Jump to content

பிரித்தானிய இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக இலங்கைத் தமிழர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Sri Lankan refugee 'so proud' to be Ipswich's first Hindu mayorபிரித்தானிய நகரம் ஒன்றின் முதல் இந்து முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு -  தமிழ்வின்

பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார்.

தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார்.

இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறான பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/301812

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு சமைக்கப்படுவதை உறுதி செய்வதோடு , பச்சையாகவோ அல்லது வேகவைக்கப்படாத கோழி இறைச்சியை உட்கொள்வதையும் தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் (H9) குறித்து சுகாதார அமைச்சகத்தின் கவனத்துடன் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் இந்த விழிப்புணர்வை வழங்கியுள்ளது . தற்போது, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி துறை, H5 மற்றும் H7 விகாரங்களைக் கண்டறியவும், H9 இன்ஃப்ளூயன்ஸா விகாரத்தையும் கண்டறியவும் PCR பரிசோதனை வசதிகளை நிறுவியுள்ளது. பறவைகளையோ அவற்றின் எச்சங்களையோ தொட வேண்டாம் என்றும், கோழிப்பண்ணைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகள் தங்கள் பகுதிகளில் காணப்பட்டால், உடனடியாக உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/304569
    • சரியாக சொன்னீர்கள் .. இந்த விடயத்தில் அருணாச்சலம் மீது குறைபட ஏதுமில்லை.. அவர் வெறும் அம்புதான்.. சீமான் என்று வரும்போது மட்டும் எதிர்ப்பு நிலை எடுக்கும் மற்றைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்று வரும்போது மட்டும் நடுநிலை எடுத்து நக்கல் நையாண்டி சீண்டல் கருத்துக்களை சரியாக செய்ற்பட்டு நீக்கும் யாழ்மீதுதான்(ஜ மீன் மட்டிறுத்தினர்கள்) எமது வருத்தமும் கோபமும் கண்டனமும்..
    • அதனுடைய பெயர்தான் காரணம்........கணக்கு வழக்கின்றி கோல்  சீ   குட்டி போடும்........ குட்டிகள் போதும் என்றால் பெயரை மாற்றி விடவும்.......!  😂
    • 1500 மீற்றரில் வக்சனுக்கு தங்கம்; குண்டு எறிதலில் மிதுன்ராஜுக்கு வெள்ளி 26 JUN, 2024 | 04:13 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விக்னராஜ் வக்சன் தங்கப் பதக்கத்தையும் எஸ். மீதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்து விக்னராஜ் வக்சன் (2625) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். இதேவேளை ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான எஸ். மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புசல்லவையைச் சேர்ந்த ஜெயகந்தான் பிரசான் (இராணுவம் 31:52.58) வெள்ளிப் பதக்கத்தையும் நுவரெலயா ஒலிஃபன்ட் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் (விமானப்படை - 32:01.54) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.   தியகமவில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியானது சிறப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியாகவும் அமைகிறது. எவ்வாறாயினும் முதல் இரண்டு தினங்களில் சிறப்பு மெய்வல்லுநர்களில் யாரும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டவில்லை. ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.51 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன 0.49 செக்கன்களால் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை தவறவிட்டார்.  எனினும் அவருக்கு கிடைத்துள்ள தரவரிசை புள்ளிகளின் பிராகாம் அவர் ஒலிம்பிக் வாயிலை அண்மித்துள்ளதாகத் தெரிகிறது. அருண தர்ஷன தங்கப் பதக்கத்தை வென்றதுடன் அவருடன் போட்டியிட்ட காலிங்க குமாரகே (46.38 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேக்கம்கே முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றபோதிலும் ஒலிம்பிக் அடைவுமட்டத்தைவிட வெகுதூரம் பின்னிலையில் இருந்தார். டில்ஹானி  லேக்கம்கே   ஈட்டியை 55.77 மீற்றர் தூரத்துக்கு எறிந்தே தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஆனால் ஒலிம்பிப் தகுதியைப் பெறுவதற்கு அவர் குறைந்தது 64.00 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்திருக்கவேண்டும். இது இவ்வாறிருக்க, இன்று பிற்பகல் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ளார். https://www.virakesari.lk/article/187032
    • தீயா, வேலை செய்யணும் குமாரு... 😂
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.