Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

23 JUL, 2024 | 06:41 PM
image
 

கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும், உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

20240723_105303.jpg

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்  கற்கை நிறுவகத்தில் விழுது நிகழ்ச்சி திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகரதா மோதரன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம், பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

 

விழுது அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பாலசிங்கம் முரளிதரனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்நிகழ்ச்சியில் கிழக்கின் அகல் இளைஞர் குழுவினரின் இரு தசாப்த கால பயணம், மறுமலர்ச்சி நாட்டுக்கூத்து படைப்பு, ஓரங்கட்டப்பட்டு மருவிவரும் கலைஞர்களின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் என்னும் தலைப்புக்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நாட்டார் பாடல்கள், பாறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரிய கலை படைப்புக்களும் நடைபெற்றது.

20240723_102949.jpg

விழுது அமைப்பானது இனங்களுக்கிடையில் இன நல்லூரவை கட்டியெழுப்புவதிலும், பரஸ்பர உறவுகளை பேனுவதிலும் பிரதேச ரீதியாக சென்று கலை கலாசார நிகழ்வுகளை நாடாத்தி விளிப்புணர்வுஙளை ஏற்படுத்தி செயற்பட்டுக் கொண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

20240723_102747.jpg

20240723_102551.jpg

20240723_102420.jpg

 

20240723_101458.jpg

 

ஓரங்கட்டப்பட்டு மருவி வரும் கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் உரையாடலும் மட்டக்களப்பில் இடம் பெற்றது | Virakesari.lk



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.