Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 "வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்"


இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. 

இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும்பாலான மக்களின் முன்னோர்கள், இராமேஸ்வரத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள். அவர்கள் 1678 ஆம் ஆண்டளவில் இங்கு குடியேறினார்கள் என்று வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, இங்கு உள்ள மக்கள் அதிகமாக தெய்வப் பெயர்களை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இன்று பிறக்கும் பிள்ளைகளைத் தவிர. 

அப்படியான,  கடற்கரை கிராமத்தில்  எத்தனை எத்தனையோ காட்சிகள்! கண்ணுக் கடங்காத கடல் ஒருகாட்சி; எண்ணுக் கடங்காத மணல் ஒரு காட்சி; அம் மணலிலே அமர்ந்து காற்றை நுகர்பவர், கவிதை படிப்பவர். கண்ணீர் வடிப்பவர் - வேனிற்கால மாலைப் பொழுதிலே கதிர்காமன் என்ற இளம் பையன் சிறிது நேரம் கடலைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தான். அப்போது அடி வானத்திலே எழுந்தது ஒரு கார்மேகம். இடி இடித்தது; இருள் பரந்தது. பெருமழை பெய்யும் போலிருந்தது. அம்மழைக் குறியைக் கண்டும் கடற்கரையை விட்டு அவன் அகலவில்லை. அவன் வாய் முணுமுணுத்தது 

"என்னே இம் மேகத்தின் கருனை! உடப்பு முழுவதும் அனல் வீசுகின்றது; குடி தன்ணீர் குறைகின்றது; உயிர்கள் உலர்ந்து திரிகின்றன. இவற்றை யெல்லாம் அறிந்தும் இக் கடல், தண்ணீரைத் தன்னகத்தே தேக்கி வைத்துக்கொண்டு, ஆனந்தமாகக் கொட்ட மடிக்கின்றதே! இது தகுமா? முறையா? இந் நெடுங் கடல் கொடுங்கடலாக அன்றோ இருக்கிறது? ‘கொடு’ என்றால் கொடுமை வாய்ந்த கடல் கொடாதென்று அறிந்துதானே கருணை மா முகில் இடியென்னும் படை தாங்கி எழுந்து வருகின்றது! ஈகையால் வருவதே இன்பம் என்று அறியாதாரை அடித்து வாங்குதல் அறமே போலும்! அதனால்த்தானோ என்னவோ இம் மேகம் கடல் வெள்ளத்தைக் கொள்ளை கொண்டு கனத்த மழை பொழியப் போகின்றது?"

இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக. கதிர்காமன் தன் மனதுக்குள் மேகத்தை வாழ்த்தினான்

"முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
 என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
 மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
 பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்" 
(திருவெம்பாவை)  

கதிர்காமன் கடலைப் பார்த்து சிரித்தான். அந்த சிரிப்பு உண்மையில் தர்மராஜா முதலாளியை நினைத்துத் தான்! 

கதிர்காமனின் குடும்பத்தில் ஐந்து உருப்படிகள். அதில் கதிர்காமன்  மூத்த பையன். கதிர்காமன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் மட்டுமல்ல மிகவும் ஆர்வமும் உள்ளவன். அவனின் தந்தை வைரவன் சிறு மீன்பிடித் தொழில் செய்பவர். என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சூறாவளியுடன் ஏற்பட்ட கடும் மழையில், சிக்குண்டு தன் படகுடன் விபத்துக்குள்ளாகி, இன்றுவரை ஊனமுற்றவராக இருக்கிறார். இதனால் அவனின் குடும்ப நிலை மோசமாகி படிப்பை இடை நடுவே முடிப்பதற்கு வழிவகுத்தாலும், அவனின் படிப்புத் திறன் மேல் உள்ள நம்பிக்கை கஷ்டமான நிலையிலும் பெற்றோரால் தொடர வைக்கப்பட்டது. 

அவன், 1902 இல் களிமண்ணால் கட்டப்பட்டு ஓலையினால் மேயப்பட்ட சிறிய பாடசாலையாக ஆரம்பித்து, 1965 இல் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு, பின் 1973 விஞ்ஞான கூடமும் அமைத்து முழுமை பெற்ற உடப்பு தமிழ் மகாவித்தியாலத்தில், அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரின் உதவியுடன் தன் கற்றலை தங்கு தடையின்றி தொடர்ந்தான்.  

