Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ரோ புலனாய்வு சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வெளியிட்ட அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் 

குறித்த அறிக்கையில் பிரகாரம் இரண்டாவது இடத்தில் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாவது இடத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல் | Elections Of Srilanka Indian Intelligence Info Raw

 

இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் அசோக அபேசிங்க கூறியுள்ளார். 

https://tamilwin.com/article/elections-of-srilanka-indian-intelligence-info-raw-1721552334

  • Replies 185
  • Views 9.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார் - பிரதி தபால் மா அதிபர்

Published By: DIGITAL DESK 3  22 JUL, 2024 | 05:17 PM

image
 

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க தபால் திணைக்களம் முழுமையாக தயாராக உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கொண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுமூகமான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 8,000 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பான முறையில் பரிமாற்றுவதற்கு தபால் திணைக்களங்கள் கடமைப்பட்டுள்ளதாக  பிரதி தபால் மா அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/189103

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் : அரசாங்கம் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன(bandula gunawardena) தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலுக்குரிய பணம்

 ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான பணமான 10 பில்லியன் ரூபா, வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பரில் ஜனாதிபதி தேர்தல் : அரசாங்கம் அறிவிப்பு | Presidential Election In September

எனினும் 02 தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் பணமில்லை.

இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படாது எனவும் நாடாளுமன்ற இந்த ஆண்டு கலைக்கப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://ibctamil.com/article/presidential-election-in-september-1721818827

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் கட்டுப்பணத்தை 30 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் : டலஸ் அழகப்பெரும

Published By: DIGITAL DESK 7  24 JUL, 2024 | 03:56 PM

image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்ய வேண்டும்.இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும்,சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்சமாகவும் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என எதிரணியின் சுயாதீன உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தது.இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க தேர்தல் சட்டத்துக்கு அமைய  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா கட்டுப்பணமும்,சுயாதீன வேட்பாளரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமும்  அறவிடப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரிடமிருந்து அறவிடும் கட்டுப்பணத்தை 25 இலட்சமாகவும்,சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 இலட்சமாகவும் திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்.இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.எவ்விதமான வரையறைகளும் இல்லாமல் வேட்பாளர்கள் முன்னிலையாகுவதால் அரச நிதியே வீண்விரயமாக்கப்படுகிறது.

41 ஆண்டுகளுக்கு பின்னரே கட்டுப்பணம் தொடர்பில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது.அதேபோல் கட்டுப்பணம் விவகாரத்திலும் கவனம் செலுத்தி திருத்தம் ஒன்றை  முன்வைக்குமாறு  வலியுறுத்துகிறேன்.

இதற்கு எழுந்து பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த,அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை அவசரமாக கொண்டு வரவில்லை.

சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ விரைவாக கொண்டு வர முடியாது.கட்டுப்பணம் தொடர்பான திருத்தத்தை இடம் பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு முன்வைக்க முடியாது.அதற்கான காலவகாசம் போதாது.2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/189268

  • கருத்துக்கள உறவுகள்

vijayadasa.jpg?resize=700,375

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் விஜயதாச ராஜபக்ஷ!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2024/1393530

  • கருத்துக்கள உறவுகள்

sarath-fonseka-10.jpg?resize=750,375

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

 

இதேவேளை அண்மையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது.

இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தை வெற்றிகொண்டது மாத்திரமன்றி, பல்வேறு அரசியல் சவால்களுக்கும் முகம்கொடுத்தவர் என்ற வகையில் எதிர்காலத்தில் நாட்டிற்கு பெரும் சேவையாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393494

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் எப்போது? – இறுதி முடிவு இன்று!

ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (25) கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் திகதி இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.samakalam.com/ஜனாதிபதித்-தேர்தல்-எப்போ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 3   25 JUL, 2024 | 02:04 PM

image
 

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி நாளை வெள்ளிக்கிழமை (26) அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவத்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு திகதி மற்றும் ஏனைய தீர்மானங்கள் குறித்து தனிப்பட்ட தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கும், ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

451854944_823642229495324_46237735294598

https://www.virakesari.lk/article/189348

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

26 JUL, 2024 | 07:55 AM
image

2024ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

WhatsApp_Image_2024-07-26_at_07.49.06.jp

https://www.virakesari.lk/article/189393

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுப்பணத்தை செலுத்தினார் ரணில்

Published By: DIGITAL DESK 3   26 JUL, 2024 | 09:33 AM

image

(எம்.மனோசித்ரா)

உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க  சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால் சி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை (26) காலை தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் காலை வெளியான நிலையில் முதலாவதாக ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் முதலாவது வேட்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் சரத் கீர்த்திரத்ன செலுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/189397

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடக்கவேண்டும் ஆனால் புறக்கணிப்போம்; முன்னணியின் ஆசை!

1095294658.jfif

தேர்தல் நடந்தே ஆகவேண்டும். அதை நாம் புறக்கணிக்கவும் வேண்டும். எங்களுடைய வாக்குகள் உங்களுக்குத் தேவையெனில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கவேண்டும் என்பது எமது அணுகுமுறையாக இருக்கின்றது- இவ்வாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: சிங்களச் சமூகத்துடன் சேர்ந்து இந்நாட்டை கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றோம். அது நடைபெற வேண்டுமெனில் ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு எங்களுடைய தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசமைப்பு கொண்டுவரப்படவேண்டும். தமிழ் மக்களுள் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெறுப்படைந்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகளையும், சிவில் அமைப்புகளையும் வைத்துக்கொண்டு பொதுவேட்பாளர் என்ற ஒரு சதி அரங்கேற்றப்படுகின்றது. தமிழர்கள் பகிஷ்கரிப்பு என்ற ஓர் ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற தேவைப்பாடு ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு உள்ளது. அதை தோற்கடிக்கவே பொதுவேட்பாளர் நாடகம் அரங்கேற்றப்படுகிறது - என்றார். (ச)
 

https://newuthayan.com/article/தேர்தல்_நடக்கவேண்டும்_ஆனால்_புறக்கணிப்போம்;_முன்னணியின்_ஆசை!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் - களமிறங்கும் வேட்பாளர்கள்

Vhg ஜூலை 26, 2024
1000290654.jpg

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விகாரை தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும், முன்னணி சோசலிஸ கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி தேர்தல்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.battinatham.com/2024/07/blog-post_406.html

  • கருத்துக்கள உறவுகள்

24-66719dba3757a.jpeg?resize=600,375

கட்டுப்பணம் செலுத்தும் காலம் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பணத்தை செலுத்துவது தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழு விபரங்களை வெளியிட்டுள்ளது.

 

இன்று காலை 8.30 மணி தொடக்கம் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் வேட்பாளராக முன்மொழியப்பட்டால், 50 ஆயிரம் ரூபாவும்
வேறு அரசியல் கட்சியால் அல்லது வாக்காளர்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக இருந்தால், 75 ஆயிரம்
ரூபாவாகவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் தொடர்பான உத்தரவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்னநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைத்து வேட்பாளர்களும் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2024/1393683

  • கருத்துக்கள உறவுகள்

election-commission-fe.webp?resize=600,3

வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தல், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கயன மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வஹாராதிபதி தம்மரதன தேரர் ஆகியோரும் களமிறங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

இதேவேளை வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் சார்பாக பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி இன்றையதினம் வெளியாகிய பின்னர் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர்
பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2024/1393680

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 4 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

26 JUL, 2024 | 05:37 PM
image

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு சில மணித்தியாலத்துக்குள் நான்கு வேட்பாளர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயாதீன வேட்பாளராக   போட்டியிட  முதலாவதாக கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொனெல்  பெரேரா  இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்தி ரத்ன சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார்.

