Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7   06 JUN, 2024 | 05:15 PM

image

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) தொடக்கம் வியாழக்கிழமை வரை (13) யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

குறித்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் பிரதிச் செயலாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) கிளிநொச்சி தொகுதி பிரதம அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் தலைமையில் கிளிநொச்சி பாரதி வித்தியாலயம், யாழ்ப்பாண தொகுதி பிரதம அமைப்பாளர் வெற்றிவேலு யஜேந்திரன் தலைமையில் வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் தொகுதி பிரதம அமைப்பாளர் அ. கிருபாகரன் தலைமையில் சென். பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (10) பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். அன்றைய தினம் காங்கேசன்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தலைமையில் அளவெட்டி அருணோதயா கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். 

எதிர்வரும் செவ்வாய்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர், ஊர்காவற்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் தலைமையில் நெடுந்தீவு மகாவித்தியாலம், மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் அனோஜன் அருந்தவநாதன் தமையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, புனித. ஹென்றியரசர் கல்லூரி இளவாலை ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.

எதிர்வரும் புதன் (12) கோப்பாய் தொகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். தொடர்ந்து வட்டுக்கோட்டை தொகுதி பிரதம அமைப்பாளர் சதாசிவன் தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார். 

மேலும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், பஸ் வண்டி ஒன்றை அன்பளிப்பு செய்யவுள்ளார். 

எதிர்வரும் வியாழக்கிழமை (13) சாவகச்சேரி தொகுதி பிரதம அமைப்பாளர் கந்தையா மயில்வாகனம் தலைமையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் தொகுதி அமைப்பளர் மொகமட் காசிம் தலைமையில் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.

பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோருடன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பல சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது விஜயத்தின்போது, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.

https://www.virakesari.lk/article/185465

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலா ? சஜித்தா ? நல்லாத்தான் இருக்கு , வாங்கிறதை வாங்கிட்டு சரியான தேர்வை மக்கள் செய்ய வேண்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயங்கமாட்டேன் - சஜித் பிரேமதாச

09 JUN, 2024 | 06:21 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் பேசுவதற்கே சிலர் அச்சமடைகின்றனர். ஆனால் நான் அதற்கு தயங்குபவன் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் 13ஆவது திருத்தம் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப செயற்றிட்டத்தின் கீழ் கிளிநொச்சி, பாரதி வித்தியாலயத்துக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை (9) கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு உறுதியளித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் பொய்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கூறிவருகிறது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தம் நிச்சயம் அமுல்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்த தயங்கப் போவதில்லை.

இதன் மூலம் இப்பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும். அடிப்படை உரிமைகள் என்ற அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும்.

13ஆவது திருத்தம் குறித்து பேசும்போது பல தலைவர்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு கேட்காதது போல் பாசாங்கு செய்வர். அல்லது அது பற்றிய பேச்சினை உதாசீனப்படுத்துவார்கள். ஒரு சிலர் அது தொடர்பில் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர். இவ்வாறு பெரும்பாலானோர் சந்தர்ப்பவாதிகளாக நடந்துகொண்டாலும் நாம் இவ்விடயத்தில் நேர்மையாகவே நடந்துகொள்கின்றோம்.

எனவே எவ்வித பேதமும் இன்றி நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். பல்வேறு அரசியல்வாதிகள் வடக்கிற்கு வந்து அரசாங்கத்தின் வளங்களை பகிர்ந்தளித்தாலும், பல்வேறு நன்கொடையாளர்கள் வழங்கிய உதவிகளையே நான் வழங்கி வருகிறேன். எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய கட்சிகள் பணியாற்றாது இருந்தாலும், நானும் எனது குழுவும் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றோம்.

இனவாதத்தைப் பரப்பி தமது வாக்குகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தமது வாக்குகள் குறித்து சிந்திப்பவர்களே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், நான் அவ்வாறு செயற்படவில்லை.

வட மாகாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டின் தலைவரான பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து தருவேன் என உறுதியளிக்கிறேன்.

இப்பிரதேசத்தில் தனியான கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைத்துத் தரப்படும். இந்தியாவில் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு நாட்டிலும் அதுபோன்ற நிறுவனங்களை நிறுவி, சர்வதேச தரத்தில் அமைந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் நிறுவப்படும். இதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்பைக் பெற்றுக்கொள்வோம் என்றார். 

IMG20240609100547.jpg

IMG20240609095017.jpg

IMG20240609095523.jpg

IMG20240609114602.jpg

https://www.virakesari.lk/article/185686

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது இதைத்தானோ?

