Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது.

'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும்.

இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது.

கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில் பலரை சொல்வது போலவே இருக்கின்றது:

 ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர்.  

*****************

தோழர் இரும்பு (ஜான் சுந்தர்)

-----------------------------------------------

வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்கிற  முடிவில் இருக்கிறேன். மகள்கள்  வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் மறுசோறு வாங்குவதில்லை என்று ஒரு வைராக்கியம்.  நான் என்ன செய்யட்டும்? வேலை வந்தால்தானே? ”ஹூம்… வந்துட்டாலும்….”  இந்த கஞ்சத்துக்குப் பிறந்தவர்கள் தருகிற சம்பளம் இருக்கிறதே அதை நினைத்தால் மனக்கண்ணில் ஊறுங்கண்ணீர் தோழர் குணசேகரனின் குரல் வழியே ’ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட’  பெருகிப் பெருகி வழிந்து கொண்டே இருக்கும்.

சின்னமகள் என்னை இழுத்துக் கொண்டு போய் தரையில் அமரச் செய்தாள். பெரியவள் உட்கார்ந்த இடத்துக்கே கைகழுவ பாத்திரமும், தண்ணீர் செம்பும் கொண்டு வந்தாள். வீடு என்று ஒன்று இருந்தால் இப்படி மனுசனைத் தாங்க வேண்டும். அதுவும்  மனசு பொறுக்காத கோபத்தில் இருக்கிற போதோ, நெஞ்சு பாரமாய் இருக்கிறபோதோ தாங்கியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு ஏற்கனவே புண்ணாக கிடப்பதற்குள் விரலை விட்டு குடையக் கூடாது.

கடந்த இரண்டு மாதங்களாக தன் சேமிப்பால் இந்த குடும்பச் செலவை சமாளித்து வருகிற என் இணையர் தட்டை வைத்து சோற்றை அன்னக்குத்தியில் அள்ளி வைத்து குழம்பை ஊற்றினார். நான் அவரது கண்களைப் பாராமல் சாப்பிடத் துவங்கினேன்.முருங்கைக் கீரையும் பருப்பும் சேர்ந்தாலே பயங்கரமாயிருக்கும் . இதில் அரைத்த தேங்காயும், தேன்மலரின் பிரத்யேகமான தாளிப்பும் சேர்ந்து கொண்டு மணக்க , குழம்பு அதிபயங்கரமாயிருந்தது. நான் என் வைராக்கியத்தை மறந்து, “இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க தேன்மலர்” என்றபோது, அலைபேசி  ‘தோழர். இரும்பு’ என்று ஒளிர்ந்தது. 

“வேண்டாம்… போதும் ” தட்டோடு எழுந்தேன். 

“தோழர்! வண்ட்டன் ரெண்டே நிமிஷம்”

என் உற்சாகத்தைக் கண்டதும் இங்கே இன்னொரு  தாளிப்பு துவங்கியது.
” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர்.

நான் கையைக் கழுவிவிட்டு மொட்டை மாடிப்படிகளுக்கு நடந்தேன். “ இன்னேரத்துக்கு  மாடிக்கு போக வேண்டியது நடுசாமத்துல எறங்கி வரவேண்டியது”

மணியைப் பார்த்தேன்.  பத்தரையாகி விட்டிருந்தது.  நாளைக்குப் பேசுவோமா? இல்லை. முடியாது. இப்போது இருக்கிற மனக்குடைச்சலில் இருந்து  நான் வெளியே வரவேண்டும்.

தோழர் ‘இரும்பு’என்கிற இரும்பொறை இளஞ்சேரல்  மாலெ இயக்கத்தில்  பகுதி நேர ஊழியராக இருந்து யோசனைக்கு எட்டாத பெருங்காரியங்கள் செய்தவர். பின்னாட்களில் இயக்கத்திலிருந்து  விலகி மனைவியும் குழந்தைகளுமாக திருப்பூரில் வசிக்கிறார். தமிழாசிரியை மகன் என்றாலும் பள்ளியில் கலகம் செய்து படிப்பை முடிக்காமலே  வெளியேறியதால் தற்போது பின்னலாடைத் துறையில் பணி.

“ஒண்ணுமில்ல தோழர் சாப்புட்டீங்ளா?” 

வானம் கழுவி விட்டாற்போலிருந்தது.

