Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்"
 
 
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும் ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
 
இதனால், முதியோர்கள் தனிமையை உணர தொடங்குவதையும், தாம் தனித்து விடப்பட்டு விடுவார்கள் என ஏங்க தொடங்குவதையும் காண்கிறோம். இது அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியுமாகும். இந்த நிலையில் ஐந்து புலன்களில் முக்கியமான காது கேட்டலையும் இழந்தால், அவரின் நிலை மேலும் விரக்தியைத் தான் ஏற்படுத்தும். ஆகவே இன்று நாம் "காதும் கேட்டாலும்" பற்றி சிறுது அலசுவோம்.
 
காது வழியாக நாம் ஒலியை கேட்பதால் தான், எங்களால் பேச முடிகிறது. குழந்தைகள் முதலில் ஒலியை உணர்கின்றன. அதனால்த் தான் குழந்தைகள் பேசவே ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. எனவே, மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது எனலாம். தூக்கத்தின்போது 1. கண் (eye), 2. காது (ear), 3. மூக்கு (nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) ஆகிய ஐம்பொறிகளில் நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது இந்த காது தான் ! அதேபோல், விழிக்கும் பொழுது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் இதுவே தான் ! எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்று நாம் கூறலாம்.
 
உதாரணமாக, காது கேட்காமல் வாழ்வதும் [செவிடனாக] அல்லது குறிப்பிடத்தக்க அளவு, கேட்கும் சக்தியை அல்லது திறனை இழந்து வாழ்வதும் கட்டாயம், ஒரு மனிதனில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. கேட்கும் உணர்வை இழப்பது அவனை தனிமைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு மனச்சோர்வை அவனில் ஏற்படுத்தலாம். அது மட்டும் அல்ல சில ஆய்வுகள் இது பாரதூரமான நோய்களுக்கும், உதாரணமாக மனச் சோர்வினால் ஏற்படும் ஒரு வித மறதிநோயை [Dementia / டிமென்ஷியா] ஏற்படுத்தலாம் என்றும் உறுதி படுத்துகிறது.
 
ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும் என கூறலாம். இது ஒரு வித சக்தி ஆகும். இது ஒரு ஊடகத்தினூடாக பயணிக்கும் பொழுது, ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை [அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் / atoms and molecules] அதிர்வுறச் செய்கிறது. அதன் மூலம் ஒலி பரவுகின்றது. உதாரணமாக, மத்தளத்தை தட்டியவுடன், மத்தளத்தின் தோல் அதிர்வுறுகின்றது. அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் [வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம்] உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன. அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும்.
 
ஆனால் இது வெற்றிடத்தின் [vacuum] ஊடாக செல்லாது. அதிர்வினால் ஒலி அலைகள் ஏற்படுகின்றன. எல்லா ஒலி அலைகளும் மனிதனால் கேட்க முடியாது. உதாரணமாக, மனிதனின் கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 20 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். 20 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது அக ஒலி அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளை விட அதிகமாக இருந்தால் அது மிகை ஒலி அல்லது மீயொலி (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. மனிதனை விட, ஏனைய விலங்குகளின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும்.
 
காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது கடவுளால் அல்லது பரிணாம வளர்ச்சியால் அல்லது படிவளர்ச்சியால் வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியியல் பகுதி என்று கூறலாம். இதனால் நாம் எல்லாவிதமான ஒலிகளையும் கேட்டு இன்று மகிழ்கிறோம். அது மட்டும் அல்ல, ஒலி பிறந்ததால் தான் எழுத்தும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடன் ஒருவர் கலந்து பேசவும், தொடர்பு கொள்ளவும் இதுவே வழிசமைத்தது எனலாம். மனிதக் காது மூன்று பாகங்களால் ஆனதாகும். அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும்.
 
உதாரணமாக, காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது ஆகும். நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிப்பது ஆகும். அங்கு மூன்று சிறிய எலும்புகள் இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன. உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கிறது. அதில் சிறு சிறு நரம்புகள் ஒன்றாக இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடைகின்றன.
 
ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த திரை மிருதங்கம் போல் மெலிதான தோலாகும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு மூளையைச் சென்றடையும். மூளை ஒரு அதிநவீன கணினி போல், இதை ஒலியின் உணர்வாக எமக்கு மாற்றி தருகிறது. அதாவது இது மின்சார ஒலிபெருக்கி [Microphone / மைக்ரோஃபோன்] போல் தொழிற்படுகிறது எனலாம்.
 
காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். உதாரணமாக காது கால்வாயை [ear canal] துப்பரவாக வைத்திருக்க வேண்டும். மேலும் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் [காது, மூக்கு, தொண்டை / வாய்] ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
 
உதாரணமாக செவித்திரைக்கும் (Tympanic Membrane) உட்செவிக்கும் (Inner Ear) இடையில் உள்ள பகுதியான நடுச் செவியில் (Middle Ear) தான் நடுச்செவி குழாய் [Eustachian Tube or middle ear tube] உள்ளது. இது மூக்குக்கும் தொண்டைக்கும் நீண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் தடை அல்லது அடைப்பு, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கக் கூடியது.
 
