Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"கோபத்தைக் குறைத்துவிடு"
 
 
"கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்"
 
கண்டது ஒரு [அழகு] வடிவத்தை, அதை கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு உருகி நிட்குதே, ஆனால், இவள் [இவர்] பேசுவதோ பைத்தியக்காரி [பைத்தியகாரன்] மாதிரி இருக்கிறது, அதை கேட்டவுடன் உடனே கோபம் வருகிறதே!. என் மனம் இப்படித்தான் ஊசல் ஆடிக்கொண்டு இருந்தது.
 
காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் அது வந்து விடலாம்?. அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு. மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும். மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல், அப்படியே முடிவு செய்து விடும். இதைத்தான் நான் இப்ப அனுபவிக்கிறேன்.
 
இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள். பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் ஒன்று சேருகிறது. என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன். இங்கு மூளைக்கு இடம் இருக்கவில்லை. பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன்.
 
 
"பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்."
 
இப்படித்தான் நாம் ஒருவரை ஒருவர் எம் பணிமனையில் முதல் முதல் கண்டபொழுது இருவர் மனதிலும் உடலிலும், ஒரே நேரத்தில் ஏற்பட்ட சில சொல்லமுடியாத உணர்வுகளால் ஒன்றிணைந்தோம். இன்னும் அதை மறக்க முடியவில்லை.
 
 
"கண்ணொடு கண் இணை
கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
அவளும் நோக்கினாள்"
 
அவள் தனது முதல் உத்தியோகமாக, எனக்கு கீழ் ஒரு தொழில்நுட்ப உதவியாளராக அங்கு இணைந்தாள். அந்த அறிமுகம் தான் எம்மையும் அன்றே இணைக்க காரணமானது. என்றாலும் அது எவ்வளவு தவறு என்பதை இன்று உணர்கிறேன். இராமாயணத்தில் சீதை தனது வாழ்வை சந்தோசமாக களித்தாளா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். அப்படித்தான் இப்ப என் வாழ்வும்.
 
அடிக்கடி நம் கோபத்தில் சிக்கிக்கொள்ளும் போது, நாம் உணரும் ஒரே உணர்ச்சி இது என்று நினைக்கிறோம், ஒருவேளை, அங்கே கொஞ்சம் மனக் காயமும் பயமும் கலந்திருக்கலாம். அந்த தருவாயில், நமது கோபத்தின், காயத்தின், பயத்தின் குரலை மட்டுமே நாம் கேட்கிறோம் , இதனால் நாம் அநேகமாக தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதே உண்மை. அப்படித்தான் என் மனைவியின் நிலை இன்று இருக்கிறது.
 
அன்று நாம் திருமணம் செய்து முதல் நாள். நாம் இருவரும் தேன்நிலவுக்கு போய் இருந்தோம். அன்று இரவு அவள் உடை மாற்றிக்கொண்டு, என்னிடம் வந்த அழகை, மகிழ்வை எப்படி சொல்வேன்? பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் அவள் தன்னகத்தே கொண்டு அங்கு வந்தாள்.
 
 
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடி யளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென”
 
ஆனால் அதன் பின் ஒழிந்து இருந்த "மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் " அப்பொழுது எனக்குத் தெரியவில்லை? ஒரு வேளை என் தவறால் அது அவளிடம் இன்று வந்ததா எனக்குத் தெரியாது? என்னுடன் ஒரு இரு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவள், இன்று திருமணத்தில் மகிழ்ச்சியற்றவளாக எரிஞ்சு விழுகிறாள்? ' நான் அவரை இனிமேலும் காதலிக்கவோ, கணவராக ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை, தீவிரமாக விவாகரத்து செய்ய சிந்திக்கிறேன்' என தன் தோழியிடம் கோபமாக கூறுவது என் காதில் விழுந்தது.
 
இப்ப கொஞ்ச நாளாக என்னைக் கண்டால் கோபமாகத்தான் பார்க்கிறாள், விலத்தி விலத்தி போகிறாள். ஏன் இப்ப என்னுடன் ஒரே கட்டிலில் கூட படுப்பதும் இல்லை. பக்கத்து அறையில் தனிய படுத்துவிடுவார். "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்" என்ற திருக்குறள் எனக்கு வலிமையைக் கொடுத்து,
 
அவளின் கோபத்தின் முன் தோற்றவராக என்னைச் சரிபடுத்திக் கொண்டாலும், அவளின் அந்த ஊடல், கோபம் எப்ப முடியும்? எப்ப நான் கூடி மகிழும் நிலை வரும் என்பது இப்ப ஐயப்பாடாக எனக்குத் தோன்றியது.
 
