Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு

adminMay 5, 2024
IMG-20240505-WA0004.jpg

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.   இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

IMG-20240505-WA0010-800x461.jpgIMG-20240505-WA0019-800x739.jpgIMG-20240505-WA0020-516x800.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

11 MAY, 2024 | 04:29 PM
image
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

IMG_20240511_12515647.jpg

IMG_20240511_12514833.jpg

IMG_20240511_12505697.jpg

IMG_20240511_12505379.jpg

IMG_20240511_12512045.jpg

IMG_20240511_12512731.jpg

 

IMG_20240511_12504943.jpg

IMG_20240511_12514605.jpg

IMG_20240511_12513341.jpg

IMG_20240511_12521240.jpg

https://www.virakesari.lk/article/183253

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரடியில் கஜேந்திரன் காய்ச்சிக்கொண்டு நிண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

விடைகொடு எங்கள் நாடே..

 

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

11 MAY, 2024 | 06:05 PM
image
 

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (11) பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது. 

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வருடந்தோறும் கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

IMG20240511134449.jpg

IMG20240511141834.jpg

IMG20240511143230.jpg

https://www.virakesari.lk/article/183263

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்  

11 MAY, 2024 | 06:56 PM
image
 

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர்.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. 

download.jpg

download__2_.jpg

download__1_.jpg

https://www.virakesari.lk/article/183271

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

நல்லூரடியில் கஜேந்திரன் காய்ச்சிக்கொண்டு நிண்டார்.

எப்படி நிலமையள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எப்படி நிலமையள்?

சொல்லலாம் ,ஆனா உங்களுக்கு எறிஞ்ச செருப்புளில மிச்சம் இருக்குமோ என்டு யோசிக்கிறன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

சொல்லலாம் ,ஆனா உங்களுக்கு எறிஞ்ச செருப்புளில மிச்சம் இருக்குமோ என்டு யோசிக்கிறன்.😁

நியாயமான பயம்தான்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.