Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

ஷாஜன் கவிதா

நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே! 

இது இயற்கைக்கு எதிரானது அல்ல!", "எங்களோட உணர்வுகளை வானவில்ன்னு சமூக வலைத்தளங்களில் கொச்சைப்படுத்துறாங்க!" என்று தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்கள், மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கள் உணர்வுகளைப் பேரணியில் பகிர்ந்து கொண்டனர். 

சென்னை மற்றும் கோவையில் நேற்று நடந்த வானவில் பேரணியில் நடைபெற்ற காட்சிகள்தான் இவை. பொதுச் சமூகத்தில் சமீபமாக LGBTQ+ பற்றிய அடிப்படை புரிதல்கள் தெளிவாகிவரும் சூழலில், சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிராகக் கேலி கிண்டல்களும் அதிகரித்தே வருகின்றன. உண்மையில் இவர்கள் இயற்கைக்கு எதிரானவர்களா? இந்த வானவில் பேரணியின் தொடக்கம் எங்கிருந்து தொடங்குகிறது? வாருங்கள் பார்க்கலாம்.

வானவில் பேரணி எங்கிருந்து தொடங்கியது?

1969-ல் ஜூன் மாதம் அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் நடைபெற்ற ஸ்டோன்வால் போராட்டம்தான் இந்த PRIDE மாதக் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளி. அன்று அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பாளர்களை மாஃபியாக்களை போலக் கும்பல் கும்பலாகக் கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதை எதிர்த்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வீதியில் இறங்கிப் போராடினர். அவர்களின் தொடர் செயல்பாடுகளால் 1979-ம் ஆண்டு, “மற்றவர்கள் போல இவர்களும் சமமானவர்களே, அவர்களை ஒதுக்கக்கூடாது” என்ற சட்டத்தை 39 மாகாணங்களில் செயல்படுத்தியது அமெரிக்க அரசு.

ஸ்டோன்வாலுக்குப் பிறகு ஐரோப்பா முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. அதுவே இப்போது சென்னை, கோவை என நாம் வாழும் நகரங்கள் வரை வந்து சேர்ந்திருக்கின்றன. 

LGBTQ+ என்றால் என்ன? LGBTQ+ என்பது லெஸ்பியன் (Lesbian), கே (Gay), பை செக்ஸுவல் (Bisexual), ட்ரான்ஸ்-ஜெண்டர் (Transgender), குயர் (Queer) என்ற மாற்றுப் பாலின மற்றும் பால்புதுமையினர் மக்களை அடையாளப்படுத்தும் சொற்களின் சுருக்கம்.

ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் கைது என்ற செய்தியினைப் பார்த்திருப்போம். இப்போது ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதே தம்பதியில் ஒருவர் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் செய்திகளில் காண்கிறோம். சொல்லப்போனால் 'ஓரினச் சேர்க்கை' எனும் வார்த்தையே மரியாதைக் குறைவான வார்த்தையாகப் பார்க்கப்பட்டு அதற்குப் பதிலாக தன்பால் ஈர்ப்பாளர், ஓர்ப்பால் ஈர்ப்பாளர் (Gay, Lesbian) என்னும் வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதே போல திருநர், திருநம்பி, திருநங்கை, பால் புதுமையினர், மாற்றுப்பாலினம் எனக் கண்ணியமான வார்த்தையால் அழைக்கப்படும் ஆரோக்கியமான மாற்றங்கள் இங்கே நடந்திருக்கின்றன.

எப்போதிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்து வருகிறது?

"மனிதன் தோன்றிய காலத்திலிருந்து ஓர்பாலின ஈர்ப்பு இருந்து வருகிறது. மனிதனிடம் மட்டுமின்றி விலங்கிடமும் இதே நிலை இருக்கிறது" என்று தனது சிம்போசியம் எனும் நூலில் எழுதி இருக்கிறார் கிரேக்கத் தத்துவஞானி பிளாட்டோ.

கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே ரோமாபுரியை ஆண்ட நீரோ கலிகுலா ஓர்பாலின ஈர்ப்புக்கு சட்டரீதியாக அங்கீகாரம் கொடுத்து தனது காதலன் ஸ்போரஸைத் திருமணம் செய்தது வரலாறு.

அதன் பிறகு தன்பாலின ஈர்ப்பு, நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்கைக்கு எதிரானது எனக் கிறிஸ்தவ மதம் வழியாக மிகவும் எதிர்மறையாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அகஸ்டின், தாமஸ் என்ற இரு மதபோதகர்கள், "எந்த வகையான உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை பிறக்கிறதோ அதுவே இயற்கையானது. அதற்கு மாறாகச் செயல்பட்டால் இயற்கைக்கு எதிரானது" என்று அதற்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பினர். 

மருத்துவ உலகம் என்ன சொல்கிறது?

