Jump to content

ரி20 உலக சம்பியனானது இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக  ரி20 உலக  சம்பியனானது இந்தியா

29 JUN, 2024 | 11:51 PM
image
 

(நெவில் அன்தனி)

பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை  7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா ரி20 உலகக் கிண்ணத்தை 2ஆவது தடவையாக சுவீகரித்தது.

தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எம்.ஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா இப்போது 17 வருடங்களின் பின்னர் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது.

இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்கு மீண்டும் துரதிர்ஷ்டமே காத்திருந்தது.

விராத் கோஹ்லி குவித்த அபார அரைச் சதம், ஹார்திக் பாண்டியாவின் கடைசி ஓவர் உட்பட கட்டுப்பாடான பந்துவீச்சு, ஜஸ்ப்ரிட் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவை சம்பியனாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்ததாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

விராத் கோஹ்லி, அக்சார் பட்டேல் ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் பலனாகவே இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

ரோஹித் ஷர்மா (9), ரிஷாப் பான்ட் (0), சூரியகுமார் யாதவ் (3) ஆகிய மூவரும் முதல் 5 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்ததால் இந்தியா பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், விராத் கோஹ்லி, அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு உயிர்ப்பைக் கொடுத்தனர்.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த விராத் கோஹ்லி  59 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைக் குவித்தார்.

அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய அக்சார் பட்டேல்  31 பந்துகளில் ஒரு பவண்டறி, 4 சிக்ஸ்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட ஷிவம் டுபே 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

177 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தியாவைப் போன்றே தென் ஆபிரிக்காவின் ஆரம்பமும் சிறப்பாக அமையவில்லை.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (4), அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் (4) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர்.

எனினும் குவின்டன் டி கொக், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 31 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மொத்த எண்ணிக்கை 106 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக், ஒரே விதமாக லோங் லெக்கில் இரண்டாவது சிக்ஸ் அடிக்க முயற்சித்து 39 ஓட்டங்களுடன் வீணாக தனது விக்கெட்டை இழந்தார்.

ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு சோதனையைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஹென்றிச் க்ளாசன் 52 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (151 - 5 விக்.)

க்ளாசனின் ஆட்டம் இழப்பு தென் ஆபிரிக்காவுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

கடைசி ஓவரில் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு மேலும் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஹார்திக் பாண்டியாவின் முதல் பந்தை சிக்ஸாக விளாசி அடிக்க டேவிட் மில்லர் முயற்சித்தார். ஆனால், பவுண்டறி எல்லையில் சூரியகுமார் யாதவ் பவுண்றி எல்லையில் பந்தைப் பிடித்து உள்ளே எறிந்துவிட்டு வேளியே சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தைப் பிடிக்க டேவிட் மில்லர் ஆட்டம் இழந்தார். அத்துடன் தென் ஆபிரிக்காவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.

அடுத்த 5 பந்துகளில் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா இந்தியா உலக சம்பியனாவதை உறுதிசெய்தார்.

இதேவேளை, விராத் கோஹ்லி ஆட்டநாயகன் விருதுடன் ரி20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்துடன் விடைபெற்றார்.

https://www.virakesari.lk/article/187282

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கோப்பையை முத்தமிட உதவிய ரோஹித் சர்மாவின் வியூகங்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கும்போது அங்கு மகிழ்ச்சி, சோகம், கண்ணீர், விடைபெறுதல், முடிவுகள் எனப் பலவும் இருக்கும். இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்ற தருணத்திலும் இவை நடந்தன.

கிரிக்கெட்டில் சில கேட்சுகள் காலத்தால் நினைவு கொள்ளப்படும், சில விக்கெட்டுகள் என்றென்றும் மறக்கப்படாது, சில ஓவர்கள் எப்போதும் பேசப்படும்.

சூர்யகுமார் பிடித்த கேட்ச், பாண்டியாவின் 2 ஓவர்கள், பும்ராவின் 2 விக்கெட்டுகள் ஆகியவை இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பெற்றது பற்றி பேசப்படும் போதெல்லாம் நிச்சயம் பேசப்படும்.

இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை 17 ஆண்டுகளுக்குப் பின் பெறுவதற்கும் வரலாறு படைப்பதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் என்பதை மறுக்க முடியாது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிலும் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் பும்ரா தேவைப்பட்ட நேரத்தில் வீசிய 2 திருப்புமுனை ஓவர்கள், ஹர்திக் பாண்டியாவின் ஆகச் சிறந்த பந்துவீச்சில் கிடைத்த 2 விக்கெட்டுகள் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்டத்தை இந்திய அணியின் கைகளில் சேர்த்தன.

இந்தத் தருணத்தைத்தான் இந்திய அணியும் கடந்த 11 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்தது. 11 ஆண்டுகளாக ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளைச் சந்தித்தும் அதில் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை சென்றும் ஒன்றில்கூட சாம்பியன் பட்டத்தை இந்திய அணியால் வெல்ல முடியாத சூழல் இருந்தது. அந்த ஏக்கத்துக்கும் நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதோடு, இரு மிகப்பெரிய ஜாம்பவான்களின் டி20 வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா, ‘கிங்’ கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களிடம் இருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்.

பர்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பரிசுத் தொகை எவ்வளவு?

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 உலகக்கோப்பைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.93.80 கோடியை பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்திருந்தது. சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் இந்திய மதிப்பில் ரூ.20.42 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2வது இடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ.10.67 கோடி வழங்கப்பட்டது.

அரையிறுதி வரை வந்த இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ரூ.6.56 கோடி கிடைக்கும். 2வது சுற்றைக் கடக்காத அணிகளுக்கு தலா ரூ.3.18 கோடியும், 9 முதல் 12வது இடம் வரை பெற்ற அணிகளுக்கு ரூ.2.06 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

மேலும், 13 முதல் 20வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.1.87 கோடி வழங்கப்படும். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக ரூ.26 லட்சம் பெறும். இந்தக் கணக்கில் அரையிறுதி, இறுதிப்போட்டி வெற்றிகள் சேராது.

ஓய்வு பெறச் சிறந்த தருணம் இல்லை

சாம்பியன் பட்டம் வென்றபின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, கடந்து வந்ததை நான் தொகுத்துக் கூறுவது கடினம். ஏராளமானோரின் உழைப்பு, பணிகள், திட்டங்கள் இந்த வெற்றிக்குப் பின்னால் அடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த சாம்பியன்ஷிப்.