“ஆச்சு தோழர் சொல்லுங்க”  

தாமதமாக கூடு திரும்புகிற ஏதோ ஒரு பறவை கீச்சிட்டது

தோழர் ஒன்றும் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்று பொருள். ஏதோ என்றால்  தட்டையான தகவலாக இருக்காது. புதிய களங்களில் எளிய நடையில் மனதை பிடித்துக் கொண்டு போய் அசாத்தியமான பரவச நிலைக்கு தள்ளுகிற முத்துலிங்கத்தின் கதைகள் பற்றியோ, “ஏந்தோழர்? நெசம்மாலுமே அந்தாளுக்கு எம்பது வயசு ஆகுதுங்ளா?”. ‘நல்ல புணர்ச்சிக்கிடையில் அழுகிற பெண்’ வருகிற பூமா.ஈஸ்வர மூர்த்தியின் கவிதை வரியைக் குறித்தோ, “இதென்னுங் தோழர் விசுக்குனு இப்புடி சொல்டாப்ள?”. ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு தொடர்ச்சியாக பேசிப்பேசி அவரது சொந்த  வாழ்வில் கண்ட  மனிதர்களைக் குறித்துப் பேசுவது என்று போகும்.

“பொம்பள  சும்மா ஆறு ஆறறை அடிக்கு கொறையாம இருக்கும் தோழர்.. “

சாட்சியாக நேரில் பார்த்த சம்பவங்களை அசலான கொங்குத்தமிழில் விவரிப்பார்.  
“.. அவரும் ஆதிக்கசாதில பொறந்தவருதானுங்க..ஆனா ஆளு எப்புடி தெரியிங்ளா?  ப்யூர் கம்னிஸ்டுங் தோழர்.. தங்கம்னா தங்கம்ங்!  சுயசாதிக்காரங் கண்ணுக்குள்றயே வெரல உட்டு ஆட்டிப்போட்டாருங் அவுனுக உடுவானுகளா கொன்ட்டானுக”

வீணாகப்போக இருந்த நாளை பேச்சில் வளர்த்தி  உருப்படியாக்கித்தருவார்.

“இங்கே எவன்ட்டயும் எதயிம் பேச முடில தோழர்!  ‘ஏனப்பா முந்தியெல்லாம் வெட்டும் குத்துமா நல்லா ரத்தக் கதையா சொல்லுவ? இப்பல்லாம்  நெஞ்ச நக்குற கதையா இருக்குதேடா நஞ்சப்பா’ன்றானுக.. இவனுக இப்போதைக்கு பக்குவப்பட மாட்டானுக தோழர்”

” நீங்கயேங்க அதயெல்லாம் சட்டை பண்றீங்க?”

“இன்னக்கி ஒரு கலியாணப் பத்திரிக்கை வந்தது தோழர். மனசுக்கே நெம்ப சந்தோசமாயிருச்சுங்”

நான் மௌனமாய் இருந்தேன். தோழர் தொடர்ந்தார். எனக்கு தோழர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

“ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி இதே திலுப்பூருல நானும் என்ர ஃப்ரண்டும் டீக்கடயில நின்ட்டுருந்தோம்.  எனக்கு செம்ம டயர்டாருக்கு. ஏறுவெய்யல்ல வெடி நைட்டு முடிச்சு நிக்கிறன். மறுக்கா பகல் பாக்கோணும். வேல தெரிஞ்ச ஆளுக  கெடைக்க மாட்டாங்க  தோழர். எதையப் பார்த்தாலும் சலிப்பா இருக்குது…” 

நான் செருப்பை மாட்டிக் கொண்டு தோழரோடு வானத்துள் இறங்கி நடந்தேன்.சாயம் போன தர்பூசணித் துண்டாக வீதியில் கிடக்கிறது வெளிர் நிலா.

“…சரீங்களா? ஒரு குடும்பம் வந்து டீக்கடயோரமா நிக்குது. ஒரு பெரியவரு.. அவரு சம்சாரம், அப்பறம் அவிய பொண்ணு,பையன்”

“ம்ம்”  மனம் வரைகிற காட்சியில் திருப்பூர் துலங்கும்.

” பெரியவருதான் டீய வாங்கி வாங்கி ஒரோருத்தருக்கும் குடுக்குறாப்ள”

“செரி” 

“பொண்ணும் பையனும் டீய வாங்கி குடிக்கிறாங்க… இந்தம்மா டீ டம்ளர  வாங்கி கைல வெச்சுட்டு தலய குனிஞ்சே நிக்கிது “

“ஏன்?”

” நமக்குந்தெரீலியே  தோழர்…  குறுக்க பேசாம கேளுங்க… பெரியவரு சமாதானப்படுத்தற மாதற ஏதோ சொல்லீட்டுருக்காரு”

எனக்கு இப்போது உம் கொட்டுவதற்கு யோசனையாக இருந்தது

“நம்ம ஃபிரண்டு சும்மா இருக்காம ‘ஏனுங்க ஏதாச்சிம் பிரச்சனைங்களா? உதவி கீணு வேணுமா?’ அப்படின்னு கேட்டுட்டானுங்க “

“இவன் எப்புமே பக்கத்துல இருக்கறவங்க கிட்ட வாய குடுத்து எதயாவது கேப்பானுங்க நேரம் போறதுக்கு “

“உம்மையில உதவியெல்லாஞ் செய்யமாட்டானுங்க எனக்கு நல்லா தெரியிம் “

“பெரியவரு யாராச்சிம் ஏதாச்சிம் கேப்பாங்களான்னு பாத்துட்டுருந்தாப்ள போல “

“அவரு பாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டாப்ள “

“நல்லா வாழ்ந்து கட்ட குடும்பம் “

“கடங்காரனுக தொல்ல”

 “குடும்பத்தோட கெளம்பி வன்ட்டாங்க “

“ஏதாவது வேல வேணும் “

“இவன் நல்லா ஊ..ஊன்னு கதை கேக்கறானுங்னா?”

