Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 JUN, 2024 | 08:43 PM
image
 

தேசிய மக்கள் சக்தி இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒற்றுமையின் புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க லண்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதி லண்டனில் இடம்பெற்ற சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

WhatsApp_Image_2024-06-17_at_16.35.34.jp

நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். 

நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின் உங்களின் நன்மதிப்பினை பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். உங்களுக்கும் எம்மனைவருக்கும் இருப்பது கூட்டான தேவையாகும். ஆட்சியில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காக நீங்கள் தோற்றுகிறீர்கள்.  

நீங்களும் நாங்களும் ஒரே நோக்கத்தில் பயணிக்கின்ற கூட்டான மனித சமுதாயமாகும். உங்கள் மனதில் இந்த நாட்டை மாற்றியமைப்பதற்காக இருக்கின்ற தேவையை அதற்கு இணையாக விளங்கிக்கொண்டவர்களே நாங்கள்.

அண்மைக்கால உலக வரலாற்றில் 2022 இல் மிகவும் பலம்பொருந்திய மக்கள் எழுச்சி இடம்பெற்றது. மக்கள் தன்னிச்சையாக வீதியில் இறங்கத் தொடங்கினார்கள்.  இளைஞர் மாதக்கணக்கில் ஆட்சியாளனுக்கு எதிராகப் போராடினார்கள்.   

வெளிநாடுகளிலுள்ள நீங்கள் அதற்கான உதவிகளை புரிந்தீர்கள். வெற்றியைப் பிரார்த்தித்தீர்கள். கோட்டாபய வீட்டுக்குச் சென்றார். போராட்டத்தின் இறுதியில் அரைவாசி எஞ்சியிருக்கிறது. பாராளுமன்றமும் கலைக்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாக அமைந்தது.  

மக்களின் எதிர்ப்பு காரணமாக கோட்டாபய வீடு செல்கிறார். உலக வரலாற்றில் ஒருபோதுமே இடம்பெற்றிராதவாறு கோட்டாபயவை விரட்டியடிப்பதற்காக வந்த மக்கள் ஆணையிலேயே ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாகிறார். 

இன்று எமது நாட்டின் ஆட்சியென்பது திரிபடைந்த ஓர் ஆட்சியதிகாரமாகும். அன்று இலட்சக்கணக்கில் மக்கள் ஆட்சியாளனுக்கு எதிராக எழுச்சிபெற்றனர். அதனை வெற்றியில் நிறைவுசெய்ய இயலாமல் போயுள்ளது. எனினும் தற்போது வாய்ப்பு வந்துள்ளது.

இன்று மக்கள் தேர்தல் வாய்ப்பு வரும்வரை அனைத்து துன்பதுயரங்களையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கவோ அவருடைய கும்பலைச்சேர்ந்த எவருமோ   தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருக்க தயாராகினால் உலக வரலாற்றில் இடம்பெறுகின்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியைத் தடுக்க ரணில் விக்கிரசிங்கவிற்கு முடியாமல்போய்விடும். 

ஆட்சியாளன் தேர்தல் தொடர்பில் பதற்றமடைந்திருப்பது  வேறு காரணத்தினால் அல்ல, வரலாற்றில் இற்றைவரை அதிகாரம் கைமாறிய விதம் மாற்றமடைந்து  பொதுமக்களின் இயக்கமான தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கைமாறி வருவதாலாகும். ஒன்றுசேரக்கூடிய அனைவருமே தற்போது ஒன்றிணைந்து வருகிறார்கள். 

இரண்டு கோப்பைகளில் உள்ள புறூட்செலட்டை ஒரே கோப்பையில் போட்டுக்கொள்ள தற்போது பேச்சுவார்த்தைகளை நடாத்தினார்கள். இற்றைக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கபீர் ஹசீமின் வீட்டில்  ராஜித சேனாரத்னவுடன் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் பதினைந்துபேர்  கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். 