சமாதானமாக, அன்பாக விட்டுக்கொடுத்து வாழும் சாத்தியத்தை பரிசீலிக்க நான் அவளை எவ்வளவோ ஊக்கப்படுத்தினாலும் அதை அவள் உதாசீனப்படுத்தியதுடன் என்ன கேவலமாகவும் கோபமாகவும் பார்த்தாள். அப்படி என்ன தவறு நான் செய்தேன் ? ' அவர் வீட்டுக்கு வெளியே அதிக நேரம் செலவிடுகிறார். அவர் தெளிவாக, குடும்பத்தை விட வேலைக்கு முன்னுரிமை அளித்துள்ளார் போல்த்தான் எனக்கு தெரிகிறது. அவருக்கு நானோ, நாமோ முக்கியம் இல்லை போல் உணர்கிறேன்' இப்படித்தான் அவள் சமதனப் படுத்த வந்த தோழிக்கு சொன்னாள்.
 
'நாம் இரண்டு ஆண்டுகள் நன்றாக சுற்றித்திரிந்து ஒன்றாக ஆனந்தமாக காலம் போக்கிவிட்டோம். இனி குடும்பத்தை கட்டி எழுப்பவேண்டும். பிள்ளைகள் வரும் முன் அதற்கு தேவையான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு நான் இப்ப, இன்னும் ஒன்று இரண்டு ஆண்டுக்கு கடுமையாக உழைக்க முயற்சிக்கிறேன், அவ்வளவு தான், இது எம் இருவரின் வாழ்வுக்கே' நான் அவளின் தோழிக்கு, அவளுக்கு முன்னாலேயே விளங்கப்படுத்தினேன்.
 
ஆனால் அவளோ, நான் இப்ப கல்யாண வாழ்வில் தனிமையை உணருகிறேன், வாழ்வில் வெறுப்பு வெறுப்பாக வருகுது, நாம் விலகி போகிறமோ என்று பயப்படுகிறேன், அது கட்டுக்கடங்கா கோபம் கோபமாக வருகுது. நான் உண்மையை சொல்வதென்றால், இப்ப வேறொருவர் எனக்கு காதலையும் என் மேல் தனிப்பட்ட கவனத்தையும் தருவார் என்றால், நான் கவலைப்படாமல் அதை ஏற்றாலும் ஏற்பேன் என்று அவள் கோபமாக கூறியது என்னைத் தூக்கி வாரிப் போட்டது.
 
எனக்கு ஆசை இல்லையா ? காதல் காமம் இல்லையா ? ஆனால் அதிலேயே முழுதாக தொடர்ந்து இருந்தால், வாழ்வை எப்படி கட்டி எழுப்புவது?, அது ஒன்று தான் என் கேள்வி ? அதை அவள் புரியாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் விவாகரத்து எடுத்து இன்னும் ஒருவருடன் போகவும் தயார், அதுக்கே முயற்சிக்கிறேன் என கூறியது தான் வியப்பாக இருந்தது!
 
கல்யாணம் [marriage] என்றால் என்ன ? கூடி வாழ்வது [just living together] என்றால் என்ன ? இந்த அடிப்படையே தெரியாத ஒருவளை, அழகில் மயங்கி கல்யாணம் கட்டினேனே என்று எனக்கும் இப்ப, இதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கோபம் வெளியே வந்தது.
 
என்னடா இவனும் சேர்ந்து கோபப்படுகிறான் என்று யாரும் யோசிக்கலாம். ஆனால் பெரிதாக ஒண்ணுமில்லாத. சமாளிக்கக் கூடிய விடயத்துக்குக் கூட தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்து பிரியும் மனப்போக்கை காட்டும் பொழுது, எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. நான் முற்றும் துறந்த முனிவராக வாழப்போகிறோம் என்று சொல்லவில்லை, கட்டாயம் எல்லா நிலை வாழ்வும் இருக்கும், ஆனால் கொஞ்சம் கூடுதலாக வேலையில் நேரம், கவனம் , எம் வாழ்வின் பொருளாதார உறுதிக்கு தற்காலிகமாக எடுத்தேன் என்பதே உண்மை.
 
ஒரு மனிதன் கோபமே கொள்ளாமல் இருக்க முடியாது. சிலவேளை நம் குழந்தைகளை, மாணவர்களை நல்வழிப்படுத்த, அதிகாரிகள் தன் கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க கோபத்தை குறைந்த அளவில் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அப்படித்தான் நான் அவளிடம் என் கோபத்தைக் காட்டினேன். அவள் நல்லவள், அறிவு உள்ளவள், என் கோபத்தை பார்த்தாள் சிந்திப்பாள். தன் கோபத்தை குறைப்பாள். அதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அது தான் அந்த ஆயுதத்தை நானும் இறுதியாக எடுத்தேன்! ஒன்றை ஞாபகப் படுத்துங்கள் 'கோபம் வந்தால்தான் மனிதன் உயிரோடு இருக்கலாம். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதனால் கோபம் உயர்ந்ததாகாது' அதைத்தான் நான் காட்டினேன்.
 
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
331875511_566413428857803_5026733142022348168_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=suDpWb30ZHYQ7kNvgHxXIhQ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCB8BP08QfzXeySbWcgebzIMG4uQGupBj2c-z9Vy2zyXQ&oe=6682F713  330993739_510319927842567_2436258695403732786_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=p7J3ovAkV5cQ7kNvgFKbKIX&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYC6wAcPzLfkyVUYYSRjkAXdeyoUYx_B8jcVPuz1_WYcFw&oe=66831122
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.