Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                    பளார்

               (The Slap - थप्पड़)         

                           - சுப.சோமசுந்தரம்                             

         தலைப்பைப் பார்த்ததும் எது பற்றியதாக இருக்கும் என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தற்போது சில நாட்களாய்ப் பரபரப்பாகப் பேசப்படும் கன்னத்தில் 'கை வைத்த' சமாச்சாரம்தான் என்று இந்தியத் திருநாட்டில் விவரம் அறிந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். சண்டிகர் விமான நிலையத்தில் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த 'பளார்' சத்தம் தென்குமரியில் விவேகானந்தர் பாறையில் பட்டு எதிரொலித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவிற்கு அறைவிட்ட குல்விந்தர் கவுர் எனும் பெண்மணி சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர். அடித்ததற்கு அவர் சொன்ன காரணம், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கங்கனா ரனாவத் வழக்கமான தனது அதிகப் பிரசிங்கித்தனத்துடனும் அடாவடித்தனத்துடனும் தரக்குறைவாகப் பேசியது என்பது; அது மட்டுமல்லாமல் அப்போராட்டத்தில் குல்விந்தர் கவுரின் தாயாரும் இருந்ததால், கங்கனாவின் பேச்சு தனிப்பட்ட முறையில் மனதளவில் அவரைப் பாதித்தது என்பதுவும். சங்கிகள் மற்றும் யோக நிலை (!) எய்திய மகான்களைத் தவிர நம்மைப் போன்ற சாமானியருக்கெல்லாம் குல்விந்தர் கவுரின் செயல் நியாயமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் அவர் ஒரு வீரப் பெண்மணியாக, சிங்கப் பெண்ணாக சமூக வலைத்தளங்களில் நம்மிடமெல்லாம் பாடல் பெற்றார்.
               மேற்கூறிய நிகழ்ச்சியின் சங்கிலித் தொடராக சமீபத்திய சில நிகழ்வுகளும் நினைவுத்திரையில் அணிவகுப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. மணிப்பூர் கொடுமைகளின் ஆரம்பக் கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் - அங்கு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று. கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான திரு. பத்ரி சேஷாத்திரி, "நீதிபதி துப்பாக்கியுடன் மணிப்பூர் சென்று விடுவாரா ?" என்று கிண்டல், இல்லையில்லை நக்கல் செய்திருந்தார். கிண்டல், நக்கல் இவற்றிற்கெல்லாம் ஜனநாயகத்தில் எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் பத்ரி சேஷாத்திரியின் மனதில் உள்ள குரூரத்தை வெளிப்படுத்துவதாகவே அவரது நக்கல் அமைந்தது என்பதைப் பெருவாரியான மக்கள் சமூகம் உணர்ந்ததால், சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பெருமளவில் கண்டனம் பதிவாகியது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்தது தமிழ்நாடு அரசு. உடனே எழுத்தலகைச் சார்ந்த சிலர் பத்ரியை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினர். "அவர் தவறு செய்து விட்டார். இருந்தாலும் ......." என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஜனநாயகத்தில் கருத்துரிமை பற்றியும் போகிற போக்கில் அவர்கள் குறிப்பிட்டதுதான் வேடிக்கை. இதற்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் 295 A பிரிவினை நீக்க அறிவுலகம் முதல்வருக்கும் பிரதமருக்கும் நீதியரசர்களுக்கும் கடிதம் எழுதலாமே ! அதனை நீக்குவதன் மூலம் மக்களின் மத நம்பிக்கைகளையும் அவர்களின் கடவுளர்களையும் எங்களைப் போன்றோர் எந்தத் தடையுமின்றிக் கிண்டலடித்து மகிழ்வாய் வாழ வழிவகை செய்வதாகுமே ! "That's offensive is not an argument" என்ற கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் (Christopher Hitchens) கூற்றினை மக்கள் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லும் பேரின்பம் எங்களுக்குக் கிடைத்ததாகுமே ! பத்ரி சேஷாத்திரி எழுத்தலகைச் சார்ந்த ஒரே காரணத்திற்காக எழுத்துலகம் அவருக்காக நின்றது நியாயந்தானா ? நம்மைப் போன்ற சாமானியருடன் சேர்ந்து பத்ரியின் கைதை அவர்கள் கொண்டாட வேண்டியதில்லை. