Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கலப்படம்"

 

"தாய்ப் பால் ஒன்றைத்  தவிர
தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும் 
தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும்  
தாராளமாக இன்று பலபல கலப்படம்"

 

"எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம்
எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது  
எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம்
எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்"
 
 
"பெண் முட்டையுடன் விந்து இணையும்   
பெரும் கலவையிலும் சிலசில கலப்படம்
பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி
பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்" 

  

"குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர
குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம்
குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம் 
குறிஞ்சிநில முருகன் தமிழிலும் கலப்படம் " 


"ஓதிடும் மந்திரத்திலும் போதகர் போதனையிலும்
ஓதுவார் ஓசையிலும் ஒழுகிடும் நெறியிலும்
ஓர்மனமாய் நின்று வழிபடும் அடியாரிலும்
ஓகை கொண்டு இணைந்துவிட்டது கலப்படம்"


"உழைத்து பெற்ற ஊதியத்திலும் கலப்படம்
உண்மை தந்த உயர்விலும் கலப்படம்
உணர்வுகொள் தாய் மொழியிலும் கலப்படம்
உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம்"


"கூட்டம் சேர்க்கும் அரசியலில் கலப்படம்
கூர்மையான அரச அறிக்கையில் கலப்படம்
கூறிடும் ஊடக செய்தியில் கலப்படம்
கூசாமல் பேசிடும் வரலாற்றில் கலப்படம்"


"தெரிந்து வேண்டும் என்று சேர்ப்பதும்
தெரியாமல் தவறி அங்கு சேர்ப்பதும்
தெளித்து பட்டும் படாமலும் சேர்ப்பதும்
தெளிவாக அவை எல்லாம் கலப்படம்தான்"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

ஓகை - உவகை, மகிழ்ச்சி

167407402_10218996028394441_3383362790362920414_n.jpg?stp=dst-jpg_p180x540&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=dBE41Bzc0BMQ7kNvgE1iUbH&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBAcPKzRnJYRHKQTs-BGq4keUXUw8Z1su4gqn_ZtVNnLw&oe=66B8DDAF 167950792_10218996030154485_7001081757985782328_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=gOZZ-7ANV44Q7kNvgEBOEWe&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAR7jD1lUKmXMtuu-etOu7zPlr-mhIGMKamMknUqNlw1w&oe=66B8EA5D 

 

167644396_10218996029954480_5050884841468541432_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=ynJ424uwN1sQ7kNvgFMq9u8&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBrV2qywrlysN57O667p9a_R8Q1WjiZhXbFl8bS8HSEwQ&oe=66B8EEA8

 


 

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தலைப்பும் கவிதையும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, தலைப்பு + படங்கள் யாவும் அசத்தல்..........!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.