“ம்ம்….ம்ம்”

“நான் நடுல பூந்து எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணங்கட்ட பேசி அவரு கம்பெனில சேத்து வுட்டன்”

“நாலு பேருமே… செக்கிங்ல ஒருத்தரு, மடிக்கிறது ஒருத்தரு, பண்டலுக்கு ஒருத்தரு, கடைக்கு போறதுக்கு ஒரு ஆளுன்னு செட்டாயிட்டாங்க”

“பெரியவர் வேலை நேரம் போக ,வெளிய மேஞ்சுக்கிட்டுருந்த ஆடு மாடுகள வேடிக்கை பாக்கறது… அதுகளுக்கு தழையப் புடுங்கி போடறதுன்னு இவரா செஞ்சிட்டுருந்திருக்காப்ள… அதுல ஒரு பசுமாட்டுக்கு  வாந்தி பேதின்னு என்னவோ தொந்தரவு இருந்திருக்குமாட்டக்குது …”

“இவரு ரோட்டோரம் தேடித்தேடி அங்கங்க மொளச்சுக்கெடந்த செடியப் பறிச்சு கசக்கி துணில பொதிஞ்சு மொகமூடியாட்டம்  கட்டி வுட்டுருக்காரு அது ரெண்டு மூணு  நாள்ள சும்மா கிண்ணுன்னு ரெடியாயிருச்சு”

“இதையெல்லாம் ஓனர் பார்த்துட்டே இருந்திருப்பாப்ளயாட்டம் இருக்குது”

“பெரியவரே! நீங்க நம்ம தோட்டத்த பாத்துக்கோங்கன்னு சொல்லி தோட்டத்து வீட்டுக்கு குடிபோக சொல்லிட்டாரு”

”அடங்கொன்னியா!”

“பெரியவரு ஊர்ல பெரிய பண்ணக்காரரா இருந்திருப்பாராட்டக்குது”

“இங்க தோட்டத்து வெளச்சல ரெண்டாக்கி ..”

“கால்நடைகள பெருகப்பண்ணி…”

“பார்ரா”

 ” ஆமா தோழர்!    கூடுதலா கெணறு தோண்டி…”

 “நாலஞ்சு வருஷத்துல தோட்டத்த ஜம்முன்னு ஆக்கிட்டாப்ள”

“கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல இருந்த கடனையும் முடிச்சு.. எல்லாத்தையிஞ்செரி பண்ணி  மறுக்கா ஊருக்கே  போய்ட்டாங்க. இத்தன வருசம் கழிச்சு அவரு புள்ளக்கி கலியாணம்னு நம்மளயும்  நாவகம் வெச்சு அழைக்க வந்துருக்காரு தோழர்! “

” அட! பத்திரிக்கையில புள்ளையூட்டுக்காரன்னு என்ர பேரை அடிச்சிருக்காரு தோழர்!”

தோழர்  அவரது உடையாத வலுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் பெருமிதத்தில் அவர் நெஞ்சம் துடிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. 
” மனிதர்களை நமக்குத்தான் அணுகத்தெரீல தோழர். எல்லாருமே அருவாக்கத்திய வச்சுட்டு திரியறதாவே நெனச்சுக்குறோம்”

“போன வாரம் நீங்க கூப்பிடயில ரயில்வே ஸ்டேஷன்ல பார்சல் போட்டுட்ருக்கேன் தோழர் நான் கூப்பிடுறேன்னு சொன்னன்ல”

“ம்ம்…ஆமா….” நான் யோசித்தபடியே ஆமோதித்தேன்.

“அதுவும் பழைய கதைதான்! திருச்சிலருந்து ஒரு அக்கா ரெண்டு பசங்களோட கெளம்பி இங்க வந்துருச்சு “

“புருஷன் பயங்கர தண்ணிவண்டிங்”

“அடி தாங்க முடியாம இந்த பொம்பள, கொழந்தைகள தூக்கிட்டு ரயில்ல வுழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிருக்குது”

“அங்க போயி கொழந்தைக மொகத்த பாத்துட்டு இவனுக்கோசரம் நாம ஏஞ்சாகோணும்? கூடவே இந்த ரெண்டயும் ஏங்கொல்லோணும் ? அதுக என்ன பாவம் பண்டுச்சுன்னு ரயிலேறி வந்திருச்சு”

”அப்பறொம்?”

