Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்

Featured Replies

சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம்.

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப

ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,

வாழிய வஞ்சியும் கோழியும் போலக்

கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா

நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத

வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி

கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்

கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

பின்குறிப்பு: பாவணர் வழியோர்படி சங்கம், சமுதாயம் இரண்டும் சமஸ்க்ருத சொற்கள், அவற்றின் தமிழ் கழகம், குமுகாயம்.

Edited by devapriya

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியங்கள்.. தனிநபர்களின் விமர்சனச் சாயப் பூச்சுகளால் திரிபுறாமல்.. படிக்கப்படுவதும் ஆய்வுசெய்யப்படுவதுமே அவற்றின் தரத்தினை.. இயல்பினை.. எமக்கு சரிவர அளிக்கவல்லன.

உங்கள் பதிவு தொடர்ந்து நல்ல தகவல்களைத் தருமென்று எதிர்பார்க்கிறேன்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

வணக்கம் நண்பர்களே,

இங்கு

சங்க இலக்கியம்-தொல்காப்பியம்- சிலப்பதிகாரம்- மணிமேகலை- திருக்குறள்

இவை எல்லாவற்றிலும் விரவியுள்ள ஹிந்து மத விஷயங்களை இத்திரியில் தர உள்ளேன்.

நெடுக்காலபோவான் அவர்களே- தங்கள் ஆலோசனைக்கு நன்றி.

தேவப்ரியா

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

சங்க இலக்கியமான அகநானூறு 141-ஆம் பாடலில் தீபாவளி.

மழை கால் நீங்கிய மகா விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர வருகத்தில் அம்ம !

அகநானூறு 141-ஆம் பாடல் இயற்றியவர் நக்கீரர்

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்- என்பது அமாவாசை நாளாம்.

கொல்லப்பட்ட அரக்கன் - தீமை வெல்லப்பட்டது.

இருள் நீங்கியது. ஓளி வருகிறதின் அடையாளமாக சங்க காலத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடினர்.

அறிவியல் ஞானம் பெருக- தீமை அழிவதைப் பட்டாசு கொழுத்தி கொண்டாடுகிறோம்.

தீமைகள் நீங்க வேண்டும் எனப் பிரார்த்தனையுடன் இச்செய்தியைத் தருகிறேன்.

Edited by devapriya

  • தொடங்கியவர்

சங்க இலக்கியம் என்பது பாட்டும்-தொகையும்.

பத்துப்பாட்ட்டும்- எட்டுத் தொகையும்.

உலகில் பெரும்பாலான நாடுகள் பொலே இலக்கியக் காலம் குறிக்க முன்பே குறிக்கப் பட்ட மன்னர்கள் நிகழ்வுகள் இவற்றோடு இணைத்து நோக்கி காலம் குறித்தனர். பின் கல்வெட்டுகள். புதை பொருள் ஆய்வில் கிடைத்தவை கார்பன் - 14 ஆய்வு என உதவும். மேலும் நிச்சயமாய் காலம் குறிக்கப் பட்ட இலக்கியம் முன்பு உள்ள ஒரு பாட்டை கூறும் போது அந்த பழைய பாடல் காலமிடப்படும்.

இவ்வழி சங்க காலம் காலம் நிர்ணயம் செய்ய உத்வியது அசோகர் கல்வெட்டுகள். அசோகர் காலம் வ.கா.மு.3ம் நூற்றாண்டு, அவர் கல்வெட்டு தமிழகத்தில் 4 பெரும் அரசுகள் என சதியபுத்ர-கேரளபுத்ர- சோர-பாண்டிய என இருந்தது. இவை அதியமாந் சேர- சோழ- பாண்டிய எனக் காணவும், மேலும் சில பாடல்கள் மோரியர் வரவு பற்றி உள்ளது. சிலப்பகிகாரத்தில் கண்ணகி விழவிற்கு இலங்கை மன்னன் கயவாகு வந்தான் என உள்ளது, இவன் காலம் வ.கா. 2ம் நூற்றாண்டு.

(B.C.E.-Before Common Era-வ.கா.மு. வரலாற்று காலத்துக்கு முன; C.E.-Common Era-வ.கா.)

எனவே சங்க இலக்கியம் வ.கா.மு.200- வ.கா. 250 இடையே என்ப்பட்டது.

பல கல்வெட்டுகளும் உதவும்.

இன்றைய நிலை- சங்க காலமன்பது வ.கா.மு.500- வ.கா. 200 இடையே என்ப்பட்டது ஆகும்.

தொல்காப்பியம் பாட்டுத்தொகைகுப் பின் வ.கா. 200 வாக்கிலானது.

திருக்குறள் இதற்குப் பின்னான சில ஆண்டுகளில்.

சிலம்பும்- மணிமேகலையும் இந்நூற்றாண்டு இறுதியில்.

250 வாக்கில் ஒரு பக்கம் களப் பிரார்கள் வத பின் தமிழ் இலக்கியம் வாழ்வியல் முறையிலிருந்து நீதிநெறி போதிப்பதானது- குறளிருந்து.

கரிகால் சோழன், தலையானங்கானத் வென்ற பாண்டியன் போன்றோர் சங்கால மன்னர்கல்.

களப் பிரார்கள் வந்த பின் பல்லவர்கல் காலம்.

பின் பிற்கால சோழர சேரர் என வரும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

திருக் கார்த்திகை தீபம்.

===========================

கார்திகை மாத பெªர்ணமி தினத்தன்று இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.ஆதிகால

நன்றி: செய்தி மூலம் தம்பிராஸ்

பேஸ் பேஸ் நன்னா இருக்கு,

செய்தி மூலம் தம்பிராசினா நிசமாத் தான் இருக்கும்.

தேவப்பிரிய அண்ணாச்சி கொண்டைய மறையுங்க,

தமிராசுனா தமிழ் நாடு பிராமணாள் சங்கமுன்னு பிரியும் படியா எழுதுங்க. :icon_idea:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நம் பண்டிகைகளின் தொன்மையைத் தர முயல ஏனோ நண்பர் நாரதர் அவர்கள்- அதையும் கேலியாக்குகிறார். ஆனாலும் சங்ககால தமிழக நிலை.

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

பரிபாடல்2:76-87

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,

மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,

புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,

‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,

முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்

ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்

நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,

வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,

பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்

தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?

நீ உரைத்தி, வையை நதி!

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர்.

முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர்.

அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.

அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.

இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்

தலைவன் கூற்று

'புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

எனலூழ் வகை எய்திற்று' என்று ஏற்றுக்கொண்ட

புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

நினைவாரை நெஞ்சு ஆடுக்கண் செய்யும் கனல்புடன்,

கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால் ...55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து,

என ஆங்கு-

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, ஆவ் யாறு' எனப்

பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு,

'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'

ஐயர், வாய்பூசுறார், ஆறு.

-பா¢பாடல்-திரட்டு 2:50-63

அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை.

இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.