Jump to content

படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட ரோபோ: உலகின் முதல் சம்பவமாக பதிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரோபோ இது என தெரிவிக்கப்படுகின்றது.

தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக குறித்த ரோபா பணியாற்றி வந்துள்ளது. ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோ, தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்த ரோபோவை நகர அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான விசாரணைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/305134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோபோவுக்கு தலைக்குள் பதிவுகள் இடும்போது தற்கொலை எண்ணத்தையும் சேர்த்து வைத்திருப்பார்கள்.......!   😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, suvy said:

ரோபோவுக்கு தலைக்குள் பதிவுகள் இடும்போது தற்கொலை எண்ணத்தையும் சேர்த்து வைத்திருப்பார்கள்.......!   😂

அண்ணை பணிச்சுமையாய் இருக்குமோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

அண்ணை பணிச்சுமையாய் இருக்குமோ?!

ரோபோவுக்கு பணிசுமையாவது மண்ணாங்கட்டியாவது, புரோகிராம் செய்தவருக்கு காதல் தோல்வியாய் இருந்திருக்கும்.......!  😁

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ

தென் கொரியாவில் அரசாங்க சேவையில் கடமையாற்றி வந்த ரோபோ இயந்திரம் ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தென் கொரியாவின் கூமி நகர சபையில் ஒரு வருட காலமாக பணியாற்றி வந்த இயந்திரம் இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது.

இந்த இயந்திரத்தின் அங்கங்கள் ஏற்கனவே சேதமடைந்திருந்ததாகவும் இது 2 மீட்டர் உயரம் கொண்ட படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மக்கள் கவலை

படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் அது சுழன்று கொண்டிருந்ததாகவும் அதற்கு பின்னர் கீழே விழுந்ததாகவும் நகர சபை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தவறான முடிவெடுத்து தன்னை தானே மாய்த்துக்கொண்ட ரோபோ | Robo Took A Wrong Decision In South Korea

மேலும், இந்த சம்பவம் குறித்து கூமி நகர மக்கள் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கான தொழில்நுட்ப காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

https://tamilwin.com/article/robo-took-a-wrong-decision-in-south-korea-1719993939

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐரோப்பிய நேரம் மாலை ஆறு மணிக்கு...  ஜேர்மனியும்,   ஸ்பெயினும்  ஸ்ருட்கார்ட் (Stuttgart) விளையாட்டு மைதானத்தில்...  கால் இறுதி ஆட்டம்  விளையாட இருக்கின்றது.  ஜேர்மனி வெற்றி பெற,  முற்கூட்டிய ❤️ வாழ்த்துக்கள்.   
    • உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் யாருமே வெற்றி பெறமாட்டார்கள் @கிருபன் என்று  சொன்னாரே?
    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.