ஏராளமான அழுத்தங்கள், நெருக்கடிகள் நிறைந்த ஆட்டம். இந்த அழுத்தத்தில் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அணியினர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது சிறந்த உதாரணம். இதற்கு முன் அதிக அழுத்தம் கொண்ட ஆட்டங்களில் தவறும் செய்துள்ளோம். ஆனால் இந்த ஆட்டத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை வீரர்கள் நன்கு தெரிந்திருந்தனர். இந்த அணியை வழிநடத்திச் சென்றதை பெருமையாகக் கருதுகிறேன்," என்று தெரிவித்தார்.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணியை சுதந்திரமாக வழிநடத்தி, விளையாடி, திட்டங்களை செயல்படுத்த அனுமதியளித்த நிர்வாகம், பயிற்சியாளர் டிராவிட், மேலாண்மை என அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரோஹித், வீரர்கள் தனிப்பட்ட ரீதியிலும், குழுவாகவும் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டினார்.

"விராட்டின் ஃபார்ம் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக யாரும் சந்தேகத்தித்து இல்லை. இதுபோன்ற தருணத்தில்தான் பெரிய வீரர்கள் விஸ்வரூமெடுப்பார்கள். கடைசி வரை கோலி இருந்து ஆட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை, இருப்பினும் கோலி அருமையாக பேட் செய்தார். அக்ஸர் படேல் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. பும்ராவை பற்றிக் கூற வேண்டுமானால், அவரின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ். ஹர்திக் கடைசி ஓவரை அற்புதமாக வீசினார்.

இதுதான் இந்திய அணிக்காக நான் விளையாடிய கடைசி சர்வதேச டி20. டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இருக்காது. ஒவ்வொரு தருணத்தையும் நேசிக்கிறேன். டி20 மூலம் இந்திய அணிக்குள் வந்து, அதிலிருந்தே விடை பெறுகிறேன். சாம்பியன்ஷிப் என்ற வார்த்தையைத்தான் விரும்பினேன், இதுதான் தேவையாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித், கோலி என்ற இரு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் யாரும் எதிர்பாராதது. ரோஹித் சர்மா 159 டி20 போட்டிகளில் 4,231 ரன்களையும், 5 சதங்களையும் விளாசியுள்ளார். 2 உலகக்கோப்பைகளை வென்றபோதும் ரோஹித் இருந்துள்ளார். 2007ம் ஆண்டில் இந்திய அணியில் வீரராகவும், 2024இல் கேப்டனாகவும் ரோஹித் இருந்தார்.

இரு ஜாம்பவான்களும் கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்குப் பின் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. டி20 உலகக்கோப்பைக்காகவே ஜனவரியிலிருந்து ரோஹித் விளையாடத் தொடங்கினார். இந்த உலகக் கோப்பையிலும் 257 ரன்களை ரோஹித் குவித்து அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பெற்றார்.

வியூகம் அமைத்த இந்திய அணி

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீரா வெறி இந்திய வீரர்களிடம் இருந்தது. இதனால் தென் ஆப்ரிக்கா பேட்டர்களின் ஒவ்வொரு விக்கெட்டையும் சரியான வியூகம் அமைத்து வீழ்த்தினர்.

விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே பும்ரா முதல் ஓவரை வீசினார். அவரின் எண்ணப்படியே அவரது முதல் ஓவரில் வீசப்பட்ட இன்கட்டரில் ஹென்ட்ரிக் கிளீன் போல்டாகி(9) ஆட்டமிழந்தார். அடுத்ததாக அர்ஷ்தீப் தனது பங்குக்கு கேப்டன் மார்க்ரம்(4) விக்கெட்டை சாய்த்தார்.

டீ காக், ஸ்டெப்ஸ் இருவரும் சேர்ந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்று பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த பார்ட்னர்ஷிப்பையும் இந்திய அணியினர் உடைத்தனர். ஸ்டெப்ஸை அதிரடியாக சில ஷாட்களை ஆட வைத்து, அடுத்த பந்தை ஃபுல் டாஸாக வீசி போல்டாக்கினார் அக்ஸர் படேல்.

ரோஹித் வலையில் சிக்கிய டீ காக்

இருப்பினும் டீ காக் தொடர்ந்து டீப் பேக்வார்ட் திசையில் சிக்ஸர், பவுண்டரி அடித்ததைக் கண்டறிந்த கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த வியூகத்தை அமைத்தார். டீ காக் மீண்டும் டீப் பேக்வார்டு திசையில் ஷாட் அடிக்கும் வகையில் அர்ஷ்தீப்பை பந்துவீசச் செய்து அங்கு குல்தீப் யாதவை ஃபீல்டிங் செய்ய வைத்தார்.

ஃபீல்டர் இருப்பதைக் கவனிக்காமல் மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது, இந்திய கேப்டன் ரோஹித் விரித்த வலையில் டீ காக் சிக்கி(39) விக்கெட்டை இழந்தார். இதுவரை இந்திய அணியின் திட்டப்படி நகர்ந்தது.

மிரட்டிய கிளாசன்

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், கிளாசன் களத்திற்கு வந்தது முதல் ஆட்டத்தின் போக்கு அப்படியே திசை மாறி தென் ஆப்ரிக்கா பக்கம் சென்றது.

ரன்ரேட்டை குறையவிடாமல் சிக்ஸர், பவுண்டரி என இந்திய பந்துவீச்சைத் துவைத்த கிளாசன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிசப்தமாக்கினார். களத்தில் இருந்த இந்திய அணியினருக்கு கிளாசனின் முரட்டுத்தனமான ஷாட்கள், அசுரத்தனமான பேட்டிங்கை பார்த்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கீரிஸில் நின்று கொண்டே ஃபேக்புட்டில் சிக்ஸர், லாங்ஆனில் சிக்ஸர் என இந்திய பந்துவீச்சைக் காலி செய்தார் கிளாசன். ஒரு கட்டத்தில் பந்துகள் குறைவாகவும், தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்கள் அதிகமாகவும் இருந்தது, ஏறக்குறைய 20 பந்துகள் வித்தியாசத்தில் இருந்தது.

