Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 JUL, 2024 | 01:56 PM
image
 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார். 

மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரனின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.   

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபர், நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, யாழ் மாவட்ட தனியார் பஸ் சங்கம், பிரதேச செயலகம் நல்லூர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை சாரணர் சங்கம், அன்னதான மடங்கள், தண்ணீர்பந்தல் என்பவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள். 

இக்கூட்டத்தில் திருவிழா புற ஏற்பாடுகள் தொடர்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

1. ஆலயச் சூழலில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகள் 07.08.2024 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 04.09.2024 நள்ளிரவு வரை ஆலய வெளி வீதியின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும். 

2. பிரதான வீதித்தடைகள் பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு முன்புறம் அரசடிச்சந்தி, கோயில் வீதியில் சங்கிலியன் வீதி சந்தி, பிராமணக்கட்டு குள வீதிச் சந்தி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். சுகாதார பாதுகாப்பு தேவைகளிற்கேற்ப மேற்படி வீதித்தடைகளின் அமைவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 

3. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும் மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்னால் உள்ள குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதி ஊடாக ஆனைப்பந்திசந்தியை அடைந்து யாழ் நகரை அடைய முடியும். யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதை ஊடாக பருத்தித்துறை வீதியை அடைய முடியும். விசேட பெருந்திருவிழாக்களின் போது முத்திரைச்சந்தியில் திரும்பி கச்சேரி நல்லூர் வீதி ஊடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும். கோயில் வீதி வழியாக வரும் வாகனங்கள் சங்கிலியன் வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்தும், செட்டித்தெரு ஒழுங்கையூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து பயணிக்க முடியும். 

4. தூக்குக் காவடிகள் வழமை போல் பருத்தித்துறை வீதி வழியாக உள்நுழைந்து ஸ்ரீமுருகன் தண்ணீர் பந்தலில் காவடிகள் இறக்கி டிராக்டர்கள் செட்டித்தெரு வீதியூடாக வெளியேற வேண்டும். 

5. ஆலய வீதிச்சூழலில் வீதித்தடைகளுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல வாகன அனுமதி அட்டை மாநகர சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிரந்தர வியாபாரிகள் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

6. உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. 

7. ஆலய வெளி வீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது. 

8. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். 

9. உற்சவ காலங்களில் ஆலய வெளி வீதி சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. 

10. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும். 

11. உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. 

12. ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது. 

மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு அமைவாக நல்லூர் திருவிழா நடைபெறுவதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188576

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களை நீக்குமாறு இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் யாழ். மாநகர சபையிடம் கோரிக்கை 

19 JUL, 2024 | 11:59 AM
image
 

நல்லூர் கந்தன் ஆலய திருவிழா காலத்தில் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்க வேண்டுமென இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் யாழ். மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இந்து தன்னார்வ தொண்டர் சங்கத்தின் தலைவர் தேவசாரங்கன் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

யாழ். மாநகர சபையானது நல்லூர் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து ஒரு மாதகால திருவிழாவை கடந்த காலங்களில் மன நிறைவாக நடத்தியமை மகிழ்ச்சியை தருகிறது,

எனினும், கடந்த ஆண்டின் நல்லூர் திருவிழா காலத்தில் ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்த தகவல்களை பத்திரிகை செய்திகள் மற்றும் பக்தர்கள் தெரிவித்த அதிருப்தி கருத்துகள் மூலம் அறிந்துகொண்டோம்.

பரிசீலனை செய்யப்பட்ட அனுபவங்கள் மற்றும் பத்திரிகை தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான வீதித் தடைகள்  பொருத்தமற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டதால் அடியவர்கள் சன நெரிசலுக்கு உட்பட்டு மயக்கம் அடைந்து பெரும் அவலத்தை சந்தித்தனர். அவசரமான நேரத்தில் நோயாளர் காவு வண்டி கூட நுழைய முடியாத நிலை காணப்பட்டது. 

மேலும், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான கடைகள் வியாபாரதாரர்களுக்காக குத்தகைக்கு வழங்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் வீதியின் மத்திய பகுதிக்கு தள்ளப்பட்டனர்.

குறிப்பாக, சப்பர திருவிழா நாளில் ஏற்பட்ட நெருக்கடியின்போது நடைபாதையில் நகர்ந்துகொண்டிருந்த பக்தர்களை வியாபாரிகள் "எங்கள் கடைகளுக்குள் வர வேண்டாம், நாங்கள் காசு கொடுத்து தானே கடைகளைப் பெற்றுள்ளோம்" என வீதியின் நடுப்பகுதி நோக்கி விரட்டியதை கண்ணூடு பார்க்க முடிந்தது. 

