில் [Siddhasana posture] பல முத்திரைகள், கல்வெட்டுகள் [inscriptions] கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. எப்படி என்றாலும் முனி பாரம்பரியத்தில் தோன்றிய யோகா, பிற்காலத்தில் ரிஷி பாரம்பரியத்தில் வேத பண்பாட்டால் பிரபலப் படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. இது மனித குலம் உருவாக்கிய மிகப் பெரியதொரு சிறப்பு வாய்ந்த பழக்கமாகும், இது உடல் மற்றும் மனப்பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான நல்ல ஒரு பயிற்சியாகும்.
 
நாகரிகம் முன்னேற முன்னேற பாரம்பரியமும் அதனுடன் சேர்ந்து பொதுவாக மாறுகிறது, ஏனென்றால் நாகரிகத்துடன் அறிவு மற்றும் அனுபவத்தின் எல்லைகள் விரிவு படுவதே இதற்கான காரணம் ஆகும். எனவே பாரம்பரியமும் அந்தந்த சூழ்நிலைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்கிறது எனலாம். ஒவ்வொரு நாகரிகமும் அந்தந்தக் கால கட்டத்தின் தேவையை பொறுத்து பாரம்பரியத்தை அதற்கு ஏற்றவாறு சரிப்படுத்துகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எது சிறப்பாகவும் தேவைப் பட்ட தாகவும் இருந்ததோ, அது இன்று அப்படி இல்லாமல் போகலாம். எனவே, குருட்டு மரபுசார்ந்த அல்லது பழமைவாதவாதத்தால் [blind orthodoxy or conservatism ] அப்படியே பாரம்பரிய பாரம்பரியம் தொடர்வதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது எம் அனைத்து முன்னேற்றத்திற்கும் ஒரு பெரிய பின்னடைவு [draw back] ஆகும்.
 
நாம் இன்றைய கால ஓட்டத்துடன் ஒவ்வாதவைகளை இறுக்க பற்றிக்கொண்டு இருக்காமல், சூழ்நிலைக்கு அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப விட்டுக்கொடுப்புகளுடன் அவ்வற்றை மாற்றி அமைக்க வேண்டும். நாம் எப்படி வாழ்ந்தோம் என பெருமை படுவது மட்டும் போதாது, எங்கள் முன்னோடிகள் தங்கள் விலை மதிப்பற்ற வம்சமாக விட்டு விட்டு சென்ற நாமும், பெருமைக்கு உரியவராக இன்றைய உலகில் இருந்து அவர்களுக்கு பெருமை தேட வேண்டும்.
 
ஒரு உதாரணமாக துடக்கு என்ற மரபை எடுப்போம், ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு ஒரு விதி விலக்கு அளிக்கப் படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது மகிழ்ச்சியைக் கொண்டாடும் காலம் என்பதால், ஒரு தற்காலிகமாக அளிக்கப்படும் விடுமுறையே, ஆசௌச அல்லது துடக்கு காலம் ஆகும்.
 
சௌசம் என்றால் சுத்தம் எனப்படும். எனவே, ஆசௌசம் என்றால் சுத்தமற்ற அல்லது 'தீண்டத்தகாமை', 'தூய்மை இன்மை' என்று பொருள்படும். மரணம் என்றால் மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும், பிறப்பு என்றால் அந்த மகிழ்வை கொண்டாட, தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக் கொள்ள, பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாக ஒன்றாக கழிக்க, இந்த துடக்கு காலம் வழி செய்கின்றது எனலாம்.
 
இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய சமுதாயத்தின் தேவையில் தோன்றிய மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது.
 
எனினும் இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
 
ஏன், அந்த காலத்திலேயே, பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
 
அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத் தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என்பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர்.
 
"ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே."
 
இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உணர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என்னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார்.
 
"ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு
ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு
ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு
ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே."
 
அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திருமூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,
 
“வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள்
ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு
ஈரம் இன்றே என்றானே!”
 
அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 05 தொடரும்
41033394_10212582809867986_2566886555914338304_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LVnATYknwigQ7kNvgGqbdli&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACoBFt2K3JGEX1Fb-DjpKTTr5LJVG_BIkvIuQfbFsfaQ&oe=66588981 41194474_10212582812108042_4146547889268588544_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XFP-6mS1bvAQ7kNvgHEvbHK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAiTDtVGW6zgOurDWi9lzX27huybK5o_ZnH1yFwqDe58Q&oe=66588CC4 41027619_10212582814228095_4479680464872800256_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9g9C1_1yGqsQ7kNvgE70sc-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA0VclzE9aOrJIvSJNpwoWg3ZNY_MwLkou05LstxvhAYA&oe=6658695241046564_10212582815388124_7058909240672387072_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ltNCqJCoFG8Q7kNvgFMWyi5&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD7_WGQ10oCpW8lRw5MwVnPa0G5ugktG4HoPYF_JWicAA&oe=665869BE41113261_10212582813428075_6010787257370279936_n.jpg?stp=dst-jpg_s851x315&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=DZ17o729xAcQ7kNvgGXXDHD&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDuVIQBApY6ENWo5pmIU6YtgKRmS3FlrKPtfdZh0ARn_A&oe=665869F8 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 05
 
 
ஒரு நாட்டில் அல்லது ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் அவர்களின் பெருமைக்குரிய சிறப்பு வாழ்வையும் மற்றும் பாரம்பரியங்களையும் பார்க்கவேண்டும். இது அந்த மக்களின் முக்கியத்துவத்தை மட்டும் இன்றி, அவர்கள் எப்படி ஓய்வு எடுத்தார்கள், பொழுது போக்கினார்கள், கொண்டாடினார்கள் என்பதையும் எடுத்துக் காட்டும்.
 
உதாரணமாக இலங்கையின் ஒரு பிரதேசமான புத்தளத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக இன்னும் குடும்பங்களை அறிமுகப் படுத்துவதற்கு “குடும்ப பட்டப்பெயர்” பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இவை அவர்களின் வரலா ற்றை, அவர்களின் முன்னோர்களை மீட்டி பார்க்க, பரம்பரைகளின் அடையாளமாக வழக்கத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
 
இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் அந்த காலத்தில் அவர்கள் செய்த தொழில், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் செயற்பாடுகள், தோற்றங்கள் என இன்னோரன்ன அமசங்களை கொண்டு வந்திருக்கலாம். அங்கு “பாசுமணி” என்ற குடும்ப பட்டப் பெயரை கொண்ட ஒரு குடும்பம் உண்டு. விசாரித்து பார்த்ததில், அவர்களின் முன்னோர்களின் அன்றைய தொழில் பாசுமணி மாலை செய்து கொடுப்பதாக இருந்ததை அறிந்தோம். அன்றைய காலங்களில் தங்கத்தின் பாவனை பெரிதாக இருந்திராத காலமென்பதால் பாசுமணி மாலைக்கான மவுசு அதிகமாம். திருமண நிகழ்வுகள், பெண்பிள்ளைகளின் பூப்படைதல் நிகழ்வுகள், பெண் குழந்தைகளின் பிறந்தநாள் நிகழ்வுகள் என இன்னோரன்ன சடங்குகளின் போது இவ்வாறன பாசுமணி மாலைகளை மக்கள் பெரும்பாலும் அணிவதை, அன்பளிப்பாக கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்களாம்.
 
பெரும் பாலும் இந்தியாவிலிருந்தே இந்த பாசுமணி முத்துக்கள் பெற்றுக் கொள்வார்களாம். காலப் போக்கில் பாசுமணி மாலை செய்து கொடுக்கும் தொழில் அழிவடைந்தாலும் பாசுமணி என்ற அந்த குடும்ப பட்டப் பெயர் நிலைத்து விட்டது என்கிறார் அந்த பாசுமணி குடும்பத்தின் ஒருவர். இவ்வாறான குடும்ப பட்டப் பெயர்கள் ஒரு சில கேட்பதற்கு வெவ்வேறு விதமாக இருந்தாலும், அவை தம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருப்பதை மறுக்க இயலாது என்றும், தமக்கு பின்னால் வருபவர்கள் தமது முன்னோர்களின் வாழ்க்கையினை, வழிமுறைகளினை இதன் மூலம் அறிய முடிகிறது எனவும் பெருமைப் படுகிறார் அவர்.
 