ஆட்டம் திரும்பியது

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அக்ஸர் படேல் ஓவரை குறிவைத்து கிளாசன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி, 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசன் தனது காட்டடியால் தேவைப்படும் ரன்கள், பந்துகளை சமன் செய்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆட்டம் மெல்ல இந்திய அணியின் கரங்களில் இருந்து நழுவுவதை கேப்டன் ரோஹித் அறிந்தார். கடைசி 30 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலை இருந்தது.

திருப்புமுனை தந்த பாண்டியா

அப்போதுதான் ஹர்திக் பாண்டியாவை 2வது ஓவர் வீச ரோஹித் அழைத்தார். ஹர்திக் பாண்டியா முதல் பந்தை ஆஃப் சைடில் விலக்கி வீசவே அதைத் தேவையின்றி தொட்ட கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

கிளாசன் விக்கெட் வீழ்ந்ததுமே இந்திய அணியினர் மகிழ்ச்சியில் குதித்தனர். கிளாசன் ஆட்டமிழந்தது முதல் தென் ஆப்ரிக்கா நெருக்கடியிலும், அழுத்தத்திலும் சிக்கி பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதை மறந்தது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ரா மாஸ்டர்கிளாஸ்

பும்ரா 18வது ஓவரை வீசினார். வர்ணனையாளர்கள் கூறியபடி, பும்ராவின் ஓவரில் யான்சென் கிளீன் போல்டாகி வெளியேற 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்கவே வெற்றி இந்தியாவின் அருகே வந்தது.

அர்ஷ்தீப்பும் 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் கொடுக்கவே ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

வரலாற்று கேட்ச்

ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்திலேயே லாங்ஆன் திசையில் மில்லர் பெரிய ஷாட் அடிக்க, சிக்ஸருக்கு சென்ற பந்தை சூர்யகுமார் கேட்ச் பிடித்தார். ஆனால் நிலை தடுமாறி பவுண்டரிக்கு வெளியே செல்லும்போது பந்தை மைதானத்துக்குள் தூக்கி வீசிவிட்டு, மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதன்பின் வந்த ரபாடா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி நேர அழுத்தத்தைத் தாங்காமல் தென் ஆப்ரிக்க அணியினர் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. இந்த ஓவரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா வியூகம் அமைத்துச் செயல்பட்ட அனைத்தும் வெற்றியாக அமைந்தது.

உலகத் தரமான பந்துவீச்சாளர் பும்ரா

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எப்படி ஒரு மால்கம் மார்ஷல் கிடைத்தாரோ அதுபோல் இந்திய அணிக்கு கிடைத்தவர் ஜஸ்பிரித் பும்ரா. தட்டையான பார்படாஸ் ஆடுகளத்தில் பந்தை ஸ்விங் செய்வது கடினமானது.

இந்த விக்கெட்டில் பேட்டர்கள் ‘விளையாட முடியாத’ இரு பந்துகள் வீசி இரு விக்கெட்டுகளை பும்ரா எடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனை. பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக லைன் லென்த்தில் கச்சிதமாக ஈட்டிபோல் இறங்கின.

அதிலும் 18வது ஓவரில் தேய்ந்த பந்தில் யான்சென் விக்கெட்டை இன்கட் மூலம் போல்டாக்கியது பந்துவீச்சில் பும்ரா அறிவுஜீவி, உலகின் முதல்தரமான பந்துவீச்சாளர் என்பதை வெளிக்காட்டியது.

1983இல் கபில்தேவ், 2024இல் ஸ்கை

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது. அப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த ஷாட்டில் கேப்டன் கபில் தேவ் ஓடிச் சென்று பிடித்த கேட்ச் இன்றுவரை மறக்க முடியாதது, இன்னும் பேசப்படுகிறது. அதுபோன்ற ஒரு கேட்சைத்தான் சூர்யகுமார் நேற்று எடுத்தார்.

இந்திய அணி 16 ரன்களை டிபெண்ட் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தது. மில்லர் சிக்ஸருக்கு அடித்துவிட்டோம் என்று பெருமூச்சு அடைந்த நேரத்தில் அந்த பந்தை கேட்ச் பிடித்த சூர்யகுமார், தான் பவுண்டரி கோட்டுக்கு வெளியே நிலைதடுமாறிச் செல்கிறோம் என்றுணர்ந்த தருணத்தில் பந்தை மேலே தூக்கிப் போட்டுவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து பந்தை கேட்ச் பிடித்த அவரின் ஸ்மார்ட் கேட்ச் காலத்துக்கும் மறக்கப்படாது. 1983இல் கபில்தேவ், 2024இல் சூர்யகுமார். “கேட்சஸ் வின் மேட்சஸ்” என்று சொல்வார்கள், இந்த கேட்ச்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிங் என நிரூபித்த கோலி

டி20 உலகக்கோப்பை தொடங்கியது முதல் மோசமான ஃபார்ம், அரையிறுதிலும் சொதப்பலான ஆட்டம் என்று கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன. கோலிக்கு சாதாரண சூழலில் மலரக்கூடியவர் அல்ல, அசாதாரண சூழல்,நெருக்கடியில்தான் கோலி என்ற பேட்டர் விஸ்வரூமெடுப்பார் என்பதை நேற்றும் வெளிப்படுத்தினார்.

முதல் 5 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களை விளாசிய கோலி, அடுத்தடுத்து இந்திய அணிக்கு 3 விக்கெட்டுகள் சென்றவுடன் ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து ஆங்கர் ரோலுக்கு மாறினார். அடுத்த 48 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே கோலி விளாசினார்.

கோலியின் ஆங்கர் ரோல் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் அதைக் கண்டு கொள்ளாமல் நேற்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப்போட்டி, இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் வேறு இல்லை என்பதை உணர்ந்த கோலி ஆங்கர் ரோலிலிருந்து அதிரடிக்கு மாறவே இல்லை.

ரபாடாவின் 18வது ஓவர், யான்சென் ஓவரில்தான் கோலி தனது கியரை மாற்றி சிக்ஸர் விளாசினார். இரு ஓவர்களில் இருந்தும் 33 ரன்கள் கிடைத்தது. கோலி தனது கடைசி 11 பந்துகளில் 26 ரன்களை சேர்த்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். என்னால் ஆங்கர் ரோலும் செய்ய முடியும், இதுபோல் தேவைக்கு ஏற்றார்போல் பேட்டை சுழற்றவும் முடியும் என்பதை நிரூபித்துவிட்டு கிங் கோலி விடைபெற்றார்.