என்றாலும் ஒரு நேர உணவு உண்பதே சிரமமான நிலையில் தான் அவனது இளம் பராயம் கழிந்தது. பல நாட்கள் அம்மா சிலரது பெயரைச் சொல்லி பணமோ அரிசியோ வாங்கி வரச்சொல்லி கதிர்காமனை அனுப்புவார். பணம் உள்ளவர்களான, அம்மா சொல்லாதவர்களிடமும் அவன் முயற்சிப்பான். என்றாலும் சிலவேளை வெறுங்கையுடன் தான் வீடு போவான். அப்படியான நேரம் எதோ வளவில் கிடைக்கும் சில இலைவகைகளுடனும் அல்லது கிழங்குகளுடனும் அவனின் குடும்பம் சமாளித்துவிடும். மிகுதி வயிறை நீரால் நிரம்பிவிடும்.

இன்று அவன் முதல் முறையாக தர்மராஜா முதலாளியிடம் போயிருந்தான். இல்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. உனக்கெல்லாம் எதுக்குப் படிப்பு. போய் மீனைப் பிடிச்சு குடும்பத்தைப் பார், உனக்கு இப்ப வயது வந்துவிட்டது தானே என்று சத்தம் போட்டு ஏசி அனுப்பினார். அது தான் அவன் கடலைப் பார்த்து, தர்மராஜாவை நினைத்து ஏதேதோ அவன் மனதில் எழும்பியதை கொட்டித் தீர்த்தான்.

எப்படியோ அம்மா, அப்பாவின் முயற்சி, கதிகாமனின்  வெறித்தனமான கல்வி ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றால் குடும்பத்தில் அனைவருமே படித்து நல்ல நிலைக்கு, சிறப்பான வாழ்க்கை வெளிநாட்டிலும் தலைநகரிலும் வாழத் தொடங்கினர்.

அப்படியான ஒரு காலத்தில் தான், இலங்கையில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை 2004/12/26 அன்று இலங்கையைத் தாக்கியதில் குறைந்தது 46,000 பேர் இறந்தனர். அது முக்கியமாக பெரும் சேதங்களைக் இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தினாலும், அவனின் ஊரும் கடற்கரைக் கிராமம் என்பதால், சில பாதிப்புக்களுக்கு உள்ளாகின, என்றாலும் ஒரு உயிர் சேதமும் அங்கு இல்லை. இதை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கேள்விப்பட்ட  கதிர்காமன், தன் சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊர் சென்றான். 

அனைவருக்கும் தேவையான தற்காலிக கூடாரங்கள், உணவுப்  பொதிகள், தண்ணீர் மற்றும் மாற்ற உடைகள் என பலவற்றை தமது செலவிலேயே  ஒழுங்கு செய்தான். 

தர்மராஜா முதலாளி  ஊரில் முன்னர் பெரிய செல்வந்தர். இவர்தான் கதிர்காமனை திட்டி அனுப்பியவர் கூட,  அவரின் அந்த கடும் மனிதத்தன்மை அற்ற வார்த்தைகளும் அன்று கதிர்காமனை உசுப்பேற்றி, அவனை ஒரு இலக்கு நோக்கி கடுமையாக படிக்க வைத்தது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விடயம்!  

தர்மராஜா ஐயா, அழுதவாறே என்னை மன்னித்துவிடு தம்பி என்ற அவரின் வார்த்தைகள் கதிர்காமனுக்கு இன்று காதில் தேனாக இனிக்க வில்லை. இல்லை ஐயா, மாறாக  நீங்களும் ஐயா அன்று என்னை ஏசிக் கலைத்ததால் தான் நான் இப்ப அறுவை சிகிச்சை நிபுணராக வர முடிந்தது என கண்களில் நீர் கசிய, தரும ராஜா என்ற பொருத்தமில்லா பெயரைக் கொண்ட தர்மராஜா ஐயாவிற்கு கதிர்காமன் கூறியதை, அவனின் அம்மா, சின்னக்காளி மகிழ்சியுடன், கொஞ்சம் தள்ளிநின்று பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு மனக் கர்வத்துடன்!

தர்மராஜா முதலாளி ஒன்றும் பேசவில்லை, தூர தெரிந்துகொண்டு இருக்கும் கடலை பார்த்தவண்ணம், கண்ணீர் ஒழுக தன்னையே அவரின் வாய் திட்டிக்கொண்டு இருந்தது.

"கருணைமா முகிலே! வான வெளியிலே உருண்டு திரண்டு செல்கின்ற உன்னைக் காண என் கண் குளிர்கின்றது; உள்ளம் மகிழ்கின்றது. கருமையின் அருமையை இன்று நன்றாக அறிந்தேன். கருணையின் நிறம் கருமைதானோ என்று மனங்களிக்கின்றேன். கார் முகிலே! நீ அறத்தின் சின்னம்; அருளின் வண்ணம்; கொடாக் கடலிடம் தண்ணீரைக் கொள்ளை கொண்ட உன்னை இம் மாநிலம் தூற்றவில்லை; போற்றுகின்றது; கொண்டல் என்று உன்னைக் கொண்டாடுகின்றது. உன் கருணை வடிவத்தில் அழகினைக் கண்டனர். பண்டைத் தமிழர்; நானும் கதிர்காமன் வடிவில் இன்று காண்கிறேன்!"