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதானே இந்த விஷயத்தில் விவேகமாகத் தோன்றுகிறது !
                அடுத்து கங்கனா ரனாவத்தின் ஆண் வடிவமான சவுக்கு சங்கரிடம் வருவோம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் விசாரணையில் இருக்கும் போதே தேவையின்றிப் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சவுக்கு சங்கர் பேசியதும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாள் என்று அடித்துச் சொல்லி எல்லை கடந்ததும் பேசு பொருளானது. இது தொடர்பாக யூடியூப் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கே உரிய நையாண்டியுடன், "நான் ஒப்பாரி வைத்துக் கொண்டே பேச வேண்டுமா ?" என்று ஆரம்பித்து மனிதாபிமானம் இல்லாமல் தொடர்ந்ததெல்லாம் அவருக்கே உரிய அசிங்கத்தின் உச்சம். இந்நிகழ்வு சவுக்கு சங்கரின் சந்தர்ப்பவாதத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவே ! பின்னர் பொத்தாம் பொதுவாகக் காவல்துறையை விமர்சித்து மாட்டிக்கொண்டார். அதனைக் கை தட்டியோ கை தட்டாமலோ வேடிக்கை பார்ப்பதை விட்டு நம்ம ஆட்களில் (!) சிலர் கருத்துரிமை பேசி ஒரு கேவலமான மனிதருக்கு வக்காலத்து வாங்கியதை என்னவென்று சொல்ல ? "ஓய் சவுக்கு, சிறையில் கை உடைந்ததற்கே அழுகிறீரே ! ஒரு மாணவியின் உயிர் போனதைக் கேலியும் கிண்டலும் செய்து அவளது தாய்க்கு எந்தளவு மனவலியைக் கொடுத்தீர் !" என்று வறுத்தெடுத்த நெட்டிசன்கள் முட்டாள்களா என்ன ! சரி, "உங்களுக்கு இதே வேலையாப் போச்சு !" என்று மேற்சென்று தம்மை இடித்துரைப்பதற்கு அவ்வப்போது நம் தோழர்கள் நமக்கு வழி வைப்பார்கள் போலும் !
             மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளிலும், பத்ரி மற்றும் சவுக்கு விஷயங்களில் தமிழ்நாடு அரசின் மூலமாக வழக்குகள் தொடரப்பட்டன. 'உள்ளம் பதைக்கும்' நல்லோர் ஒதுங்கி நின்று அதனை வேடிக்கை பார்ப்பதும், சங்கிகள் கதறுவதும், சாமானியர்களாகிய நாம் மகிழ்வதும்தானே நியாயம் ! குல்விந்தர் கவுரைப் பொருத்தமட்டில் அவரையும் நம்மையும் உளவியல் ரீதியாகத் தாக்கிய கங்கனா ரனாவத்தின் மீது ஜனநாயக முறையில் வழக்குத் தொடர்ந்து விரைவில் நீதியைப் பெற்றுத் தர நம்மால் முடியுமா அல்லது கங்கனாவின் கன்னத்தில் மாற்றுக் கட்சியின் சின்னத்தைப் (கையைத்தேன் !) பொருத்தி உடனடி நீதி வழங்கும் தீரம் நம்மிடம் உண்டா? இவ்வாறு இருக்கையில் ஒட்டுமொத்த சமூகமும் குல்விந்தர் கவுரின் பக்கம் நிற்பதுதானே இயற்கை நீதி ? குல்விந்தர் கவுர் செய்தது தவறு என்று உங்களுக்குப் பட்டால் பகத்சிங் செய்தவையும் தவறு என்பீர்களா ? ஒன்று நாட்டு விடுதலைக்கானது என்றால், மற்றொன்று சமூக விடுதலைக்கானது.
               இப்போது வீரமங்கை குல்விந்தர் கவுரின் செயலுக்கு இன்னும் எனக்குத் தெரிந்தவரை நமது பாசறையிலிருந்து (!!) எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி. வருங்காலங்களிலும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளில் மௌனம் தொடரட்டும். நாம் ஆசை தீர ஆடுவோமே, பள்ளு பாடுவோமே !

