Jump to content

"அமைதியின் கதவு திறக்கட்டும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"அமைதியின் கதவு திறக்கட்டும்"
 
 
இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான்.
 
பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. என்றாலும் ரவி நாளடைவில் ஒரு நம்பிக்கையின் ஒளியைப் பற்றிக் கொண்டான். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எப்ப ஒரு குடையின் கீழ் இணைகிறார்களோ அன்று தான் முழு பலத்துடன் தமது அவலங்களை நெருக்கடிகளை போக்கி, சம உரிமைகளை பெற்று அமைதி கதவு திறக்க முடியும் என்று நம்பினான்.
 
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 4 பெப்ரவரி 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அது பெரும்பான்மை சமூகத்திடம் கைமாறியதில் இருந்து, தமிழ் பேசும் மக்களான இலங்கைத் தமிழர், தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள், மலையக தமிழர்கள் எதோ ஒரு வகையில் கெடுபிடிகளுக்கு ஆளாகத் தொடங்கினார்கள்.
 
உதாரணமாக சுதந்திரத்துக்கு சற்று முன்பு 1946 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 69.41% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 28.89% [இலங்கைத் தமிழர் 11.02% , இலங்கைச் சோனகர் 5.61%, மலையக தமிழர்கள் 11.73%, & மலையக சோனகர் 0.53%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்பட்டனர்.
 
இன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 74.90% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 24.57% [இலங்கைத் தமிழர் 11.15% , இலங்கைச் சோனகர் 9.30%, மலையக தமிழர்கள் 4.12%, & மலையக சோனகர் 0.00%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்படுகின்றனர் என இலங்கை அரச தரவு சுட்டிக்காட்டுகிறது. அதாவது தமிழ் பேசும் மக்கள் குறைந்தது கால்வாசிக்கு இலங்கையில் வாழ்ந்தாலும், அவர்கள் பலவழிகளில் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு அரச இயந்திரத்தால் கெடுபிடிகளுக்கு தொடர்ந்து ஆக்கப்பட்டதே உள்நாட்டு கலவரத்துக்கு தூண்டி அது பெரும் போராக வெடித்தது.
 
ஆனால் வடக்கு, கிழக்கு என்றும் தமிழர், முசுலிம்கள் என்றும் பிரிந்து செயல்படத் தொடங்கியது தான் அவர்களை பலவீனமாக்கி, தமிழ் பேசும் மக்களின் அமைதியின் கதவு திறப்பதை தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக ரவி உணர்ந்தான். இந்த பலவீனம் அரச இயந்திரத்தாலும் ஊக்கிவிக்கப் படுகிறது என்பதை பலர் அறிவதில்லை, அந்த வலையில் சிக்கி, தாமே தம் ஒற்றுமையை குலைகிறார்கள் என்பது தான் ரவிக்கு ஒரு கோபத்தையும் ஏற்படுத்தியது.
 
2009 இல் பெரும் தமிழர்களின் அழிவுக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை அவன் நேரடியாகக் கண்டவன்.
 
ஒரு நாள், ரவி கடலில் வலையை வீசியபோது, அவனது கிராமத்தில் உள்ள பெரியவர்களிடமிருந்து கிசுகிசுப்பு கேட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உண்மையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சொல்லி 9 ஜனவரி 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 'அமைதியின் கதவு திறக்கட்டும், சர்வாதிகார ஆட்சி ஒழியட்டும்' என்ற பெரும் முழக்கத்துடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதைப் பற்றி அவர்கள் பேசினர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நல்லிணக்கம் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கெடுபிடி இல்லா பாதுகாப்பான உரிமையுடன் கூடிய வாழ்வு அமைக்க முயலுவேன் என்ற அவரின் பேச்சில் ரவிக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. ஒவ்வொரு ஆட்சியாளரும் தொடக்கத்தில் பேசிய வார்த்தைகள் தான் இவை என்பது அவனின் அனுபவம். அவை பின்னாளில் தூக்கி எறியப்படுவதை வரலாற்றில் வாசித்தவன் அவன். என்றாலும் அவனுக்கு அது ஒரு ஒரு பலவீனமான நம்பிக்கையை கொண்டு வந்தது. ஆனால் அதுவும் செயலிழந்து போய், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது நாம் கண்டதே!
 
இந்தக் மனக் கொந்தளிப்பின் நடுவே, ரவி ஒரு நல்ல சூரியன் பிரகாசிக்கும் காலை, தனது எளிய குடிசையின் தாழ்வாரத்தில் அமர்ந்து, ஒரு கோப்பை வாசனையான சிலோன் தேநீரைப் பருகும்போது, கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் குழு அவனைச் சுற்றி திரண்டது. "ரவி மாமா , எங்கள் அழகிய நிலத்தில் அமைதி நிலவுமா? இலங்கைக்கு அமைதிக்கான கதவு திறக்குமா?" என்று கேட்டனர்.
 
ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொழி. அதனை மறுக்கும் விதமாகவும் இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு வித்திட்ட சம்பவங்களில் ஆரம்பகால நிகழாகவும் இன மேலாதிக்கத்தை மேற் கொண்ட சம்பவங்களில் ஒன்றாகவும் நடந்த தனிச் சிங்கள சட்டம் ஜூன் ஐந்து 1956இல் நிறைவேற்றப்பட்டது ரவி தன் அம்மாவிடம் இருந்து கேள்விப்பட்டுள்ளான். “திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.“ என்று லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லெஸ்லி குணவர்த்தன, 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததையும், ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையும், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் என்று சிவத்த கொடி பிடித்தவர்களின் கையும் சிவத்த இரத்தக் கரை பிடித்ததை முணுமுணுத்துக்கொண்டு ரவி குழந்தைகளைப் பார்த்தான்.
 
அவன் கண்கள் நம்பிக்கையால் நிறைந்து இருக்கவில்லை என்றாலும் அமைதிக்கான பாதை எளிதானது அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான்.
இன்று மே 18, 2024, முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது நினைவு கூறல். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உலகளாவிய தலைவர் மற்றும் மிக மூத்த வெளிநாட்டு பிரமுகர் Agnes Callamard, கலந்துகொள்கிறார் என்பது அவனுக்கு தெரியும்.
 
ஆனால் அவை ஒரு சம்பிரதாயம் மட்டுமே, என்றாலும் இது ஒரு தொடக்கம், எனவே அது என்றோ ஒரு நாள் சாத்தியம் என்று நம்பினான். கனிவான புன்னகையுடன் அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான்.
 
நீண்ட காலத்திற்கு முன்பு, என்று ரவி தொடங்கி "ஒரு காலத்தில் காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தன, பறவைகள் ஒன்றாகப் பாடுகின்றன, விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டன. ஆனால் ஒரு நாள், ஒரு பெரிய புயல் காட்டில் வந்து, விலங்குகள் மற்றும் பறவைகளை சிதறடித்தன. அவர்கள் ஒருவரையொருவர் பயந்தார்கள், அமைதி அங்கு இழந்தது போல் தோன்றியது."
 
குழந்தைகள் ரவிவின் கதையால் கவரப்பட்டு கவனமாகக் கேட்டனர். அவன் தொடர்ந்தான். காடுகளில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி புரிதலின் கதவைத் திறப்பதுதான் என்று அவன் குழந்தைகளிடம் கூறினான். குழந்தைகளுக்கு அது சரியாக புரியவில்லை. குழப்பத்துடன் காணப்பட்டனர்.
 
எனவே ரவி "புரிந்துகொள்ளும் கதவு மரத்தாலோ கல்லாலோ ஆனது அல்ல. நாம் ஒருவரையொருவர் உண்மையாகக் கேட்கும் போது, ஒருவருக் கொருவர் வலியையும் நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது நம் இதயத்தின் கதவு திறக்கிறது." என்று விளக்கினான்.
 
"காடுகளைப் போலவே, நமது அழகிய இலங்கையும் புரிதலின் கதவைத் திறந்தால் அமைதியைக் காணலாம், நாம் ஒருவருக்கொருவர் கேட்க வேண்டும், நம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றாக வேலை செய்ய வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப, அதற்கு நேரம் ஆகலாம், ஆனால் நல்லிணக்கப் பாதையைப் பின்பற்றும் பொறுமையும் ஞானமும் இருந்தால், நமது மண்ணுக்கு அமைதியின் கதவு திறக்கும்." என்று குழந்தைகளை அணைத்தபடி சொல்லி முடித்தான்.
 
ரவி பல தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை பாதித்த உள்நாட்டுப் போரின் வலியையும் துயரத்தையும் அனுபவித்த குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர் தங்கள் வீட்டை இழந்து அகதிகள் முகாமில் புதிதாக தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ரவி அவர்களின் கஷ்டங்கள் மற்றும் அமைதிக்கான ஏக்கம் பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். எனவே தான் தமிழ் பேசும் எல்லோரும் ஒற்றுமையாகி, எல்லோர் இதயத்திலும் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அது தான் தமிழரின் ஈழ நாட்டில் அமைதியைக் கொண்டுவர உதவும் என்று அவன் நம்பினான்.
 
இடைப்பட்ட ஒரு காலத்தில் எதிரியாகக் கருதப்பட்ட வடக்கு வாழ் மீனவர்கள் தனது கிராமத்தின் சந்தைகளில் வியாபாரம் செய்யத் தொடங்குவதை அவன் கவனித்தான். அவர்கள் தங்கள் போராட்டங்கள், இழப்புகள் மற்றும் நம்பிக்கையின் கதைகளைப் அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலம், வன்முறை மற்றும் வெறுப்பு இல்லாத எதிர்காலம் பற்றிய தங்கள் கனவுகளைப் பற்றி பேசினர்.
கிழக்கில் உள்ளவர்களைப் போலவே வடக்கிலிருந்து வந்தவர்களும் அமைதி மற்றும் செழிப்புக்காக ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்து ரவி, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையின் அவசியத்தை நன்கு புரிந்து கொண்டான்.
 