உடப்பில், அன்றாட வழக்கில் பாவிக்கப்படும் பழமொழியில் பிரபலமான ஒன்று 'மச்சம் பிடித்தவனுக்கு மிச்சமில்லை', அதன் பொருள் எவ்வளவுதான் பணம் சேர்த்தாலும், முடிவில் ஒன்றும் மிச்சம் இல்லை என்பதே. மற்றது " ஊரான் வீட்டு நெய்யே ! என் பொண்டாட்டி கையே !" ஆகும். அதாவது தன் வீட்டு நெய் என்றால் மனைவி சிக்கனமாகவும் ஊரார் வீட்டு நெய் என்றால் மேம்போக்காக வாரி இறைத்தும் செலவு செய்வார் என்கிறது. தர்மராஜா முதலாளி இதை உணர்ந்தாரோ இல்லையோ, ஆனால் அவர் புதுப்பிறவி எடுத்தவர் போல், அவரின் நடவடிக்கைகள் அன்றில் இருந்து மாற்றம் அடைந்தன. 

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

448321442_10225349962838831_7739961274738777914_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8JT7l9izwbsQ7kNvgFzL_z8&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYB-2K6iZnZsoOGz9pdSG_zOg7npHQfz0mFXQYzODB_odg&oe=667281E2 448489822_10225349962678827_8488119731518701536_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=umQSgxTT1M8Q7kNvgH0kEDU&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDcRODHhyu5TcvGZ18Y3u2PCwUNhU6mQlkkbuMQn6Bhfw&oe=66726FC8 448321438_10225349962598825_8309281899218461810_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=hNVAkW_vDicQ7kNvgEMmmcx&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC_6OsR4JCLzYcrCIXuwKU8xYa-Ge3SaLqVz4ST242cbA&oe=66725D90 448399762_10225349963278842_8091335610466082791_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Q6V9g58XN5YQ7kNvgFIqnC5&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCIT-AQHz8bYRol6SrqGQYcz8sBqbSPdWvZkOAWcxsVHw&oe=66725F35

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதை.

உடப்பு மட்டுமல்ல நீர்கொழும்பு பக்கமும் தமிழர்கள் இப்போது சிங்களவர்களாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தியடியர் ஒரு  அட்சய பாத்திரம். அள்ள அள்ள குறையாமல் வருகின்றது.
வரலாற்று கதைகளுக்கு மிக்க நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு ஈழப்பிரியனுக்கு 

"உடப்பு மட்டுமல்ல நீர்கொழும்பு பக்கமும் தமிழர்கள் இப்போது சிங்களவர்களாக இருக்கிறார்கள்."

உடப்பு இன்னும் தமிழ் கிராமமே, நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை செய்த காலத்தில், சிவலிங்கம் என்ற உடைப்பு வாசியே என் office peon. அதேநேரம் எனக்கு சிங்களம் தெரியாததால், என்னிடம் வரும் சிங்கள வேலையாட்களின் குறைகளை, தேவைகளை மொழிபெயர்ப்பாளராகவும் எனக்கு உதவி புரிந்ததை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்களுக்குள் முரண்பட்டு அரியணைக்குப் போரிட்ட போது அதற்கு வேண்டிய படைகளை தமிழ்நாட்டில் இருந்தே திரட்டி வந்தனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பிப் போகவில்லை.

இன்று சிங்களவர்கள் மத்தியில் காணப்படும் கரவா, சலாகமுவ, துராவ போன்ற “சாதிகள்” 16 ஆம் நூற்றாண்டில் கறுவா பட்டை உரிக்கவும் மரமேறவும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளர்களே!


அதேபோல, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில் தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதப் பரவர் அல்லது பரதவர் 20 ஆம் நூற்றாண்டில் இனமாற்றம் செய்யப்பட்டனர். இதனை செய்து முடித்தவர் பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர். அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். (This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese -https://en.wikipedia.org/wiki/Negombo_Tamils.)

தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். இலங்கையில் சிங்கள – பவுத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு இந்த ஒருமைப்படுத்தல்தான் காரணம்.

“பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த தமது அண்மைய நூலான “இலங்கைத் தமிழர்வரலாறு- கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் – கி.மு 250 – கி.பி 300” என்ற நூலின் தமது பதிப்புரையில் (பக்கம் XIV) பின்வருமாறு கூறுகிறார்,

“இலங்கையின் மூன்றிலொரு பாகத்திலே தமிழர் சமுதாயம் கி.மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியான ஒரு நிலப்பகுதியிலே தமிழ் மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டனர் என்றும் சொல்லக் கூடியகாலம் வந்துள்ளது. என்று கூறுகிறார் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.