Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆதித்தாயின் மொழி
---------------------------------
'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று.
 
விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக்  கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார்.
 
மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். 
 
காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
 
நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார்.
 
சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம்.
 
ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.
 
அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார்.
 
நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள்.
 
அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும்.
 
மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
  • கருத்துக்கள உறவுகள்

அ . முத்துலிங்கத்தின் கதைகள் அருமையானவை.......நான் பிரயாணங்களின்போது அவரது "திகடசக்கரம்" என்னும் கதைப் புத்தகத்தை கொண்டு செல்வது வளமை......அதிலுள்ள அத்தனை கதைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அ . முத்துலிங்கத்தின் கதைகள் அருமையானவை.......நான் பிரயாணங்களின்போது அவரது "திகடசக்கரம்" என்னும் கதைப் புத்தகத்தை கொண்டு செல்வது வளமை......அதிலுள்ள அத்தனை கதைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்......!  👍

👍....

ஆப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த கால அனுபவங்களை சில கதைகளில் சொல்லியிருப்பார். எந்த தமிழ் எழுத்தாளரும் தொடாத நிலமும், மனிதர்களும் அவை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:
நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள்.
 
அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும்.
 
மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.

நன்றி அண்ணை உங்கள் ஆக்கத்திற்கு.
எனக்குப் பிடித்த வரிகள் தடித்த எழுத்தில்.
நீங்கள் ஒரு சிறந்த வாசகரும் கூட.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நன்றி அண்ணை உங்கள் ஆக்கத்திற்கு.
எனக்குப் பிடித்த வரிகள் தடித்த எழுத்தில்.
நீங்கள் ஒரு சிறந்த வாசகரும் கூட.

🙏........

ஒரு நாவலுக்கும் மற்றைய சிறு வடிவங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற உரையாடல் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று. நாவலில் நிலம் வேண்டும், மனிதர்கள் வேண்டும், தேடல் வேண்டும், அலைக்கழிப்புகள் வேண்டும் என்று இருக்க வேண்டிய விடயங்களின் பட்டியல்கள் நீளமானது.

சிறு வடிவங்களில் ஒரு கணம் அல்லது ஒரு புள்ளி மட்டுமே இருந்தால் போதும் என்று சொல்வார்கள். சில வேளைகளில் அந்த ஒரு புள்ளியே மனதிற்குள் இந்தப் பிரபஞ்சம் போல வெடித்தும் பரவலாம்...........👍

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று.

1980க்குப் பின் புத்தகங்கள் வாசிப்பது முற்றாக நின்றுவிட்டது என்றே சொல்லலாம்.வேறுவேறு சோலிகள் பின்பு வேலை.

யாழுக்குள் வந்த பின்னரே சிறிது வாசிக்கத் தொடங்கினேன்.

அதிவும் மேலே இருந்து கீழேவரை இழுத்து எந்தளவுக்கு இருக்கிறது என்று பார்ப்பது.

சிறிய கதைகள் கட்டுரையாக இருந்தால் வாசிப்பது.

உங்கள் கதைகள் கட்டுரைகள் ஒரு அளவோடு இருப்பதால் பொறுமையாக வாசிக்கலாம்.

பொறுமையை தோதித்துப் போடாதேங்கோ.

இதே வேளை எனது தகப்பனார் எனக்கு விபரம் தெரிந்தது முதல் கல்கி கலைமகள் வாங்கி வாசித்து சேர்த்து கதைகள் முடிய புத்தகமாக கட்டிகட்டி வைத்திருந்தார்.

அந்தநேரம் புத்தகம் கட்டியபின் வாசிப்பேன்.

அப்பா காலமாக ஒவ்வொருவராக வந்து வாசித்துவிட்டு தருகிறேன் என்று கொண்டு போனவர்கள் போனது தான்.

மிகுதி இருந்தவைகளை 95 இல் இடப்பெயர்வின் போது ராணுவம் துடைத்தெடுத்துவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழுக்குள் வந்த பின்னரே சிறிது வாசிக்கத் தொடங்கினேன்.

அதிவும் மேலே இருந்து கீழேவரை இழுத்து எந்தளவுக்கு இருக்கிறது என்று பார்ப்பது.

சிறிய கதைகள் கட்டுரையாக இருந்தால் வாசிப்பது.

உங்கள் கதைகள் கட்டுரைகள் ஒரு அளவோடு இருப்பதால் பொறுமையாக வாசிக்கலாம்.

பொறுமையை தோதித்துப் போடாதேங்கோ.

🤣...........

உள்ளதை உள்ளபடி அப்படியே சொல்லி விட்டீர்கள், அண்ணை......

 நான் எழுதும் குறுங்கதைகள் சின்னதாகவே இருக்கும்............👍.