மனிதர்கள் மூப்படைய, செவிப்பறையும் ['eardrum' காது நடுச் சுவர்] தடிப்பாகவும் மற்றும் அதிர்வது கடினமாகவும் மாறுகிறது. நடுச்செவியின் உள்ளே உள்ள எலும்புகளும் ஒன்றுக் கொன்று இணைந்து [get fused] தன்பாட்டில் அதிராமல் [vibrate] விடலாம். இதனால், உட்செவியின் நரம்பு தொகுதி [inner ear nervous system] சரியாக தொழிற் படாமல் போகலாம். அது மட்டும் அல்ல வேறு செயலிழப்புகளும் [malfunction] ஏற்படலாம்.
 
காது கேளாமைக்கு ஒரு மாற்று வழியாக கேள் உதவிக் கருவிகள் [hearing devices / செவிப்புலன் உதவி சாதனம்] இன்று பயன் படுத்தப் படுகின்றன. இது மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். கேட்கும் திறனை மேம்படுத்துவதற்காக இக்கருவி மூன்று கட்டங்களினூடாக அல்லது பகுதிகளினூடாக ஒலியினை பெருக்குகிறது.
 
காது கேள் கருவியில் ஒரு சிறிய ஒலிவாங்கி [microphone ] ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. இந்த சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது [amplifier] அதிகரிக்கச்செய்கிறது. அதன் பின் ஒலிபெருக்கி [speaker] ஒன்று காதுக்குள் பெருக்கப்பட்ட ஒலியை [amplified sound] ஏற்படுத்துகிறது. இவ்வாறு காது குறைபாட்டை செவிப்புலன் உதவி சாதனம் நிவர்த்தி செய்கிறது.
 
 
[மூலம்:
 
ஆங்கிலத்தில் என் அண்ணா,
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்
 
மொழிபெயர்ப்பு:
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
197665600_10219382363372574_2249725832744324722_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=DlxFoJZlfYUQ7kNvgFluhfR&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBMQsWHOQ4R4HdNrxBnZ7mcS23cmUv3hk6ZlqkLql7wfw&oe=66BB0214 199437294_10219382364172594_6445443524464423819_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=mw3YPx4pMjAQ7kNvgFjPTfv&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCFmnwfFy1NRsKuPwX_iXqqdLWwZbKvQbRb_0bOKctRRA&oe=66BAF4CE 200149879_10219382364732608_6792624669782432461_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=3garT1E5O7EQ7kNvgGcWzex&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAhYx0MVloAhMUbA1tBsoFLvpV3DaYCqjOxoRpWJ1mpfA&oe=66BB090A 197499449_10219382366892662_4301984658525920416_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=9sf9lcvgEEYQ7kNvgEUudin&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCnP-eKNKp8x3emWRD-ZAQQ6Ws_XAtAYOExQHZWbTptaQ&oe=66BB0C02 198937890_10219382374572854_3535327253885308629_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=HNV37TTsU80Q7kNvgHEZA6A&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAW1RgQMSaFgLBOQg-H2TGVSaWXkVCTQ8emQ28KcslNKw&oe=66BAFB43 
 
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள்..

பகிர்விற்கு நன்றி..!🙏

வயசுப் போனால் பார்வையும், காதும் மந்தமாகிப் போய்விடுமோ..? அல்லது இல்லாள் கொடுத்த பரிசில்(?) போகுமா.. பொறியாளர் ஐயா? 😍
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

பயனுள்ள தகவல்கள்..

பகிர்விற்கு நன்றி..!🙏

வயசுப் போனால் பார்வையும், காதும் மந்தமாகிப் போய்விடுமோ..? அல்லது இல்லாள் கொடுத்த பரிசில்(?) போகுமா.. பொறியாளர் ஐயா? 😍
 

அந்தக் காலத்தில் ஏதாவது வீரத்தில் வெற்றியடைந்தால் - போரில், காளை அடக்குவதில், வில்லில் -  அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது.  

உதாரணமாக, 

முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு தெரியுமா?

 
சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்சா கொடுக்க வேண்டும் என்று நினைத்தது, கொடுத்தது தான் தெய்வானை. இரண்டாம் மனைவியாக முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தாள். மறு பக்கம் வள்ளி


அப்படியே 

இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தினால், 

மிதிலை மிதிலை ஏகல் லில், “அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் கேட்க, அங்கு “மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று  பதில் வருகிறது. 


எடுத்த மலையே நினையின், "ஈசன்,
     இகல் வில்லாய்
வடித்த மலை, நீ இது, வலித்தி"
     என, வாரிப்
பிடித்த மலை, நாண் இடை பிணித்து
     ஒருவன் மேல்நாள்
ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற
     மலை அன்றோ?

நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும்
மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க என்கிறது 
 

அதன் பின் தான் 

"கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்."


