Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

குறிக்கோள்

தாயகத்தின் தனித்துவம் பெற்ற வைப்பகமாகவும், மக்களின் நம்பிக்கையின் சின்னமாகவும், வழமைதாரரின் காவலனாகவும், பொருண்மிய மேம்பாட்டின் பங்காளனாகவும் தன்னைத் தாயகத்தில் மட்டுமன்றி தாயகத்துக்கு வெளியேயும் வெளிப்படுத்தி நிற்கும் வைப்பகப் பணியில் மக்களனைவரையும் தன்னுடன் இணைப்பதைத் தொலைநோக்காகக் கொண்டு செயற்படுகின்றோம்.

Thalaivar

பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின.

தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம்.

மேதகு வே.பிரபாகரன்,
தேசியத்தலைவர்

NP

தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை மேம்படுத்தக் கூடியதாக – அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கூடியதாக ஒரு வைப்பகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டை எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தார்கள்.

அதன் செயல் வடிவமே தமிழீழ வைப்பகத்தின் தோற்றம் ஆகும்.

திரு. செ.வ.தமிழேந்தி,
நிதிப்பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப்புலிகள்.

DEதமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும்.

எந்தவொரு தேசத்தைப் பொறுத்த வரையிலும் அங்குள்ள வங்கிகளில் உள்ள வாடிக்கையாளரின் வைப்புக்களிற்கு அந்நாட்டு அரசுகளே உத்தரவாதமளிக்கின்றன. அது போலவே தமிழீழ வைப்பகத்தின் வழமைதாரர்களது வைப்புக்களிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது.

1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம்.

திரு. ம.வீரத்தேவன்,
மேலாண்மைப் பணிப்பாளர்,

தமிழீழ வைப்பகத்தின் கிளைகள்

கிளைகள் ஆரம்ப நாள்
யாழ்ப்பாணம் 23-05-1994
கிளிநொச்சி 05-06-1995
நெல்லியடி 14-09-1995
முல்லைத்தீவு 14-05-1996

ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள்
மாங்குளம் 07-07-1997
விசுவமடு 01-06-2001
புளியங்குளம் 24-07-2002
பளை 14-03-2003
முழங்காவில் 14-01-2004

பணிகள்

நிலையான வைப்புகள் Fixed Deposits
தேட்ட வைப்புகள் Savings Deposits
நடைமுறைக் கணக்குகள் Current Accounts
தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates
ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits
வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange
கடன்கள் Loans
மேலதிக வரைவுகள் Overdrafts
நகையடைவு Pawn Broking
காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities
வாடகைக் கொள்வனவு Hire Purchase
நிலையான கட்டளைகள் Standing Orders
பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service

நிலையான வைப்புத்திட்டங்கள்
Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 08.50 %
12 மாத நிலையான வைப்பு 08.00 %
06 மாத நிலையான வைப்பு 07.00 %
03 மாத நிலையான வைப்பு 06.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %

வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes
நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தேட்ட வைப்புத்திட்டங்கள்
Savings Deposit Schemes

தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம்
வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50%
நல்லைத் தேட்டம் 06.00%
நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50%
சிறார் உண்டியல் திட்டம் 06.50%
ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
அமுதம் சிறார் தேட்டம் 06.50%
பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50%

கடன் திட்டங்கள்
Loan Schemes

கடன் திட்டங்கள் வட்டி வீதம்
நகையடைவுக் கடன் திட்டம் 18.00%
வாணிபக் கடன் திட்டம் 16.00%
மேம்பாட்டுக் கடன் திட்டம்
வேளாண்மைக் கடன் திட்டம் 15.00%
கடற்றொழில் கடன் திட்டம் 15.00%
கைத்தொழில் கடன் திட்டம் 15.00%
சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00%
சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00%
கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%

(Based on the data retrieved on Jan 08 2008 from http://www.bankoftamileelam.net)

 

https://eelavarkural.wordpress.com/2019/11/23/bank-of-tamil-eelam-2/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

5bkKISjK7hbMbpQXT9BW.jpg

தமிழீழ வைப்பகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் 1994 மே மாதம் 23 

தமிழீழ வைப்பகம் 1994 மே மாதம் 23 ஆரம்பிக்கப்பட்டது. கலியுகத்தில் காவலாளிகளின் பாதுகாப்பு இன்றி ,சி சி டிவி ஏதும் இன்றி எந்த கொள்ளையும் இன்றி இயங்கிய ஒரே வங்கி தமிழீழ வைப்பகம் தான்.