இதற்கு சரியான தலைப்பு 'அரைப்பக்க அனுபவங்கள்' என்றே வைத்திருக்க வேண்டும்..... அரைப்பக்கங்கள் தான், அண்ணை........😃.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரசோதரன் said:
ஆதித்தாயின் மொழி
---------------------------------
'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று.
 
விளையாடி விட்டு, அடுத்த போட்டியிற்காக காத்துக் கொண்டு, அப்பொழுது நடந்து கொண்டிருக்கும் போட்டியொன்றை பார்த்துக்  கொண்டிருந்த போது, தோளில் பினபக்கமாக மெதுவாக யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தேன். அவருக்கே உரிய மிக அகலமான சிரிப்புடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார். போன வாரம் இதே இடத்தில், கிட்டத்தட்ட இதே நேரத்தில் அவரை, ஒரு முறை, சந்தித்திருந்தேன். போன தடவை பேரனைக் கூட்டி வந்திருந்தார். இந்த தடவை பேத்தியை சிறு வண்டில் ஒன்றில் தள்ளி வந்திருந்தார். பேத்திக்கு மூன்று வயது இருக்கும். பேரனுக்கு ஐந்து வயது. தான் அடுத்த மாதம் பள்ளிக்கூடம் போகப் போகின்றேன் என்று அந்தப் பேரன் ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் போன வாரம் சொல்லியிருந்தார்.
 
மகள் வீட்டில் வந்து நிற்பதாகச் சொன்னார். அவருக்கு ஒரு மகனும் இருப்பதாகச் சொன்னார். மகன் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொன்னார். இதையெல்லாம் போன வாரமே சொல்லியிருந்தார். நான் ஶ்ரீ லங்கா என்றவுடன் அதை ஒரு உலக அதிசயம் போலவும் கேட்டுக் கொண்டார். 
 
காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று இந்த வாரம் ஆரம்பித்தார். இல்லை, ஒன்றும் இல்லை, ஏழு மணிக்கே இங்கே வந்து விட்டேன் என்றேன். தொடர்ந்து மேலே சொல் என்பது போல பார்த்துக் கொண்டே நின்றார். மத்தியானம் எக்கச்சக்கமான சோறும், மீன் குழம்பும் சாப்பிடுவேன் என்றேன். அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது. மகளும், மருமகனும் வேலைக்கு போக, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து விடுகின்றார் போல. அவர் ஒரு முன்பின் பழக்கமேயில்லாத அந்நியன் மேல் காட்டும் இந்தப் பிரியத்திற்கு வேறு எதுவும் காரணமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.
 
நீங்கள் மீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். அவர் ஒரு நாயுடு என்றார். நாயுடு என்றால் எல்லாமே சாப்பிடுவார்களாம். சந்திரபாபு நாயுடுவும் ஒரு நாயுடுவா என்று கேட்டேன். ஆமாம் என்றார், என் டி ராமராவ் கூட ஒரு கம்மா, நல்லாவே சாப்பிடுவார் என்றார்.
 
சினிமா, அரசியல், கிரிக்கேட், இந்த மூன்றும் எங்கும் செல்லும். சினிமாவை ஆரம்பித்தேன். 'சாகர சங்கமம்' பார்த்திருக்கின்றீர்களா என்றேன். கமல் தான் மிகவும் பிடித்த நடிகர் என்றார். 'சுவாதி முத்யம்' கூட பார்த்திருப்பதாகச் சொன்னார். இந்தப் படமெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று அவரின் கண் புருவங்களை உயர்த்தினார். ரஜனி படங்கள் என்று இழுத்தேன். சும்மா பார்ப்பேன் என்றார். சிரஞ்சீவி படங்களும் அவருக்கு பிடிக்குமாம்.
 
ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா எங்குமே மக்கள் வாழ முடியாது என்றார். ஒரே போட்டி, எங்கும் பொறாமை, மனிதர்கள் அங்கே ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றார்கள் என்றார். இங்கு நாங்கள் எல்லோரும் போட்டி பொறாமைகள் இல்லாமல் வாழ்கின்றோம் என்றார். இந்தியாவிற்கு விடுமுறையில் போய் வரும் சில அமெரிக்கர்கள் இந்தியர்கள் திருப்தியாக வாழ்கின்றார்கள் என்று சொல்வதும், இவர் சொல்வதும் ஒன்றே தான். ஆனால் இரண்டுமே உண்மைகள் அல்ல என்று நிரந்தரமாக ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.
 
அடுத்தது எங்கள் போட்டி. சரி, அடுத்த வாரம் நாங்கள் சந்திப்போம் என்று சொல்லி விட்டு களத்திற்குள் போனேன். அவரும் கை அசைத்து விட்டு, வண்டிலைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார்.
 