அர்ஷ்தீப் கட்டுக்கோப்பு

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவர். நான்கு ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் அதாவது 2 ஓவர்கள் மெய்டன் எடுத்ததும் அடக்கம்.

பவர்ப்ளேவில் அர்ஷ்தீப் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதிலும் கேப்டன் மார்க்ரம் விக்கெட், டீக் காக்கிற்கு வலை விரித்து அவரைச் சிக்க வைத்த பந்துவீச்சு ஆகியவை மாஸ்டர் கிளாஸ்.

மேலும், 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 4 ரன்கள் மட்டுமே கொடுத்து மில்லரை ரன் அடிக்கவிடாமல் அடக்கியது அர்ஷ்தீப்பின் சிறப்பான பந்தவீச்சை வெளிக்காட்டியது.

தோல்வி அடைந்த சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் என நம்பி குல்தீப், ஜடேஜா, அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்தநிலையில் 9 ஓவர்களை வீசி இவர்கள்தான் 109 ரன்களை வாரி வழங்கினர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் 58 ரன்களையே வழங்கியிருந்தனர், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் ஒன்றில்தான் ரோஹித்தின் கணிப்பு தவறியது.

https://www.bbc.com/tamil/articles/cne4zkl3vvwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை 17 ஆண்டுகளுக்குப் பின் பெறுவதற்கும் வரலாறு படைப்பதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் என்பதை மறுக்க முடியாது.

இவர்களை விட முக்கிய காரணியான தென்னாபிரிக்காவினை மறந்துவிட்டார்கள்.

40 minutes ago, ஏராளன் said:

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் என நம்பி குல்தீப், ஜடேஜா, அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்தநிலையில் 9 ஓவர்களை வீசி இவர்கள்தான் 109 ரன்களை வாரி வழங்கினர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் 58 ரன்களையே வழங்கியிருந்தனர், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் ஒன்றில்தான் ரோஹித்தின் கணிப்பு தவறியது.

இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகமான ஆடுகளம் என கூறுகிறார்கள், புதிய பந்து வேகபந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக இருக்கும் என கூறுகிறார்கள் இவ்வாறான பந்து நகர்வுகளை கணித்தாடுவதில் (சீம்) கோலி, ரோகித் சர்மா பெரிதும் கடந்த காலங்களில் சிரமப்படுவதுண்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறி கொடுத்துவிடுவதுண்டு, அத்துடன் ஆடுகளம் பந்து நஙு மேலெழுந்து வரும் என்பது இந்தியணிக்கு சிரமம் கொடுக்கலாம் அத்துடன் இந்தியணியின் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சுழல் பந்துவீச்சிற்கு பெரிதும் சாதகம் அற்ற மைதானம என கூறப்படுகிறது, இந்தியணியுடன் ஒப்பிடும் போது பலவீனமான தென்னாபிர்க்க அணியில் ஒப்பீட்டளவில் அதிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள அணியாக இருப்பதால் இரு அணியும் ஓரளவு சமனிலையில் இப்போட்டியில் உள்ளதாக கருதுகிறேன், அதிக ஓட்டங்களை (200 இற்கு அதிகமாக) வழ்ங்கும் மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது, இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றாலும் ஆச்சரியமில்லை.

இந்த திரியில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த ஆடுகளம் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்றது என குறிப்பிட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

இவர்களை விட முக்கிய காரணியான தென்னாபிரிக்காவினை மறந்துவிட்டார்கள்.

இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகமான ஆடுகளம் என கூறுகிறார்கள், புதிய பந்து வேகபந்து வீச்சாளர்களிற்கு சாதகமாக இருக்கும் என கூறுகிறார்கள் இவ்வாறான பந்து நகர்வுகளை கணித்தாடுவதில் (சீம்) கோலி, ரோகித் சர்மா பெரிதும் கடந்த காலங்களில் சிரமப்படுவதுண்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறி கொடுத்துவிடுவதுண்டு, அத்துடன் ஆடுகளம் பந்து நஙு மேலெழுந்து வரும் என்பது இந்தியணிக்கு சிரமம் கொடுக்கலாம் அத்துடன் இந்தியணியின் மத்திய பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற சுழல் பந்துவீச்சிற்கு பெரிதும் சாதகம் அற்ற மைதானம என கூறப்படுகிறது, இந்தியணியுடன் ஒப்பிடும் போது பலவீனமான தென்னாபிர்க்க அணியில் ஒப்பீட்டளவில் அதிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ள அணியாக இருப்பதால் இரு அணியும் ஓரளவு சமனிலையில் இப்போட்டியில் உள்ளதாக கருதுகிறேன், அதிக ஓட்டங்களை (200 இற்கு அதிகமாக) வழ்ங்கும் மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது, இந்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றாலும் ஆச்சரியமில்லை.

இந்த திரியில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே இந்த ஆடுகளம் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமற்றது என குறிப்பிட்டிருந்தேன்.

ரோகித் சர்மா நேற்று அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவ‌தில் ப‌ல‌ த‌வ‌றுக‌ள் விட்ட‌வ‌ர்.....................சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தொட‌ர்ந்து அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்க‌ 

அவ‌ர்க‌ளிட‌மே திருப்ப‌ திருப்ப‌ ப‌ந்தை கொடுக்கிறார்

 

என‌க்கு ரோகித் ச‌ர்மாவின் ந‌ட‌வ‌டிக்கை வெறுப்பை வ‌ர‌ வைச்ச‌து

 

பாண்டியாவின் முதலாவ‌து ஓவ‌ரில் மூன்று டொட் ப‌ந்தை போட்டார் அப்ப‌ புரிந்து விட்ட‌து இது வேக‌ ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் என்று

 

சிவ‌ம் டூவி இன்னொரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் கைவ‌ச‌ம் இருக்க‌ அவ‌ருக்கு ச‌ர்மா ஒரு ஓவ‌ரும் போட‌ விட‌ வில்லை

 

மூன்று வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளால் தான் இந்தியா வென்ற‌து அதோட‌ க‌ட‌சி ஓவ‌ரில் மில்ல‌ர் தூக்கி அடிச்ச‌ ப‌ந்தை 

