Jump to content

அடுத்த வாரம் இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

15 JUN, 2024 | 03:18 PM
image
 

இந்திய வெளிவிவகார அமைச்சர்  கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர், இந்த வியஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்  கவனம் செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/186140

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

Published By: VISHNU

19 JUN, 2024 | 02:29 AM
image

இலங்கைக்கு எதிர்வரும் 20ஆம் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவாகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காலநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

https://www.virakesari.lk/article/186414

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர்

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2024 | 10:32 AM
image
 

இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். 

இந்தியப் பிரதமர் மோடியின் புதிய அரசாங்கத்தின்கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். 

இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல்மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக்கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏனைய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த விஜயம் மேலும் உத்வேகமளிக்கும்.

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் . ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 109 வீடுகளையும் மெய்நிகர் ஊடாக உத்தியோகபூர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது டில்லி விஜயத்தின் போது இலங்கைக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்டில் அவர் இலங்கை வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அது குறித்து ஆராய்வது காலநிதி ஜெய்சங்கரின் விஜயத்தில் முக்கிய அம்சமாகும்.

அது தவிர இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக வலுச்சக்தியை கொள்வனவு செய்தல், அதற்காக இந்தியா - இலங்கைக்கு இடையிலான குழாய் இணைப்பொன்றை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மன்னார், பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், இந்தியா - இலங்கைக்கு இடையிலான தரைமார்க்க இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்திக்கூறுகள் என்பன தொடர்பிலும் இவ்விஜயத்தில் ஆராயப்படவுள்ளது.

மேலும் இந்திய அரசாங்கத்தால் திருகோணமலையை கேந்திரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ள கைத்தொழில் வலயம் தொடர்பிலும், விவசாய நவீன மயமாக்கல் தொடர்பிலும் முக்கியமாக இரு நாட்டு மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள லயன் அறைகளை பெருந்தோட்டக் கிராமங்களாக்கிய பின்னர் அவற்றின் அபிவிருத்திகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/186518

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய்ஷங்கர் - மஹிந்த சந்திப்பு ; இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம்

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுகள் அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் வியாழக்கிழமை (20) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின் போது இந்தியா - இலங்கை இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை - இந்திய இருதரப்பு ஒத்துழைப்புக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டுவதாக அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெய்ஷங்கர் - மஹிந்த சந்திப்பு ; இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து அவதானம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2024 | 04:10 PM
image
 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை (20) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார்.

இது தொடர்பில் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில்,

இன்று வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். 

அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. 

எமது அபிவிருத்தி உதவிகள் மற்றும் ஆளுமை விருத்தி செயற்திட்டங்கள் ஊடாக இலங்கை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென நாம் நம்புகின்றோம் என பதவிட்டுள்ளார்.

GQgeakgagAA2qG6.jpg

https://www.virakesari.lk/article/186575

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவளித் தமிழ் தலைவர்களை ஒன்றாக சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்

Published By: VISHNU

20 JUN, 2024 | 09:30 PM
image
 

(எம்.மனோசித்ரா)

இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பாக இலங்கை - இந்திய வளர்ச்சிக் கூட்டாண்மை மற்றும் கூடுதல் ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் நேற்று வியாழக்கிழமை இலங்கை வந்திருந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோரும், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் அதன் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் கல்வி இராஜங்க அமைச்சர் அறவிந்த குமார் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா எப்போதும் பலம் மிக்கதாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் தான் இலங்கையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என ஜெய்ஷங்கரிடம் தெரிவித்ததாக த.மு.கூ. பிரதி தலைவர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

சீதையம்மன் ஆலயம் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையில் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அதனை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகள் குறித்தும் அவதானம் செலுத்துமாறு உயர்ஸ்தானிகருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 4000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யுமாறும், அதன் பின்னர் மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை மலையகத்தில் முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டதாக இராதாகிருஸ்ணன் மேலும் தெரித்தார்.

https://www.virakesari.lk/article/186605

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

03-7.jpg?resize=750,375&ssl=1

இந்திய வெளிவிகார அமைச்சரின் திடீர் வருகையில் சந்தேகம் – சபையில் விமல் வீரவன்ச தெரிவிப்பு!

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை, இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம்  முன்னெடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று சபையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை பாரிய சந்தேககத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சரின், இலங்கை விஜயத்தின் உண்மை நோக்கமென்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என அவர் வலியுத்தினார்.

குறைந்த மணித்தியாலங்களை கொண்ட விஜயமாக இது அமைந்துள்ளதாகவும், இவ்வாறு திடீர் ஏன் அமைய வேண்டும்? எனவும் இதன் பின்னணி என்ன? எனவும் அவர் சபையில் கேள்வியெழுப்பினார்.

ஆட்பதிவு திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ள விசேட அடையாள அட்டை உட்பட 10 முதல் 12 வரையிலான செயற்றிட்டங்களை கைச்சாத்திடுவதற்கு, இலங்கைக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தம்மால் அறிய முடிவதாக விமல் வீரன்வன்ச குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வாறான நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரின் துரித விஜயத்தின் நோக்கம் என்ன?  என அவர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.

அத்துடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனவும், இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை இந்தியாவுக்கு வழங்கல், அதானி குழுமத்துக்கு மின்கட்டமைப்பை வழங்கல் உள்ளிட்ட செயற்றிட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் காணப்படுவதாகவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

https://athavannews.com/2024/1388919

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழ் சிறி said:

குறைந்த மணித்தியாலங்களை கொண்ட விஜயமாக இது அமைந்துள்ளதாகவும், இவ்வாறு திடீர் ஏன் அமைய வேண்டும்? எனவும் இதன் பின்னணி என்ன? எனவும் அவர் சபையில் கேள்வியெழுப்பினார்

பிரச்சார பீரங்கிக்கே சந்தேகம் வந்துள்ளது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

பிரச்சார பீரங்கிக்கே சந்தேகம் வந்துள்ளது.

R7aG.gif 200w.gif?cid=6c09b952209i0muvg5i56glkfz2

இவருக்கு சந்தேகம் வராட்டித்தான்...
கமுக்கமாக அலுவலை பார்த்திடுவாரோ என்று நாங்கள்  உசாராக இருக்க வேணும். 😂

ஈழப்போர் நடந்த போது... புலிகளை கண்காணிக்க இந்தியா, இலங்கைக்கு கொடுத்த சற்றலைட்டுகளை  வைத்து... மண்வெட்டி கூட செய்ய முடியாது என்று நெத்தியில் அடித்த மாதிரி சொன்னவர் என்பதால்... இவரை கொஞ்சம்  பிடிக்கும். 🤣

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.