இரண்டாகப் பிரிந்து போட்டியிட்டால் என்.பி.பி. வெற்றிபெறும். அது அபாயமாம். முகத்துவார மீன்பிடித் துறைமுகம்  25 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது. அரசாங்க மதிப்பீட்டுத் தொகையைவிடக் குறைவான தொகைக்கே குத்தகைக்கு விடப்பட்டது. 

WhatsApp_Image_2024-06-17_at_16.35.27.jp

புலனாய்வு அறிக்கைகள் அனைத்துமே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டும் இருக்கின்றன. சட்டத்துறை தலைமை அதிபதி திணைக்களத்திடம் வழக்கு அறிக்கைகளும் இருக்கின்றன.

 அதனால் மக்களின் மாற்றம் ராஜித சேனாரத்னவிற்கு அபாயகரமானதென்பது உண்மையாகும். ஊழல் பேர்வழிகளுக்கு  குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு என்.பி.பி. ஆட்சிக்கு வருவது ஆபத்தானதாகும். அதனால் இரகசிய பேச்சுவார்த்தை   நடாத்தப்பட்டுள்ளது. இந்த தரப்புகள் இரண்டும் இரண்டாக முன்வருவது பயங்கரமானது, அதனால் ஒன்றாக ஒன்றுசேர்ந்து உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கீரியும் பாம்பும்  அடித்துச் செல்லப்படும். ஒரு துண்டு மரக்கட்டை அகப்பட்டால் கிரியும் பாம்பும் அதில் ஏறும். ரணிலும் மகிந்தவும் ஒரே கட்டைத்துண்டில் ஏறியிருக்கிறார்கள். இந்த வெள்ளம் என்ன? 

தேசிய மக்கள் சக்தியுடன் அணிதிரண்ட மாபெரும் மக்கள் வெள்ளம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏறுமளவுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. இலங்கை வரலாற்றில் எல்லா சனாதிபதிகளும் ஒன்றாக  ஏறுகின்ற மேடையை நாங்கள் சந்திக்கிறோம். 

சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி, கோட்டாபய , ரணில் ஆகியோரை எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஒரே மேடையில் சந்திக்கலாம். அவர்கள் 1994 இல் இருந்து 2024 வரை 30 வருடங்களாக பிரிந்து இருந்த குழுவினராவர் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதம் தரித்து நின்றவர்களாவர். ஆனால் இன்று ஒரே மேடைக்கு ஏறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்துவிதமான வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். ஊடக அலைவரிசைகளின் நடத்தைகள் சாதாரணமான காலங்களை விட அப்பால் சென்றுள்ளன. செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதில் உள்ளவற்றைவிட அதிகமாக வாசிக்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. 

மென்மேலும் மக்களின் நம்பிக்கை ஈடுபாடுகளை உறுதிசெய்து கொள்வதுதான் வெற்றிக்காக எமக்கிருக்கின்ற ஒரே பாதை. ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சந்திப்பிற்கு வந்திருப்பதன் மூலமாக அந்த ஈடுபாட்டினை நம்பிக்கையை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கத்தயார் என்பதையே பறைசாற்றுகின்றது. அதற்காக இடையீடு செய்வோம் என உங்களுக்கு அழைப்புவிடுக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்.

எங்கள் நாட்டுக்கு என்ன நோ்ந்துள்ளது? பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்த, பாரிய குற்றச்செயல்கள் நிறைந்த, சட்டத்தின் ஆட்சி முற்றாகவே சீரழிந்த, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையே அச்சம், அவநம்பிக்கை, குரோதம் வளர்ச்சியடைந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களுக்கு முறையான உணவை பெற்றுக்கொள்ள முடியாது, வைத்தியசாலையில் மருந்து மாத்திரைகள் இல்லாத, இளைஞர்களின் எதிர்காலம் முற்றாகவே, அழிக்கப்பட்ட கல்வி நாசமாக்கப்பட்ட, போதைப்பொருட்கள் நிறைந்த ஒரு தேசம் எம்மெதிரில் உருவாக்கப்பட்டுள்ளது. 