அனினவ நிவஹால் பெரமுன என்ற கட்சி சார்பில் போட்டியிடுவற்கு ஓசல லக்மால் அனில்  ஹேரத் என்பவரும், இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு எஸ்.ஜி.லியனகே என்பவரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இன்று (26) முதல் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும் ,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

449315972_3008501395959796_3983367202325

https://www.virakesari.lk/article/189462

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாவும் ,சுயாதீன வேட்பாளர் 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நானும் ஏதோ பெரிய தொகை வேணும் என்று தவறாக எண்ணிவிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நானும் ஏதோ பெரிய தொகை வேணும் என்று தவறாக எண்ணிவிட்டேன்.

அண்ணை கட்டுப்பணம் 25 இலட்சம் கட்சிக்காறருக்கும் 30 இலட்சம் சுயேட்சைகளிடமும் பெறும் வண்ணம் சட்டத்திருத்தம் மேற்கொள்ளச் சொல்லி யாரோ சொன்னவர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:

அண்ணை கட்டுப்பணம் 25 இலட்சம் கட்சிக்காறருக்கும் 30 இலட்சம் சுயேட்சைகளிடமும் பெறும் வண்ணம் சட்டத்திருத்தம் மேற்கொள்ளச் சொல்லி யாரோ சொன்னவர்கள்!

அடுத்த தடவை எப்படியும் கொண்டுவந்து விடுவார்கள்.

டாலரின் விலை இனிக் கூடலாம்.

கைவசம் உள்ளவர்கள் பத்திரப்படுத்துங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழர் ஒருவர் ஜனாதிபதி ஆவது எவ்வளவு சாத்தியம்?

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?
படக்குறிப்பு,தமிழ் கட்சிகள் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

பல்வேறு குழப்பங்களுக்கிடையே இலங்கையின் 2024-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தேதி இன்று (வெள்ளி, ஜூலை 26) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழர் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தமிழ் தரப்பிற்கு இடையிலேயே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதை முன்னிலைப்படுத்தி, தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கு இடையில் உடன்படிக்கையொன்று ஜூலை 22-ஆம் தேதி கைச்சாத்திடப்பட்டது.

மொத்தம் 9 புரிந்துணவர்களை ஏற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள், யாழ்ப்பாணத்தில் இந்த உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியன இணைந்து இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டன.

இந்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

 
இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?
படக்குறிப்பு,ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் ஸ்ரீகாந்தா

'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு'

புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளவை கீழ்வருமாறு:

1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இந்த உடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' என அழைக்கப்படும்.

2. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் 'தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு' எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விஷயங்கள், பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.

4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.

5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?
படக்குறிப்பு,ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் சி.வி.விக்னேஸ்வரன்

'தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகள்'

6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும் ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது.

8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது.

9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம்,RANJAN ARUN PRASADH

படக்குறிப்பு,நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன்

'தமிழர் நலனுக்கான முன்னெடுப்பு'

இதேவேளை, கொள்கை ரீதியாக ஒன்றுப்பட்டு செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புக்களுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்பதே முதன்மை கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிடுகின்றார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கருத்து தெரிவித்தார்.

''ஆத்மார்த்தமாக அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் சூழ்நிலைகளை அனுசரித்தவாறு எமது இனத்தின் சமத்துவ வாழ்வுக்கான பயணத்தை நாம் எல்லோரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்ற கால கடமை எம் ஒவ்வொருவருடைய கரங்களிலும் தரப்பட்டுள்ளது,” என்றார்.

"ஈழத் தமிழீனத்தின் விடுதலைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும் அறவழிப் போராட்டங்களை அபிலாஷை வெளிப்பாடுகளை சிங்கள் தேசம் எப்போது புரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றதோ? அப்போது தான் அர்த்தம் மிகுந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியும்,” என்றார்.

‘தமிழர்களின் மூன்று முக்கியப் பிரச்னைகள்’

மேலும் பேசிய அவர், "அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பையும், இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயற்பாடுகளை நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை,” என்றார்.

"அடிப்படை விருப்புக்களை கோருகின்ற எமது அரசியல் உரிமை மீது போர் தொடுக்கும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை, தமிழ் தேசியம் என்ற ஒரு குடையின் கீழ் நின்று கூட்டாக எதிர்க்கும் முயற்சியை உருவாக்குவதில் தமிழினம் இன்று பெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றது.

"ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்னைகள் எது என்ற கேள்வியை எங்களது இளைய தலைமுறையை நோக்கி எழுப்பினால், நிலப்பறிப்பு, காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்கின்ற மூன்று நிலைகளுமே அவர்களால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

"ஆனால், அந்த மூன்று பிரச்னைகளும் இனவிடுதலைக்கான களத்தை திறக்கவில்லை என்ற பொது புரிதல் எங்களிடத்தில் இல்லை.

"கொள்கை ரீதியாக ஒன்றுப்பட்டுச் செயற்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேச கட்டமைப்புக்களுடனும் இணைந்த வகையில் தமிழர்களின் தாகம் வெல்ல உழைப்போம் என்பதே எங்கள் ஒவ்வொருவருடைய முதன்மை கடமை என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்," என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம்,RANJAN ARUN PRASADH

படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா

இலங்கை தமிழரசுக் கட்சி ஏன் கைச்சாத்திடவில்லை?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் முக்கிய கட்சியாக கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவை தொடர்புக் கொண்டு வினவியது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விஷயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி தீர்மானமொன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. சம்பந்தன் ஐயாவின் மறைவு காரணமாக எமது மத்திய செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முடிவதற்கு முன்னர் கூட வேண்டியிருக்கும். ஒற்றுமையை மையமாக வைத்து நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளேன்," என இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

முதல் தடவையாக தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர்

இலங்கையில் 1978-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம், கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்காக இதுவரை 8 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதலாவது தேர்தல் 1982-ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், இந்த தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஜி.ஜி.பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார்.

1982-ஆம் ஆண்டுக்கு பின்னர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலேயே தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருந்தார்.

இதன்படி, சுயேட்சை வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

அதன்பின்னர், 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுந்தரம் மகேந்திரன் போட்டியிட்டதுடன், இறுதியாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சுப்ரமணியம் குணரத்னம் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இலங்கையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கியிருந்த நிலையில், பொது வேட்பாளராக இன்று வரை எவரும் களமிறக்கப்படவில்லை.

இந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அந்த பொது வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம்,RANJAN ARUN PRASADH

படக்குறிப்பு,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்

தமிழ் பொது வேட்பாளருக்கு தெற்கில் ஆதரவு உண்டா?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் முயற்சியிலேயே தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுகின்ற நிலையில், தென் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை.

இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலையில், வெற்றி பெறும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி, மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதே காலத்திற்கு பொறுத்தமானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஒரு தமிழர் வேட்பாளர் ஜனாதிபதியாவது என்றால், முதலில் வேட்பாளரை நாங்களே நிறுத்த வேண்டும். ஆனாலும், இலங்கையில் தமிழ் ஒருவர் ஜனாதிபதியாவதற்கான சாத்தியகூறு இல்லை என்கின்ற பட்சத்தில் அடுத்த கட்டமாக யார் ஜனாதிபதியாக போகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்கி, எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தான் காலத்திற்கு பொறுத்தமானது என நான் நம்புகின்றேன்,” என்றார்.

"எனினும், கட்சியின் நிலைப்பாடு என்று பார்க்கும் போது, நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், கட்சியின் தேசிய சபையில் எடுக்கும் முடிவை மாத்திரமே அறிவிக்க முடியும். தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சியின் தேசிய சபை இதுவரை முடிவெடுக்கவில்லை," என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளரை தென்னிலங்கை தமிழ் கட்சிகள் நிராகரிக்க காரணம் என்ன?

பட மூலாதாரம்,PRABHAGANESHAN

படக்குறிப்பு,ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன்

தென்னிலங்கை தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய வம்சாவளித் தமிழர்களிடம், தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தில் உடன்பாடு கிடையாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.

''தமிழ் பொது வேட்பாளர் விஷயத்தில் மூன்று விஷயங்கள் காணப்படுகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களுக்குத் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் உடன்பாடு வராது. வடக்கு, கிழக்கு மக்களுக்கும் பெரும்பாலும் அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை. சிங்கள வேட்பாளருடன் தான் போக வேண்டும்,” என்றார்.