“இங்க வந்து எங்க கம்பனில சேந்துருச்சு”

”சிறப்பு தோழர்!”

“ரெண்டு பசங்களையும் வச்சுகிட்டு பாவம் அப்படியே வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தது “

“நம்ம கம்பனில ஒரு அண்ணன்.. பேரு சுப்பிரமணி. நாங்க கிண்டலுக்கு சுனாமின்னு  கூப்பிட்டு ஓட்டுவோம்.  ஆச்சு அப்பவே ஒரு முப்பத்தெட்டு பக்கம் ஆயிருச்சு… கலியாணம் இல்லாத கன்னிப்பையன்”

“அந்த திருச்சிக்கார அக்காள சுனாமிகட்ட கண்ணக்காட்டி நாங்க சும்மா நக்கலுக்குப் பேச,  இந்தாளு பயங்கரமா வெக்கத்துல நெளிவாப்ள… ஒரே காமெடியா இருக்கும் தோழர்.. “

”பொம்பள பாவம் ரெண்டு பசங்களயும் வெச்சுகிட்டு தனியா கெடந்து பாடுபடுது தோழர்.. நம்மாளுஞ் சும்மாத்தானே மெஷினோட்டறப்ள… சேர்ந்து இருக்கட்டுமேன்னு நாங்க நெனச்சோம்”

“அதென்னவோ அந்தக்காளுக்கும்  அதே மாதற தோணிருக்கும் போலருக்குது… ரெண்டு பேருக்கும் செட்டாயிப்போச்சு “

”சிறப்பு….மிகச்சிறப்பு”

“சுனாமி ரூம காலி பண்ணிட்டு அந்தக்கா  வீட்டுக்கே போயிட்டாப்ள”

”ஓஹோ”

“பார்க்கறவன் என்ன பேசுவான்…… ஒரு கவலையுங்கெடயாது “

“கம்பனி பசங்களுக்கு அது ஒரு செக்ஸ் புக்கு கதை தானே தோழர் ? அவனுகளுக்கு வேற என்ன தெரியிம்?”

“பொதுப்புத்தி தோழர்”

“அந்தாளுக்கு சைக்கிள்  கூட ஓட்ட தெரியாது தோழர் ! ரெண்டு பசங்களையும்  நடத்தியே சினிமாக்கு கூட்டீட்டு போவாரு”

“அந்தக்காள விட அந்த பசங்க மேல  சுனாமிக்கு பாசம் “

“பேல்பூரி, காளான், தட்டுவடைன்னு தெனமும் பார்சல் கட்டீட்டு போவாப்ள” 

“எங்கிட்ட ஒரு தடவ சொன்னாப்ள… ‘நானெல்லாம் அனாதையாவே செத்து போயிருவேன்னு நெனச்சேன் இரும்பு! எனக்கு கூட ரெண்டு குழந்தைகளும் பொண்டாட்டியும் கெடைச்சிருச்சே? இதுங்களுக்காகவே வாழ்ந்துட்டு சந்தோஷமா செத்துருவேன்டா நானு’ன்னு …என்ன தோழர் இது  ம்ம்? … எப்படி? எனக்கு அப்போ என்னடா இது காஜி காஜிங்கறானுகளே? அந்த உடல்தேவையைக் கடந்துட்டா அந்தப்பக்கம் ஒரு பெரிய ஏரியா இருக்கு போலருக்குதேன்னு தோணுச்சு ” 

தோழர் இடைவெளி விட்டு மௌனமாய் இருந்தார். நான் வெகு நேரம் பேசாமலே இருந்ததால்  பேசப்போவதாக காட்டிக் கொள்ள, தொண்டையைக் கணைத்துக்கொண்டேன்.

 “ஜப்பான்காரங்க கிட்ட ஒரு  பழக்கம் இருக்கு தோழர்!. நல்ல பேரு சொல்வாங்க… மறந்துருச்சு .. உடைஞ்சு சிதறிப்போன  பீங்கான் கோப்பைத் துண்டுகள எல்லாம் சேகரிச்சு வெச்சுகிட்டு கவனமா அதையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஒட்டுறாங்க. ஒட்டுப்போட்ட விரிசல்களோட திரும்பவும் பழைய வடிவத்துக்கு அந்த கோப்பையைக் கொண்டு வந்துடறாங்க. விரிசல்களை மறைக்கறது இல்ல. மாறா அந்த விரிசல்களுக்கு தங்க முலாம் பூசுறாங்க. சுக்கு நூறா உடைஞ்சு சிதறிப்போன அந்த பீங்கான் பாத்திரம் இப்போ தங்க விரிசல்களோட ஒளிருது ,வீட்டு அலமாரிகள்ல அதை வெச்சு  அலங்கரிக்கறாங்க. பிசகுகள, தவறுகள, சறுக்கல்கள எல்லாம் அவங்க கொண்டாடுறாங்க. தவறுகளயோ, குறைகளயோ சரி செஞ்சுகிட்டு  நிறைவாக்குறதுதான் வாழ்க்கைங்கறத புரிஞ்சுக்கவே இப்படிச் செய்றாங்க போல, சுப்பிரமணி உடைஞ்சு போன அந்தப் பொண்ணுமேல படிஞ்ச தங்கம் தோழர்! நாம அவங்ககிட்ட பேச முடிஞ்சா இன்னும் அருமையா இருக்கும் “என்று சொல்லி முடித்தேன்.