எமது நாட்டு மக்களும் தாய்நாடும் அனுபவிக்கின்ற கவலைக்கிடமான நிலைமை எமது இதயங்களால் உணரப்படுமாயின், எமது பிரஜைகளின் வேதனைகள் எமது செவிகளுக்கு கேட்குமானால், இதயம் படைத்த மனிதர்களாயின் எம்மெவருக்கும் இந்த நிலைமையின் மத்தியில் பாராமுகமாக இருக்கின்ற தார்மீக உரிமை கிடையாது. நாம் அனைவரும் செய்யக்கூடிய அனைத்தையுமே புரிந்து இந்த மாற்றத்தை அடைவதற்கான முன்னோடி செயற்பொறுப்பின் பங்காளிகளாக மாற வேண்டும் அதற்காக உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

எங்களுடைய தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எமது நாட்டின் பழைய, தோல்விகண்ட அரசியல் பயணப்பாதையை மாற்றயமைக்க வேண்டும். இந்த நெருக்கடியை அரசியலே நிர்மாணித்தது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள எவரேனும் சிந்திப்பாரெனில் ஒரு பாடசாலைக்கு ஏதேனும் ஒரு உதவியை செய்ய, கல்விப்பிரச்சினையை தீர்க்கமுடியுமென அப்படி தீர்க்க முடியாது. எனினும் நீங்கள் சில பிள்ளைகளுக்காவது உதவி செய்வது பெறுமதியானது. 

WhatsApp_Image_2024-06-17_at_16.35.32.jp

நீங்கள் நினைப்பீர்களானால் ஒன்றுசோ்ந்து வீடற்ற ஒருவருக்கு வீட்டை அமைத்து கொடுத்து உதவவேண்டுமென்றால் அந்த உதவியைச் செய்யுங்கள். எனினும் அதன் மூலமாக இலங்கையின் வீடமைப்பு பிரச்சினை தீரமாட்டாது. உங்களுடைய அன்பருக்கு, உறவினருக்கு மருந்துகளை அனுப்பிவைக்கலாம். 

ஆனால் அதன் மூலமாக இலங்கையின் சுகாதாரப் பிரச்சினை தீரமாட்டாது. இந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நீங்களும் நாங்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயமாக ஆற்றவேண்டிய செயற்பொறுப்புதான் எமது நாட்டின் இந்த அரசியல் பயணப்பாதையை மாற்றியமைப்பதாகும். 

எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலை தீர்மானகரமான திருப்புமுனையாக மாற்றுவோம். இதுவரை பாய்ந்து சென்ற அரசியல் பயணப்பாதையை மாற்றியமைக்க திடசங்கற்பத்துடன் செயலாற்றுவோம். தோ்தல் பெரும்பாலும் செப்டெம்பர் 28 அல்லது ஒக்டோபர் 5 ஆம் திகதி நடைபெறும். இந்த அரசியல் மாற்றத்தை நாங்கள் செய்வோம். அதன்போது எம்மிடம் கையளிக்கப்படுகின்ற பொறுப்பினை நாங்கள் ஆற்றுவோம்.

எமது நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வரலாறுமே பிறருக்கு எதிரான அரசியலாகவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தெற்கின் சிங்கள வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த இயக்கமானது மற்றவருக்கு எதிரானதாகவே செயற்படுகின்றது. 2005 எனில் வடக்குக்கு எதிராக. 2010 எனில் தமிழனுக்கு எதிராக. 2019 எனில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக. அரசாங்கங்கள் அவ்வாறே அமைக்கப்பட்டன. 

தெற்கிலுள்ள கட்சிகள் வடற்கிற்கு எதிராகவும் வடக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராகவும் கட்டியெழுப்பப்படுகின்றன. கிழக்கின் கட்சிகள் தெற்கிற்கு எதிராக கட்டியெழுப்பப்படுகின்றன. ஆனால் ஐக்கிய இராச்சியத்தில்  வசிக்கின்ற நீங்கள் மற்றவருக்கு எதிரான அரசியலொன்றை காண்கிறீர்களா? மற்றவருக்கு எதிரான அரசியல் கட்டியெழுப்பப்படுவதன் மூலமாக எக்கச்சக்கமாக யுத்தங்களும், முரண்பாடுகளும் நிர்மாணிக்கப்பட்டன. 