சூரிய‌ குமார் ஜ‌டாவ் அருமையான‌ கைச் பிடிச்சார்

அந்த‌ கைச் பிடிச்ச‌ ப‌டியால் தான் இந்தியாவால் க‌ட‌சியில் வெல்ல‌ முடிந்த‌து 

முத‌லாவ‌து ப‌ந்து 6க்கு போய் இருந்தால் ப‌த‌ட்ட‌ம் அதிக‌ரித்து இருக்கும்

க‌ட‌சியில் பாண்டியா துல்லிய‌மாய் போட்டு அணிக்கு வெற்றிய‌ தேடி கொடுத்தார்..................................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வீரப் பையன்26 said:

ரோகித் சர்மா நேற்று அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவ‌தில் ப‌ல‌ த‌வ‌றுக‌ள் விட்ட‌வ‌ர்.....................சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தொட‌ர்ந்து அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்க‌ 

அவ‌ர்க‌ளிட‌மே திருப்ப‌ திருப்ப‌ ப‌ந்தை கொடுக்கிறார்

 

என‌க்கு ரோகித் ச‌ர்மாவின் ந‌ட‌வ‌டிக்கை வெறுப்பை வ‌ர‌ வைச்ச‌து

 

பாண்டியாவின் முதலாவ‌து ஓவ‌ரில் மூன்று டொட் ப‌ந்தை போட்டார் அப்ப‌ புரிந்து விட்ட‌து இது வேக‌ ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச் என்று

 

சிவ‌ம் டூவி இன்னொரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் கைவ‌ச‌ம் இருக்க‌ அவ‌ருக்கு ச‌ர்மா ஒரு ஓவ‌ரும் போட‌ விட‌ வில்லை

 

மூன்று வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளால் தான் இந்தியா வென்ற‌து அதோட‌ க‌ட‌சி ஓவ‌ரில் மில்ல‌ர் தூக்கி அடிச்ச‌ ப‌ந்தை 

சூரிய‌ குமார் ஜ‌டாவ் அருமையான‌ கைச் பிடிச்சார்

அந்த‌ கைச் பிடிச்ச‌ ப‌டியால் தான் இந்தியாவால் க‌ட‌சியில் வெல்ல‌ முடிந்த‌து 

முத‌லாவ‌து ப‌ந்து 6க்கு போய் இருந்தால் ப‌த‌ட்ட‌ம் அதிக‌ரித்து இருக்கும்

க‌ட‌சியில் பாண்டியா துல்லிய‌மாய் போட்டு அணிக்கு வெற்றிய‌ தேடி கொடுத்தார்..................................

ஆடுகளத்தின் ஈரப்பதன் (மைதானத்தின் ஈரப்பதன் அல்ல) சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், முதலாவதாக பந்து விசிய தென்னாபிரிக்க சுழல் பந்து வீச்சாளர்கள் அதனை சரியாக பயன்படுத்தினார்கள், அந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக மேலெழுந்து வந்ததால் மகாராஜ் பந்து வீசும் போது அளவு குரைந்த பந்தினை துல்லியமாக இறுக்கமான பகுதியில் தொடர்ந்து வீசினார் ஆனால் சம்சி மற்றும் இந்திய பந்து வீச்சாளர்கள் விக்கெட்டினை எடுப்பதற்காக அளவு கூடிய பந்தினை வீசினார்கள்.

இந்தியணியினர் பந்து வீசும் போது மைதான ஈரலிப்பு குறைந்து பந்து சுழல்பந்துவீச்சிற்கு ஒப்பீட்டளவில் குறைவான தாக்கத்தினை செலுத்தினாலும் விக்கெட் எடுப்பதற்காக அளவு கூடிய (தூக்கி போடும்) பந்ட் கினை வீசினார்கல் தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களை இலக்கு வைத்து தாக்க தொடங்கிய போது அளவு குறைந்த் பந்துகளை வீசினாலும் கிளாசன் அதனை அனாயசமாக தூக்கி அடித்தார்.

இவ்வாறு மேலெழும் ஆடுகளத்தில் துடுப்பாட்டக்காரர்கள் இறங்கி வந்தடிக்கும் தவறினை செய்யமாட்டார்கள், குல்தீபின் பந்து வீச்சில் குவின்டன் இறங்கி வந்தாட முயற்சித்து ஆட்டமிழக்காமல் தப்பிவிட்டார் அதனை ரிசாப் பண்ட் குறிப்பிட்டு காட்டுவார், கிளாசன் அந்த தவறினை செய்யவில்லை.

தென்னாபிரிக்காவின் வெற்றி வாய்ப்பினை குறைந்தளவிலேயே எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தென்னாபிரிக்க அணி இவ்வளவு சிறப்பாக ஆடும் என நினைக்கவில்லை, ஆனால் அழுத்தம் நிறைந்த போட்டியினை சமாளிக்கும் நிலைக்கு தென்னாபிரிக்க அணி இல்லை என்பதால் தமது வெற்றியினை இந்தியாவிற்கு தூக்கி கொடுத்துவிட்டார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 30 ஜூன் 2024, 13:47 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.”

2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார்.

தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட்.

ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இந்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.

 
‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி

ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது.

அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது.

இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது.

'ரோஷக்காரர்' டிராவிட்

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார்.

எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.

 

இந்திய வீரராக வெற்றி

டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை.

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரலாற்றுச் சாதனை

டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை.

இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார்.

பயிற்சியாளர் அவதாரம்

2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார்.

அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

டிராவிட்டின் பட்டறை

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார்.

அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும்.

வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான்.

இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர்

இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது.

சீனியர் அணிக்குப் பயிற்சியாளர்

இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார்.

டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது.

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இறுதிப்போட்டிகளில் தோல்வி

2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது.

 

டிராவிட் காலம் பொற்காலம்

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார்.

2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான்.

ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது.

இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சம்பியன் இந்தியாவுக்கு 456 கோடி ரூபாவை வழங்கும் இந்திய கிரிக்கெட் சபை

02 JUL, 2024 | 11:21 AM
image
 

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்பட்ட ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் உலக சம்பியனான இந்தியாவுக்கு 125 கோடி ரூபாவை (இலங்கை நாணயப்படி 456 கோடி ரூபா) பணப்பரிசாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கவுள்ளது.