1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ வங்கி முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரையும் தமிழீழ மக்களுக்கான சேவையை வழங்கியது.

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு நடைமுறை அரசை உருவாக்கி அதில் முக்கிய பொருளாதார கூறாகிய வங்கியை நடத்தினர்.அதற்க்கு தமிழீழ மக்களிடம் நல்ல ஆதரவு இருந்ததோடு மட்டுமல்லாமல் உலக ஊடகங்களும் அதைப்பற்றி எழுத தொடங்கின.

வங்கி ஆரம்பிக்கப்படும் போது யாழ்ப்பாணமே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக நகராக இருந்தது.பின்னர் வன்னி பெரு நிலப்பரப்பை நோக்கி நகரும் போது தமிழீழ வைப்பகமும் கிளிநொச்சியுக்கு நகர்ந்தது.

2005 A.F.P சர்வதேச செய்தி நிறுவனம் தமிழீழ வைப்பகம் பற்றி புகழாரம் சூட்டி இருந்தது.இது சர்வதேசம் புலிகளின் நடைமுறை அரசு மீது,குறிப்பாக புலிகள் சர்வதேச ரீதியாக இருந்த பொருளாதார சதிகளுக்குள் சிக்காமல் தம் நிதி நிருவாகங்களை வளர்த்தெடுத்து கொண்டு வந்ததை கண்டு பொறாமை பட்டது என்பதை சில சர்வதேச செய்திகள் அன்று எமக்கு உணர்த்தின.

 

HngZKl3FKca11h63DI3q.jpg

https://www.thaarakam.net/news/a8164b0e-2be3-48aa-b698-2d51aaca2e2b

 

பொருண்மியத் தடை காரணமாக எமது மக்கள் தாங்கொணாச் சுமைகளைத் தாங்கி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எனினும், இந்தப் பெரும் பளுவின் விளைவாக, எமது மக்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வும் ஏற்படத் தவறவில்லை. தடைகளால் விளைந்த பாதிப்பும், அதனால் எழுந்த பற்றாக்குறையும் அந்தப் பற்றாக்குறையால் பிறந்த தேவைகளும், ஒட்டு மொத்தத்தில் சுயசார்புப் பொருளாதாரத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எமது மக்களுக்கு நன்கு உணர்த்தின.
 
தன்னிறைவான – தன்னில் தானே தங்கி நிற்கும் – பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது தேசம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம்.
 
 தமிழீழத் தேசியத் தலைவர்
 

 
 
தமிழர்களுக்கான ஒரு வங்கி அமைப்பைத் தொடங்க வேண்டுமென்ற, எங்களுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு ஒரு முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்ற, தமிழர்களுக்கென்ற – ஒரு சிறப்பான முறையிலே தமிழ் மக்களுடைய பொருண்மியத்தை மேம்படுத்தக் கூடியதாக – அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடக் கூடியதாக ஒரு வைப்பகத்தை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணப்பாட்டை எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நீண்ட நாட்களாகக் கொண்டிருந்தார்கள்.
 
அதன் செயல் வடிவமே தமிழீழ வைப்பகத்தின் தோற்றம் ஆகும்.
 
 
yoqaFCn0VjbniTu6fyub.jpg
 
 
திரு. செ.வ.தமிழேந்தி,
நிதிப்பொறுப்பாளர்,
தமிழீழ விடுதலைப்புலிகள்.

 