இலங்கை மண் நனையும்வரை இரத்தம் பெருக்கெடுத்தோடியது. ஆறுகள் நிரம்பி வழியும்வரை வடக்கிலும், தெற்கிலும் தாய்மார்களின் கண்ணீர் வழிந்தோடியது. இந்த ஒருவருக்கொருவர் எதிரான அரசியல் எமது நாட்டை ஓர் அங்குலமேனும் முன்னோக்கி நகர்த்தமாட்டாது. தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவம் செய்வது தேசிய ஒற்றுமைக்கான அரசியலையாகும். அதனை நாங்கள் வெற்றிக்கொள்ள வேண்டும்.

1948 இல் நாங்கள் சுதந்திரம் பெற்றோம். 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பிரமாண்டமான நாடான இந்தியாவில் பல்வேறு மொழிகளை பேசுகின்ற, பல்வேறு மதங்களை பின்பற்றுகின்ற, பிரதேச ரீதியான பிளவுகள் நிலவின. இந்தியாவின் தேசிய தலைவர்கள் மக்களை ஒரு கொடியின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார்கள். அதன் பெறுபேறாக அப்துல் கலாம் போன்ற ஒருவர் இந்தியாவின் குடியரசு தலைவரானார். 

அதன் பெறுபேறாக மன்மோகன் சிங் போன்ற ஒருவர் பிரமராகிறார். அதன் பெறுபேறாக சாதியில் குறைந்தவரென கருதப்பட்ட ஒரு பெண் இந்தியாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார். ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடாக விளங்கிய காலத்திலும் 1948 ன் பின்னரும் எமது நாட்டில் நிலவியது பிளவுபடுத்தும் அரசியலாகும். அதிலிருந்து எமக்கு என்ன கிடைத்தது? முப்பதுவருடகால யுத்தம் உருவாகியது. 

பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் மாண்டார்கள். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறுகிறது. அதுதான் பிளவுபடுத்துகின்ற அரசியல். நாங்கள் இலங்கையில் புதிய அரசியல் ஒன்றை உருவாக்குவோம். இனவாதத்திற்கு பதிலாக தேசிய ஒற்றுமைக்கான கொடியை ஏந்திய புதிய அரசியலை இலங்கையில் நிலைநாட்டுவோம்.

அதைப்போலவே எமது நாட்டின் அரசியல் சில சிறிய குடும்பங்களின் கைகளில் குவிந்துள்ளன. பண்டாரநாயக்க, ஜயவர்த்தன, விக்கிரமசிங்க, ராஜபக்க்ஷ, சேனாநாயக்க. நாட்டின் ஆட்சிக்கான சுக்கான் சில குடும்பங்களின் கைகளிலேயே தேங்கியிருந்தன. பிரதேச அரசியல், மாவட்ட அரசியல், ஒரு சில குடும்பங்களின் கைகளில் குவிந்திருக்கின்றன. சஜித் பிரேமதாஸ ஒரு கட்சியின் தலைவராக மாறியமைக்கான ஒரே காரணி அவர் ஒரு ஜனாதிபதியின் மைந்தனாக அமைந்தது மாத்திரமே. உயர்மட்ட அரசியலும் கீழ்மட்ட அரசியலும் ஒரு சில குடும்பங்களின் கைகளை மையமாகக் கொண்டிருக்கின்றன. 

எமது அரசியலுக்கு புதிய மரபணுக்கள் சோ்க்கப்பட வேண்டும். அண்மையில் நாமல் ராஜபக்க்ஷ அவர்களின் குடும்ப அரசியலுக்கு 98 வருடங்கள் ஆகின்றன எனக்கூறினார். புதிய இளைஞர் தலைமுறையின் கைகளுக்கு, புதிய கருத்துக்களால் கட்டி வளர்க்கப்படுகின்ற மனிதர்களின் கைகளில் எமது அரசியலை நெறிப்படுத்துவதற்கான சுக்கான் ஒப்படைக்கப்படல் வேண்டும். இந்த அரச அதிகாரத்தின் சுக்கானை தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் எடுப்பது பல பரம்பரையாக இதனை வைத்துக்கொள்வதற்காக அல்ல. எமக்கு மிகவும் சுருக்கமான அத்தியாயம் ஒன்றே இருக்கிறது. 