https://www.facebook.com/share/p/43cYSZseaoVJGPFY/?mibextid=oFDknk

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுப.சோமசுந்தரம் said:

                    பளார்

               (The Slap - थप्पड़)         

                           - சுப.சோமசுந்தரம்                             

         தலைப்பைப் பார்த்ததும் எது பற்றியதாக இருக்கும் என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தற்போது சில நாட்களாய்ப் பரபரப்பாகப் பேசப்படும் கன்னத்தில் 'கை வைத்த' சமாச்சாரம்தான் என்று இந்தியத் திருநாட்டில் விவரம் அறிந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். சண்டிகர் விமான நிலையத்தில் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த 'பளார்' சத்தம் தென்குமரியில் விவேகானந்தர் பாறையில் பட்டு எதிரொலித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவிற்கு அறைவிட்ட குல்விந்தர் கவுர் எனும் பெண்மணி சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர். அடித்ததற்கு அவர் சொன்ன காரணம், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கங்கனா ரனாவத் வழக்கமான தனது அதிகப் பிரசிங்கித்தனத்துடனும் அடாவடித்தனத்துடனும் தரக்குறைவாகப் பேசியது என்பது; அது மட்டுமல்லாமல் அப்போராட்டத்தில் குல்விந்தர் கவுரின் தாயாரும் இருந்ததால், கங்கனாவின் பேச்சு தனிப்பட்ட முறையில் மனதளவில் அவரைப் பாதித்தது என்பதுவும். சங்கிகள் மற்றும் யோக நிலை (!) எய்திய மகான்களைத் தவிர நம்மைப் போன்ற சாமானியருக்கெல்லாம் குல்விந்தர் கவுரின் செயல் நியாயமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் அவர் ஒரு வீரப் பெண்மணியாக, சிங்கப் பெண்ணாக சமூக வலைத்தளங்களில் நம்மிடமெல்லாம் பாடல் பெற்றார்.
               மேற்கூறிய நிகழ்ச்சியின் சங்கிலித் தொடராக சமீபத்திய சில நிகழ்வுகளும் நினைவுத்திரையில் அணிவகுப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. மணிப்பூர் கொடுமைகளின் ஆரம்பக் கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் - அங்கு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்காவிடில், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று. கிழக்குப் பதிப்பகத்தின் உரிமையாளரான திரு. பத்ரி சேஷாத்திரி, "நீதிபதி துப்பாக்கியுடன் மணிப்பூர் சென்று விடுவாரா ?" என்று கிண்டல், இல்லையில்லை நக்கல் செய்திருந்தார். கிண்டல், நக்கல் இவற்றிற்கெல்லாம் ஜனநாயகத்தில் எவருக்கும் உரிமையுண்டு. ஆனால் இந்த விஷயத்தில் பத்ரி சேஷாத்திரியின் மனதில் உள்ள குரூரத்தை வெளிப்படுத்துவதாகவே அவரது நக்கல் அமைந்தது என்பதைப் பெருவாரியான மக்கள் சமூகம் உணர்ந்ததால், சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பெருமளவில் கண்டனம் பதிவாகியது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து அவரைக் கைது செய்தது தமிழ்நாடு அரசு. உடனே எழுத்தலகைச் சார்ந்த சிலர் பத்ரியை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினர். "அவர் தவறு செய்து விட்டார். இருந்தாலும் ......." என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஜனநாயகத்தில் கருத்துரிமை பற்றியும் போகிற போக்கில் அவர்கள் குறிப்பிட்டதுதான் வேடிக்கை. இதற்குப் பதிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் 295 A பிரிவினை நீக்க அறிவுலகம் முதல்வருக்கும் பிரதமருக்கும் நீதியரசர்களுக்கும் கடிதம் எழுதலாமே ! அதனை நீக்குவதன் மூலம் மக்களின் மத நம்பிக்கைகளையும் அவர்களின் கடவுளர்களையும் எங்களைப் போன்றோர் எந்தத் தடையுமின்றிக் கிண்டலடித்து மகிழ்வாய் வாழ வழிவகை செய்வதாகுமே ! "That's offensive is not an argument" என்ற கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் (Christopher Hitchens) கூற்றினை மக்கள் சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லும் பேரின்பம் எங்களுக்குக் கிடைத்ததாகுமே ! பத்ரி சேஷாத்திரி எழுத்தலகைச் சார்ந்த ஒரே காரணத்திற்காக எழுத்துலகம் அவருக்காக நின்றது நியாயந்தானா ? நம்மைப் போன்ற சாமானியருடன் சேர்ந்து பத்திரியின் கைதை அவர்கள் கொண்டாட வேண்டியதில்லை. ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதுதானே இந்த விஷயத்தில் விவேகமாகத் தோன்றுகிறது !