முன்னுரிமையோடு குந்தி இருக்கவும் விட்டிருக்கிறார்கள். சபாஸ்… பேஷ…பேஷ்…

IMG20240609114602.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சென். சார்ள்ஸ் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித் பிரேமதாச

10 JUN, 2024 | 06:40 PM
image
 

யாழ்ப்பாணம் சென். சார்ள்ஸ் மகா வித்தியாலய்த்துக்கு ஸ்மார்ட் வகுப்பறை நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைக்கு நேரில் சென்று, ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன், 05 கணினிகள், ப்ரின்டர் மற்றும் ஸ்மார்ட் போர்ட் (smart board) ஆகியவற்றையும் வழங்கினார். 

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் ஆங்கில மொழி புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.

அத்துடன் பாடசாலைக்கு அரங்குடன் கூடிய இரட்டை மாடி கட்டடம் ஒன்றினை அமைத்து தருவதாக உறுதியளித்த எதிர்க்கட்சி தலைவர், நடனம் கற்கும் மாணவிகளுக்கான நடன உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியினையும் வழங்கினார். 

2__8_.jpg

2__6_.jpg

2__5_.jpg

2__4_.jpg

யாழ். சென். சார்ள்ஸ் மகா வித்தியாலயத்துக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை கையளித்த சஜித் பிரேமதாச | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வடமராட்சி கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலையின் திறன் விருத்தி வகுப்பறை சஜித்தினால் திறப்பு!

Published By: DIGITAL DESK 7   10 JUN, 2024 | 03:00 PM

image

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் விருத்தி வகுப்பறை இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திறன் விருத்தி வகுப்பறையை திறந்து வைப்பதற்க்காக வருகை தந்த இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித்  பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கு வெற்றிலை கொடுக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர் அ.பவானந்தன் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் உமா சந்திரா பிரகாஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் அமைப்பாளர் தொழிலதிபர் கிருபாகரன், வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் மு.சதாசிவம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இத் திட்டத்தின் கீழ் திறன் விருத்தி தொலைக்காட்சி, 5 கணனிகள் என்பன வழங்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

IMG_20240610_112829.jpg

IMG_20240610_112704__1_.jpg

IMG_20240610_113417__1_.jpg

IMG_20240610_114530__1_.jpg

IMG_20240610_113121__1_.jpg

https://www.virakesari.lk/article/185744

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பிரேமதாச நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம்!

11 JUN, 2024 | 06:52 PM
image
 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஸ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார்.

https://www.virakesari.lk/article/185850

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“ காணொளி வேண்டாம்” மிரட்டிய சஜித்தின் பாதுகாப்பாளர்கள்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை புதன்கிழமை (12) வழங்கியுள்ளார்.

பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை காணொளி மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

image_e643af3608.jpg

அப்போது, உடனே அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பு. கஜிந்தன்

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கணள-வணடம-மரடடய-சஜததன-பதகபபளரகள/71-338867

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜித்துடன் கைகோர்த்த அங்கஜன்

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். 

வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் திறன் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை (10) நடைபெற்றது.  இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர்சஜித் பிரேமதாச கலந்து கொண்டு, திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். 

நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், 

"மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான இப்பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.

இதன்போது, எமது மக்களின் கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் இலக்கில் நாம் இருவரும் பயணிப்பதே எமக்கிடையேயான ஓர் ஒற்றுமையாக உள்ளது.

அதேவேளை, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், அதனை வரவேற்பதுடன் எமது மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதனை நாம் வரவேற்போம் "  என தெரிவித்தார்.

எம்.றொசாந்த் 

image_903e554779.jpgimage_cce0f858e2.jpgimage_bd7969641f.jpg

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சஜித்துடன்-கைகோர்த்த-அங்கஜன்/71-338704

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

சஜித்துடன் கைகோர்த்த அங்கஜன்

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். 

வடமராட்சி கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் திறன் வகுப்பறையை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை (10) நடைபெற்றது.  இந்நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர்சஜித் பிரேமதாச கலந்து கொண்டு, திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். 

நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், 

"மாவட்ட கல்வி அபிவிருத்திக்கான இப்பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன்.

இதன்போது, எமது மக்களின் கல்வியை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் இலக்கில் நாம் இருவரும் பயணிப்பதே எமக்கிடையேயான ஓர் ஒற்றுமையாக உள்ளது.

அதேவேளை, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், அதனை வரவேற்பதுடன் எமது மக்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அறிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதனை நாம் வரவேற்போம் "  என தெரிவித்தார்.

