Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
 
 
"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!"
 
"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"
 
"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"
 
"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"
 
"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"
 
"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"
 
"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"
 
"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
289577187_10221219582661908_1668301774033110619_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IliwO05j0gwQ7kNvgFdJYiO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACVO_Dr4h1tS2yBnMWzNymn7Y9jw4PnhZUFhI2yalb3A&oe=663ED0F6 289632158_10221219582781911_1853753610137533960_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LkFD9Wz2UDwQ7kNvgF_58s0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDZDDaJ59ygn_A5rXFvKwL8DoP_8AIfkvXFSB4tsbBTKw&oe=663EE024
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kandiah Thillaivinayagalingam said:
சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?

கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்லி இருப்பார்.

என் கை பிடித்திவள் வந்தாள்

வந்த கடன் தீர்ப்பேனோ

என் காவலுக்கு இவள் நின்றாள்

நின்ற கடன் தீர்ப்பேனோ

என் தேவைகள் இவள் தந்தாள்

தந்த கடன் தீர்ப்பேனோ

பல சேவைகள் இவள் செய்தாள்

செய்த கடன் தீர்ப்பேனோ

என் தாய் போல் பிழை பொறுத்தாள்

அந்த கடன் தீர்ப்பேனோ

ஒன்றும் தெரியாதது போல் நடித்தாள்

அந்த கடன் தீர்ப்பேனோ

எந்தக் கடனிலும் மிகப் பெரியது

நல்ல மனைவியின் சேவை

அதை அடைத்திட எண்ணும் போது

பல பிறவிகள் தேவை

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை. நினைவுகள் அழியாது நெஞ்சில் இருக்கும்.காலங்கள்தான் காயங்களை மாற்றும்.

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2024 at 13:39, kandiah Thillaivinayagalingam said:
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
 
 
"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!"
 
"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"
 
"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"
 
"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"
 
"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"
 
"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"
 
"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"
 
"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
289577187_10221219582661908_1668301774033110619_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IliwO05j0gwQ7kNvgFdJYiO&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfACVO_Dr4h1tS2yBnMWzNymn7Y9jw4PnhZUFhI2yalb3A&oe=663ED0F6 289632158_10221219582781911_1853753610137533960_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=LkFD9Wz2UDwQ7kNvgF_58s0&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDZDDaJ59ygn_A5rXFvKwL8DoP_8AIfkvXFSB4tsbBTKw&oe=663EE024
 

வணக்கம் தில்லை.

உங்கள் உள்ளத்தில் இப்படி ஒரு சுமை இருப்பது இதுவரை தெரியாது.

சகோதரியை நாங்களும் சுமக்கிறோம்.

 

வணக்கம் தில்லை.

உங்கள் உள்ளத்தில் இப்படி ஒரு சுமை இருப்பது இதுவரை தெரியாது.

சகோதரியை நாங்களும் சுமக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 


இறப்பு ஒரு திடீர் சம்பவம்.

 

வேலைக்கு போனவர் மதியம் அளவில் மயங்கி விழுந்து வைத்தியசாகையில் உடனடியாக கொண்டுபோய் ஆனால் அன்றே விடியப்பறம் 4 மணி அளவில் 'இனி நான் சாகிறேன்' என்ற கடைசி வார்த்தையுடன் எம்மை விட்டு பிரிந்தார். [08 / 06/ 2007]

 

அவரின் இரத்தம் முழுவதும் நஞ்சாகி விட்டது. கொரோனா மாதிரி ஒரு தொற்று நோய். பாக்டீரியாவால் பரவுவது எல்லா இயக்கமும் உடனடியாக நின்றுவிட்டது.

 

Meningitis அதன் பெயர்.

மூச்சு / தொடுதல் … இப்படி பரவுவது. அப்பொழுது பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள்.

 

No photo description available.

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்

தில்லை உங்கள் துயரில் எப்போதும் உங்களுடன் இருப்போம்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் அடுத்த நினைவுநாளை இங்கு நினைவஞ்சலி பகுதியில் இணைத்து விடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.