மேலே எடுத்து காட்டிய ஒரு தனிப்படட தமிழ் முஸ்லீம் குடும்பம் ஒரு பட்டப் பெயருக்கு பின்னாலேயே பெருமை கொண்டு பூரிக்கிறது என்றால், பெருமைக்குரிய பல கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் [culture and traditions] குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் பின்பற்றும் முழு தமிழ் இனம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணி பாருங்கள்.
 
தமிழ் இனம் இன்றைய உலகின் மிகப்பழையன எனலாம். தமிழரைப் பற்றி யாராவது சிந்தித்தால், அவர்கள் பெரும்பாலும் நினைப்பது, தமிழர்கள் பட்டுத் துணியை விரும்புகிறவர்கள் என்றும், சேலை வேட்டி உடுப்பவர்கள் என்றும், மற்றவர்களை வணக்கம் செலுத்தி வரவேற்பவர்கள் என்றும், கொண்டாட்ட காலங்களில் பெரும்பாலும் மரக்கறி உணவை வாழை இலையில் உண்ணும் மரபை உடையவர்கள் என்றும், அவர்களின் முக்கிய கொண்டாட்டம் தை பொங்கல் என்றும், இது பெரும்பான்மையான மக்கள் முன்பு விவசாயிகளாக இருந்தனர் என்பதையும், மற்றும் முக்கனி என்று சொல்லப்படும் மா, பலா, வாழை பழங்களை விரும்பி பொதுவாக உண்பவர்கள் என்பதும் ஆகும்.
 
எனினும் கால ஓட்டத்தில், குறிப்பிடத் தக்க வெளிநாட்டு தாக்கங்களால், இன்று அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கலப்பால், இது தான் அவர்களின் தனித்துவமான மரபு அல்லது பாரம்பரியம் என சுட்டிக் காட்டுவது சிக்கலாகிறது.
 
இன்றைய காலத்துக்கேற்ற புதுத்தினுசானபாணி [ஃபேஷன்கள்], உணவு பழக்கம், வாழ்க்கை முறை, விழுமங்கள் [மதிப்புகள்] [fashions,food habits, life-styles, values] என்பன எமது நீண்ட வரலாற்றின் விளைவுகள் ஆகும். இன்று தமிழர்கள் பெருமளவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமது தாயகமாக, குறைந்தது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பண்பாடு பல விதங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க பெருமை உடையது. அத்துடன் தமிழ் மிகவும் பண்டைய மொழிகளில் ஒன்றும் ஆகும்.
 
குறைந்தது 2500 ஆண்டுகளாக அதன் அடிப்படை மொழி அமைப்பு மாறாமல் தொடர்ச்சியாக வாழும் மொழி இது ஆகும். அது மட்டும் இல்லை இன்று மேலும் நாற்பது லட்சத்திற்கு [four million] மேற்பட்ட தமிழர்கள் பரந்து பெரும் தொகையாக பல நாடுகளில், குறிப்பாக பர்மா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, கரிபியன் தீவுகள், ரீயூனியன் தீவு, மொரிசியஸ், பிஜி, மற்றும் புலம்பெயர் தமிழர்களாக [Tamil diaspora] அவுஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, சுவிற்சர் லாந்து, பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள்.
 
பொதுவாக எங்கள் மரபும் பாரம்பரியமும் எமது முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்டு, அது எமது குடும்பத்தின் மூத்தவர்களாலும் குருவாலும் [ஆசான்] இளம் வயதிலேயே கல்வியுடன் சேர்த்து புகுத்தப் பட்டு, அது வாழ்வின் ஒரு பகுதியாக இன்றும் தொடர்கிறது.
 
ஆனால் இன்று கல்வி மேலும் அதி முன்னேற்றம் அடைந்து, இன்றைய இளைய தலைமுறை ஏதாவது ஒன்றை பின்பற்ற முன் அல்லது செய்ய முன் அதைப்பற்றி கேள்வி கேட்டு, காரணம் அறிந்து, புரிந்து கொள்ள [question, reason and understand] முனைகிறார்கள். எனவே நாம் கண்மூடித்தனமாக அதை அவர்களுக்கு புகுத்தாமல் அதன் உண்மை நிலையை காரண காரியங்களுடன், எப்படி [தூண்டுதலும் துலங்கலுமுடன்] புத்தளத்து பாசுமணி குடும்பம் விளக்கியதோ, அவ்வாறு நாம் விளக்க வேண்டும். அது அவர்களுக்கு ஒரு துடிப்பையும் மகிழ்வையும் கொடுத்து அந்த பாரம்பரியத்தின் உண்மை நோக்கத்தை மேலும் அறிய அவர்களுக்கு ஒரு ஆவலையும் தூண்டும்.
 
அதை விட்டு விட்டு, இந்த பாரம்பரியம் தானாக தொடரும் என இருந்து விட்டால், அது காலப்போக்கில், நமது வாழ்க்கை முறை நீர்த்துப் போய், தளர்வூட்டு எமக்கே அது ஒரு அந்நியமாக போய்விடும். இது உங்களின் நல்ல ஆரோக்கியம் மாதிரி, அதை நீங்கள் இழக்கும் வரை அது தானாக தொடரும் என பேசாமல் இருப்பது போல ஆகும்.
 
நாங்கள் எங்கள் விழுமியங்களை பாராமுகமாக இருந்தால், அலட்சியம் செய்தால், ஒரு நாள் நாம் எம் கண்களை திறக்கும் பொழுது, விழித்தெழும் போது, நாம் எம்மையே அடையாளம் காணாமல் போய்விடுவோம். இந்த விழுமியங்கள், எமது நாட்டின், எமது குடும்பத்தின் முதுகெலும்பு ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 06 தொடரும்
41554411_10212625667499400_4966016804552966144_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Zbfi-3S1-wYQ7kNvgFyf2WP&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAFrF6_KBmjSBD_0sl2rTS4o7VQNWXiELHD2rdsfsrD3A&oe=6659CC5F 41747591_10212625668739431_7714999154795085824_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=U9aMgmK8a_gQ7kNvgHBXoM-&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAEUPU5_2ct88aFuoaNRUpnRGkoMu2nuA7ohyXY4uqQxw&oe=6659A64D 41769855_10212625669419448_7769483610968555520_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kr3Lcyzp20UQ7kNvgHHASCv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBeBce5DIgGGYHxhqI6xI25mDgbm1O0F_LA2iCr2dd-8A&oe=6659BBC8 41669221_10212625671459499_2836198206717558784_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=G7Chav7AANkQ7kNvgGlUBpV&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBD89o0ml7y3OJyM1CZ8C6SbR4oKjDjQf5zPB7V7F4kRg&oe=6659CB0F 41729561_10212625673819558_7275877240275992576_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=GRSTj_AhquMQ7kNvgHIbJc7&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfArzyPXMXK1yHEW8TCbkbWu8IlwNfJoQl6qC0RL-gseZA&oe=6659A7A6
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 06
 
 
இது வரை பாரம்பரியத்தை பற்றி பொதுவாகவும் மேலோட்டமாகவும் அதன் அறிமுகத்தை, உள்ளடக்கத்தை பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் சில முக்கிய தமிழர்களின் மரபையும் பாரம்பரியத்தையும் நான் சரி என நம்பும் அறிவியல் காரணங்களுடன் தர முயற்சிக் கிறேன்.
 
நான் இவ்வற்றை என்னால் முடிந்த அள வில் கவனமாக கையாண்டாலும், சிலவேளை தவிர்க்க முடியாத சில பிழைகள் மற்றும் குறை பாடுகள் [some errors and omissions] ஏற்படலாம். அதற்கு நான் இப்பவே வருத்தம் தெரிவிக்கிறேன். என்றாலும் விபரமாக நான் அவைகளை அலச முன்பு, இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டி யுள்ளது.
 
அதாவது பாரம்பரியம் எமக்கு எதை தர வல்லது?
 