தொடர்ச்சியான வீதித் தடைகளுக்கு இடையில் நடைபாதையின் இருபுறமும் வியாபார நிலையங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் பெருமளவு மக்கள் தெருவின் நடுப்பகுதியில் அபாயகரமான விதத்தில் சிக்குண்டு இருந்தனர். 

நூற்றாண்டு காலம் கடந்த நல்லூர் ஆலய மாண்பானது கெடும் வகையில் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களும் கிண்டல்களும் கண்டு பெரும் மன வேதனை அடைந்தோம். 

இந்த வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியவர்களின் ஆன்மிக உரிமைகளையும் ஆலயத்தின் புனிதத் தன்மையையும் குலைக்கின்றன. எனவே, இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் சார்பாக கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

அடியவர்களுக்கு இடையூறற்ற வீதி தடைகள்: 

ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர்களுக்கு நெரிசலற்ற மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தும் வகையில், அடியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இலகுவாக நகரக்கூடிய விதத்தில் வீதி தடைகளை அமைத்தல் மற்றும் பொருத்தமற்ற தடைகளை நீக்கல்.

வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அனுமதியளிக்காமை: 

வியாபார ஸ்தலங்கள் மற்றும் விளம்பரங்கள் மெய் அடியார்களின் வழிபாட்டுரிமைக்கும் பக்திமயமான சூழ்நிலைக்கும் இடையூறாக அமைவதால், திருவிழா காலத்தில், ஆலய சுற்றுப்புறங்களில் கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்காமல், மக்கள் அமைதியாக வழிபாட்டை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அவசர உதவிகள்: 

கடந்த ஆண்டை போல் அல்லாமல் நோயாளர் காவு வண்டி மற்றும் அவசர சேவைகள் தேவையான இடத்தை இடையூறின்றி அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லூர் ஆலய சூழலில் ஆன்மிக சூழலை நிலை நாட்டவேண்டி மெய் அடியார்கள் சார்பாக இந்து தன்னார்வ தொண்டர் சங்கம் கோரிக்கை விடுப்பதாக அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/188824

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி ஏராளன் ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான விசயம் பற்றி எவரும் கதைக்கயில்லை.  ஆலயச் சூழலில் மாமிசம் பயன்படுத்துவதுபற்றி எந்த தடையும் இல்லையோ. அப்ப இந்த வருசம் திருவிழாவில் கொத்து ரொட்டி அமோகமாக விலைப்படும்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழா காலங்களில் ஆலய சூழலில் மாநகர சபையினால் கடைகள் குத்தகைக்கு வழங்கப்படும் போது, "பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்" எனும் நிபந்தனையுடனையே கடைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் நிபந்தனைகளைமீறும் பட்சத்தில், மாநகர சபையினால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு, அதனையும் மீறினால் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்யப்படும்.

மக்களுக்கு இடையூறு

இந்த நிலையில், இம்முறை மாநகர சபையினர் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் குறித்த ஒரு கடைக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம் | Municipal Council Did Not Take Any Action Jaffna

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கடைக்கான இடத்தினை மாநகர சபையிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் திருவிழா காலங்களில் இரவு வேளைகளில் கடையில் பெரிய திரையில் (8 X 10 LCD) திரையில் துள்ளல் இசை பாடல்களை ஒளி ஒலிபரப்பு செய்வதனால் , அவ்விடத்தில் கூடும் இளையோர் அதற்கு குத்தாட்டம் ஆடி , அவ்வழியாக செல்லும் ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கோரிக்கை

இதன் படி, சம்பவம் தொடர்பில் தியாக தீபத்தின் நினைவிடம் மற்றும் ஆலய சூழலில் களியாட்ட நிகழ்வுகள் போன்று இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் மாநகர சபையினருக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதிலும் மாநகர சபையினர் எவ்விதமான நடவடிக்கையும் குறித்த நபர்கள் மீது எடுக்கவில்லை என்றே குறிப்பிடப்படுகிறது.

யாழ். நல்லூர் ஆலய சூழலில் இளைஞர்கள் குத்தாட்டம்: மாநகர சபை பராமுகம் | Municipal Council Did Not Take Any Action Jaffna

நல்லூர் ஆலய பூங்காவன உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலையும் நாளைய தினம் புதன்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில், பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் , பின் வீதியில் துள்ளல் இசை பாடல்களை போடும் குறித்த நபர்களுக்கு எதிராக மாநகர சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://ibctamil.com/article/municipal-council-did-not-take-any-action-jaffna-1725356308

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.