” தோழர்!….. முழுசா கேளுங்க ! கத இன்னும் முடியல” என்றார் இரும்பு.”காலம்  எப்படியெல்லாம் மாத்தி மாத்திப்போடுது பாருங்க”  

நான் மறுபடியும் மௌனத்தை கைக்கொண்டேன்.

“திருச்சிக்கார அக்காளோட பெரிய பையன் படிச்சு  ஐ டி ஃபீல்டுக்கு போயிட்டான். கர்நாடகாவுல வேலை கிடைச்சிருச்சு”

“பெரியவன் போனானா? அவனுக்கு சாப்பாடு செஞ்சு போட இந்தக்காவும் போயிருச்சு. இங்க திலுப்பூர்ல சின்னவனும், சுனாமியும் தங்கி சமைச்சு, சாப்பிட்டு வேலைக்கு போயிட்டுருந்தாங்க.பெரியவனுக்கு அங்க நல்ல சம்பளம் வரவும், சின்னவனையும் கூப்பிட்டுட்டான். ஓ… இவங்க நம்மள கழட்டிவுடறாங்கன்னு புரிஞ்சிகிட்டு சுனாமி  தண்ணிய போட்டு அப்படியே சும்மா சுத்திட்டு இருந்தாப்ள.பழையபடி அனாதையாயிட்டேன் இரும்புன்னு சொல்வாப்ள”

“அடப்பாவமே”

“கண்ணீர் மட்டும் நிக்காம போயிட்டே இருக்கும் தோழர்,,,   கண் கொண்டு பாக்க முடியாது” 

இரும்பு அழுகிறாரோ என்று எனக்கு சந்தேகம்.

“ஆனா அவங்கள பத்தி யார் கிட்டயும் ஒரு வார்த்தை  தப்பா பேச மாட்டாப்ள. போன வாரம் சின்னவன் வன்ட்டான்”

மொட்டை மாடிக் காற்று சிலீரென்று  முகத்தை வருடியது.

“வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ‘எங்கூட கிளம்பு சுனாமி’ங்கறான். இந்தாளு, ‘இல்ல அது நல்லா இருக்காது’ன்னு சொல்றாப்ள.பெரியவனுக்கு கல்யாணம் பேசணும் நீ இல்லாம எப்படினு அவன் கேட்டான் சொந்தக்காரங்க என்னை யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது? அது நல்லா இருக்காது” 

“எவனாச்சும் வந்து கேட்டா எங்க கிட்ட சொல்லு அதெல்லாம் நானும் எங்க அண்ணனும் பார்த்துக்கறோம்னான் பாருங்க  கதாநாயகன் மாதற..அங்கே எங்கம்மா வாயத்தொறந்து சொல்லலன்னாலும் அதனால இருக்க முடியல எளச்சு எலும்பாப்போச்சு”

“எங்களாலயே இருக்க முடியலய்யா உன்ன விட்டுட்டு “

“நீ என்ன இங்கயே இருந்துர்லாம்னு நினைச்சியாக்கும்? சுனாமி இப்ப கிளம்பப் போறியா இல்லையா ?”

“அட உங்க சொந்தக்காரன் யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ?” 

“சுனாமி திரும்பத்திரும்ப கேட்டதுக்கு அந்த பையன் சொல்றான் தோழர்.. “

“எங்க அம்மாவோட லவ்வர்ன்னு சொல்லிக்கிறோம் நீ கிளம்பி வாய்யா மூடீட்டு”

“தோழர்! சத்தீமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு தோழர் ..அப்புறம் நான் தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி ரயில்ல பார்சலா போட்டு அனுப்பி வெச்சுட்டு வந்தேன் “

பிறகு நான்  பேச்சை மாற்ற வேண்டி,” ஏன் தோழர்? கல்யாண பத்திரிகை வைக்க வந்தாரே? அந்த பெரியவர்! அவர் குடும்பத்துக்கு உதவணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு?  உங்க நண்பர் தானே பேசிட்டு இருந்தாரு நீங்க எதனால நடுவுல புகுந்தீங்க? என்று கேட்டேன் .