இது அதன் கருத்தின் படி, நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட குழு அல்லது குடும்பம் அல்லது சமுதாயம் முதலியன எப்படி சிந்தித்தனை, நடந்து கொண்டன அல்லது ஏதாவது செய்தனர் [a way of thinking, behaving, or doing something] என்பதை குறிக்கிறது எனலாம். அது அன்று அங்கு பரம்பரை பரம்பரையாக வேரூண்டி இருந்தது.
 
ஆனால் இன்று புது வழியில், சிறந்த வழியில் நாம் ஒன்றை செய்யக் கூடியதாக இருக்கையில், அந்த பழம் வழியை ஏன் பின்பற்ற வேண்டும்? எப்படி நாம் இன்னும் பாரம் பரிய வழியில் ஒழுகினால், வளர அல்லது முன்னேற அல்லது அபிவிருத்தி அடைய முடியும்?
 
உலகம் மாற்றம் அடைகிறது என்னவோ உண்மைதான், ஆனால், நாம் மனிதர்களாக இருப்பதற்கான சாரமான - எங்கள் போராட்டங்கள், எங்கள் அச்சங்கள், எங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் [our struggles, our fears, our needs and desires] - ஆகியவை, பெருபாலும் மனித இயல்பை தீர்மானிக்கும் உள்ளார்ந்த பண்புகளால் [inherent characteristics] அப்படியே மாறாமல் இருக்கின்றன. -பாரம்பரியம் சில பண்புகளை, உதாரணமாக எம் மேலும் மற்றவர்கள் மேலும் ஒரு விழிப்புணர்வை, உடன் இருக்கும் உணர்வை, உறுதிப்பாட்டை [heightening our awareness of self and others, cultivating a sense of belonging and stability] எமக்கு ரகசியமாக நினைவூட்டுவதுடன் அது நம் வாழ்விலும் சமுதாயத்திலும் ஒரு வழி காட்டி சக்தியாகவும் இருக்கிறது. எனவே இந்த அர்த்தத்தில் பாரம்பரியம் எப்போதும் மேம்படுகிறது, வளர்கிறது எனலாம்.
 
இது எம்மை பார்த்து, என்னை பெறுங்கள், என்னை செம்மைப் படுத்துங்கள், என்னை மனிதத்தன்மையூட்டுங்கள் என்கிறது. ஆகவே இது தன் வளர்ச்சியை, மாற்றத்தை நிறுத்து அல்லது கேள்வி கேட்க வேண்டாம் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை?
 
ஒருமுறை சீன யாத்ரிகர் ஹியூன்-ஸங் [Hiuen -Tsiang] என்பவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் [Harsha, c. 590–647 CE, also known as Harshavardhana] என்ற ஒருவன் பேரரசனாக இருந்தான். அந்த பேரரசன் தனது செல்வத்தை தனது மக்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து இருக்கும் அந்த மரபை கண்டு அவன் வியந்தான். அது போலவே தஞ்சாவூர் அரசன் வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்ல சத்திரம் [shelter] அமைக்கும் மரபில் புகழ் பெற்று திகழ்ந்தான். இது வறியவர்களையும் நோயாளிகளையும், தங்கள் கவனிப்பில் இருந்த இறந்தவர்களையும் கவனித் தது. ஆனால் இந்த மரபு பின்நாளில் ,காலனித்துவத்தின் வருகையால் வழக்கொழிந்து போய்விட்டது.
 
தஞ்சை மாமன்னர் சரபோஜி [Raja Sarfoji], 1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அளவில் பிரிட் டிஷ் காலனித்துவ எஜமானர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் தனது அரசுக்கு என்ன நடந்தாலும், இந்த விருந்தோம்பல் பாரம்பரியம் நிறுத்தப் படக் கூடாது என்று அந்த தமிழரின் பாரம்பரியத்தின் பெருமையை சுட்டிக் காட்டினான். ஆனாலும் வளங்கள் வீணாக பயன்படுகிறது எனக் கூறி நிறுத்தி விட்டார்கள். ஒரு சிறந்த பாரம்பரியம் அங்கு இறந்து விட்டது.
 
அப்படியான ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்திலும் முன்பு இருந்தது. சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்ட முறை ஒன்று இருந்தது. நடை பயணமாக வரும் வழிப் போக்கர்களுக்குச் சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை எனப் காரணப் பெயர் பெற்றிருக்கலாம்? அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு, உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் அமைக்கப்பட்ட மேடை, கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப் பட்டு இருக்கும். இப்படி தமிழ் ஒரு காலத்தே தனக்கென தனி அடையாளம் கொண்டிருந்தது என்பது என்னவோ உண்மை தான்.
 
ஆனால் புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள், முக்கியமாக 7 - 8 நூற்றாண்டளவில் தமிழகத்தில் கால் பதித்த பின், தூய தமிழ் மரபு மெல்ல மெல்ல ஒழிந்து கலப்பு மரபு வேரூன்றி விட்டது. சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் புரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு இன்றும் எமக்கு தெரிய வருகின்றது.
 
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஒரு பாடலின் கருத்து மட்டும் அல்ல, அதைப் பாடிய புலவர் உள்நாட்டு அமைப்பைப் பற்றிக் கூறிய கருத்தாகவும் நாம் எடுக்கலாம்.
 
மேலும் புறநானுறு 239 இல், நட்டோரை உயர்பு கூறினன் [நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்], வலியர் என வழிமொழியலன் [வலிமை யுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்], மெலியர் என மீக்கூறலன் [தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்], பிறரைத் தான் இரப்பு அறியலன்[பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்], இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் [தன்னிடம் இரப்பவர்களுக்கு இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்], பசி தீர்த்தனன் [அவர்கள் பசியைத் தீர்த்தான், மயக்குடைய மொழி விடுத்தனன் [பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்],
 
போன்ற வரிகள் அன்றைய தமிழர்கள் போற்றி புகழ்ந்த பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. அந்த பாடலை முடிக்கும் பொழுது இப்படி அவன் எல்லா பாரம்பரியத்தையும் முழுமையாக செய்ததால், அவனை புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும் என்று முடிக்கிறது.
 
இனி நாம் சில தமிழரின் பாரம்பரியங்களை ஒன்று ஒன்றாக விரிவாக பார்ப்போம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 07 தொடரும்
42200196_10212670700785204_4125915325940105216_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3taqtWgezh0Q7kNvgEJFIK8&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCGqCxTAQt8hZ5Abv3EhThcoNSw2Fw_PoHRKMN5MP0WVQ&oe=665A4D71 42197947_10212670702705252_6337722019072704512_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_JjgGaPSE20Q7kNvgGl2tuc&_nc_oc=AdiIjRrslPsCdSJy30nkWJ20dTiGHdJ9cgDYFK-y4B1S1j8tQM0dhFOySzWsOtGP1FvUtiHRtmMmZuY9f-h309rB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD5EaO4_T-4XOgYFrPzWuUy32KzWByoYQ0j6h39NZbTLg&oe=665A3F7C 42242378_10212670704585299_8302297479680884736_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zRjPbBhLCeMQ7kNvgFNDw7b&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfAYd0X6hbhyeZxTQ8HQ4MS0PYVmRmMA-GC3GYg1h-h_Zw&oe=665A35E8 42236103_10212670712025485_8056564868620222464_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Ey-fF8TwzCkQ7kNvgFiKlRT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCwzZrCIulFTX3Ig38pWAopC1dlBS-GvqlTidDvCQomNw&oe=665A2488 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 07
 
 
ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின், வாழும் சில வழி முறைகளை [way of life] செய் முறையில் எடுத்து கூறுவது, அந்த குடும்பத்தின் அல்லது அந்த சமுதாயத்தின் அல்லது அந்த நாட்டின் பாரம்பரியம் எனலாம். அதே போல அக்காலத்தில் அவரவர் வாழும் இடத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை தர்மத்தையும் வாழ்வு முறையையும் கொடுக்க ஒருவராலோ, ஒரு சிலராலோ அவரின் அல்லது அவர்களின் சிந்தனையின் படி, அவர் அல்லது அவர்கள் விரும்பும் ஒழுக்கத்தின் படி அல்லது கட்டுப்பாட்டின் படி, ஏற்படுத்தப் பட்டதே மதம் எனலாம். எனவே பெரும் பாலான பாரம்பரியங்களின் மூலத்தை நாம் இன்று மதத்தில் காணலாம். எனவே எம்முடைய பல பாரம்பரியமும், தமிழர் சமயத்தை மூலமாக கொண்டு உள்ளது ஒன்றும் வியப்பில்லை.
 
