Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

suganthini.jpg?resize=600,375&ssl=1

யாழ் பெண்ணுக்கு மனித உரிமைகளுக்கான விசேட விருது!

தென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளையின் 2024ஆம் ஆண்டின், மனித உரிமைகளுக்கான குவாங்ஜு விருதினை
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுகந்தினி மதியமுதன் பெற்றுள்ளதுடன் தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளம் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த ஏராளமான பெண்களுக்கு தைரியம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக சுகந்தினி மதியமுதன் திகழ்வதாக புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிகழ்வு கடந்த 19ஆம் திகதி தென்கொரியாவில் நடைபெற்றது.

சுகந்தினியின் செயல்பாடுகள் மே 18 இன் உணர்வோடு நெருக்கமாக இணைந்திருப்பதாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளை தென் கொரியாவின் மே 18 நினைவு அறக்கட்டளை முழுமையாக ஆதரிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1383914

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்த – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் சுகந்தினிக்கு கொரியாவில் உயர் விருது

Published By: RAJEEBAN   24 MAY, 2024 | 03:11 PM

image
 

ஈழத்தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்பு படையினரினதும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள -யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் உரிமைகள் அவர்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக அமரா என்ற அமைப்பை ஆரம்பித்து சுகந்தினி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார்.

சுகந்தினி 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பியவர்.

Suganthini_1.jpg

இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த பல பெண்களிற்கு நம்பிக்கையை  ஏற்படுத்துபவராக துணிச்சல் தைரியத்தின் அடையாளமாக சுகந்தினி காணப்படுகின்றார் என மே 18 நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சுகந்தினியின் செயற்பாடுகள் எங்கள் அமைப்பின் உணர்வுகளோ நெருக்கமானதாக காணப்படுகின்றது என கருதுகின்றோம் என தெரிவித்துள்ள மே 18 நினைவு அறக்கட்டளை இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அவரது முயற்சிகளிற்கு உறுதியான ஆதரவை வழங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்தின் அக்கறையும் கவனமும்  ஒத்துழைப்பும் ஆதரவும் தமிழர் பகுதிகளில் பாதுகாப்;பு படையினரின் அக்கிரமங்கள் குறித்த வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவியாக அமையும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு காரணங்களிற்காக நான் விடுதலை இயக்கத்தில் இணைந்தேன் என தெரிவித்துள்ள சுகந்தினி ஒன்று தமிழர்களை சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது மற்றையது இலங்கையின் இராணுவ இயந்திரத்தின் பாலியல் வன்முறைகளில் இருந்து தமிழ் பெண்களை பாதுகாப்பது என தெரிவித்துள்ளார்.

2009 இல் ஆயுதமோதல் முடிவிற்கு வருவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் தமிழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதுகாக்கப்பட்டது என சுகந்தினி தெரிவித்துள்ளார்.

பெண்கள் இரவில் அச்சமின்றி நடமாட முடிந்தது அவர்கள் தன்னிறைவு கொண்டவர்களாக சுதந்திரமாக வாழக்கூடியவர்களாக வலுப்படுத்தப்பட்டார்கள் பெண்களின் சுயவேலைவாய்ப்பிற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, சுய பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆணாதிக்க சமூகத்தின் மூலம் உருவாக கூடிய சமூக தடைகளை உடைப்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது எனவும் சுகந்தினி தெரிவித்துள்ளார்.

அனைத்து துறைகளிலும் பெண்களிற்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டது. இது மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூக உணர்வுகள் மறைவதற்கு வழிவகுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2009 இல் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் முடிவடைந்த இராணுவநடவடிக்கையின் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது என தெரிவித்துள்ள சுகந்தினி பாலியல் வன்முறைகள் சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின. இவை குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டன என தெரிவித்துள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்டு வவுனியாவின் மிக மோசமான ஜோசப்முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதை சுகந்தினி நினைவு கூர்ந்துள்ளார்.

அங்கு மிகவும் பயங்கரமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/184386

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனக்கும் தன் சார்ந்த சமூகத்திற்கும் நிகழ்ந்த மகா கொடுமைகளை.. இத்துணை அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் விட்டுக்கொடுப்புக்கோ.. அடிபணிவுக்கோ.. சமரசத்துக்கோ.. இணக்கத்துக்கோ வாய்ப்பளிக்காமல்.. உலகிற்கு உணர்த்த போராடும் இந்த தாய்க்கு உண்மையான பாராட்டுக்கள். இன்னொரு பூபதியம்மாவைக் காண்பது போன்ற உணர்வு. 

இவா.. எங்க.. சிங்கள இராணுவம் காட்டும் வேடிக்கையை விடுப்புப் பார்க்கப் போகும் கூட்டமெங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

 

இவா.. எங்க.. சிங்கள இராணுவம் காட்டும் வேடிக்கையை விடுப்புப் பார்க்கப் போகும் கூட்டமெங்க. 

கொலஸ்றோல்...கூடிய கூட்டம்...



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.