Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

காதுக்குள் தண்ணி போனால் ஒரு காதுக்குள் தண்ணியை விட்டு மறுபக்கம் தலையை சரிக்கும் போது காதுக்குள் சென்ற தண்ணீர் வெளியில் வந்து விடும். இது மூக்குக்கும் பொருந்துமா தெரியவில்லை. சாதாரணமாக  blow பண்ணினால் உள்ள தண்ணீர் வெளியேறி விடும்.

இந்தக் கேள்விக்கு இது விடையல்லவே . .......!  😂

ஒரு தும்பை எடுத்து மூக்கினுள் "கிச்சு கிச்சு " மூட்ட வரும் தும்மலில் மூக்கினுள் போன தண்ணீர் , கண்ணுக்குள் இருக்கும் கண்ணீர் அத்தனையும் வெளியே வந்துடும் . .....!

எச்சரிக்கை :  இந்த வைத்தியத்தை செய்யும் பொழுது எதிரில் எவரும் நிற்கக் கூடாது . ......!  😂

  • Replies 56
  • Views 4.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • செயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்).   யாழ்    =  மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்).   😂

  • நிலாமதி
    நிலாமதி

    Doctor Appointment: .வைத்தியருடனான முன்பதிவு  Medical Appointment: முன்பதிவு .....வைத்தியருடனான முன்பதிவு  வைத்தியரைக் காண விரும்பினால்  முன்பதிவு செய்யவும்.   சந்திக்க குறிக்

  • நியாயம்
    நியாயம்

    நேரம் பொன்னானது. நேரம் போகும் வாராது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள். அலைவரும்போதே தலை முழுகு. ஆரோக்கியமான வாழ்வு ஆயுளை அதிகரிக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா: 

செம்பு/சொம்பு தூக்கி என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் சொல்லா? இந்த சொல் பாவனையில் எப்போது எங்கிருந்து வந்தது?

•••••••

 ♻️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/11/2024 at 12:20, நியாயம் said:

 

வினா: 

செம்பு/சொம்பு தூக்கி என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் சொல்லா? இந்த சொல் பாவனையில் எப்போது எங்கிருந்து வந்தது?

•••••••

 ♻️

 

ஒருவருக்கும் பதில் தெரியாது போல. அல்லது பதில் கூறுவதற்கு கூச்சப்படுகின்றார்களோ?

யாழ் கருத்துக்களத்தில் அவ்வப்போது இந்த பதம் பயன்படுத்தப்பட்டதை அவதானித்துள்ளேன்.

அண்மைக்காலம் என்று கூறுவதானால் மருத்துவர் அர்ச்சனா இந்த பதத்தை பயன்படுத்தி உள்ளார். மற்றும் விஜய் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த பதத்துக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா இந்தப் பஞ்சாயத்து சபையில் (இந்தியாவில் )  தலைவர் வெற்றிலை போட்டு குதப்பியபடி இருப்பார் . .......(அது ஒரு ட்ரேட்மார்க் மாதிரி , நாட்டாமை விஜயகுமாரை நினைத்துக் கொள்ளவும் )  ....... அப்போது அவருக்குப் பின்னால் எப்போதும் ஒருவர் ஒரு செம்புடன் காத்து நிப்பார் . ...... தலைவர் வெற்றிலைச்சாற்றை எந்தப் பக்கம் துப்புவதற்கு திரும்புகிறாரோ அந்தப் பக்கம் இவர் செம்புடன் போய் அந்த எச்சிலை ஏந்திப் பிடிப்பார் ........மற்றும்படி பஞ்சாயத்தில என்ன நடக்குது என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை . ......ஐயன் கொழ கொழ என்று வாயை கோணலாக்கி  தலையை அண்ணாந்து தூக்கும் போது கண்ணும் கருத்துமாய் காத்திருந்து செம்போடு சென்று வாங்குவதுதான் அவரது வேலை . ...... தவறினால் அருகில் இருக்கும் அல்லக்கைகளின் ஆடைகள் நாறிடும் . .....அதனால் அவரையும், இன்றைய நாளில் அவர் போன்ற எடுபிடிகளையும் "செம்புதூக்கி " என்று செல்லமாய் அழைப்பார்கள் . ........!  😁