எம் தமிழர் மதம் ஆரியர், இந்தியா வருகைக்கு முன்னையது. அது அன்று இந்தியா முழுவதும் பரவி இருந்தது. அந்த தமிழர் சமுதாயம். சமூகச் சமத்துவத்தை [egalitarian] தன்னகத்தை கொண்டு இருந்ததுடன், அதிகார வர்க்கம் மற்றும் அடக்குமுறை சாதி முறையால் முடக்கப்பட்டதும் அல்ல. தமிழர்களின் உண்மையான மூல மாதமாக அன்று சைவ சமயம் [Shaivism] இருந்தது. இது பிராமண இந்து சமயத்திற்கும் [Sanskritic Hinduism ] மிகவும் முற்பட்டது. என்றாலும் மூன்றாம் நூற்றாண்டு அளவில் அல்லது அதற்கு சற்று முன், தமிழகம் குடிபெயர்ந்த, வேத, காவிய பாரம்பரியத்தால் [Vedic and epic traditions] ஈர்க்கப் பட்ட பிராமணர்களும் மற்றவர்களும் கூட தமிழ் நிலத்தின், வாழ்வின் ஒரு பகுதியானார்கள். அதே போல, முன்-நவீன கால [Pre-Modern Period] தொடக் கத்தில் இருந்து அல்லது 1500 ஆண்டில் இருந்து, ஐரோப்பிய செல்வாக்கு தமிழர் பண்பாட்டிலும் மதத்திலும் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை எடு என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போக வைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது.
 
என்றாலும் இன்னும் பெரும் பாலான தமிழர் சைவ மதத்தில் இருந்து சைவ சித்தாந்தத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும், மத வெறியர்களாக [religious fanatics] இல்லை. அவர்கள் தங்களுக்கு முடிந்த நேரங்களில் ஆலயம் சென்று தொழுகிறார்கள், ஆனால் கட்டாயம் அல்ல [not compulsory]. உதாரணமாக இஸ்லாத்தில், திருக்குர்ஆனில் நேரடியாகச் சொல்ல விட்டாலும், ஐந்து வேளைத் தொழுகை கடமையாக எல்லா முஸ்லிமும் பின்பற்றுகிறார்கள். மேலும், சைவ சமயத்தில் ஆலயம் வருகைக்கு ஒரு கடுமையான மற்றும் வலுவான விதிகள் [no hard and fast rule] இல்லை. உதாரணமாக சைவ சித்தாந்தம் அருளிய திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார். அவர் தனது திருமந்திரம் 1823 பாடலில்:
 
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றும்
 
சிவவாக்கியார் எனும் சித்தர், தனது பாடலில்:
 
"கோயிலும் குளங்களும் கும்பிடும் குலமாரே கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே" என்றும்,
 
'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்’ என்று அகத்தியரும்,
 
மனத்திலேயே கோயில் கட்டி வழிபாடு செய்த பூசலார் நாயனாரும் எடுத்துக் காட்டுகளாகும்.
 
தமிழர்கள் ஒரு குழந்தையின் முன்னேறுகிற ஒவ்வொரு முக்கியமான படிகளையும் [Every important step in the progressive life of a child] ஒரு பண்டிகை விழாவாக [festive occasion] ஒரு பாரம்பரியத்துடன் கொண்டாடுகிறார்கள்.
 
ஒருவரின் தனிப்பட்ட சுகாதாரம் [Personal hygiene], மதம், பண்பாடு, மற்றும் இடம் சார்ந்ததாக, பொதுவாக இல்லது இருந்தாலும், சில குழுக்களில், சில மக்கள்களில், கலாச்சார மற்றும் மத காரணிகள் [cultural and religious factors] ஆழ்ந்த தாக்கத்தை இவைகளில் ஏற்படுத்துகின்றன. தமிழர் பாரம்பரியத்திலும் கை சுகாதார நடைமுறைகள் சிலவற்றை காண்கிறோம்.
 
முன்னைய காலங்களில் இடது கை அதிகமாக சுத்தம் செய்ய பாவிப்பதால் [primarily used for personal hygiene purposes], இடது கையால் கொடுப்பதோ வாங்குவதோ ஒரு கௌரவமான செயல் அல்ல என்றும் அது மற்றவரை அவமதிப்பதாகவும் கருதப் பட்டது. ஒரு செத்த வீட்டிற்கு சென்றவர்கள் அல்லது பங்கு பற்றியவர்கள் தம் வீடு சென்றதும், வீட்டிற்குள் புகு முன் முதலில் குளித்து, தம் உடைகளை தோய்த்து தம்மை துப்பரவு செய்து கொள்கிறார்கள். அந்த கால சூழ்நிலையில், எந்த ஒரு தொற்று நோயும் சவ அடக்கத்திலிருந்து பரவாமல் இருக்க, இந்த முறை அன்று பின்பற்ற பட்டது. இவைகள் எல்லாம் ஒரு மரபாக மதம் கலந்து இன்னும் பெரும்பாலும் கிராமப் புறங்களில் பின்பற்றப் பட்டு வருகின்றன.
 
ஒரு மனிதன் இறந்ததும், உடல் பாக்டீரியாவிற்கு [bacteria] எதிராக போராடும் ஆற்றலை இழந்து விடுவதுடன். உடல் சிதையத் [அழுகுதல்] தொடங்குகிறது. முன்னைய காலத்தில் இறந்த உடலை பதப்படுத்துவது [embalming /எம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு] கிடையாது, எனவே சவ அடக்கத்தில் பங்கு பற்றியவர்கள் ஒரு பாதுகாப்பு அற்ற நிலையில் இறந்த உடலுடன் சடங்கில் ஈடுபடுகிறார்கள். இதனால் தான் அன்று மரண வீட்டிற்கு போனவர்கள் முதலில் குளித்து பின் மற்ற காரியங்கள் ஆற்றும் மரபு ஏற்பட்டது எனலாம். இது அந்த கால சூழ்நிலைக்கு வசதிக்கு ஏற்ப ஏற்பட்டவை ஆகும். இன்று நிலைமை வேறு, அன்று அந்த சகாப்தத்தில், அதில் ஒரு பயன் இருந்தது, ஆனால் இப்பொழுது அது பொருந்துமா என்பது ஒரு கேள்விக் குறியே, ஏனென்றால் இப்ப சுத்திகரிப்பு மற்றும் தூய்மைப் படுத்தும் நடைமுறைகள் [sanitation and cleanliness practices] முன்னேற்றம் அடைந்து விட்டன.
 
அத்துடன் யாராவது ஒருவர் இறந்தால் குடும்ப உறவுகள் மட்டுமன்றி, அவரின் நேரடி இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கும் தீட்டு / துடக்கு [unclean] ஏற்படும் என்பது முன்னோர் நம்பிக்கை. தமிழக மொழிவழக்கில் பெரிதும் பாவிக்கப்படும் "தீட்டு" என்ற சொல்லே ஈழ மொழி வழக்கில் "துடக்கு" என்று கூறப்படுகிறது. அந்த வீட்டில் சில நாட்களுக்கு சமையல் கிடையாது. பொதுவாக உறவினர்கள், அயலவர்கள் உணவு அவர்களுக்கு வழங்குகிறார் கள்.
 
இந்த ஆழ்ந்த துக்க காலத்தில், அவர்களுக்கு ஒரு ஓய்வு கொடுத்து ஒரு ஆறுதல் அளிக்க இந்த மரபு அந்த கால கூட்டு குடும்ப சூழலில் ஏற்பட்டு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்த துடக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட [quarantine] நிலை போல் எனக்கு தோன்றுகிறது? ஏனென்றால், அந்த முன்னைய காலத்தில் இறப்பிற்க்கான காரணம் சரியாக அவர்களுக்குத் தெரியாது, அன்றைய சூழ் நிலையில் மூளைக்காய்ச்சல், சின்னம்மை, காசநோய், மற்றும் சளிக்காய்ச்சல் [Meningitis, Chicken pox .Tuberculosis (TB), Influenza] இவை போன்ற காற்றால், நீரால், உணவால் பரவக் கூடிய நோயாலும் இறந்து இருக்கலாம். எனவே ஒரு பாதுகாப்பிற்காக அவர்களை தனிமை படுத்த இந்த துடக்கு என்ற நம்பிக்கை மரபு ஏற்பட்டு இருக்கலாம்? தானாக நோய் நுண்மங்கள் ஒழிக்கப்பெற [to let the place become sterile itself] ஒரு காலம் தேவை, அதையே துடக்கு காலம் என அன்று வரையறுத்து இருக்கலாம் என நம்புகிறேன்?
 