தமிழீழ வைப்பகம். தமிழரின் சொத்து எனப் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது ஆண்டில் கால் பதித்து நிற்கின்றது. தமிழ் மக்களின் பொருண்மிய வல்லமையை வலுப்படுத்த வேண்டும். அதற்காக வைப்பக அமைப்பொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை எமது தேசியத் தலைவர் அவர்கள் நீண்டகாலமாகக் கொண்டிருந்தார். இக்கருத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் நாளில் தமிழீழ வைப்பகம் உதயமானது. தமிழ் மக்களின் அழிவுக்குள்ளான பொருளாதார இருப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதனூடாக தமிழ் மக்களின் காப்பகமாக இருக்க வேண்டும், என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய உலக ஒழுங்கில் பொருள் வல்லமை எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைக் காண்கின்றோம். உலக அரசியலைத் தீர்மானிக்கின்ற வலுவை பன்னாட்டு வைப்பகங்கள் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியத்தை உருவாக்கும் மூலவிசைகளில் ஒன்றாகத் தமிழர்களிற்கென வைப்பகம் ஒன்றை உருவாக்கும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது. இதன் விளைவே தமிழீழ வைப்பகம் ஆகும். எந்தவொரு தேசத்தைப் பொறுத்த வரையிலும் அங்குள்ள வங்கிகளில் உள்ள வாடிக்கையாளரின் வைப்புக்களிற்கு அந்நாட்டு அரசுகளே உத்தரவாதமளிக்கின்றன. அது போலவே தமிழீழ வைப்பகத்தின் வழமைதாரர்களது வைப்புக்களிற்குத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முழுமையான உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழீழ வைப்பகம் இன்று தனது பத்தாவது (10 ஆவது) ஆண்டில் தனது செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றது. இப்பத்தாண்டு காலத்தில் பல்வேறுபட்ட வைப்பகப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் எமது தேசத்தின் மேம்பாட்டிற்குத் தமிழீழ வைப்பகம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. தொடர்ந்தும் இப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம். தமிழர்களின் சொத்தான தமிழீழ வைப்பகம் உறுதியான வளர்ச்சி காணுவதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் பொருண்மிய வல்லமையை தேசம் பெற அனைத்து மக்களும் எம்முடன் இணைந்து நடப்பார்கள் என நம்புகின்றோம். இதனையே “தமிழீழ வைப்பகம் தமிழரின் காப்பகம்” என்னும் தொலை நோக்குச் சிந்தனையூடாக வெளிப்படுத்துகின்றோம்.

 

GNoprCZFlDb8kYkx30Sz.jpg

 

திரு. ம.வீரத்தேவன், மேலாண்மைப் பணிப்பாளர்,


தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளுக்கு சர்வதேச செய்தித் தாபனம் புகழாரம்!

இலங்கைத் தீவிலேயே மிக பாதுகாப்பான வங்கியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகம்’ திகழ்கிறது என்று சர்வதேச செய்தித் ஸ்தாபனமான ஏ.எஃப்.பி. புகழாரம் சூட்டியுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி. ஸ்தாபனம் வெளியிட்டுள்ள கட்டுரை.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய வங்கியின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உத்தியோகத்தரையோ கண்காணிப்பு கமெராவையோ வைத்திருக்கவில்லை. இருந்தபோதும் யுத்தத்தின் போதும் அமைதிக் காலத்தின் போதும் தமிழர்களுக்கான பாதுகாப்பு வைப்பகமாக அந்த வங்கி திகழ்கிறது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட தமிழீழ வங்கியானது சிறிலங்கா அரசாங்கத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படவில்லை.

 

NAIwR1USxFK5A5hKHQPd.jpg

 