அவர்களின் கையில் இருக்கின்ற பெட்டனை நாங்கள் எடுத்து புதிய பரம்பரையின் கையில் ஒப்படைப்பதுதான் தேசிய மக்கள் சக்தியாகிய எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு.  இசெட் தலைமுறையின், அல்பா தலைமுறையின் பிள்ளைகளாகிய எமது அறிவு, மனோபாவம், விருப்புவெறுப்புக்கள் பழையவையாகும். நவீன இளைஞன் வித்தியாசமானவன். ஆனால் நவீன நிலைமையின் நோக்கங்கள் எமது நாட்டின் அரசியல் அதிகாரத்துடன் ஒத்துவருவதாக அமைவதில்லை. 

WhatsApp_Image_2024-06-17_at_16.35.33.jp

இந்த பழங்குடித்தன்மையிலான அரசியல் அதிகாரநிலை புதிய இளைமைக்கு அவசியமான வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. இளைமையின் விருப்புவெறுப்புகளை விளங்கிக்கொள்ளக்கூடிய ஆட்சியாளர்கள் இருந்திருப்பார்களெனின் அந்த இளைமைக்காக கட்டியெழுப்பப்படுகின்ற உழைப்புச் சந்தையை கையகப்படுத்த அவசியமான திட்டமொன்றை வகுப்பார்கள். ஒரு தேசம் என்ற வகையில் நாங்கள் புதிய உலகத்துடன் ஒன்றிணைவதில் தோள்வி கண்டுள்ளோம்.

எமது நாட்டில் சட்டத்தின் ஆதிக்கம் உறுதி செய்யப்படுகின்ற ஆட்சியொன்று அவசியமாகும். நீங்கள் வீசாக்காலப்பகுதி முடிவடையும்போது எவ்வளவு சிந்திப்பீர்கள்? எனினும் உங்களுக்கு தெரியும் டயனா குடியுரிமை இன்றி, வீசாக்காலம் கடந்து இருந்த நிலையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்து இராஜாங்க அமைச்சர் பதவியொன்றைக்கூட வகித்தார். 

அவ்வாறு அமையக்காரணம் சட்டம் அரசியல் அதிகாரநிலைக்கு கட்டுப்பட்டிருப்பதாலாகும்.  டயனாவுக்கு குடியுரிமை கிடையாதென்பதை முதலில் அறிந்தவர் டயனா ஆவார். இரண்டாவது ரணில். தனக்கு உரித்தாகாத சிறப்புரிமைகளை அறிந்திருந்து அனுபவிக்கிறார். அது எளிமையானதல்ல. பிரசன்ன ரணவீர இராஜங்க அமைச்சர் எயார் போர்ட்டில் ஒருவரை தாக்குகிறார்.

 சட்டம் அமுலாகவில்லை. ஒட்டுமொத்த கட்டுப்பாடும் குற்றச்செயல் புரிபவர்களின் பிடிக்குள் அகப்பட்ட இலங்கை தான் இருக்கிறது. பாரியளவிலான நிதிசார் குற்றச்செயல் புரிந்தவர்கள், மனித படுகொலைகளுடன் தொடர்புப்பட்டவர்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்கள். நூரித் தோட்டத்தின் தோட்டத்துரை படுகொலை வழக்கில் 13 பேருக்கு மரணதண்டனை உரித்தானது. 

ஹோகந்தர குடும்பத்தில் ஐவரின் படுகொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தது. எனினும் லசந்த படுகொலை, தாஜுடீன் படுகொலை, எக்நெலிகொட கடத்திச் சென்றமை, கீத்நொயார், உபாலி தென்னகோன், போத்தல ஜயந்த தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் இன்றும் கிடையாது. பரபரப்பினை ஏற்படுத்திய ஒவ்வொரு குற்றச்செயலையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்தது. 