அது போலவே ஒருவர் சின்னம்மை போன்ற தொற்று நோய்களால் பீடிக்கப் பட்டு இருந்தால், வேப்பிலை கட்டு ஒன்று [a bundle of Neem or margosa leaves] வீட்டின் படலையில், அதை மற்றவர்களுக்கு எடுத்து கூற தொங்க விடுவார்கள். அந்த காலத்திற்கு ஏற்ற தனிமை படுத்துவதற்கான ஒரு புத்திசாலித்தனமான முறை [a brilliant method of isolation] என்று நம்புகிறேன்.
 
அது மட்டும் அல்ல வேப்பிலை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, நுண்ணிய ஓரணு உயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு [anti bacterial, anti parasitic, anti fungal, anti protozoal and anti viral] சத்தியாகவும் தொழிற் படுகிறது. மேலும் சின்னம்மை நோயால் ஏற்படும் அரிப்பில் இருந்து விடுவிப்பதற்கும், விரைவாக சின்னம்மை நோயில் இருந்து குணமாகவும் உதவுகிறது. இதனால் தானோ என்னவோ அகநானுறு 309 இல் வரி 4 "தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்" என்கிறதோ, யார் அறிவார் பராபரமே !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 08 தொடரும்
42673223_10212713936906080_4810991368753119232_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IcPQ5a9T7UsQ7kNvgH4x-Ao&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDvlCurkk2iotiRA2HgrWJuIBiLfXnuXCBMkAqkKt2aHg&oe=665D001D 42681059_10212713939426143_4058131512124506112_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sce2MjzQLcgQ7kNvgER9xmw&_nc_oc=AdjytoYwYPO8Tt3Ivlj4sp0TAEbs6PYqW42dW18ZigbahYyqyVz0V5Agl4fjJYFumVAwUD7eSIx27PaKxt2v26qt&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD_8aYzsnIR_tgIocViD16M-piaTztNz2UqpUaOlheqMg&oe=665CEB28 42727192_10212713948586372_6540976239639789568_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XQfdqH16SQYQ7kNvgFKFNhm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfB-FFDIfomhK5mIfhLubA4n7pdtQec-JpOmxw5sADZfpw&oe=665CF82E 42838112_10212713961626698_33842143269224448_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vNxWz6foUkkQ7kNvgGM-EFB&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD-BzThZcDMBv50192_awXG02vil84Q4y9RsfBDNo7zKQ&oe=665CE253
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 08
 
 
நெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என்றும், இலக்கிய வழக்கில் திலகம் என்றும் பொதுவாக கூறுவர். உதாரணமாக, திருத்தக்கத்தேவர் சிந்தாமணிக் காப்பியத்தில்: "கடலணி திலகம் போலக் கதிர்திரை முளைத்த தன்றே" என்று பாடுகிறார், அதாவது கதிரவன் கடலுக்குப் பொட்டு இட்டது போல் தோன்றியது என்கிறார்.
 
ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக் கொண்டாள் என பரிபாடல் 11 வரி 99 ,100 இல், "நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே, கொற் றவை கோலம் கொண்டு, ஓர் பெண்." என்று கூறுகி றது. முதல் பாடலில் அழகையும் இரண்டாவது பாடலில் அதற்கு ஒரு புராணத்தையும் காண்கி றோம்.
 
ஆண் பெண் படைப்பின் அடிப்படை நோக்கம் உயிர் உற்பத்தி என்பதை அறிந்த ஆதி கால மனிதன், அப்படி தாய்மை அடைந்த பெண்களை பெருமைபடுத்தி மதித்தான். அன்று ஒரு இனக் குழுவாக வாழ்ந்த மனிதனை தாய்மை யடைந்த பெண் அரவணைத்து வழி நடத்தி சென்றாள். இதனால் அவள் போற்றப்பட்டு அவளை தெய்வமாக வழிபட்டான், அப்பொழுது அவள் கொற்றவையாக ஒரு சுயாதீனமான தெய்வமாக இருந்தாள். ஆனால் அவள் பின்னர் சிவாவுடன் இணைந்தார் / விவாகம் செய்யப்பட்டார் அதற்கு ஒரு புராணமும் கற்பித்தார்கள் என்பதே உண்மை யாகும்.
 
பத்து பாடல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையும் சூரர மகளிரின் (தெய்வ மகளிரின்) மணம் கமழும் திலகமிட்ட நெற்றியை மறைக்காமல் தலை மாலை இருக்கும்படிக் கூந்தலின் மேல் அணிவித்திருந்தனர் என்பதை "பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திரு நுதல் "என்று பாடுகிறது.
 
இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ள இடத்தை ஆக்ஞா சக்கரம் [Ajna Chakra or third-eye chakra] என்கிறது யோகக் கலை. நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் [seat of memory and thinking] உரிய இடம் இது வாகும். அதனால் தான், எம் மனம் துக்கம் அடையும் போது, தலைவலியும் அதிகரிக்கிறது எனலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது, இதனால் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது [prevent the loss of "energy"] என்கிறார்கள்.
 
அத்துடன் நாம் பொட்டு வைக்கும் பொழுது, அந்த இடம் அழுத்தப் படுகிறது. இது முகம் தசைகளுக்கு [face muscles] இரத்தம் வழங்க உதவுகிறது. எனவே, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் பொட்டுவைப் [sticker Pottu/bindi] பயன் படுத்துதல், அழகு படுத்துவதை தவிர வேறு ஒரு பெரும் பயனையும் அளிக்காது. பொட்டு வைக்கும் அந்த இடத்தின் சிறப்பை திருமூலர் அருளிய திருமந்திரம், தனது பாடல் 666 இல்: "ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்",என்று அழகாக கூறுகிறார், அதாவது, உள்ளம் ஒருமைப்பட்டு புருவ மத்தியில் இருந்தால், மூச்சுக் காற்றும் கட்டுப்பட்டு நின்று விடும் என்கிறார். அதையே தமிழ் ஆய்வாளர், மறைமலையடிகள், தாம் எழுதிய “யோக நித்திரை அல்லது அறிதுயில்” என்ற 1922 ஆண்டு நூலில் :" புருவங்களுக்கு நடுவே உட்செல்லும் இடை வெளியில் உயிரின் அறிவு எல்லார்க்கும் முனைத்து விளங்குகிறது” என்கிறார்.
 
சங்க காலத்து மக்கள் வண்ணங்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள். ஆண்களும் பெண்களும் அன்று இடுப்பிற்கு மேல் ஆடை ஒன்றும் அணிவதில்லை. ஆனால் அதற்குப் பதிலாக பல்வேறு வண்ணங்களில் நறுமணச் சாந்துகள் கொண்டு பொதுவாக மகளீர் தமது நெற்றியிலும், தோளிலும், மார்பகங்களிலும் அழகிய ஓவியங்களை வரைந்து கொண் டார்கள். அதை தொய்யில் எனவும் அழைப்பர்.
 
பச்சை குத்துதல், மருதாணிச் சித்திரங்கள் போன்ற உடலோவியம் அதுவாகும். சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகை - 276 இல், நான் இவளது நிமிர்ந்து எழுந்த அழகிய முலைகளில் ஒளி பெறுமாறு தொய்யில் எழுதியதும் இவளைப் பாதுகாப் பவர்கள் முற்றிலும் அறியார் என்ற "உருத்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்" வரியும், அகநானூறு 239 இல், மகளிர் மார்பகத்தில் புள்ளியுடன் கூடிய தொய்யில் எழுதிக் கொண்டிருப்பர். அது அவர்கள் மேனியில் பொறிக்கப்பட்டிருக்கும் சுணங்கு [மகளிர் மேனி யில் தோன்றும் நிறப்பொலிவு அல்லது மேனிநிற மாற்றம்]. அணிகலன்களுடன் திகழ்வர். அவர்கள் வளரும் பிறை நிலாவைத் தொழும் மாலை நேரம். நான் இங்கே இருக்கிறேன் என்ற "புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம், புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய" வரியும் இதை உறுதி படுத்துகிறது.
 