                அடுத்து கங்கனா ரனாவத்தின் ஆண் வடிவமான சவுக்கு சங்கரிடம் வருவோம். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் விசாரணையில் இருக்கும் போதே தேவையின்றிப் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக சவுக்கு சங்கர் பேசியதும், மாணவி தற்கொலைதான் செய்து கொண்டாள் என்று அடித்துச் சொல்லி எல்லை கடந்ததும் பேசு பொருளானது. இது தொடர்பாக யூடியூப் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் தனக்கே உரிய நையாண்டியுடன், "நான் ஒப்பாரி வைத்துக் கொண்டே பேச வேண்டுமா ?" என்று ஆரம்பித்து மனிதாபிமானம் இல்லாமல் தொடர்ந்ததெல்லாம் அவருக்கே உரிய அசிங்கத்தின் உச்சம். இந்நிகழ்வு சவுக்கு சங்கரின் சந்தர்ப்பவாதத்திற்கும் அடாவடித்தனத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. அவ்வளவே ! பின்னர் பொத்தாம் பொதுவாகக் காவல்துறையை விமர்சித்து மாட்டிக்கொண்டார். அதனைக் கை தட்டியோ கை தட்டாமலோ வேடிக்கை பார்ப்பதை விட்டு நம்ம ஆட்களில் (!) சிலர் கருத்துரிமை பேசி ஒரு கேவலமான மனிதருக்கு வக்காலத்து வாங்கியதை என்னவென்று சொல்ல ? "ஓய் சவுக்கு, சிறையில் கை உடைந்ததற்கே அழுகிறீரே ! ஒரு மாணவியின் உயிர் போனதைக் கேலியும் கிண்டலும் செய்து அவளது தாய்க்கு எந்தளவு மனவலியைக் கொடுத்தீர் !" என்று வறுத்தெடுத்த நெட்டிசன்கள் முட்டாள்களா என்ன ! சரி, "உங்களுக்கு இதே வேலையாப் போச்சு !" என்று மேற்சென்று தம்மை இடித்துரைப்பதற்கு அவ்வப்போது நம் தோழர்கள் நமக்கு வழி வைப்பார்கள் போலும் !
             மேற்சொன்ன மூன்று நிகழ்வுகளிலும், பத்ரி மற்றும் சவுக்கு விஷயங்களில் தமிழ்நாடு அரசின் மூலமாக வழக்குகள் தொடரப்பட்டன. உள்ளம் பதைக்கும் நல்லோர் ஒதுங்கி நின்று அதனை வேடிக்கை பார்ப்பதும், சங்கிகள் கதறுவதும், சாமானியர்களாகிய நாம் மகிழ்வதும்தானே நியாயம் ! குல்விந்தர் கவுரைப் பொருத்தமட்டில் அவரையும் நம்மையும் உளவியல் ரீதியாகத் தாக்கிய கங்கனா ரனாவத்தின் மீது ஜனநாயக முறையில் வழக்குத் தொடர்ந்து விரைவில் நீதியைப் பெற்றுத் தர நம்மால் முடியுமா அல்லது கங்கனாவின் கன்னத்தில் மாற்றுக் கட்சியின் சின்னத்தைப் (கையைத்தேன் !) பொருத்தி உடனடி நீதி வழங்கும் தீரம் நம்மிடம் உண்டா? இவ்வாறு இருக்கையில் ஒட்டுமொத்த சமூகமும் குல்விந்தர் கவுரின் பக்கம் நிற்பதுதானே இயற்கை நீதி ? குல்விந்தர் கவுர் செய்தது தவறு என்று உங்களுக்குப் பட்டால் பகத்சிங் செய்தவையும் தவறு என்பீர்களா ? ஒன்று நாட்டு விடுதலைக்கானது என்றால், மற்றொன்று சமூக விடுதலைக்கானது.
               இப்போது வீரமங்கை குல்விந்தர் கவுரின் செயலுக்கு இன்னும் எனக்குத் தெரிந்தவரை நமது பாசறையிலிருந்து (!!) எதிர்ப்புக் கிளம்பவில்லை என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி. வருங்காலங்களிலும் இதுபோன்ற சுப நிகழ்ச்சிகளில் மௌனம் தொடரட்டும். நாம் ஆசை தீர ஆடுவோமே, பள்ளு பாடுவோமே !

https://www.facebook.com/share/p/43cYSZseaoVJGPFY/?mibextid=oFDknk

❤️.........

இந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இலகுவாக கடந்து போய்க் கொண்டிருக்கும் எல்லோருக்கும், நான் உட்பட, 'பளார்' என்று ஒன்று விட்டிருக்கின்றது இந்தக் கட்டுரை. மிகவும் அருமை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பலருக்கு பளார் தேவை.

கடந்த மாநில தேர்தலில் நாம் வென்றவுடன் போய் மணல் அள்ளுங்க 

எவன் தடுக்குறான் என்று நான் பார்கிறேன்.

என்று பொலிசைப் பார்த்து சவால் விட்டவரை அரசு எதுவுமே செய்யவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.