கண்டுபிடிக்க முடியாமல் போன ஒவ்வொரு குற்றச்செயலினதும் ஒவ்வொரு படுகொலையினதும் பின்னால் அரசியல் இருக்கின்றது. எமது நாட்டில் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் உறுதி செய்கின்ற நெறிமுறைகள் நிறைந்த சட்டத்தை மதிக்கின்ற ஆட்சியை நாங்கள் உருவாக்கவேண்டும்.

சீரழிந்த ஒரு பொருளாதாரமே எமக்கிருக்கிறது. நாங்கள் 20 ஆம் நூற்றாண்டை கைவிட்ட ஒரு தேசமாவோம். மனித நாகரிகத்தின் முக்கியமான காலகட்டம் தான் 20 ஆம் நூற்றாண்டு. தொழிநுட்பத்தின் பாரிய மாற்றங்கள் இடம்பெற்ற நூற்றாண்டாகும்.

 நாங்கள் ஒரு தேசம் என்ற வகையில் பாரிய தொழிநுட்பத்தின் தொடர்பாடலின் மாற்றங்களை இலங்கைக்கு கொண்டு வந்து பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலுக்கு கொண்டுவருவதில் தோல்வி கண்டோம். 

எமக்கு பழைய பெருமைமிக்க வரலாறொன்று இருந்தது. மிகவும் முன்னேற்றகரமான நீர்பாசனத் தொழிநுட்பம், கட்டிடக்கலை, சீகிரியாவின் நகரநிர்மாண திட்டமிடல், மீகிந்தலையில் மருத்துவ அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமைக்கான கத்தரிக்கோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அத்தகைய பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமை பாராட்டிய நாங்கள் இன்று உலகில் மிகவும் வறுமையான நாடுகள் தொகுதிக்குள் வீழ்ந்துள்ளோம். பெருமைமிக்க வரலாற்றினை நவீனத்துவத்துடன் சீராக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. 76 வருடகால ஆட்சியாளர்களுக்கு தூரநோக்கொன்று இருக்கவில்லை. பொருளாதார நச்சுவட்டத்தில் நாங்கள் இறுகிப்போனோம். இந்த வட்டத்திலிருந்து நாங்கள் விடுபடவேண்டும்.

உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய பொருளாதாரத்தில் நாங்கள் பிரவேசிக்க வேண்டும். IT தொழிற்துறை மிகமுக்கியமானதாகும். மிகவும் குறுகிய காலத்தில் 5 பில்லியன் பொருளாதாரத்திற்கு செல்ல நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். அதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை ரெலிகொம் நிறுவனம் அமைத்துக் கொடுக்கவேண்டும். 

ஆனால் அதனை விற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க திட்டவரைப்படத்தை தயாரித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் அதற்கு இடமளிக்கவேண்டுமா? எங்களுடைய நிதி நிறுவனங்களில் அரசாங்கத்திற்கு உரிமையானதாக இருப்பது ஒன்றுதான். அது தான் காப்புறுதிச் சந்தையை நெறிப்படுத்துகின்றது. அதனையும் விற்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். 

WhatsApp_Image_2024-06-17_at_16.35.31.jp

அரசாங்கத்திற்கு சொந்தமான வளங்களிலிருந்துதான் தொலைத்தூர கிராமங்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன. வலுச்சக்திக்காக சிறந்த சாத்தியவளம் எம்மிடம் இருக்கிறது. 2030 அளவில் உலகின் எரிபொருளுக்கான கேள்வி உச்சக்கட்டத்தை அடையும். 2050 அளவில் உலகின் வலுச்சக்தி தேவை 65% - 85%  இடைப்பட்ட அளவினை மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி மூலங்களே உற்பத்தி செய்யும். எமக்கு மன்னார் வடிநிலத்தில் மிகச் சிறந்த காற்றுக்கொள்திறன் இருக்கிறது. அது 45 கிகாவொற் கொள்ளலவாகும். தற்போது எமக்கு அவசியமாவது 4 கிகவொற் ஆகும். 2040 இல் 8 கிகாவொற் அவசியமாகின்றது. 