அதே போல அழகுறப் பூங்கொடி வடிவில் எழுதியதை சோழர் காலத்தைச் சேர்ந்த பெருங்கதை யில்: “பழுதற அழகொடு புனைநலம் புனையாக் குங்குமம் எழுதிக் கோலம் புனைந்த“ என்ற வரி மூலம் காண்கிறோம். எனவே இன்று மக்கள் தங்கள் உடலில் தற்காலிக அல்லது நிரந்தர பச்சை குத்திக் கொள்வதும் மருதாணி [Henna] இட்டுக் கொள்வதும், உடலில் தொய்யில் இடும் அல்லது ஓவியம் வரையும் பண்டைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியே ஆகும்.
 
இன்று கைவிரல்களிலும், கால்களிலும் மருதாணி பூசுவது ஒரு சிறப்பான பழக்கமாக திகழ்கிறது. இலையின் சாறினால் சிவந்த மரு [மச்சம் மாதிரி யான சிறு புள்ளி / Skin Tag] தோன்றுவதால் மருதாணிக்கு பழைய பெயர் மருதோன்றி ஆகும். என்றாலும் இலக்கியங்களில் சுருக்கமாக தோன்றி என்றே அழைத்தார்கள். எனவே, இயற்கை அழகுப் பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் இன்று நேற்று அல்ல. சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.
 
மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்க முடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் பெண்கள் இதனை அதிகம் பயன் படுத்தினார்கள். இது எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டதும் ஆகும். சங்க காலத்தில் மருதாணியைப் பற்றிய குறிப்பு ஒன்றை பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான மதுரை கண்ணங்கூத்தனால் எழுதிய கார் நாற்பதில் காண்கிறோம். அதில் "றெரிவனப் புற்றன தோன்றி – வரிவளை, முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து" என்ற வரிகளில் எறிகின்ற காட்டைப் போல செக்கச் சிவந்திருக்கிறது மருதாணி பூக்கள். ஆனாலும் வளையலை நழுவ விட்டது தலைவியின் கைகள் என்கிறது. ஆனால் இதற்கு இன்னும் ஒரு பொருளாக, எரிகின்ற காட்டைப் போன்று செக்கச் சிவந்த மருதாணி அணிந்த கைகளில் வளையல்கள் நழுவி விழுந்தன எனவும் சிலர் கூறுவார். எனவே மெஹந்தி [mehandi] என்ற சொல் வேண்டுமானால் தமிழர்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் மெஹந்தி புதியதல்ல. மிகமிகப் பழையது என்பதே சரியாகும்.
 
மேலும் தமிழர்களுக்கு இடையில் எந்த விழா நடந்தாலும் அது மகிழ்ச்சிகரமாக அல்லது துக்ககரமாக இருந்தாலும் அங்கு மலர் அலங்காரம் முதல் இடத்தை பெரும் வழக்கம் பாரம்பரியமாக இன்னும் தொடர்கிறது. ஒரு உதாரணமாக பெண்கள் கூந்தலில் மலர் சூட்டும் பழம் பழக்கத்தை பார்ப்போம்.
 
ஐங்குறுநூறு 93, பல மலர்கள் சூடிய ஒரு பெண் ணின் கூந்தலை சூழ்ந்து கொண்டு வண்டு மொய்ப் பதை, "பல் பொழில் தாது உண் வெறுக் கைய ஆகி, இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே" என்று கூறுகிறது. அதே போல புறநானுறு 61, "கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்" என்ற வரிகளால் கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழை போடு கூடிய பூவைச்செருகியிருக்கும் உழத்தியர் என்கிறார்.
 
ஆனால் கணவன் இறந்து விட்டால் கைம்மை அடைந்த மகளிர் பூச்சூட்ட மாட்டார்கள். அந்த மரபு இன்னும் கிராமப்புறங்களில் அப்படியே காணப்படுகிறது. கைம்பெண் மட்டும் அல்ல அன்று கணவன் விலகி இருந்தாலும் மனைவி புது மலர் சூடாமல் இருப்பதை புறநானூறு 147 , உன் மனைவி தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக் கொள்ளும்படி நீ அவளிடம் செல். ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வது தான் என பொருள்பட " அம் மா அரிவை, நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல், மண்ணூறு மணியின் மாசு அற மண்ணிப், புது மலர் கஞல இன்று பெயரின், அது மன் எம் பரிசில் ஆவியர் கோவே" என்கிறார் புலவர்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 09 தொடரும்
43220061_10212755543066208_6233096353749139456_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Oza1qkt8-PsQ7kNvgGt5hiR&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDlb0FCISl2Idqtvcno5JbATzq5_6liIi2NzrK-w6I5BA&oe=6661F056 43226079_10212755545946280_7471625017650839552_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=c9FtSez4uuUQ7kNvgG_bQ81&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfD87ff8cFv4OV4MIFqZ7fZbnZDZIrbhkolkmAq6Gszijw&oe=6661FBFB 43296409_10212755549266363_7255400773238915072_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=I-z2cb7o8_0Q7kNvgEZJoMU&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfA8yJqSSA2uqJFwb1NAhH_ig4krMn06HzQ_-fZg0d1V8g&oe=6661E614 43130978_10212755552186436_2421264014706212864_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=4DoskrVCeigQ7kNvgEjuVat&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBbM04KuXirfdWmVtbhQ-CXtGSxjp1BZ2Vym9uwA-qRFg&oe=6661E66E
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 09
 
 
ஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகி, மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கலித் தொடராக காலம் காலமாக காத்து வரப்படும் ஒரு வாழ்க்கை முறையாக, பாரம்பரியமாக மாறுகிறது. எனவே நாம் தமிழரின் பாரம்பரியத்தின் மூலத்தை பரந்த அளவில் அறிய நாம் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் சங்க இலக்கியங்களை ஆராயவேண்டும்.
 
இவ்வகையில், தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை நிறைய அங்கு காண்கிறோம். அது மட்டும் அல்ல நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் கூட தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில ஆகும். அத்து டன் நீர் குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே அன்றில் இருந்து இன்று வரை தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அப்படியான நீரில் நீராடுவதே [குளித்தலே] ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டது. குளித்தல் என்பதின் பொருள் குளிர்வித்தல், அல்லது வெப்பம் தனித்தல் (to get rid of the accumulated heat within our body to get refreshed), எனவே குளியல் அழுக்கை நீக்க மட்டும் அல்ல உடலை குளிர்விக்கவும் என்றாகிறது.
 
மனிதர்களுக்கு உள்ள பல நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். எனவே ஒரு ஒழுங்கு முறையில் உடலை குளிர்விக்க வேண்டும். காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி, வாய் மற்றும் காது வழியாக வெளியேறும் என்று அன்று நம்பினார்கள். இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அன்று குளத்திலோ ஆற்றிலோ பொதுவாக குளித்தார்கள்.
 
உதாரணமாக குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நனையத் தொடங்கும். அப்ப வெப்பமும் கீழிருந்து மேல் எழும்பி வெளியே போகும். குளத்தில் இறங்கும் முன் உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்குவார்கள். இது உச்சந்தலைக்கு கீழ் இருந்து மோலாக எழும் வெப்பத்தால் அதிக சூடு ஏற்படுவதை தடுப்பதற்கான முன் ஏற்பாட்டு நடவடிக்கை ஆகும். என்றாலும் அறிவியல் ரீதியாக உடல் வெப்பம் இலகுவாக தோலினூடாக வெளியேறலாம் என்பதுடன், காலில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, இல்லை உச்சியில் இருந்து தொடங்க வேண்டும் என்றோ, எந்த காரணத்தையும் அறிய முடியவில்லை. எனினும் குளிக்க தொடங்கும் பொழுது, அதன் குளிர் அல்லது வெப்ப தன்மையை அறிய, முதலில் காலை நனைப்பது அல்லது அல்லது தலை உச்சியை நனைப்பது அல்லது கையை அலம்புவது ஒரு வழமையாக இருப்பதைக் காண்கிறோம்.
 
‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை எமக்கு வலியுறுத்துகிறது. இதனையே ஔவையாரும் “சனி நீராடு” என்று ஆத்திசூடிப் பாடலில் கூறுகிறார். இதை பெரும் பாலோர் " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என பொருள் கொள்கின்றனர், எனினும் சனித்தல் என்னும் தொழிற் பெயரின் அடியாக சனி என்னும் சொல் வருவதால், அதற்கு உண்டாதல், பிறத்தல், தோன்றுதல் என அகராதியில் பொருள் இருப்பதால், சனி நீராடு என்னும் சொல் புதிதாகத் தோன்றும் நீரில் நீராடு எனவும் சிலர் பொருள் கற்பிக்கிறார்கள். எனவே அது ஊற்றுநீர் மற்றும் கிணற்றுநீரைக் குறிக்கலாம். மேலும் சிலர் அதன் பொருளை விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு, "வைகறையில் [dawn] நீராடு " என்றும் உரை எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
இனி தமிழ் இலக்கியம் நீராடலை எப்படி கூறுகிறது என்று இரு பாடல்கள் மூலம் பார்ப்போம். முதலாவதாக நதிகளில் புதுவெள்ளம் பெருகி வருகிற காலத்தில் மக்கள் அதிகம் குளித்து மகிழந்ததைக் கூறும் பரிபாடல் என்ற சங்க பாடலில், பாடல் 16 இல், இளம் பரத்தை ஒருத்தி, தன் தோழியர்களுடன் வையையில் நீராடிக்கொண்டிருந்தாள். அவர்களிற் சிலர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து அப்பரத்தையின் மீது பீச்சி அடித்தனர். அச் சிவப்புச் சாயம் குரும்பை போல் விளங்கிய அப் பரத் தையின் மார்பகத்தின் மீது பட்டது. அதனை அவள் முற்றவும் துடையாது, தான் உடுத்திருந்த பெரிய சேலையின் முன்தானையால் ஒற்றிக் கொண்டாள். அதனால் அச்சிவப்புக் கறை அவள் முன்தானையிலும் ஏறிக் கொண்டது. அதேநேரம் தலைவன் அவளை நாடி வந்தான் என்பதை
 
"சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து,
குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே,
இருந்துகில் தானையின் ஒற்றி"
 
என்ற வரியில் காண்கிறோம். இந்த, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பரிபாடலுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் குளியலைப் பற்றி எழுதுகிறாள். இடைப் பட்ட நூற்றாண்டுகளில் குளியல் சமயம் சார்ந்த காரியமாகி விட்டது என்பது இங்கு புலப்படுகிறது.
 
பரிபாடலில் எல்லோரும் எல்லோரையும் பார்க்க முடிகிற பகலில்தான் குளியல் நடை பெறுகிறது. ஆனால்,
 
"கோழி அழைப்பதன் முன்னம், குடைந்து நீராடுவான் போந்தோம்"
 
என்கிறாள் ஆண்டாள், அதாவது கோழி கூவும்முன் – அதாவது இன்னும் இருள் பிரியாத நேரத்தில், அதி காலையில் குளத்தில் நீராட என்கிறது. இவள் தேர்ந்தெடுத்த பொழுது இருளாக இருப்பது பெண்கள் நீராடும் துறையில், ஆண்டாளின் காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது எனலாம். ஆண்டாள் பாடலில் சுட்டிக் காட்டிய பயம் பரிபாடலில் இல்லை. பரிபாடலில் பெண் உடம்பு திறந்து காட்டப்படுகிறது. தைரியம் திறக்கிறது. பயம் மூடுகிறது.
 
பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என கூறுவார்கள் நாமும் அதைக் கேட்டு நடந்திருப்போம். அதற்கு பின் ஒரு அறிவியல் காரணம் உண்டு. உணவை ஜீரணிக்க நொதிகள் தேவை. சாப்பிட்டவுடன் குளித்தால் உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காது போகலாம். இதனால் அஜீரணத்திற்கு வழி வகுக்கலாம் என்பதே அந்தக் காரணம் ஆகும்
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]    
 
பகுதி: 10 தொடரும்
43788237_10212808171741892_3281420886057418752_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-WH_LYyjcCcQ7kNvgEbLDCc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA8QtgSHn5nIwV0otC3FBZTq1YBH_GtPdkCMl5c4iQF1A&oe=66673F05 43745397_10212808191902396_8101903028728102912_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=TFsPxK3JaP8Q7kNvgH6Q06s&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCFRGui4o9cLr_mGi5irb6Qd13sNP87qvYPPrn5K_okRQ&oe=66673345
 
 
 
