Jump to content

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

44.jpg?resize=680,375&ssl=1

210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்-அரசாங்கம் நடவடிக்கை!

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2012 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் கட்டளைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட 15 தீவிரவாத அமைப்புக்களுக்கும் அவற்றடன் தொடர்புடைய 210 பேரினது நிதி, ஏனைய நிதிச் சொத்துக்களை முடக்கி குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்குவிதிகளின் கீழ், இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE), தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (Tamils Rehabilitation Organisation – TRO), உலக தமிழர் இயக்கம் (WTM), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), உலக தமிழர் நிவாரண நிதியம் (WTRF), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) ஆகிய புலம்பெயர் அமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், HQ Group, தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) , ஜமாதே மிலாதே இப்ராஹீம் (JMI), விலயாத் அஸ் செய்லானி (WAS), கனேடியன் தமிழ் தேசிய பேரவை (NCCT), தமிழ் இளைஞர் அமைப்பு (TYO), டருள் அதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM), Save the Pearls போன்ற அமைப்புகளும் முடக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1385906

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி

04 JUN, 2024 | 04:50 PM
image

இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/185298

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மோகன் said:

முழுமையான வர்த்தமானி அறிவித்தல்
தமிழில்
ஆங்கிலத்தில்

அண்ணை பிடிஎப் ஐ யாழில் இணைக்கலாமா?

இணைக்கலாமெனில் எவ்வாறு என்று சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

13 hours ago, ஏராளன் said:

அண்ணை பிடிஎப் ஐ யாழில் இணைக்கலாமா?

இணைக்கலாமெனில் எவ்வாறு என்று சொல்லுங்கோ.

ஆவணங்கள் தரவேற்றும் வழிமுறை உறுப்பினர்களுக்கு கொடுக்கப்டவில்லை. எதிர்காலத்தில் இதுபற்றி யோசிக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கவிஞர் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டார்

Published By: DIGITAL DESK 7   06 JUN, 2024 | 10:44 AM

image
 

தமிழ் வாசகர்கள் மத்தியில் மன்னாரமுது அஹ்னாஃப் என நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் பெயரை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் அவரது பெயரை அரசாங்கம் சேர்த்திருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் 2024 மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2387/02 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 210 நபர்கள் மற்றும் 15 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

“காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டதும் 2023ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 2335/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டதுமான 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின், குழுக்களின் மற்றும் உருவகங்களின் பட்டியலானது அதற்கான அட்டவணைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.” என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 8, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தன.

இதற்கமைய, கடந்த வருடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீம் உட்பட 91 பேரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு, அஹ்னாப் ஜசீமின் பெயர் முதன்முறையாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

எந்த காரணமும் கூறாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீமின் பெயரைச் சேர்த்தமையால், தொழில் ஒன்றைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையால் அவர் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/185417

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும்,  யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா?  விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.
    • ஆகா ஆகா மேடையில் இருந்தவரை மேசைக்கு அனுப்பப் போறாங்க. ஊரில் சிலருடன் பேசியபோது என் பி பி யின் போக்கைப் பலரும் முக்கியமாக இளைஞர்கள் விரும்புவதாகவும் அடுத்த தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக இணையாவிட்டால் வடக்கிலேயே 2-3 ஆசனங்களை என்பிபி தூக்கும் என்கிறார்கள்.
    • அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
    • சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன். 
    • மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு, லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது, பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு, பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்? வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஈரான். பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது, தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது. கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம். இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.