மிகச் சிறந்த சூரிய சக்தி சாத்தியவளம் நிலவுகின்றது.  இவை அனைத்தையும் தற்போது சொச்சத் தொகைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். டெண்டர் கோராமல் காற்றாலை மின்சாரத்திற்கான அனுமதி அதானிக்கு வழங்கப்பட்டது. அவர்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள். அவ்வாறு உற்பத்தி செய்கின்ற மின்சாரத்தை அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும். 20 வருடங்களுக்கான அக்ரீமண்ட் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதானியிடமிருந்து 8.26 சதம் டொலருக்கு வாங்குவார்கள். அதானி இந்தியாவுக்கு கொடுப்பது 3.5 சதம் டொலருக்காகும். அதானிக்கு இந்தியா கொடுப்பதும் டெண்டர் கோரியே. எம்மிடம் 31 விவசாய பண்ணைகள் இருக்கின்றன. 28,000 ஏக்கர்கள் இருக்கின்றன. 

இந்த 28,000 ஏக்கர்களை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தனது இறுதிக்காலத்தில் அனைத்து வளங்களையும் விற்று தனது அமைச்சர்களுக்கு இயலுமானவரை திருட இடமளித்து செல்கின்ற பயணமொன்றை நிர்மாணித்துள்ளார். இந்த பயணத்தை தடுத்து நிறுத்தவேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில், கனிய வளங்களின் பேரில், சுற்றுலா கைத்தொழிலின் பேரில், வரலாற்றின் பேரில் எம்மால் புதிய பொருளாதார பயணத்தில் பிரவேசிக்க முடியும். தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் இழந்த மறுமலர்ச்சியை கைப்பற்றிக்கொள்ள வேண்டும்.

WhatsApp_Image_2024-06-17_at_16.35.30.jp

அவர்களுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்து அதிகாரம் கிடைக்கின்றது. எமக்கிருக்கின்ற ஒரே சக்தி உங்களின் ஒத்துழைப்பாகும்: பொதுமக்களின் சக்தியாகும். உங்களின் ஒத்துழைப்பு முன்னொருபோதும் இருந்திராதவகையில் இன்று அவசியமாகின்றது. 

உங்களுடைய பலம் கிடைக்காவிட்டால் இந்த பல்லாயிரக்கணக்கானோர் குழுமியுள்ள கூட்டத்தை எம்மால் நடத்த முடியாது. உங்களின் ஊக்கத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் பெரிதும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். உங்களின் இடையீடு, உங்களின் பங்களிப்பு, உங்களின் உழைப்பின் பெறுபேறு இன்று கிடைத்துள்ளது. 

இது முடிவு அல்ல. இது லண்டனில் புதியதொரு ஆரம்பம். எம்மெதிரில் இருக்கின்ற மூன்றரை மாதக்காலப்பகுதி மிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். உங்களின் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் மீண்டும் மீண்டும் உரையாடுங்கள் நாங்கள் தொடர்ந்து உரையாடுவோம்: எழுதுவோம்: தோற்றுவோம். நீங்கள் முன்வைக்கின்ற பிரேரணைகளையும் விமர்சனங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயார். நாங்கள் ஒரே கூட்டு இயக்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் ஒன்று சேர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/186300

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் உலகத்துக்கே நாகரிகம் கற்று கொடுத்த அறிவு கொழுந்துகள்

5 hours ago, ஏராளன் said:

எமக்கு பழைய பெருமைமிக்க வரலாறொன்று இருந்தது. மிகவும் முன்னேற்றகரமான நீர்பாசனத் தொழிநுட்பம், கட்டிடக்கலை, சீகிரியாவின் நகரநிர்மாண திட்டமிடல், மீகிந்தலையில் மருத்துவ அறுவைச்சிகிச்சை மேற்கொண்டமைக்கான கத்தரிக்கோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பிரசங்கம் வைப்பதில் வல்லவர்கள்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இவ்வளவு பெரிய இடம் இவர்களுக்கு கொடுத்து இருக்கின்றதே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.