அவர் சட்டென்று சுனாமியின் கதைக்குள் இருந்து வெளியே வந்தார் .

“அது வந்து தோழர் ….அவரு பேசும்போது அவங்க ஊரோட பேரை சொன்னாரு தோழர்! அவங்க ஊரோட பேரைப்பாருங்க ‘அழகிய நிலமங்கலம் ! ‘ தோழர் ! ‘அழகிய நில மங்கலம்’

ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி திருத்தமாக உச்சரித்தார்.

“ரொம்ப அழகா இருந்தது தோழர்” இந்த மாதிரி பேரு வச்ச ஊரிலிருந்து ஒரு குடும்பம் வந்து கஷ்டப்படணுமான்னு தோணுச்சு “என்றார். 

எனக்கு ஏதோ நிறைந்து விட்டது போலிருந்தது. 

அவரிடம் ‘திரும்பவும் பேசுவோம் தோழர், கூப்பிடறேன்’ என்று பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது ‘அழகிய நில மங்கலம்’ என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன்.
 

https://akazhonline.com/?p=7365

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதைக்குள் கதைகள்.

நல்லூர் எனது ஊர் என்று சொன்னால் கூட தோழர் உதவுவார் என்று நினைக்கிறேன்.

தோழர் இரும்பானாலும் இதயம் மெழுகு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kavi arunasalam said:

கதைக்குள் கதைகள்.

நல்லூர் எனது ஊர் என்று சொன்னால் கூட தோழர் உதவுவார் என்று நினைக்கிறேன்.

தோழர் இரும்பானாலும் இதயம் மெழுகு.

இப்படியான ஏதோ ஒரு காரணத்தை, ஒரு விடயத்தை வைத்து சில மனிதர்களை சட்டென்று பிடித்து விடுகின்றது........கொள்கைகள் உருகி ஓடி விடுகின்றன போலும் அந்தக் கணங்களில். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிக்கப் படிக்க ஒவ்வொரு சம்பவமும் மயிலிறகால் இதயத்தை வருடுவதுபோல் இதமாய் இருக்கு....... ஓரிரு நாட்களுக்காவது இந்தக் கதை மனசுக்குள் சுழன்று கொண்டிருக்கும்.......!  🦚

நன்றி ரசோதரன்.......!