நீங்கள் இருவரும் என்ன கதைத்தீர்கள், இங்கு ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவேயில்லை என்றனர் அங்கு நின்றவர்கள்.
 
அவருக்கு தமிழோ, ஆங்கிலமோ தெரியாது. எனக்குத் தெலுங்கு தெரியாது. ஆனாலும் இருவரும் முழுதாக உரையாடினோம். அது என்ன மொழியில் என்று எனக்கும் தெரியவில்லை. ஆதித்தாய் ஒருவர் இருந்ததாகவும், அவரின் மரபணுவே எங்கள் எல்லோரிலும் இருப்பதாகவும் சொல்கின்றனர். அதையொட்டியே முத்துலிங்கம் அவர்களின் சிறுகதையும் இருக்கும்.
 
மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பாரசீக வளைகுடாவுடனும் மெசபடோமியாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக யானைத் தந்தங்கள் சிந்து சமவெளியிலிருந்துதான் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின. 
 
இந்த யானைத் தந்தங்களுடன், தந்தங்களைக் குறிப்பதற்கான சொற்களும் பாரசீக மொழிக்கும் மெசபடோமியப் பகுதிகளில் வழங்கப்பட்ட மொழிகளுக்கும் ஏற்றுமதியாயின. ஆகவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அக்கேடியன், எலமைட், ஹுர்ரியன், பழங்கால பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் எழுத்துகளில் சிந்து சமவெளியிலிருந்து வந்திருக்கக்கூடிய சொற்கள், குறிப்பாக யானைகள், தந்தங்களைக் குறிக்கக்கூடிய சொற்கள் கிடைக்குமா என ஆய்வுசெய்தார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய [Bahata Ansumali Mukhopadhyay]. 
 
உள்ளூரில் தயாரிக்கப்படாத, கிடைக்காத ஒரு பொருளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை எந்த வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோமோ அங்கு வழங்கப்படும் சொல்லாலேயே அழைக்கிறோம். இந்த அடிப்படையை மனதில் கொண்டு தேடியபோது அவருக்கு 'பிரு/பிரி' என்ற சொல்லும் அவற்றின் வேறுவிதமான உச்சரிப்புகளும் கிடைத்ததன. இந்த 'பிரு' என்ற சொல்லுக்கு அக்கேடிய மொழியில் 'யானை' என்றும் பழங்கால பாரசீக மொழியில் 'தந்தம்' என்றும் பொருள் இருந்தது.
 
பழங்கால எகிப்திலும் தந்தங்களைக் குறிக்கும் சொற்கள் இருந்தன என்றாலும் 'அப்', 'அபு' போன்ற ஒலிக் குறிப்புகளாக இருந்தன. ஆகவே, மெசபடோமியாவில் புழங்கிய 'பிரு/பிரி' என்ற சொல் சிந்துச் சமவெளியில் இருந்தே வந்திருக்க வேண்டுமென முடிவுசெய்தார் பஹதா.
 
பல திராவிட மொழிகளில், 'பிலு', 'பெல்லா', 'பல்லா', 'பல்லவா', 'பல்' என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பல யானைகளையும் குறித்தன. ஆனால், 'பிலு' என்பது எப்படி அக்கேடிய மொழியில் 'பிரு' என்றானது என்பதற்கும் விடை தேடியிருக்கிறார் பஹதா. அதாவது, பழங்கால பாரசீக மொழியில் 'ல' என்ற உச்சரிப்பு இல்லை. அதற்குப் பதிலாக 'ர' என்ற உச்சரிப்பே பயன்படுத்தப்படுகிறது.
 
யானையின் தந்தம் என்பது அதன் பல் என்பதால், தந்தத்தைக் குறிக்கும் "பல்", "பல்லு", "பில்லு" என்ற சொற்கள், 'பிரு/பரி என மாறியிருக்கின்றன. அதேபோல, Salvadora persica என்ற மரத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் பஹதா. அரபியிலும் வட இந்தியாவிலும் 'மிஸ்வாக்' என இந்த மரம் குறிப்பிடப்படுகிறது. இந்த மரத்தின் பாகங்கள் பற்களுக்கு நன்மை செய்யக்கூடியவை என நம்பப்படுகிறது. தற்போதும் பற்பசைகள்கூட இந்தப் பெயரில் வெளியாகின்றன.
 