பார்படொஸ், ப்றிஜ்டவுனில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மிகவும் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டி 17 வருடங்களின் பின்னர் மீண்டும் உலக சம்பியனானது.

இதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகியவற்றைத் தொடர்ந்து இரண்டு தடவைகள் ரி20 உலக சம்பியனான 3ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுக்கொண்டது. அத்துடன் இந்த மைல்கல் சாதனையை படைத்த முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையையும் இந்தியா தனதாக்கிக்கொண்டது. 

இந்த வெற்றியை அடுத்து இந்திய அணிக்கு கொளுத்த பணப்பரிசை வழங்கப்போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டார். 

'ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்த வருடம் வென்றெடுத்ததற்காக இந்திய அணிக்கு (இந்திய நாணயப்படி)125 கோடி  ரூபா பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என ஷா பதிவிட்டுள்ளார். 

'உலக சம்பியனான இந்திய அணியினர், ரி20 உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் அதிசிறந்த ஆற்றல்கள், மனஉறுதி, விளையாட்டுத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மகத்தான சாதனைக்காக வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, சம்பியன் அணிக்கு சுமார் 75 கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்திருந்தது. 

அதனைவிட குழுநிலை மற்றும் சுப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் 95 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைக்கவுள்ளது. 

இதேவேளை இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு 39 கோடி ரூவாவுக்கு மேல் ஐசிசி வழங்கவுள்ளது.

அரை இறுதிகளில் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா 24 கோடி ரூபா கிடைக்கவுள்ளது. 

https://www.virakesari.lk/article/187458

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வித்தைக்கார' ஹர்திக் பாண்டியா மன உளைச்சலில் இருந்து மீண்டு மனங்களை வென்றது எப்படி?

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரசிகர்களின் ஏச்சுக்கும் அவமரியாதைக்கும் உள்ளான ஹர்திக் பாண்டியா தன்னை மீட்டுருவாக்கம் செய்துகொண்டது எப்படி?

2024 ஐ.பி.எல் சீசன். மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது மைதானத்துக்குள் நாய் ஒன்று நுழைந்து ஓடவே ரசிகர்கள் அனைவரும் ‘ஹர்திக் ஹர்திக்’ என்று கோஷமிட்டனர்.

இதைக் கேட்ட வர்ணனையாளர் மஞ்சரேக்கர் சற்று ஆவேசமாக “மும்பை ரசிகர்கள் மரியாதையாக நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று மைக்கிலேயே கண்டித்தார்.

அணியின் கேப்டனாகியபின்பும், சொந்தமண்ணின் ரசிகர்களால் வஞ்சிக்கப்படுவது, கேலி, கிண்டல் செய்யப்படுவதைப் போன்று கொடுமையானது ஏதுமில்லை.

ஆனால் ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியபின் அதே ரசிகர்கள் பாண்டியாவை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு மாறியதால் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் உலகக் கோப்பையை வென்றபின் அதே ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அவரின் கன்னத்தில் ரோகித் சர்மா முத்தமிட்டார். எந்த ரசிகர்களால் கேலி, நய்யாண்டி வார்த்தைகளை கேட்டாரோ அதே ரசிகர்களை புகழவைத்த வித்தைக்காரர் ஹர்திக் பாண்டியா.

 
ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூப்பர்-8 சுற்றில் ஹர்திக்கின் பேட்டிங்கும், முக்கியமான நேரத்தில் எடுத்த விக்கெட்டுகளும் உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டராக அவரை உயர்த்தியது

சர்ச்சை நாயகன்

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டபின், அவரின் பேட்டிங், பந்துவீச்சு எந்த அளவு பேசப்பட்டதோ அந்த அளவு அவரின் சர்ச்சைப் பேச்சுகளும், செயல்களும் செய்தியாகின. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு, அதிரடியான பேட்டிங், மேட்ச் வின்னிங் ஆட்டம் ஆகியவற்றைப் பார்த்து அடுத்த கபில்தேவ் உருவெடுத்துவிட்டார் என்று கிளப்பிவிடப்பட்டன. ஆனால், இந்த வார்த்தைகளை ஹர்திக் பாண்டியா நம்பவில்லை என்றாலும், அவரின் செயல்பாடுகள், பேச்சுகள் மனதில் லேசான அந்த எண்ணம், கர்வம் இருப்பதையே காட்டியது.

குறிப்பாக கரன்ஜோகர் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஹர்திக் பேசிய பல கருத்துகள் சர்ச்சையாகியதால், அவர் இந்திய அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளுதல், ஏராளமான தோழிகள், உயர்குடி மக்கள் போன்ற ஆடம்பர வாழ்க்கை, ஐ.பி.எல் தொடருக்கு முக்கியத்துவத்தால் கிடைத்த பணம் என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த விமர்சனங்களைக் கடந்து, போராடி வென்றுதான் ஹர்திக் பாண்டியா தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் ஹர்திக் பாண்டியா

இளமைக் காலம்

ஹர்திக் பாண்டியா பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்ல.1993-ஆம் ஆண்டு, அக்டோபர் 11-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத்நகரில் சோர்யாசி பகுதியில் ஹர்திக் பிறந்தார். வாடகை வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பில்தான் ஹர்திக் பிறந்து வளர்ந்தார்.

ஹர்திக்கின் தந்தை ஹிமான்சு பாண்டியா, சூரத் நகரில் வாகனங்களுக்கான பைனான்ஸ் வழங்கும் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தார். ஹர்திக்கிற்கும், அவரின் சகோதரர் குர்னல் பாண்டியாவுக்கும் சிறந்த கிரிக்கெட் பயிற்சி தேவை என்பதற்காக சூரத் நகரிலிருந்து வதோதரா நகருக்கு ஹிமான்சு குடிபெயர்ந்தார்.

வதோதராவில் உள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் அகாடெமியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா இருவரும் சேர்க்கப்பட்டனர். சிறுவயதிலிருந்தே ஹர்திக்றிக்கு படிப்பில் இருந்த கவனம், அக்கறையைவிட கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது.

'வெளிப்படையாகப் பேசி வாய்ப்பை இழந்தேன்'

கிளப் கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் ஹர்திக், தனி ஒருவனாக களத்தில் இருந்து ஆட்டத்தைபலமுறை வென்று கொடுக்கும் அளவுக்குத் திறமையாக இருந்தார். சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் ஹர்திக் பாண்டியா.