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதிர்கன்னி [மலர்குழலி]     இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இயற்கையின் அழகால் சூழப்பட்ட அந்த கிராமத்திலேயே கழித்தார்.   "அல்லிப்பூ தாமரைப்பூ ஆயிரம் பூப்பூத்தாலும் கல்யாணப் பூவெனக்குக் காலமெல்லாம் பூக்கலையே!"   அப்படித்தான் வாழ்க்கை போய்விட்டது. பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போனாள். சிறு வயதிலிருந்தே, மலர்குழலி ஆர்வமுள்ள மனதையும், கற்றலில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். படிப்பில் விடாமுயற்சியுடன் இருந்த அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இருப்பினும், சூழ்நிலைகள் அவளது அபிலாஷைகளுடன் ஒத்துப்போகவில்லை, அவள் ஊனமுற்ற. கொஞ்சம் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தின் பாரங்களாலும் படிப்பை மேல் தொடரமுடியாமல் போய்விட்டது.   என்றாலும் வாழ்க்கை அளிக்கும் எளிய இன்பங்களில் ஆறுதலையும் மனநிறைவையும் கண்ட அவள், தனது பிரகாசமான புன்னகை, கனிவான இதயம் துணை கொடுக்க, தாயிடம் இருந்து இளமையில் பெற்ற விதிவிலக்கான சமையல் திறன் கைகொடுக்க, அதையே ஒரு தொழிலாக்கி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களை தனது வீட்டு வாசலுக்கு இழுத்து, வீட்டில் இருந்தே தங்கள் தேவைக்கு உழைக்கத் தொடங்கினாள்.   வருடங்கள் செல்ல செல்ல, மலர்குழலியின் சுவையான உணவு வகைகளுக்கான நற்பெயர் வளர்ந்தது, மேலும் அவளது ருசியான உணவு மற்றும் ஆறுதலான கூட்டத்தை நாடும் கிராம மக்கள் கூடும் இடமாக அவளது வீடு மாறியது. அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதிற்குள் சில வேளை, அவளுடைய உணர்வுகள் போராடுவதும் உண்டு, மலர்கள் அணிந்த கொண்டையை உடையவள் என்று பெற்றோர் இட்ட பெயர், பெயர் அளவிலேயே வாழ்ந்து, தனிமையான வாழ்க்கை அமைந்த போதிலும், அதை தனக்குள்ளேயே அடக்கி, அவள் வெளியே அதை காடடாமல் மகிழ்வு போல வாழ கற்றுக்கொண்டாள்.   வாழ்க்கை அவளை தன் வழியில் அழைத்துச் சென்றாலும், மலர்குழலி அறிவு மற்றும் சுய முன்னேற்றத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒருபோதும் இழக்கவில்லை. அவள் மிகவும் நேசித்த புத்தகங்களின் ஒரு சிறிய தொகுப்பை அவள் வைத்திருந்தாள், அவள் இரவுகளை அவற்றின் பக்கங்களில் மூழ்கடித்தாள். பலதரப்பட்ட தலைப்புகளில் உரையாடும் அவளது திறன், அவளின் உணவுக்கு வரும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து மரியாதையையும் பாராட்டையும் பெற்றது.   மலர்குழலியின் இல்லமானது அறிவுரையை நாடுபவர்களுக்கு அல்லது வெறுமனே கேட்கும் காதுகளுக்கு ஆறுதல் மற்றும் ஞானம் தரும் இடமாகவும் மாறத் தொடங்கியது. வயிற்றுப் பசிக்கு உணவையும், அறிவு பசிக்கு நல்ல கருத்துக்களையும் கொடுத்தது. அதனால் அவர் கிராமத்தின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக ஆனார், சர்ச்சைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவினார், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார், மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவளுடைய அமைதியான இருப்பும், எந்தச் சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு பொருத்தமான தீர்வு காணும் திறனும் அவளைப் பலருக்கு நங்கூரமாக மாற்றியது.   ஒரு நாள், அகக்கடல் என்ற நபர் அந்த கிராமத்திற்கு தனது ஆசிரியர் வேலையில் மாற்றம் கிடைத்து வந்தார். அவர் ஒரு திறமையான இசைக்கலைஞரும் கூட. அவர் ஏற்கனவே ஒரு ஆசிரியை ஒருவளை திருமணம் செய்து இருந்தாலும், கொரோனா நோயினால் அவரை பறிகொடுத்தது மட்டும் அல்ல, பிள்ளைகளும் இல்லாததால், தனிக்கடடையாகவே அங்கு தனது புது ஆசிரியர் பணியை தொடங்கினார். மலர்குழலியின் சமையல் திறமை மற்றும் அவளது துடிப்பான இயல்புகளைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அவளைச் சந்திக்க, மற்றும் தனது இரவு, வார விடுமுறை நாள் உணவுகளை அங்கு சாப்பிட முடிவு செய்தார். அவளுடைய அடக்கமான இல்லத்தில் அவன் அடியெடுத்து வைத்த கணம், மசாலா வாசனையும் சிரிப்பொலியும் அவனை வரவேற்றன.   மலர்குழலிக்கும் அகக்கடலுக்கும் நாளாக ஆக ஒரு நல்ல புரிந்துணர்வு நட்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, கனவுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசினர். அகக்கடல் தனது கிட்டார் மீது தனது ஆத்மார்த்தமான சுருதிகளை வாசித்தார், மலர்குழலி தனது வயதை பெரிதாக பொருட்படுத்தாமல் அதற்கு ஏற்றவாறு அபிநயங்கள் பிடித்து மகிழ்வார். அவளும் அவனும் ஒத்த வயதில் இருப்பதாலும், தன்னை மாதிரியே ஒரு தனிமை அவனிடமும் இருப்பதாலும், அவள் வெளிப்படையாகவே அவனுடன் பழகுவதில் பிரச்சனை இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்களின் தொடர்பு ஆழமடைந்தது, மேலும் கிராமவாசிகள் அவர்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பை கவனிக்காமல் இருக்கவும் இல்லை.   