"தென்னிலங்கையிலுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் களமிறங்குவதை நாம் பிழை எனச் சொல்லவில்லை. ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிட் முடியும். தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதன் ஊடாக, தமது பேரம் பேசும் சக்தியை தமிழர்கள் இழக்கின்றார்கள். அதைவிட சிங்கள வேட்பாளர்களிடம் சென்று பேரம் பேசி எதையாவது சாதித்தால் அது நல்லது என நினைக்கின்றேன்," என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், தென்னிலங்கையிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ப் பொது வேட்பாளரை நிராகரிக்கின்றமை காண முடிகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மாத்திரமே தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்திவருகின்றன.

ஆனால், இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், தமிழர் ஒருவர் ஜனதிபதியாக தெரிவாவத்றகான சாத்தியம் மிகமிகக் குறைவு என மலையகத் தமிழ்க் கட்சியினர் கருதுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

453063519_890414896456817_71042750622986

 

 

453042504_889898026508504_10856923675454

 

452036765_889846093180364_44375952219276

 

453042501_889827993182174_26029974413236

 

452952916_889831606515146_32877272346318

 

452168788_889921799839460_51554945027443

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பை வரவேற்கும் அமெரிக்கா!

Julie-Chung-300x200.jpg

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thinakkural.lk/article/306851

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சல் மூல வாக்களிப்பு : சுற்றறிக்கை இன்று வெளியாகும்!

election-commission-300x200.jpg

ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.

குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/306844

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்க முடியும் - மஹிந்த தேசப்பிரிய 

27 JUL, 2024 | 04:10 PM
image

(எம்.மனோசித்ரா)

பொலிஸ்மா அதிபரின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரொருவரை பொலிஸ் ஆணைக்குழு அல்லது அரச சேவை ஆணைக்குழுவால் நியமிக்க முடியும். தற்போது தேர்தலுக்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் நடத்தப்படும்போது அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டாலும், தேர்தலுக்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரையே அந்த அறிவித்தல் சென்றடையும். தற்போது அவ்வாறானதொரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அடிப்படை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித தடையும் ஏற்படாது.

தற்போது பொலிஸ்மா அதிபர் தன் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்க முடியாது என்பது அரசாங்கத்தின் வாதமாக உள்ளது. ஆனால், தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அதற்கான அதிகாரியொருவரை நியமிக்க முடியும்.

அந்த நியமனத்தை பொலிஸ் ஆணைக்குழுவுக்கோ, அரச சேவை ஆணைக்குழுவுக்கோ வழங்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தேவையேற்படின் தேர்தல் கடமைகளை செய்வதற்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியும். அவ்வாறில்லை என்றால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் பணிக்கமர்த்தப்பட்டால் மாத்திரமே சிக்கல் ஏற்படும். எவ்வாறிருப்பினும் செயலாளர்கள் ஊடாக பணிகளை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு முடியும். எனவே பொலிஸ்மா அதிபர் விவகாரம் தேர்தலுக்கு தடையாகாது. இதனால் தடை ஏற்படும் என்று காண்பிக்க முயற்சிப்பவர்களும், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எண்ணுபவர்களும் மக்களின் உரிமையை முடக்கவே முயற்சிக்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/189530

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்

27 JUL, 2024 | 01:01 PM
image
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக தங்களது வாக்கெடுப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள் பிறிதொரு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சரண மாவத்தை, இராஜகிரிய எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியானவை என விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்த விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது www.election .gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/189510

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2024 at 19:09, ஏராளன் said:

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு... இப்ப சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகவேண்டிய தேவை உள்ளது போலுள்ளது.
அதுதான்... றோவின்  கணக்கெடுப்பு அறிக்கை என்று,  சைகை  காட்டுகின்றார்கள்.
தங்கடை நாட்டு அலுவலை பார்க்கிறதை விட்டுட்டு... மற்றவனின் நாட்டுக்குள் தலையை ஓட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.