இந்த வங்கியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் முழுமையான நிதிக் கொள்கை நிர்வாகத்தோடு இயங்கி வருகிறது. இந்த வங்கி 1994 ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டது. தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் இந்த வங்கி ஏற்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் வங்கியில் சிறிலங்கா ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியான சிறிலங்காவின் வங்கிகளை விட இந்த வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி வீதம் 8.5 வீதம் அளவிற்கு வழங்கப்படுகிறது. சிறிலங்காவில் வைப்புத்தொகைக்கான சராசரி வட்டி 5.7 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடன்களுக்கான வட்டி வீதமும் சிறிலங்காவின் வர்த்தக ரீதியான வங்கிகளின் விகிதமான 11.42 முதல் 33.6 சதவீத அளவை விட குறைவாக 9 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கிச் செயற்பாடுகள் குறித்து வங்கியின் பணிப்பாளர் மகாலிங்கம் வீரத்தேவன் கூறுகையில், யுத்த காலத்தின் போது மக்கள் தங்களது நகைகளையும் பணத்தையும் வைப்பீடு செய்தனர். அமைதிப் பேச்சுக்கள் நடைபெறும் காலத்தில் பெருமளவில் கடன் பெற்று வருகின்றனர். நாங்களும் குழந்தைகள் உள்ளிட்டோருக்கான சேமிப்புத் தொகைக்கான செயற்திட்டங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். 36 வயதாகும் வீரத்தேவன, யாழ். பல்கலைக்கழகத்தில் வணிகத்துறையில் பட்டம் பெற்றவர். தற்போது தமிழீழ வங்கியில் 15 மில்லியன் டொலர் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது என்றும் வீரத்தேவன் கூறினார். தமிழீழ வங்கி லாப நட்டக் கணக்குகளை வெளியிடுவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நேரடியாக நியமிக்கப்பட்டுள்ள 7 பேர் கொண்ட நிர்வாக சபையிடம் மட்டுமே இந்த விவரங்கள் கையளிக்கப்படும். இந்த 7 பேர் கொண்ட நிர்வாக சபையே வங்கி தொடர்பான நிதிக் கொள்கைகளையும் வட்டி விகிதங்களையும் முடிவு செய்து அறிவிக்கிறது. “சிறிலங்காவின் வர்த்தக நிலைமையில் அரசாங்கம் பணத்தை அச்சடித்தும் பணவீக்க விகிதம் அதிகரித்துவிடுகிறது. இது எமது வர்த்தகத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது” என்கிறார் வீரத்தேவன். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து கடன் தொகையை மக்கள் பெருமளவில் பெற்றனர். வீடுகளைத் திருத்தவும், வர்த்தகங்களை தொடங்கவும் பொருட்களை வாங்கவும் சூரியஒளி மூலமான மின்சார உற்பத்தி சாதனங்களை அமைக்கவும் இந்தத் தொகையை தமிழீழ வங்கியிடமிருந்து பெற்றுச் சென்றனர். 2002 ஆம் ஆண்டு 30 வீதமாக இருந்த தமிழீழ வங்கியின் வைப்புத் தொகை 2003 ஆம் ஆண்டு 42 வீதமாக உயர்ந்தது. அதேபோல் 2002 ஆம் ஆண்டு வங்கிக் கடன் பெறுவோர் விகிதம் 20 வீதமாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு 40 வீதமானது என்றார் வீரத்தேவன். தவணைகளை நாம் துப்பாக்கி முனையில் பெறுவதில்லை. இந்தப் பணிக்கு தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை பயன்படுத்துவதுமில்லை. இப்பணிகளுக்கு படித்த பட்டதாரி இளைஞர்களையே அமர்த்தியுள்ளோம் என்கிறார் தமிழீழ வங்கியின் நிர்வாக அதிகாரியான கந்தையா பாலகிருஸ்ணன். தமிழீழ வங்கியின் 12 கிளைகளில் 4 கிளைகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளன. தலைமையகமான கிளிநொச்சியில் பிளாஸ்மா ஸ்கிறீன் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 10 ஆயிரம் வைப்புத் தொகைதாரர்களும் 300 நடப்பு வங்கிக் கணக்கு வைத்துள்ளோரும் உள்ளனர்.

 

Iiq2IkwAX03X4DNGfuIT.jpg

 

தமிழீழ வங்கியினது காசோலைகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளை தவிர்த்த சிறிலங்காவின் இதர பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்களின் பணம் சிறிலங்கா அரச வங்கிகளில் பெறப்பட்டபோதும் விடுதலைப் புலிகள் அந்த வங்கிகளின் பணிகளில் தலையிடுவது இல்லை. தமிழீழ வங்கியானது சர்வதேச நாடுகளில் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் சிறிலங்காவின் இதர பகுதி உள்ளிட்ட பிற்பகுதி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இயலாமல் இருக்கிறது. சிறிலங்காவின் மத்திய வங்கியானது தமிழீழ வங்கி வைப்புத் தொகைகளைப் பெறுவது சட்டவிரோதமானது என்று அறிவித்திருந்தாலும் அதன் உத்தரவுகள் தமிழீழ நிர்வாகப் பகுதிகளுக்குப் பொருந்துவதில்லை. இந்த வங்கியின் பணம் கொள்ளை போவதில்லை என்று வீரத்தேவன் கூறுகையில் அது ஏன் என்று நாம் கேட்டோம்… அவர் சிரித்துக் கொண்டே எளிமையான வரிகளில் சொன்னார்… “யாரும் எங்களிடமிருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கமாட்டார்கள். நாட்டில் அசாதாரண சூழல் ஒன்று ஏற்படும் வரை இங்கு பாதுகாப்பாகவே அவை இருக்கும் என்றார் வீரத்தேவன்.