1886-ம் ஆண்டு, மனநல மருத்துவர் ரிச்சர்ட் வான் க்ராஃப்ட்-எபிங் தனது 'சைக்கோபதியா செக்சுவாலிஸ்' என்ற புத்தகத்தில், இது ஒரு ஜீன் குறைபாடு. இதன் மூலம் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று எழுதியிருந்தார். இதைச் சிறிது நாள்களிலேயே மருத்துவ உலகம் நிராகரித்தது. அதேபோல கர்ப்பத்தின் போது தாயின் ஹார்மோன் கோளாற்றினால் ஏற்படுகிறது என்றும் சொல்லப்பட்டது. அதுவும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

சைக்கோ அனலடிகல் தியரியின் படி குழந்தை வளரும் சூழ்நிலையில் ஏற்படும் மனப்பாதிப்பின் காரணமாக இவ்வாறு ஆக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் வீட்டுச் சூழல் சிறப்பாக இருந்தாலும் அந்த உணர்வு தொடர்வதால் அந்த தியரியும் நிராகரிக்கப்பட்டது. அடுத்து ஒருவரைப் பார்த்து இன்னொருவருக்கு ஹோமோசெக்ஸ் (ஓர்பாலீர்ப்பு) விருப்பம் ஏற்படும் எனும் இன்ஃப்ளூயன்ஸ் தியரியும் (Influence Theory) முன்வைக்கப்பட்டன. இதுவும் மருத்துவ உலகில் நிராகரிக்கப்பட்டது. இதனால் மருத்துவ உலகம் ஓர்பாலீர்ப்பு இயற்கையானது என்ற முடிவுக்கு வந்தது. 

சட்டம் என்ன சொல்கிறது? 

 சட்டரீதியாக ஓர்பாலின ஈர்ப்பு சரியா, தவறா என்னும் கருத்தும் அதற்கான சட்டங்களும் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. 1804ஆம் ஆண்டு உலகை ஆண்ட பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் ஒரே பாலினத்தில் புணர்ச்சியில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் கொண்டு வந்தார்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்பட்டது. புராணக் காலங்களில் கூட ஓர்பாலீர்ப்பு தவறாகப் பார்க்கப்படவில்லை. ஆண், பெண் உறவுகளில் அதுவும் ஒருநிலையாக இருந்துள்ளது.  

காம சாஸ்திரத்தின் படி ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் கூட இணை சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினேழாம் - பதினெட்டாம் நூற்றாண்டில் கூட இது ஒரு பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படவில்லை.

கஜுராஹோவில் உள்ள கோயில்களில், பெண்கள் மற்ற பெண்களைச் சிற்றின்பத்துடன் அரவணைப்பது மற்றும் ஆண்கள் தங்கள் பிறப்புறுப்புகளை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்வது போன்ற படங்கள் உள்ளன

. 1837-ம் ஆண்டு மெக்காலேவின் ஐபிசி தயாரிக்கப்பட்டது. இதன்படி IPC 377 section-படி ஹோமோ-செக்ஸ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.   பல நாடுகளில் இந்தச் சட்டம் பின்பற்றப்பட, நெதர்லாந்தில் 1989 சிவில் பார்ட்னர்ஷிப் சட்டப்படி, "ஒரு ஆணும் ஆணும், ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம்" எனும் சட்டம் வந்தது. அதன்பிறகு 2001-ம் ஆண்டு திருமணமும் செய்து வாழலாம் என்று சட்டம் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி, கனடா, பெல்ஜியம், அமெரிக்கா என ஓர்பாலின திருமணம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இதைத் தொடர்ந்து இந்தியாவில் கூட 150 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஐபிசி சட்டம் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி நீக்கப்பட்டது.

‘பாலினம் என்பது ஆண், பெண் என்ற இரண்டு மட்டுமே கிடையாது. காதல் என்பது எதிர் பாலினத்தின் மீதே வர வேண்டும் என்பதும் கிடையாது. பாலினத் தேர்வு என்பது தனி மனித சுதந்திரம்’ என்பதை முன்வைக்கிறது அந்த சட்டம். பாலின ஈர்ப்பை மருத்துவச் சிகிச்சை மூலம் மாற்ற முடியும் என்ற கருத்து முற்றலும் தவறானது. உலக அளவில் மருத்துவத் துறைகளில் இதற்கான சிகிச்சைகள் சோதிக்கப்பட்டன. ஆனால், எதுவுமே வெற்றி பெறவில்லை. அறிவியல் பூர்வமாக மருத்துவத் துறையில் நோயாகக் கருதாத ஒன்றிற்கு எதற்காகச் சிகிச்சை பெற வேண்டும்? ஆகவே இது நோய் அல்ல. ஆணும் பெண்ணும் இணை சேர்வது போல, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் தனக்கான பாலினத் துணையைத் தேடிக் கொள்ளும் இணை தேடலே என்கிறது அறிவியல். 

நீங்கள் நீங்களாக வாழும் உலகில் அவர்களும் அவர்களாக வாழ உரிமையுண்டு! இந்த உலகில் வாழும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்களே

Edited by பிழம்பு
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.