அகக்கடல் அந்த கிராமத்துக்கு வந்து, ஒரு ஆண்டால் மலர்குழலியின் பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் காலமானார்கள், இதுவரை பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற துணிவில் இருந்த அவளுக்கு, தனிமை மேலும் பெரிதாகியது. சிலர் அவளை இப்ப வெளிப்படையாக ஒரு முதிர்கன்னி, திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணாக பார்க்க தொடங்கினர். அவளது வீடு இன்னும் உணவுக்கு திறந்திருந்தது, என்றாலும் இப்ப அங்கு வருபவர்களின், சிலரின் போக்கில் சில மாற்றம் காணப்பட்டது. அது அவளுக்கு தொடர்ந்து சமையல் செய்து உணவு பரிமாறுவது ஒரு இடைஞ்சலாக மாறிக்கொண்டு இருந்தது.   அதைக்கவனித்த அகக்கடல், அங்கேயே அவளுக்கு துணையாக தங்க முடிவு செய்தான். நாட்கள் செல்ல செல்ல மலர்குழலி மற்றும் அகக்கடலின் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கனவுகளையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் சகவாசம் அடைந்தனர். இளமை கடந்து இருந்தாலும், அவர்களின் இதயம் இளம் பருவத்தினர் போல, ஒரே அலைநீளத்தில் எதிரொலித்தது. மலர்குழலி தன் எல்லைக்கு அப்பாற்பட்டதாக நீண்ட காலமாக நம்பியிருந்த உணர்வுகளை, தான் இப்ப அனுபவிப்பதை உணர்ந்தாள். என்றாலும் சமூக அமைப்பையும் மதிக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும். எனவே ஊரறிய, அவர்களின் முன்னாலையே அவளின் கையை பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், ஒரு மாலை நேரத்தில், சூரியன் வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைந்தபோது, அகக்கடல் தனது கிட்டார் மெல்லிசை மூலம் மலர்குழலியிடம் தனது காதலையும் திருமணம் செய்யும் எண்ணத்தையும் ஒப்புக்கொண்டார். மலர்குழலியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவள் ஒரு காலத்தில் இளமைக்காகவே காதல் ஒதுக்கப்பட்டது என்று எண்ணியவள், அது தவறு என்பதை உணர்ந்தாள். இவர்களது காதல் கதை கிராமத்தில் கிசுகிசுக்கப்பட்ட கதையாக மாறினாலும், காதலுக்கு வயது இல்லை என்பதற்கான அடையாளமாக அது அமைந்தது.   ஒரு நாள், சிறு குழந்தைகள் சிலர் அவளது புத்தகங்களின் தொகுப்பைக் தற்செயலாக கண்டுபிடித்தனர். அந்த பக்கங்களில் உள்ள கதைகள் மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்ட அவர்கள், பாடசாலையால் வந்தபின் தங்கள் மாலை நேரத்தை அதில் செலவிடத் தொடங்கினர். ஆசிரியையாக வேண்டும் என்ற மலர்குழலியின் கனவு உண்மையில் இறக்கவில்லை; வேறு வடிவமாக பிள்ளைகளூடாக வெளிவரத் தொடங்கியது.   குழந்தைகளின் உற்சாகம் மலர்குழலியில் ஒரு புதிய தீப்பொறியைப் பற்றவைத்தது. அவள், புது கணவர் அகக்கடலின் உதவியுடன் ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் முறைசாரா வகுப்புகளை நடத்தத் தொடங்கினாள். குழந்தைகளுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல் மற்றும் கருணை மற்றும் பச்சாதாபத்தின் முக்கியத்துவம் பற்றி கற்பித்தாள். கிராமப் பெரியவர்கள் விரைவில் அவளது முயற்சிகளை அங்கீகரித்து, தங்களின் ஆதரவை வழங்கினர், ஒரு சிறிய சமூக நூலகம் மற்றும் கற்றல் மையத்தை நிறுவ உதவினார்கள்.   மலர்குழலியின் நூலகம் முழு கிராமத்திற்கும் அறிவு மற்றும் உத்வேகத்தின் மையமாக மாறியது. படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் எல்லா வயதினரும் அவளது தாழ்மையான இல்லத்திற்கு திரண்டனர். அவள் கற்பித்த குழந்தைகள் தாங்களாகவே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வளர்ந்தனர், அவர்களின் பாதைகள் மலர்குழலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டன.   வருடங்கள் செல்லச் செல்ல மலர்குழலியின் இருப்பு அவளைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டே இருந்தது. அவளின் முதிர்கன்னி வாழ்க்கை முற்றுப்புள்ளிக்கு வந்தது மட்டும் அல்ல, அவளின் மற்றோரு ஆசையான ஆசிரியர் பணியும் ஒரு விதத்தில் நிறைவேறியதுடன், இரட்டைக் குழந்தைகளின் தாயாகவும் இன்று மகிழ்வாக வாழ்கிறாள். மலர்குழலியின் கதை அவளது கிராமத்திற்குள் மட்டுமல்ல, இலங்கையில் எங்கும் பரவி அவளுக்கு புகழ் சூடியது.   என்றாலும் அவளின் வாழ்வு சவால்கள் இல்லாமல் இல்லை, ஏனென்றால் சமூகம் அதன் தப்பெண்ணங்களைக் கொண்டிருந்தது, ஆனால் மலர்குழலியும் அகக்கடலும் அவர்களை நெகிழ்ச்சியுடனும், விதிமுறைகளின்படியும், இணைந்து வாழும் உறுதியுடனும் எதிர்கொண்டனர். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் காதல் மலரலாம், வயது என்பது வெறும் எண்தான் என்பதை கிராமவாசிகளுக்குக் கற்பித்த அவர்களின் கதை பலருக்கு உத்வேகமாக அமைந்தது.   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு! இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1413421
    • கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413381
    • ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்! ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார். 2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1413409
    • செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை. 1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413449
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.