இதனால்தான் மாநில அளவிலான அணியில் இடம் கிடைக்கும்போது, ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசிய பேச்சுகள் அவருக்கான இடத்தை பறிபோகவைத்தது. இந்தத் தகவலை ஹர்திக்பாண்டியா ஒருமுறை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ நான் எதையும் வெளிப்படையாகப் பேசுவேன். மறைக்கமாட்டேன். அவ்வாறு பேசியதுதான் எனக்கான மாநில அளவிலான அணியில் இடம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டது,” எனத் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வாகினார்

லெக் ஸ்பின்னர் வேகப்பந்துவீச்சாளராக மாற்றம்

ஹர்திக் பாண்டியா சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது, 18 வயது வரை அவர் லெக் ஸ்பின்னராகவே இருந்து வந்தார். ஆனால், அதன்பின், பரோடா பயிற்சியாளர் சனத் குமார், ஹர்திக் பாண்டியாவின் திறமையைப் பார்த்து அவரை வேகப்பந்துவீச்சுக்கு மாற்றினார்.

2013-ஆம் ஆண்டு பரோடா அணிக்காக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 2013-14 சீசனில் பரோடா அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையை வெல்ல ஹர்திக் ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. 2016-ஆம் ஆண்டில் சயத் முஸ்தாக் அலிக் கோப்பைத் தொடரில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 8சிக்ஸர்கள் விளாசி 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்குத் துணை செய்தார்.

ஐ.பி.எல் தந்த புதுவாழ்க்கை

ஹர்திக் பாண்டியா பரோடா அணியில் விளையாடியதைக் கேள்விப்பட்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஐ.பி.எல் ஏலத்தில் 2015-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியது. 2015-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டுவரை ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப்பிள்ளை போலத்தான் இருந்தார்.

2015-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹர்திக் அடித்த 31 பந்துகளில் 61 ரன்கள்தான் அனைவரின் கவனத்தையும் ஹர்திக் மீது குவித்தது. 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு அளப்பறியது. 2019-ஆம் ஆண்டு சீசன்தான் ஹர்திக் பாண்டியாவை உச்சத்தில் அமரவைத்தது. 432 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா, உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒருநாள் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார்

இந்திய அணிக்குள் வருகை

ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் தொடரில் விளையாடியவிதம் இந்திய அணியின் தேர்வாளர்களை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருக்கு ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டி20 போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளை ஹர்திக் எடுத்தார்.

2016 ஆசியக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஹர்திக் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோர் வர காரணமாக அமைந்தார். பந்துவீச்சிலும் ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை ஹர்திக் எடுத்தார்.

2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வாகினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட மோசமாக செயல்பட்டு கடுமையாக விமர்சனத்துக்கு ஹர்திக் ஆளாகினார். இதனால் உலகக் கோப்பைத் தொடர் முடிந்தபின் டி20 அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார். பின்னர் 2022-ஆம் ஆண்டு, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டார்.

 

அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன்

2016-ஆம் ஆண்டு, அக்டோபர் 16-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன்விருதை ஹர்திக் வென்று சாதனை படைத்தார். அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது வென்றவர்களில் சந்தீப் பாட்டில், மோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு அடுத்தார்போல் ஹர்திக் இடம் பெற்றார்.

ஒருநாள் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். 2017-ஆம் சாம்பியன்ஸ் டிராபி, 2019-ஆம் உலகக் கோப்பை ஆகியவற்றில் ஹர்திக்கின் பந்துவீச்சும், பேட்டிங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

டெஸ்ட் போட்டியிலும் 2016-ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகினார். ஆனால் காயத்தில் அவரால் விளையாடமுடியவில்லை. இதைத் தொடர்ந்து 2017-ஆம் ஜூலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா அறிமுகமாகினார். இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே ஹர்திக் சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனை படைத்தார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணியில் பேட்டராக இருந்த பாண்டியா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பந்துவீசி அதை பயிற்சிக் களமாக மாற்றினார்

டி20, ஒருநாள் நாயகன்

டெஸ்ட் போட்டிகளில் குறைவாக ஆடிய ஹர்திக் பாண்டியா 11 டெஸ்ட்களில் 532 ரன்களும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் 86 ஆட்டங்களில் 1,769 ரன்களையும், டி20 போட்டிகளில் 100 போட்டிகளில் 1,492 ரன்களையும் ஹர்திக் சேர்த்துள்ளார்.

டி20 போட்டியில் 140-க்கும் மேலாக ஸ்ட்ரைக் ரேட் வைத்தும், ஒருநாள் போட்டியில் 110 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 84 விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்த்தியுள்ளார்.

அறுவை சிகிச்சை, காயங்கள்

ஹர்திக் பாண்டியா முதுகுப் பகுதியில் காயம் ஏற்படவே லண்டனில் முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்து, தீவிரமான பயிற்சிக்குப்பின மீண்டும் அணிக்கள் திரும்பினார்.

அது மட்டுமல்லாமல் அணியில் ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக மட்டுமே ஹர்திக் இருந்தார், அவர் பந்துவீசவில்லை. ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணியில் பேட்டராக இருந்த பாண்டியா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பந்துவீசி அதை பயிற்சிக் களமாக மாற்றினார்.

2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கனுக்காலில் காயமடைந்து பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். ஏறக்குறைய 3 மாதங்களுக்குப்பின்புதான் ஹர்திக் அணிக்குள் திரும்பினார். ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் உடற்தகுதிச் சிக்கல்கள், பிரச்சினைகள் அவரை பல நேரங்களில் பொறுப்புகளில் அமர்த்துவதை தடுத்தது.

 

குஜராத் அணியின் கேப்டன்

ஐபிஎல் தொடரில் 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஹர்திக் இருந்தார். ஆனால், 2021-ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் ரிலீஸ் செய்தவுடன் அவரை குஜராத் அணி விலைக்கு வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது.