வருடங்கள் செல்லச் செல்ல, அமைதிக்கான வாக்குறுதி வேரூன்றத் தொடங்குவது போல தெரிந்தது. கடந்த கால காயங்களை குணப்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாக அறிவித்தது. ரவியின் கிராமமும் மற்றவர்களைப் போலவே ஒரு மாற்றத்தைக் காணும் என்று அவன் கனவு கண்டான். சாலைகள் சீரமைக்கப்பட்டன, பள்ளிகள் புனரமைக்கப்பட்டன, இயல்பு நிலை திரும்புவது போல இருந்தது. ஆனால் அதற்கிடையில் அரசாங்கமும் அன்று மாறியது.
 
அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் தீவிரமான தமிழர் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் தொடங்கியது. உதாரணமாக நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உள்ளிட்ட புதிய முறைகளும் பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க தொடங்கின.
 
வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்து மீண்டும் , “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று ரவிக்கு புரிந்தது.
 
தமிழ் பேசும் மக்கள் பிரிந்து இருந்து, அரசை நம்புவதில் பயன் இல்லை. அரசு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழர் தாயகத்துக்கு எதிரான வேலை திட்டங்களை இலகுவாக செய்ய அந்த பிளவுகளை பயன் படுத்தும் என்பதை ரவி உணர்ந்தான் ,
 
எனவே மக்களாகிய நாம், மீண்டும், ஆனால் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை ஒற்றுமையாக தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
கடந்த கால பிளவுகளைத் தாண்டி ஒற்றுமை மற்றும் அன்பின் அடையாளமாக ரவி வடக்கிலிருந்து, தமிழ் பேசும் ஒரு சோனக பெண்ணை மணந்தான். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்ந்து அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை தழுவி, சமாதான மரபு வரும் தலைமுறைக்கும் நிலைத்திருக்க வழிவகுக்க வேண்டும், அங்கு 'அமைதியின் கதவு திறக்கட்டும். என்ற அவனின் பிரார்த்தனை வெற்றி பெறுமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அவனின் தமிழ் இஸ்லாம் மனைவியும் அவனின் பிரார்த்தனையில், அமைதிக்காக தன் இதயக் கதவை திறந்து, பங்குபற்றத் தவறவில்லை!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
442416227_10225195233690699_5048389417801235026_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=0WDKEARYSI8Q7kNvgHHmhRZ&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYB0E71s-nIFK8KcA4EiZyr-fqPvImTU1Ey5XzAUk_9IOg&oe=66B2B068 403866089_10224317224661022_2036498904878315956_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Ngk7-djB_KEQ7kNvgFSK9nL&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBWI03-B2o7szu4QLfjY2KTcbqS84iys3ZTgxoKfqOUDA&oe=66B2B569
 
403989790_10224317223941004_6336268807055249207_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=KhQjVhW-6HoQ7kNvgH9AnEG&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBAcRWVWF6nwM0f4kflPnywAkswvrXTNDxvlPsQuXFPPg&oe=66B29AC3 403979767_10224317225581045_3492021531311083716_n.jpg?stp=dst-jpg_p320x320&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jAG9_odCGMYQ7kNvgGzGscH&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDhnsn67FySnwquMvIi3_3r4aRTgdSShGxQ2PZ6wXSJAw&oe=66B2B6B2 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

தற்காலிகமாக வலைத்தளத்தில் இருந்து ஓய்வு பெற்று, மீண்டும் சில கிழமைகளுக்குப்  பின், என் பதிவுகளை அல்லது எனது கருத்துக்களை பதிவிடுவேன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2024 at 22:02, kandiah Thillaivinayagalingam said:

எல்லோருக்கும் நன்றிகள் 

தற்காலிகமாக வலைத்தளத்தில் இருந்து ஓய்வு பெற்று, மீண்டும் சில கிழமைகளுக்குப்  பின், என் பதிவுகளை அல்லது எனது கருத்துக்களை பதிவிடுவேன்

அத்தியடியில் பூத்து யாழ்களத்தில் நறுமணம் வீசும் கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களே! ஆரோக்கியத்திற்கு. ஓய்வும் அவசியம். எடுங்கள் வேண்டியமட்டும்.🙌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/8/2024 at 22:55, kandiah Thillaivinayagalingam said:

இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையும், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் என்று சிவத்த கொடி பிடித்தவர்களின் கையும் சிவத்த இரத்தக் கரை பிடித்ததை முணுமுணுத்துக்கொண்டு ரவி குழந்தைகளைப் பார்த்தான்.

இன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம்  பகிர்விற்கு நன்றிகள்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அய்யாவின் கட்டுரைகளை காணவில்லையே என்று நினைத்தேன்

9 minutes ago, putthan said:

இன்றைய ஜெ.வி.பியை நினைக்க வைக்கிறது இந்த வசனம்  பகிர்விற்கு நன்றிகள்

 

சரியான நேரத்தில் சிவப்பு சர்வாதிகாரிகளை நினைவுபடுத்தியுள்ளீர்கள் புத்தன் அண்ணா

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.