Jump to content

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன்

Published By: RAJEEBAN

26 JUN, 2024 | 02:01 PM
image
 

tamil guardian

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும்- பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

umakumaran11.jpg

 

மே 2009க்கு முன்னதாகவும் மே 2009 இன் போதும் இடம்பெற்ற யுத்த குற்றங்களிற்காக இதுவரை எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை என்பது உண்மையாகவே நம்பமுடியாத விடயமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்,ஆயிரக்கணக்கில் எங்கள் மக்கள் மணலில் குறுகியி நிலப்பரப்பில் தஞ்சமடைந்திருந்ததையும்,மருத்துவமனைகள் மீதும் செஞ்சிலுவை சங்கத்தின்மீதும் வேண்டுமென்றே எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றதையும்,உயர் பாதுகாப்பு வலயங்கள் எனப்படுபவையையும்,தமிழ் ஆண்களும் பெண்களும் எதிர்கொண்ட சித்திரவதைகள் பாலியல் வன்முறைகளையும் நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஒரு முழுதலைமுறை குடும்பங்கள் இல்லாமல் வளர்கின்றது ,ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் யுத்தத்தினால் ஏற்பட்ட உள உடல் காயங்களுடன்வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இதனை இவ்வளவு விரிவாக நினைவுபடுத்தவிரும்பவில்லை ஆனால் எங்கள் வரலாற்றை நாங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கை ரோம்சாசனத்தில் சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்தில்கையெழுத்திடாதது ஏமாற்றமளிக்கின்றது ,ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

2009 இல் படுகொலைகள் இடம்பெறும்வேளை தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய டேவிட்மில்லிபாண்ட் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் தனது கரங்களை உயர்த்த முயன்றார் எனக்கு இது ஞாபகம் இருக்கின்றது,அப்போதைய பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிரவுனுடன் இது பற்றி பேசசென்றிருந்த தமிழர்களில் நானும் இடம்பெற்றிருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சியின் வெளிவிவகார அமைச்சர் அக்காலப்பகுதியில் மிகவும் தெளிவான நிலைப்பாட்டுடன் காணப்பட்டார்,இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமை குறித்து ஐநாவின் அனைத்து சபைகளும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்  என தான் கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார் என உமாகுமரன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவங்கள் இடம்பெற்றுமுடிந்து 15 துயரமான வருடங்களாகிவிட்டன,ஆனால் தொழில்கட்சி நீதிக்காக பரப்புரை செய்வதை ஒருபோதும் நிறுத்தவில்லை,

எங்களின் கட்சியின் பல உறுப்பினர்கள் தங்கள் தொகுதிமக்களிற்காக குரல்கொடுத்துள்ளனர், தமிழ் மக்களின் நீதிக்காக போராடியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் தமிழர்களிற்கு ஆதரவாக செயற்படவேண்டும்,அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை செவிமடுக்கவேண்டும் என தொழில்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட்லம்மி வேண்டுகோள் விடுத்துவருகின்றார் எனவும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

 

uma_kumaran22.jpg

இந்த வருடம் தொழில்கட்சியின் தற்போதைய தலைவரும் பிரிட்டனின் அடுத்த பிரதமர் என நாங்கள் எதிர்பார்ப்பவருமான கெய்ர் ஸ்டார்மெர் அட்டுழியங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்காக நாங்கள் பாடுபடவேண்டும் என  தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிரந்தரசமாதானம் நல்லிணக்கம் மற்றும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு குறித்து பிரிட்டனின் தொழில்கட்சி தெளிவானஉறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

தமிழர்களிற்கு கிடைக்கவேண்டிய பொறுப்புக்கூறல் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் தொழில்கட்சி ஏற்கனவே ஆதரவை வெளியிட்டுள்ளது,தொழில்கட்சி ஆட்சியமைத்தால் அதன் வெளிவிவகார கொள்கைகளில் முன்னுரிமைக்குரிய விடயமாக இது காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை நான்காம் திகதி நான் தெரிவுசெய்யப்பட்டால் நான் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் தீவிரஈடுபாட்டை பேணுவேன்,குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அரசசார்பற்ற அமைப்புகளுடன் எனவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம்  குற்றங்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்,பாலஸ்தீனத்தில் தற்போது நடைபெறும் விடயங்கள் குறித்து எனது கருத்து இதுவே -துயரத்தில் சிக்குண்டவர்கள் உயிரிழந்தவர்களிற்கான நீதியை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக அரங்கில் நீதிக்கான எங்கள் வேண்டுகோள்களை நாம் வலுப்படுத்தவேண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்கான ஆதரவை ஏனைய நாடுகளிடமிருந்து பெறுவதற்கான இராஜதந்திர முயற்சிகளிற்காக நான் பரப்புரை செய்வேன் என தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.

பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.... அவலங்களையும் இழப்புக்களையும் துயரங்களையும் சுமந்து ஆறுதல் தேடும் மக்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்கப்படவேண்டும் தாங்கள் தங்கள் மண்ணில் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்படவேண்டும் என எதிர்பார்த்து தலைவர்களை தேர்ந்தெடுத்து தமது அபிலாசைகளை நிறைவேற்றுவார்கள் என காத்திருந்து ஏமாந்துள்ளார்கள். அவர்கள் தலைவர்களே தமது எதிரிகளை காப்பாற்றுகிறார்கள். தங்கள் நிலங்களில் நடந்த துயரங்களை எடுத்துச் செல்ல, சொல்ல தயங்குகிறார்கள். ஆனால் இன்று பல நாடுகளில் இந்தப்பிரச்சனை பேசப்படுகிறது  அரசியல் செய்கிறது. இது வெறும் 
வாக்கு   அரசியலா? அல்லது  மாற்றம் ஏதும் ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமா?

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM   பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187350
    • சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும்.  சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
    • 01 JUL, 2024 | 12:03 PM   எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.  பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றினர்.  அத்துடன் அப்படகுகளில் நின்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்நிலையில், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.  கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். மீனவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187368
    • Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின.  இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187356
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.