 

RkSFRf05Awvw2ZipUPnr.jpg

 

 

தமிழீழ வைப்பகத்தின் கிளைகள்

கிளைகள் ஆரம்ப நாள்
யாழ்ப்பாணம் 23-05-1994
கிளிநொச்சி 05-06-1995
நெல்லியடி 14-09-1995
முல்லைத்தீவு 14-05-1996

ஊரகக் கிளைகள் ஆரம்ப நாள்
மாங்குளம் 07-07-1997
விசுவமடு 01-06-2001
புளியங்குளம் 24-07-2002
பளை 14-03-2003
முழங்காவில் 14-01-2004

பணிகள்

நிலையான வைப்புகள் Fixed Deposits
தேட்ட வைப்புகள் Savings Deposits
நடைமுறைக் கணக்குகள் Current Accounts
தேட்டச் சான்றிதழ்கள் Savings Certificates
ஏழு நாள் அழைப்பு வைப்புகள் Seven Days call Deposits
வெளிநாட்டு நாணய மாற்று Foreign Currency Exchange
கடன்கள் Loans
மேலதிக வரைவுகள் Overdrafts
நகையடைவு Pawn Broking
காசோலைக் கொள்வனவு Cheque Purchase Facilities
வாடகைக் கொள்வனவு Hire Purchase
நிலையான கட்டளைகள் Standing Orders
பொதி பாதுகாப்புப் பணி Packet Custody Service

நிலையான வைப்புத்திட்டங்கள்
Fixed Deposit Schemes

நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 08.50 %
12 மாத நிலையான வைப்பு 08.00 %
06 மாத நிலையான வைப்பு 07.00 %
03 மாத நிலையான வைப்பு 06.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 08.00 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %

வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
Foreign Fixed Deposit Schemes

நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தாயகஒளி வதியாதோர் வெளிநாட்டு நிலையான வைப்புத்திட்டங்கள்
THAYAKAOLI Non-Resident Foreign Fixed Deposit Schemes

நிலையான வைப்புத்திட்டங்கள் வட்டி வீதம்
24 மாத நிலையான வைப்பு 07.50 %
12 மாத நிலையான வைப்பு 07.00 %
24 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.50 %
12 மாத நிலையான வைப்பு (மாதவட்டி) 07.00 %

தேட்ட வைப்புத்திட்டங்கள்
Savings Deposit Schemes

தேட்ட வைப்புத் திட்டங்கள் வட்டி வீதம்
வளர்ந்தோர் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
சிறுவர் தேட்ட வைப்புத்திட்டம் 06.50%
நல்லைத் தேட்டம் 06.00%
நல்லைச் சிறுவர் தேட்டம் 06.50%
சிறார் உண்டியல் திட்டம் 06.50%
ஊற்றுக்கண் பெண்கள் தேட்ட வைப்புத்திட்டம் 06.00%
அமுதம் சிறார் தேட்டம் 06.50%
பணியாளர் காப்பு நயநிதித் திட்டம் 06.50%

கடன் திட்டங்கள்
Loan Schemes

கடன் திட்டங்கள் வட்டி வீதம்
நகையடைவுக் கடன் திட்டம் 18.00%
வாணிபக் கடன் திட்டம் 16.00%
மேம்பாட்டுக் கடன் திட்டம்
வேளாண்மைக் கடன் திட்டம் 15.00%
கடற்றொழில் கடன் திட்டம் 15.00%
கைத்தொழில் கடன் திட்டம் 15.00%
சுழற்சி முறையிலான வாணிபக் கடன் திட்டம் 23.00%
சுயதொழில் முயற்சிக் கடன் திட்டம் 14.00%
கதிரொளி மின்னாக்கித் தொகுதிக்கடன் திட்டம் 17.00%

 

FT56LxB6raoXI6LhPkkn.jpg

 

u09kEHeefiwPHaO7pW4e.jpg

 

 

e3NjHYo6NAZtpA7OTU1D.jpg

 

SgbJnYQrrN13qFJ0madq.jpg

 

diQeIDkGdAnVe0L7cD5s.jpg

 

H6OAIgDj0Gl30KkuP6Bk.jpg

 

yJNrjgZz4LYjevigTQVm.jpg

 

 

9BPXYueTQasfCV48sham.jpg
 
  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.