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

பொதுவா இந்தப் பஞ்சாயத்து சபையில் (இந்தியாவில் )  தலைவர் வெற்றிலை போட்டு குதப்பியபடி இருப்பார் . .......(அது ஒரு ட்ரேட்மார்க் மாதிரி , நாட்டாமை விஜயகுமாரை நினைத்துக் கொள்ளவும் )  ....... அப்போது அவருக்குப் பின்னால் எப்போதும் ஒருவர் ஒரு செம்புடன் காத்து நிப்பார் . ...... தலைவர் வெற்றிலைச்சாற்றை எந்தப் பக்கம் துப்புவதற்கு திரும்புகிறாரோ அந்தப் பக்கம் இவர் செம்புடன் போய் அந்த எச்சிலை ஏந்திப் பிடிப்பார் ........மற்றும்படி பஞ்சாயத்தில என்ன நடக்குது என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை . ......ஐயன் கொழ கொழ என்று வாயை கோணலாக்கி  தலையை அண்ணாந்து தூக்கும் போது கண்ணும் கருத்துமாய் காத்திருந்து செம்போடு சென்று வாங்குவதுதான் அவரது வேலை . ...... தவறினால் அருகில் இருக்கும் அல்லக்கைகளின் ஆடைகள் நாறிடும் . .....அதனால் அவரையும், இன்றைய நாளில் அவர் போன்ற எடுபிடிகளையும் "செம்புதூக்கி " என்று செல்லமாய் அழைப்பார்கள் . ........!  😁

 

 

விளக்கத்திற்கு நன்றி சுவை ஐயா.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா: 

எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டியது என நீங்கள் நினைக்கும் அதி முக்கியமான செயலிகள் எவை? 

•••••••

 ♻️

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2024 at 15:31, நியாயம் said:

 

வினா: 

எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டியது என நீங்கள் நினைக்கும் அதி முக்கியமான செயலிகள் எவை? 

•••••••

 ♻️

 

AI தளம் ஒன்று வழங்கிய பதில்:

முக்கிய செயலிகள்

எல்லோர் கை தொலைபேசியிலும் கட்டாயம் காணப்பட வேண்டிய அதி முக்கியமான செயலிகள் பலவாக உள்ளன. இவை பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தினசரி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உதவுகின்றன. கீழே சில முக்கியமான செயலிகளை பட்டியலிடுகிறேன்:

1. தொடர்பு செயலிகள் (Communication Apps)
இவை பயனர்களுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன. WhatsApp, Telegram, மற்றும் Signal போன்ற செயலிகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இவை உரையாடல், குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய உதவுகின்றன.

2. சமூக ஊடக செயலிகள் (Social Media Apps)
Facebook, Instagram, Twitter போன்ற சமூக ஊடக செயலிகள் உலகத்தோடு தொடர்பில் இருக்க உதவுகின்றன. இவை தகவல்களை பகிர்வதற்கும், நண்பர்களுடன் இணைவதற்கும் பயன்படுகின்றன.

3. நிதி மேலாண்மை செயலிகள் (Finance Management Apps)
PayPal, Google Pay மற்றும் Venmo போன்ற செயலிகள் நிதியை மேலாண்மை செய்ய உதவுகின்றன. இவை பண பரிமாற்றம் மற்றும் செலவுகளை கண்காணிக்க பயன்படுகின்றன.

4. ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி செயலிகள் (Health and Fitness Apps)
MyFitnessPal, Fitbit மற்றும் Headspace போன்ற செயலிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அமைதியை பெறவும் உதவுகின்றன.

5. தகவல் தேடும் செயலிகள் (Information Retrieval Apps)
Google Search மற்றும் Wikipedia போன்ற செயலிகள் தகவல்களை விரைவில் தேடி பெற உதவும்.

6. வானிலை கணிப்பு செயலிகள் (Weather Forecasting Apps)
AccuWeather மற்றும் The Weather Channel போன்ற செயலிகள் வானிலை பற்றிய தகவல்களை வழங்குகின்றன.

7. பயணம் மற்றும் வழிகாட்டி செயலிகள் (Travel and Navigation Apps)
Google Maps மற்றும் Uber போன்ற செயலிகள் பயணங்களை திட்டமிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் பயன்படுகின்றன.

8. செய்தி வாசிப்பு செயலிகள் (News Reading Apps)
BBC News, Flipboard போன்ற செய்திகள் வழங்கும் செயலிகள் உலக நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.

இந்த அனைத்து வகையான செயலிகளும் கை தொலைபேசி பயன்படுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.