என்கிறது 


இனி உங்கள் கேள்விக்கு வருவோம் 

"அல்லது இல்லாள் கொடுத்த பரிசில்(?) போகுமா.. "

அன்று போக வாய்ப்பில்லை. காரணம் அவன் வீரன், பலசாலி 

இன்று ?? நீங்களே உங்களைப் பார்த்து சொல்லுங்கள் 


நன்றி  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்சா கொடுக்க வேண்டும் என்று நினைத்தது, கொடுத்தது தான் தெய்வானை. இரண்டாம் மனைவியாக முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தாள். மறு பக்கம் வள்ளி

வள்ளியம்மையார் வந்து சேர்ந்தது காந்தர்வ திருமணத்தால் தானே? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

வள்ளியம்மையார் வந்து சேர்ந்தது காந்தர்வ திருமணத்தால் தானே? 🤣

காந்தர்வ வகைத் திருமணம்

களவு மணம் அல்லது காந்தருவ மணம் இந்து சமய அற நூல்களில் கூறப்பட்டுள்ள எண் வகை மணங்களுள் ஒன்று. காந்தருவ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும்.

 என்றாலும் அது நடந்தது,

வள்ளி, பருவம் எட்டியதும் தினைப் பயிரை காவல் காக்கச் சென்றார். அங்கு முருகன் வேடுவன் [இதைக் கவனிக்க வேடுவன், மிருகங்களை வேட்டையாடும் பலசாலி]  வேடமிட்டு வள்ளியுடன் காதல் புரிந்தார். 

இதனையறிந்த வள்ளியின் தந்தை நம்பிராஜன், படையெடுத்துவந்து முருகனுடன் போரிட்டு மடிந்தார் [இங்கு தன் வீரத்தை வள்ளிக்கு காட்டுகிறான்] . 

அல்லது தன் அண்ணன் விநாயகப்பெருமானின் உதவியுடன் தன்னுடைய திருவிளையாடலை நிகழ்த்தி அதாவது யானையை அடக்கி 

அதன் பின் தான் திருமணம் நடந்ததைக் கவனிக்க 

[Gandharva = காந்தர்வ = காதல் மணம்; பெற்றோருக்கு தெரியாமல் ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வது, என்றாலும் இங்கு முருகனின் திருமணம் ஒரு வீரத்தின் பின்னே நிகழ்கிறது 

இதற்கு முக்கிய காரணம் 

முருகன் வேறு ஸ்கந்தன் / சுப்பிரமணியன் வேறு?

மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை /  தமிழர்களை வென்ற பின்பு, பண்டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது. 

பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு  இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற தமிழ் பெயர் வழங்கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)].  

அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர் கடவுளான “ஸ்கந்தா’ வோடு ஒத்து காணப் படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்து விட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர்:

முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரம ணியன் ஆனான்!

திருமால்→ விஷ்ணு ஆனான்!

சிவன்→ ருத்திரன் ஆனான்!

கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்!

அதனால்த்தான் இங்கு திருமணம் ஒரு வீரத்தின் பின்னே நிகழ்வதாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது கவனிக்க ] 

நன்றி 
 

சூரனை சங்காரம் செய்தவன் முருகனா ....? 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, kandiah Thillaivinayagalingam said:

அந்தக் காலத்தில் ஏதாவது வீரத்தில் வெற்றியடைந்தால் - போரில், காளை அடக்குவதில், வில்லில் -  அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது.  

உதாரணமாக, 

முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு தெரியுமா?

 
சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்சா கொடுக்க வேண்டும் என்று நினைத்தது, கொடுத்தது தான் தெய்வானை. இரண்டாம் மனைவியாக முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தாள். மறு பக்கம் வள்ளி


அப்படியே 

இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தினால், 

மிதிலை மிதிலை ஏகல் லில், “அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் கேட்க, அங்கு “மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று  பதில் வருகிறது. 


எடுத்த மலையே நினையின், "ஈசன்,
     இகல் வில்லாய்
வடித்த மலை, நீ இது, வலித்தி"
     என, வாரிப்
பிடித்த மலை, நாண் இடை பிணித்து
     ஒருவன் மேல்நாள்
ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற
     மலை அன்றோ?

நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும்
மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க என்கிறது 
 

அதன் பின் தான் 

"கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று
உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட.
அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்."


என்கிறது 


இனி உங்கள் கேள்விக்கு வருவோம் 

"அல்லது இல்லாள் கொடுத்த பரிசில்(?) போகுமா.. "

அன்று போக வாய்ப்பில்லை. காரணம் அவன் வீரன், பலசாலி 

இன்று ?? நீங்களே உங்களைப் பார்த்து சொல்லுங்கள் 


நன்றி  

நீண்ட அருமையான பதிவிற்கு நன்றி.🙏

ஆனால் பாருங்கோ, என்னைப் பார்த்து பதில் சொல்ல என் வயசு பத்தாது ஐயா. நான் மிகச் சிறுவன்.😍

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.