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 14 MAY, 2024 | 02:42 AM   மன்னார் மாவட்டத்தில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக பொது மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு அவசர கூட்டம்  திங்கட்கிழமை (13) மதியம் 2 மணி முதல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் சாலிய உள்ளடங்களாக குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக் கொள்ளும் வகையில்,குறித்த நிறுவனத்தினர் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு செல்லும் போது மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி  செயலகத்தின் வேண்டுகோளுக்கு அமைய,பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழு,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகள்,சமூக மட்ட அமைப்புகள் திணைக்கள தலைவர்கள், கலந்து கொண்டிருந்தார்கள். இதன் போது அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் டைட்டானியம் சான் லிமிட்டெட் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பாக திட்டம் தொடர்பாக மக்களுக்கு முன் வைக்கப்பட்டது.இதன் போது மன்னாரிற்கு குறித்த திட்டத்தினால் பாரிய பாதிப்புகள் உள்ளமை குறித்து மக்களாலும்,பொது அமைப்புகளின் பிரதி நிதிகளினாலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறித்த திட்டம் மன்னாரில் அமுல் படுத்தும் பட்சத்தில் மன்னாரில் பாரியைப் பாதிப்புகள் ஏற்படும் என்ற விடையத்தைச் சுட்டிக்காட்டினார். அவரது கருத்தை வருகை தந்த பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரஜைகள் குழுவினர் வரவேற்றனர். இதேவேளை மன்னார் தீவில் குறித்த திட்டத்தை அமுல் படுத்துவதை மக்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் மன்னார் தீவைத் தவிர்த்து வேறு நிலப்பரப்பில் குறித்த திட்டம் தொடர்பான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்குவது என்றும் மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுக்கு ஆதரவு வழங்காத நிலையில்   சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டை  மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது எனப் பொதுமக்கள் உறுதிய உள்ள காரணத்தினால் குறித்த கூட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது. மன்னார் தீவில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாததன் காரணத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிக்கை மூலம் தெரியப்படுத்த உள்ளதாக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார்,பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட சமூக மட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/183462
    • ஐபிஎல்: பிளேஆப் வாய்ப்பு அதிகரித்தாலும் ஆர்சிபி அணியில் வெளிப்பட்ட பலவீனம் பட மூலாதாரம்,GETTY IMAGES 13 மே 2024 புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கான வாய்ப்பை மெல்ல இழந்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 62-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.1ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்களில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி கிடைக்கும்? இந்த வெற்றியால் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு உயிர்ப்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடிய ஆர்சிபி அணி 5 வெற்றிகள் உள்பட 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி அணிகளைவிட சிறப்பாக 0.367 என்று வலுவாக இருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை கொல்கத்தா அணியிடம் ஒரு ரன்வித்தியாசத்தில் தோற்று 6வது தோல்வியை எதிர்கொண்டபோது, ஆர்சிபி அணி 5வது இடத்துக்கு முன்னேறியும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற அணிகளின் முடிவுகள் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதாவது ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கும்போது, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்றால் ஆர்சிபி வெளியேற்றப்படும். லக்னெள அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது ஒன்றில் லக்னெள தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் ஆர்சிபியைவிட மோசமாக இருக்கும். அப்போது இயல்பாக போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறிவிடும். அது மட்டுமல்லாமல் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெல்ல வேண்டும், அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 200 ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே ரன் ரேட்டைவிட ஆர்சிபி ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தை அடையும். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமா? டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டில் லக்னெள அணியைவிட சுமாராக இருந்து மைனஸ் 0.482 ஆக இருக்கிறது.அடுத்து வரும் லக்னெள அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி இருக்கிறது. ஒருவேளை லக்னெளவை வென்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கும் என்றாலும், நிகர ரன்ரேட் மைனஸ் 0.482 என இருப்பது பெரிய பின்னடைவு. ஒருவேளை லக்னெளவிடம் தோற்றால், டெல்லி அணி 12 புள்ளிகளுடன் வெளியேறும். டெல்லி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு பெற வேண்டுமென்றால், சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு லீக் ஆட்டங்களிலும் படுமோசமாகத் தோற்க வேண்டும், அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்யும் அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். லக்னெள அணியை 64ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடிக்க வேண்டும். இவை நடந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட்டைவிட டெல்லி அணியின் ரன்ரேட் உயர்ந்திருக்கும். இவ்வாறு நடந்தால் டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும். ஆதலால் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கடைசி லீக்கில் லக்னெளவை வென்றாலும் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு நனவாகாது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரண்டாம் பாதியில் தடுமாறிய ஆர்சிபி பேட்டர்கள் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் ரஜத் பட்டிதார்(52), வில் ஜேக்ஸ்(41) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கும், கேமரூன் கிரீனின் (32) கேமியோவும்தான். இவர்களால்தான் ஆர்சிபி அணி ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது, பந்துவீச்சாளர்களும் துணிச்சலாக ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது. அதிலும் பேட்டிங்கில் 32 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது வென்றார். ஆர்சிபியின் நடத்திர பேட்டர்கள் டூப்பிளசிஸ், விராட் கோலியை விரைவாக இழந்தபின் ஆர்சிபி அவ்வளவுதான் எனரசிகர்கள் எண்ணினர். ஆனால், ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் இருவரும் அணியைக் கட்டமைத்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தபின் ஆர்சிபி சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை அடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. 174 ரன்கள் வரை ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 13 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேகமான விக்கெட் வீழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும். ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு பவர்ப்ளே ஓவருக்குள் டெல்லி அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி பாதி தோற்றுவிட்டது. அதிலும் அதிரடி பேட்டர் மெக்ருக்கின் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆர்சிபியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஏனென்றால் களத்தில் மெக்ருக் நின்றிருந்தால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பக்கூடியவர். 86 ரன்கள் வரை டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 54 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES கோலியை வென்ற இசாந்த் விராட் கோலி தனது 250-வது ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடினார். தொடக்கத்திலிருந்தே கோலி அதிரடியாக பேட் செய்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். இசாந்த் சர்மா வீசிய ஓவரில் கோலி முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரும் விளாசி சிரித்தார். ஆனால் அடுத்த இரு பந்துகளில் இசாந்த்தின் அற்புதமான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பர் அபிஷேக்கிடம் கோலி கேட்ச் கொடுத்து 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்து செல்லும்போது இசாந்த் சர்மா வேண்டுமென்றே கோலியை தடுத்து நகைச்சுவை செய்தார், இதை கோலியும் ரசித்து சிரித்துக்கொண்டே பெவிலியின் திரும்பினார். ரஜத் பட்டிதார் இந்தசீசனில் 11 போட்டிகளில் 8 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்று நிதானமாக ஆடிய பட்டிதர் 8 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அக்ஸர் படேல், குல்தீப் ஓவர்களில் அதிரடியாக ஆடிய பட்டிதரால் பவர்ப்ளேயில் ஆர்சிபி 2 விக்கெட்இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. குல்தீப், அக்ஸர் ஓவர்களை வெளுத்த பட்டிதார் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் பட்டிதார் 4வது அரைசதத்தை நிறைவு செய்தார், பெங்களூருவில் இந்த சீசனில் முதல் அரைச் சதத்தை அடித்தார். பட்டிதாரை ஆட்டமிழக்கச் செய்ய 4 வாய்ப்புகள் வந்தும் அனைத்தையும் டெல்லி வீரர்கள் தவறவிட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லியின் தோல்விக்கு காரணம் என்ன? டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் “ சரியான நேரத்தில் கேட்ச் பிடித்திருந்தால் 20 முதல் 30 ரன்களைக் குறைத்திருப்போம், 150 ரன்களை எளிதாக சேஸிங் செய்திருப்போம். பவர்ப்ளேயில் நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணம். 160 முதல் 170 ரன்கள் வரை எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால், இரவில் பந்து பேட்டர்களை நோக்கி வேகமாக வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பந்து விக்கெட்டில் பட்டு நின்று வந்ததால் அடித்து ஆட சிரமமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நடந்தது எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதை காண்பிக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எதுவேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார் அக்ஸர் படேல் போராட்டம் டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் நேற்று பேட்டிங்கில் ஒற்றை வீரராகப் போராடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேலுக்கு ஒத்துழைத்து எந்த பேட்டரும் பேட் செய்யவில்லை. பவர்ப்ளே ஓவருக்குள் வார்னர்(1), ப்ரேசர்(21), அபிஷேக்(2), ஹோப்(29) என விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி அணி பாதி தோற்றுவிட்டது. 4 ஆட்டங்களுக்குப்பின் நேற்று பேட் செய்த வார்னர் ஒரு ரன்னில் ஸ்வப்னில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். யாஷ் தயாலின் பவுன்ஸரில் அபிஷேக் போரெல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை ஆர்சிபி வீழ்த்தியது 2வது முறையாகும், இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தியது. நடுப்பகுதி ஓவர்களில் சரியான திட்டத்துடன் வந்த ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் துல்லியமாக வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டனர். 8-ஆவது ஓவரிலிருந்து 11வது ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அக்ஸர் படேல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மற்றவகையில் குமார்(2),ஸ்டெப்ஸ்(3) இருவருமே ஏமாற்றினர். கடைசி 4 விக்கெட்டுகளை டெல்லி அணி 13 ரன்களுக்குள் இழந்தது. https://www.bbc.com/tamil/articles/c8vz33z04eyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • விடுப்புதான் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே. சந்தர்ப்பம் இருந்தால் சிங்கத்திடம் ரெண்டு கேள்விகள் கேட்கலாம் என்ற நினைப்பில் தான் போனேன். அதுவும் தவிர கனடாவில் வசிக்கும் மனோரஞ்சன் எனப்படும் முன்னாள் ENTLF நபரை  (புலிநீக்க அரசியல் சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்), இவரையும் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் இருந்த படியால் போனேன். அனுரகுமார  வழமையான அரசியல்வாதிபோல் சிங்களத்துக்கான அரசியலை பேசினார். தமிழருக்கு அரசியல் பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தால் கிலோ எத்தனை ருபாய் என்பது போலத்தான் அவரின் பேச்சு இருந்தது. சிங்களம் ஆராவாரமாய் கைதட்டியது. மனோரஞ்சன் அனுரகுமாராவை விட அழகான நேர்த்தியான சிங்கள மொழியில் அனுராவுக்கு புகழாரம் சூட்டி செம காமெடி பண்ணி இருந்தார்.  தமிழர்கள் சார்பில் கேட்கப்பட்ட இன்றைக்கும் தொடரும் அநீதிகள் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் சிங்கனிடம் பதில் இல்லை. வெறும் சடையில் தான் இருந்தது. ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் சகோதரத்துவ சக ஜீவன சுகவாழ்வு பற்றி சிங்கம் பேசப் பேச ... வந்திருந்த சிங்களம் அவரை ஆபத்பாந்தவராக கைநீட்டி, உச்சம்குளிர்ந்து  ஜயவேவா...ஜயவேவா கோசம் போட்டது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும் என்று விழா ஒருங்கிணைப்பாளரை  பார்த்து நக்கலாக சிரித்து, உருத்தும் படி சில விடயங்களை சொல்லிவிட்டு நான் பார்க்கிங் லாட் நோக்கி நடையை கட்டினேன்.  எதிரில் தெரிந்த எல்லா சிங்களவரும் எதிரியை போல தெரிந்தார்கள்!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.