சிந்துச் சமவெளி காலகட்டத்தில் இந்த 'மிஸ்வாக்' மரமும் 'பிலு மரம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிந்துச் சமவெளி பிரதேசத்தில் பல்துலக்க இந்த மரத்தின் குச்சிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்க்ககூடும் எனக் கருதுகிறார் பஹதா. தற்போதும் பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹரியானா போன்ற சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் இந்த மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
 
ஆகவே, தந்தம், யானை, பற்களுக்குப் பயன்படக்கூடிய மிஸ்வாக் மரம் ஆகியவை எல்லாமே 'பல்' என்பதைக் குறிக்கக்கூடிய சொல்லில் இருந்தே உருவாகியிருக்கின்றன. இந்த 'பல்' என்ற வேர்ச்சொல், திராவிட மொழிகளில் அனைத்திலும் பொதுவானதாக இருந்தது. 'பிளிரு' என தெலுங்கிலும் 'பல்ல', 'பிலு' என கன்னடத்திலும் யானையைக் குறிக்கும் சொற்கள் இருக்கின்றன.
 
சென்னைப் பல்கலைக்கழகம் 1924ல் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி 'பிள்ளுவம்' என்ற சொல் யானையைக் குறிப்பதாகச் சொல்கிறது. ஆகவே, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 'யானை', 'ஏனுக', 'ஆன' போன்ற சொற்களால் யானைகள் குறிப்பிடப்பட்டாலும், பல்லை அடிப்படையாக வைத்த சொற்களும் யானையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
 
பல் என்ற சொல்லில் இருந்து 'பல்லு', 'பல்லவா' போன்ற சொற்கள் உருவாகியிருக்க முடியும். ஆனால், 'பல்' என்ற சொல்லில் இருந்து 'பிள்/பில்", 'பிள்ளுவம்' போன்ற சொற்கள் எப்படி உருவாகியிருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ஃப்ராங்க்ளின் சவுத்வொர்த்தின் Linguistic Archaeology of South Asia புத்தகம் விடையளிக்கிறது. அதாவது, 'பல்' என்பதைக் குறிப்பதற்கான வேர்ச்சொல் 'பிள்' என்பதாகக்கூட இருக்கலாம் என்கிறார் இவர்.
 
மேலே சொன்ன அடிப்படைகளை வைத்துத்தான் சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் தொல் திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார் பஹதா. 
 
ஒரு மொழியின் மூலத்தைக் கண்டறிவது போன்ற ஆய்வுகளுக்கு இது மாதிரியான அடிப்படைச் சொற்களே ஆதாரமாக அமைகின்றன. தந்தம், பல்துலக்கும் குச்சி ஆகியவற்றுக்கு ஹரப்பாவில் இந்த சொல்லில் இருந்து பிறந்த சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார்.
 
சிந்து சமவெளியில் பேசிய மொழியை ஏன் தொல் திராவிட மொழி எனக் குறிப்பிட வேண்டும்; திராவிட மொழிகளிலேயே பழைய மொழியான தமிழ் என்று அதனைக் குறிப்பிட முடியாதா என பஹதாவிடம் கேட்டபோது, 
 
"சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசியிருக்கக்கூடிய ஒரு மொழியை 'தொல் திராவிட மொழி' என்று குறிப்பிடுகிறோம். தற்போது பேசப்படும் திராவிட மொழிகளில் உள்ள பல தொன்மையான சொற்கள் அந்த மொழியில் இருக்கும். ஆனால், அந்த மொழி, தற்போது பேசப்படும் எந்த ஒரு மொழியாகவும் இருந்திருக்காது. ஆகவேதான் அதனை தொல் திராவிட மொழி என்கிறோம்" என்று விளக்கினார்
 
மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல.
 
ஆமாம் அது தான் இந்த  'தொல் திராவிட மொழி' ஆகும்
 
அதனால்த்தான் தெலுங்கரும் தமிழரும் தம்மையே அறியாமல் கதைத்தார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இது வரலாறு !! புராணம் அல்ல !!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
அதனால்த்தான் தெலுங்கரும் தமிழரும் தம்மையே அறியாமல் கதைத்தார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இது வரலாறு !! புராணம் அல்ல !!

மிக்க நன்றி, தில்லை ஐயா.

அந்த மனிதர் சொல்லும் பல வார்த்தைகள், உடல்/முக அசைவுகளில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 'கள்' என்னும் சொல்லை அதே அர்த்தத்திலேயே சொன்னார்........👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

மிக்க நன்றி, தில்லை ஐயா.

அந்த மனிதர் சொல்லும் பல வார்த்தைகள், உடல்/முக அசைவுகளில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. 'கள்' என்னும் சொல்லை அதே அர்த்தத்திலேயே சொன்னார்........👍

main-qimg-e0aa1de10d4700c7d4bba56154c5597c-lq

main-qimg-d82c0b016b51c1be1124bca43ee5e46e-lq

main-qimg-c70e6a090ef0fe21620c9b469573cc9d-lq

main-qimg-d11e197343a7c6f666af52bba028aac0-lq

main-qimg-2ffba78c5627792e2266681ed432fa15-lq

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.