எம்.றொசாந்த் 

image_903e554779.jpgimage_cce0f858e2.jpgimage_bd7969641f.jpg

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சஜித்துடன்-கைகோர்த்த-அங்கஜன்/71-338704

அங்கஜன்… போன தேர்தலுக்கு நாமல் ராஜபக்சவுடன் கை கோர்த்து,  திருநெல்வேலி சந்தை எல்லாம் கூட்டிக் கொண்டு திரிஞ்சவர்.

  • கருத்துக்கள உறவுகள்

448342550_862982785866695_89853628136996

 

448223052_862983382533302_67957844378942

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2024 at 04:41, Kavi arunasalam said:

பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது இதைத்தானோ?

முன்னுரிமையோடு குந்தி இருக்கவும் விட்டிருக்கிறார்கள். சபாஸ்… பேஷ…பேஷ்…

IMG20240609114602.jpg

பலத்த வரவேற்புபோலிருக்கிறதே! 

On 11/6/2024 at 00:24, பிழம்பு said:

நடனம் கற்கும் மாணவிகளுக்கான நடன உடைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியினையும் வழங்கினார். 

 சஜித் தனது நடன இசைக்குழுவை அழைத்து வரவில்லையோ?

On 14/6/2024 at 02:37, ஏராளன் said:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார். 

 

On 14/6/2024 at 02:21, ஏராளன் said:

, உடனே அங்கிருந்த சஜித்தின் பாதுகாப்பு பிரிவினர் ஊடகவியலாளர்களின் கேமராவினை கையால் தட்டி புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என அச்சுறுத்தியுள்ளனர்.

சிவ பூசையில் கரடி பூந்த மாதிரி இவர் ஒருவரும், பாதுகாப்புப்படையினரின் அநாகரிக செயலும் எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என்றே கட்டியம் சொல்கின்றன. ஆமா...... முக்கியமான ஒரு விருந்தினரை காணவில்லையே? ஓ ....அவரது எஜமானின் வருக்கைக்காக காத்திருக்கிறாரோ தெரியவில்லை?  

 

On 12/6/2024 at 01:41, ஏராளன் said:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று செவ்வாய்க்கிழமை (11) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.

குருந்தூருக்கும் வழிபடப் போவாரா? தமிழரின் வாக்கு வேண்டுமென்றால் நழுவி விடுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களை அடிப்படையாக கொண்டு தாம் யாழ் மக்களுக்கு பொருட்களை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாறாக சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தமது கட்சி அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே, யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல்

 

சிறிலங்காவின் அரசியலமைப்பில் இரண்டு வகையான அடிப்படை உரிமைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அரசியல் மற்றும் குடிசார் உரிமைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித் | Sajith Visit Jaffna Presidential Election Srilanka

 

இவை மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருளாதார, சமூக, சமய, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட மேலும் பல அடிப்படை உரிமைகளாக பெயரிடப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும். இந்த பின்னணியில், நான் வீணாக பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் உதவிகளை வழங்கவில்லை. கல்வி மற்றும் மருத்துவம் எனும் மக்களின் அடிப்படை உரிமைகளை பூர்த்தி செய்யும் வகையில் நான் குறித்த பொருட்களை வழங்கி வருகிறேன். தேர்தல்களை அடிப்படையாக கொண்டு நான் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு நான் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தேன். அந்த ஆண்டு இலங்கையில் எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நான் கொண்டுள்ளேன்.

இன-மத வேறுபாடுகள்

 

அவை வெறும் பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. நான் இங்கு தொழிற்சாலைகளை திறந்து வைப்பேன். வேலைவாய்ப்புக்களுடன் இந்த தொழிற்சாலைகள் திறந்து கொடுக்கப்படும். தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை மாத்திரம் நான் திறந்து வைக்க மாட்டேன்.

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித் | Sajith Visit Jaffna Presidential Election Srilanka

 

அத்துடன், 13 ஆவது திருத்தம் நேற்று அல்லது இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதல்ல. பல வருடங்களாக இந்த திருத்தம் தொடர்பில் பேசப்படுகிறது. எமது சட்டபுத்தகங்கத்தில் இந்த திருத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் குறித்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏன் இவ்வளவு சிக்கல்?

இலங்கையில் உள்ள மக்களுக்கிடையில் காணப்படும் இன-மத வேறுபாடுகளே இதற்கு காரணம். இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மதங்களையும் இனங்களையும் தாண்டி, இலங்கையர்களாக நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

மாறாக புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்துவதன் மூலமும் அரசியலமைப்பின் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாது. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது.

https://ibctamil.com/article/sajith-visit-jaffna-presidential-election-srilanka-1718275721?itm_source=article

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.