ஹர்திக் பாண்டியா முதல்முறையாக ஒரு அணிக்கு தலைமை ஏற்று, தொடரை வழிநடத்தினார். தனது முதல் கேப்டன்ஷிப்பிலேயே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

புயல்வீசிய காலம்

அதன்பின்புதான் ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது. குஜராத் அணியிலிருந்து பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஹர்திக்கை விலைக்கு வாங்கியது. மும்பை அணிக்க ஏற்கெனவே கேப்டனாக ரோகித் சர்மா இருப்பதால், பாண்டியா ஒரு வீரராகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் நியமித்து, ரோகித் சர்மாவை கீழே இறக்கியது.

மும்பை அணிக்கு கேப்டனாக மண்ணின் மைந்தன் ரோகித் சர்மாவை பார்த்துப் பழகிய ரசிகர்கள் ஹர்திக்கை ஏற்க முடியவில்லை. இதனால் கடந்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்டியா சொந்த அணியின் ரசிகர்களால் மைதானத்துக்குள் அவமானப்படுத்தப்பட்டார், கேலி கிண்டல் பேச்சுகளுக்கு ஆளாகி, பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

அதிலும் சமூக ஊடகங்களில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்தனர், தரக்குறைவான வார்த்தைகளால் ஏசினர். ஆனால், எதற்கும் ஹர்திக் பாண்டியா எதிர்வினையாற்றவில்லை.

இதற்கிடையே ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் அவரை புரட்டிப்போட்டன. மும்பை அணியில் ரோகித் சர்மா சார்பாக சில வீரர்களும், ஹர்திக் சார்பாக சில வீரர்களும் தனித்தனி குழுவாக செயல்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

ரோகித், ஹர்திக் இடையே களத்தைத் தவிர ஓய்வறையில் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனால் ஹர்திக் பாண்டியா பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்த மன உளைச்சலோடு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியோடு மேற்கந்தியத்தீவுகள் செல்ல முடியாது என்பதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா தனியாக லண்டன் சென்று அங்கு ஓய்வு எடுத்து தன்னைச் சரி செய்து கொண்டு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சென்றார்.

கடும் மன உளைச்சல்

இது குறித்து ஹர்திக் பயிற்சியாளர் கிரண் மோர் கூறுகையில் “ நான் டி20 உலகக் கோப்பைத் தொடர்பாக ஹர்திக்கிடம் பேசியபோது, நான் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை, மனது சரியில்லை. அதனால் லண்டன் சென்று சிறிது ஓய்வு எடுத்தபின் அணியுடன் நேரடியாக சேர்ந்து கொள்கிறேன் என்றார். இந்திய அணிக்காக கோப்பையை பெற்றுத்தர விளையாட வேண்டும் இதற்கு நான் தயாராக வேண்டும் என்றார். கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து புதிய ஹர்திக்கை உலகக் கோப்பையில் பார்த்தேன்.

சூப்பர்-8 சுற்றில் ஹர்திக்கின் பேட்டிங்கும், முக்கியமான நேரத்தில் எடுத்த விக்கெட்டுகளும் உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டராக அவரை உயர்த்தியது. 2011-ஆம் ஆண்டு ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் செய்த பணியை இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹர்திக் செய்தார்.

ஒரு வீரர் மனஉளைச்சலுடன் இருக்கும் போது அவரால் 100% சிறந்த பங்களிப்பை அளிக்க முடியாது. அதனால்தான் ஹர்திக் லண்டன் சென்று ஓய்வெடுத்து கரீபியன் திரும்பினார். சிறுவயதிலிருந்து ஹர்திக்கை தெரியும், கடினமான சூழலில் இருந்து வளர்ந்தவர் ஹர்திக்,” என்றார்.

 
ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹர்திக் லண்டன் சென்று ஓய்வெடுத்து கரீபியன் திரும்பினார்

இந்தியாவை சாம்பியனாக்கும் கனவு

பயிற்சியாளர் கிரண் மோர் கூறுகையில் "ஒவ்வொரு கடினமான காலகட்டத்திலும் அதிலிருந்து எளிதாக மேலே வந்துவிடுவார். கடந்த 6 மாதங்களாக அவர் சந்தித்த சிக்கல்கள், சவால்கள், கிண்டல்கள் ஏராளம். ஆனால் எது குறித்தும் ஹர்திக் இதுவரை எதிர்வினையாற்றவில்லை. உலகக் கோப்பையை வென்றபின்புதான் ஹர்திக் பாண்டியா மனம்திறந்து பேசியுள்ளார்.

"இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர வேண்டும் என கடந்த ஓர் ஆண்டாக என்னிடம் ஹர்திக் தெரிவித்துவந்தார். அவரின் கனவு கடினமான உழைக்குப்பின் நிறைவேறியுள்ளது” எனத் தெரிவித்தார்

"எல்லாவற்றிற்கும் மேலாக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும். கடந்த சீசனிலிருந்து மும்பை ரசிக்களின் கருத்தை எப்படி பாண்டியாவுக்கு சாதகமாக மாற்றுவது என்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் எனும் பிராண்டைப்(brand) பாதித்தது,” என்றார்.

டி20 உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய மேடையில் தேசத்தின் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்ததுபோல் ரசிகர்களை வெல்வதற்கு வேறு கருவி எதுவும் இல்லை. தான் முதலில் இந்திய அணியின் ஒரு அங்கம், அதன்பின்புதான் மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதை காட்டுவதன் மூலமும், பாண்டியா அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊருக்கு. உபதேசம் செய்யும் பல்லி கூழ்ப்பானைக்குள் விழுவதுண்டு என்ற பழமொழியும் உண்டு. சுமந்திரனும் சனாதிபதிக்கு உபதேசம் செய்யும் நிலையில் உள்ள ஒரு பல்லி.😜
    • மோடி உண்மையான நண்பன் – ட்ரமப்க்கு வாழ்த்திய மோடி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பில் உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் தகல்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407576
    • மன்னார் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி  மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது,  கடந்த 5 ஆம் திகதி  வவுனியா சிறைச்சாலை  அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார். குறித்த சிறைச்சாலை  அலுவலர், மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1,000 ரூபாய் பணத்தை  பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில்  மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த  சிறைச்சாலை  அலுவலர்  நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்து  விசாரணைகளின் பின்னர்  கடந்த 5 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த சிறைச்சாலை அலுவலரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198096
    • வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ  வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) தபால் நிலையங்களுக்கு சென்று தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளரட்டைகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311849
    • லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு! பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு  நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198111
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.